You are lookin' for..?

Wednesday, March 24, 2010

தமிழ் மக்களை விற்பது/ஏமாற்றுவது சுலபம்.

sent: April 9, 2008 11:50 AM (on this date I originally wrote this article to my Orkut Groups)

Hogenakkal குடிநீர் பிரச்சினை பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்: எதிர் காலத்தில் 'பல்லி விழுந்த தேநீர்' போல் வரலாறு இந்த திட்டத்தின் கசப்பான பக்கங்களை புரட்டும் போது, இத்தனை நாடகத்திற்கும் ஆரம்ப புள்ளி 'தமிழ் இன காவலர் / தமிழ் மூதறிஞர் / அன்றைய முதல்வர்' என்று இன்றைய முதல்வர் கருணாநிதி 'வஞ்ச புகழ்ச்சி அணியில்' வைக்கும். ஏன் என்று பார்ப்போம் - - -

1. அடுத்து வர போகும் கர்நாடக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற விடுவார்களா என்பது உலக வங்கி விவசாய தொழிலை புரிவோர்க்கு கடன் தருவோம் என்பதை போன்றது.

2. யாரும் ஆட்சி செய்யாத போதே இந்த நிலை. ஆட்சிக்கு வந்தால்..? வேதாளம் முருங்கை மரம் கதைதான். அவர்கள் அப்படித்தான். இறங்கி வருவார்கள் என்று நம் முதல்வர் அவர்கள் கவிதை வேண்டுமானால் 'அவரது' பத்திரிகையில் எழுதலாம்.

3. ஓர் சில அரசு வெற்றிகரமாக இதனை தடுத்து விட்டால், மற்ற அரசால் இந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது. காரணம், எந்த ஒரு அரசு விட்டு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றி உங்களுக் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு உள்ள கன்னட Media, அந்த அரசை மக்கள் விரோத அரசாக பிரச்சாரம் செய்யும். எனவே, எந்த அரசும் இதை வைத்து அரசியல் செய்வார்களே தவிர தமிழ் மக்களுக்காக விட்டு தர மாட்டார்கள்.




4. இங்கு உள்ள கட்சிகள், வர போகும் தேர்தலில் 'Hogenakkal குடிநீர் திட்டம் நிறைவேற விட மாட்டோம்' என வாக்குறுதி தந்தால் நமது முதல்வர் அவர்கள் என்ன செய்வார்..? அப்படி வாக்குறுதி தரும் கட்சி, வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்..? இருக்கவே இருக்கு ஓர் கவிதை. அதை எழுதி விட்டு போய் விடுவார்.

5. திருமதி. சோனியா அவர்கள் அவரது கட்சியின் நலன் கருதி (கவனிக்க:மக்கள் நலன் கருதி அல்ல) வரும் தேர்தலில் கர்நாடக மண்ணில் விளையாட தமிழர் வாழ்வில் விளையாடுவது தவறு (மன்னிக்க: தப்பு) இல்லை என்று நமது முதல்வர் அவர்களுடன் பேரம் பேசி இருக்கலாம். இது உண்மை என்றால், நமது தமிழக Congress கட்சியின் உலக தலைவர்கள் குறைந்த பட்சம் வேட்டியுடன் வந்து தமிழக மக்களுக்காக போராடுவார்களா..? அல்லது அன்னை சோனியா அவர்கள் பின்னால் சென்று தமிழன் ஓர் இ.வா. இனம் என்று பறை சாற்றுவார்களா..? வாழ்க அரசியல். வளர்க அரசியல்வாதிகளின் மக்கள் நலன் மீதான அக்கறை.

ஓ தமிழக மக்களே, என்று உங்கள் அறிவு கண்ணை திறக்க போகிறீர்கள்..?

No comments:

Post a Comment