You are lookin' for..?

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Sunday, October 30, 2011

வீம்பாக மடத்தனம் செய்வது - 2

அந்த 'தன்னை தானே' எழுத்தாளர் என சொல்லி 'கொல்லும்' நபரின் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலை உங்கள் கண்களுக்கு தருகிறேன். . .





இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் அந்த நபரின் 'அரசியல்'. . .


இதோடு நின்றுவிடவில்லை அவரது 'மோடி மஸ்தான்' வேலை. . .


இவர்கள் இருக்கும் வரை 'புரையேறிய' தமிழ் படங்களே 'தமிழனை மேலும் மழுங்கடிக்க' வந்து கொண்டே இருக்கும்.

Tuesday, January 11, 2011

அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது...

கருணாநிதி (தமிழக முதல்வர்) இறக்கும் வரை 'முதல்வர்' பதவியை விட தயாரில்லை. ஜெயலலிதா இந்த மக்களை 'மொட்டை' போட இன்னொரு வாய்ப்பு கிடைக்காதா என 'ஆட்டை இழுத்து செல்லும் நரி போல' காத்திருக்கிறார். மற்ற 'சில்லறைகள்' தங்கள் 'பெரிய தொந்தியுடன்' காத்திருகிறார்கள்.




இந்த மக்கள் என்று திருந்துவார்கள்? எப்பொழுது அறிவுடன் அரசியலை அணுகுவார்கள்? இந்த 'இலவசம் - தந்திரம் - மக்களை காவு கொடுக்கும் TASMAC - மக்களை வன் புணர்ச்சி' செய்யும் அரசியல் என்று முடிவுக்கு வரும்? விவசாயிகள் எல்லாம் பெற்று, நிம்மதியாக வாழும் காலம் எப்போது? விவசாய நிலங்கள் அரசியல்வாதிகளிடமிருந்தும், Real Estate கொள்ளைகாரர்களிடமிருந்தும் காப்பாற்றப்படுவது எப்போது/எப்பிடி? விவசாயம் 'நல்லமுறையில்' நடக்க இந்த அரசாங்கம் திட்டங்கள் தீட்டுவது எப்போது?


போங்கடாங்..! சக மனிதன், அதிலும் அரசியல் செய்யும் 'நரிகள்' மத்தியில் வாழ்வது மிக கொடுமையாக உள்ளது.





மாற்றம் என்பது என்னில் தொடங்க வேண்டும். உங்களில் தொடங்க வேண்டும். இப்படியாக வீட்டில் ஏற்பட்டு, வீதியில் நுழைந்து, ஊருக்குள் வந்து, ஒரு மாநிலம் முழுதும் 'காட்டு தீ' போல் பரவி, இந்த 'TASMAC - இலங்கை தமிழ் சொந்தங்களுக்காக கடற்கரையில் 'காற்று வாங்கிய' காமெடி உண்ணாவிரத' அரசை வீட்டிற்கு அனுப்ப 'நேர்மையுடன்' முன் வர வேண்டும். உழைக்க வேண்டும்.

Saturday, September 18, 2010

யார் எங்கள் ரட்சகன்?

இம் மாதம் ஐந்தாம் தேதி நண்பன் ஜவஹர்-க்கு தஞ்சாவூரில் நிச்சயதார்த்தம். நண்பன் செந்திலுக்கு அதே தினம் அரியலூரில் கல்யாணம். அதே தினம் நண்பன் கார்த்திக்கிற்கு ஈரோடில் திருமணம். எங்கு போவது, யாரை நேரில் வாழ்த்துவது என குழப்பம். அரியலூரில் எம் மக்களும், நண்பர்களும் நண்பன் செந்திலின் திருமணம் முடிந்து அவரவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எங்கள் நண்பன் குட்டி தாதாவின் தந்தை அகால மரணம் எய்துள்ளார்கள். நண்பர்கள் மதியம் 1 மணியளவில் அலைபேசியில் செய்தி தந்தனர். நெஞ்சம் மீளா துயரில் ஆழ்ந்தது. இனி அந்த Unique வசனங்களை யாரிடம் கேட்க போகிறோம்..? அப்பா, உங்கள் நினைவு எங்களுடன்.

* * * * *

அடுத்த அடி 'நடிகர்' முரளி அவர்களின் 'திடீர்' மரணம் மூலம். 1997-இல் 'இளவரசி' Diana அவர்கள் Car விபத்தில் மறைந்த போது, முரளி அவர்கள் 'தன்னை மிகவும் பாதித்த மரணம்' என பேட்டி தந்தார்கள். தற்போது இவரது மரணமும் அனைவரையும் மீளா துயரிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


இன்னுமொரு அதிர்ச்சி 'பாடகி' ஸ்வர்ணலதா அவர்களது மரணம். தனது குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்த அந்த நல்ல உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.

* * * * *


'எந்திரன்' திரைப்படம் தயாரிக்க நிறைய 'கல்லா' செலவாகியுள்ளது, நமது இந்திய திரைப்பட வரலாற்றில். அதனை விட அதிகம் 'லாபம்' பார்க்க 'ரஜினி' என்ற பேர் போதும். ஆனாலும், இந்த தயாரிப்பு நிறுவனம் செய்யும் Cheap Promo-Events மிக அயர்ச்சியாக உள்ளது. நம் மக்கள் யாரிடமும் சக மனிதனை வழி நடத்தும் ஆளுமை இல்லை. நம்மை பிரம்மிக்க வைத்த சில உதாரணங்கள்: நம் 'முண்டாசு கவி' பாரதியார் அவர்கள், நம்மை விட்டு பிரிந்த தமிழக அமைச்சர் 'கக்கன்', Nobel Prize-winning physicist Richard Feynman, பெரியார் அவர்கள், Alexander Petrovics aka Sándor Petőfi, the author of the "Nemzeti dal".



அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி, பிறகு 'அது நடிப்பு. நான் அரசியலுக்கு வருவேன்னு நீங்க நினைச்சா, நானா பொறுப்பு..?' (இதையும் திரைப்படம் மூலமாகவே சொன்னதுதான் அவரது சாமர்த்தியம்) என தனது ரசிகர்களை நோக்கி கேள்வி கேட்டவரை மன்னித்து நம் மக்கள் அடுத்த 'கொண்டாட்டத்திற்கு' தயார்.


* * * * *

தமிழக முதல்வர் கருணாநிதியின் முட்டாள் தனமான புள்ளி விவரங்கள், எந்த விதத்திலும் உதவாத ஒப்பீடுகள்; அதிலும் முந்தைய ஆட்சியுடன்/Mr Barack Obama-வின் ஆட்சியுடன் (அட கொடுமையிலும் கொடுமையே!?!); இது போதாது என்று இன துரோகம், எப்பொழுதும் 'பாராட்டு' விழா, 'இப்படி செய்தால் மக்களுக்கு நல்லது' என்று சொல்பவர்கள் மீது 'நடவடிக்கை', தமிழ் உணர்வாளர்களை 'அழித்தல்', 'ஆட்சியை' காப்பாற்றும் நோக்கம், தனது 'மிக பெரிய குடும்பம்' தழைக்க தமிழக மக்களை 'காவு' கொடுத்தல், இன்னும் இன்னும் பல இலவசம் என்று தமிழக 'கஜானாவை' போண்டி ஆக்கும் வேகம், தொலைநோக்கு பார்வை இல்லாமல், ஏதோ ஐந்து வருடம் 'ஓட்டினால்' போதும் என்று இருந்தால் நம் மக்களின் 'வாழ்வு' எப்பிடி/என்று ஒளிரும்..?



யார் எங்கள் 'ரட்சகன்'? எங்கே அவன்? எப்போது வருவான்?

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.

Monday, July 19, 2010

Combines Devanagari and Roman scripts

~ The symbol was designed by Udaya Kumar Dharmalingam who loves his mother-tongue (Thamizh), art, design, and typography. He studied B.Arch. at Anna University, Chennai, and M.Tech. at the Industrial Design Centre, IIT Mumbai, and completed Ph.D. as well. His Rupee-Symbol got cabinet's approval by which he won Rs. 2.5 lakh.


D Udaya Kumar who designed the Currency Symbol for Indian Rupee

A competition was held among Indian citizens to come up with some innovative ideas and unique symbols to represent our Rupee in Global market. Over 3,000 entries were showered-in and they were evaluated by a jury headed by the RBI deputy governor, which had experts from art and design industries.

It will take some time to print this symbol on notes and coins. However, this symbol will be included in the 'Unicode Standard.'


This is our newly-created Currency Symbol

The symbol is based on Devanagari script. He said 'since my specialisation is typography, I want to promote Thamizh typography. At the moment, we don't have the facility for designin' in regional language. I want to develop the principles and rules and regulations for future generations to study Thamizh typography.'

~ ~ The symbol will take a while to appear on the keyboard. As a character, we can brin'-it-up on our screen with the help of newly-created font. Mangalore-based Foradian Technologies Pvt Ltd has made it possible by creatin' a font called Rupee-Foradian. We can download the symbol from the company's site for free - (This trial/full version of the font is in .ttf format).
http://blog.foradian.com/

To type-in this symbol, follow these TIPS - - -
` After downloadin' the font, copy it to the c:/Windows/Fonts folder on your Windows-platform computer.
` The company created the symbol and mapped the 'grave accent' symbol (the key just above the 'Tab' key on the keyboard) with the new rupee symbol.
` Open a file in a word-processor. Type the first character on the keyboard (grave accent key which appears to the left of 1). Select the character, and apply the Rupee_Foradian font, the symbol appears.!!


This is Grave-Accent key

For Mac users - there is a video clip, at http://blog.foradian.com/, which clears-the-fog in a detailed manner to type-the-font-in.

For Linux users - copy the file to /usr/share/fonts/truetype/Rupee/Rupee_Foradian.ttf
and log-off; and log-in to make it available.

Other TIPS - - -
• Those who cant see the grave accent key - Try 'alt + 0096' (Type 0096 while holding down "alt" key on your keyboard).

• Use the currency symbol in Excel --- Start => settings => Control Panel => Regional and Languale options => Regional options => Currency. Now change the $ to `. Now you can enter the numbers in Excel and change the font to Rupee and format the cell to Currency.
 
Simply, you friends just visit this site http://blog.foradian.com/ where you can see all about Rupee Symbol.
 
There is a video - this will show you how easy it is to use the font.
 
CounterView - - -
-> This symbol will take more than a year to be commercially used.
-> They say 'it raises India's economic profile.' Unfortunately, there is hardly any chance for the boom.
Reason: only four currencies have symbols that are the US Dollar, British Pound, Japanese Yen and European Euro. They have gone for a unique symbol so that their currency can be easily distinguished in global financial transaction. These are the most freely convertible currencies in the world and majority of international financial transactions take place through them. This is where we are kiddin' ourselves. The world will not take the new symbol eagerly. Our Indian rupee is nowhere as convertible. It is a clear indication that the Indian currency simply does not have the same heft as the other big four currencies in the world and global financial transaction and global market as well.
-> Rupee symbol is imporatnt too.
-> Is there any justification for this exuberance?
 
Source: http://blog.foradian.com/ and ToI

Saturday, June 19, 2010

போங்கடாங்.....

நீங்கள் அறிந்திருக்ககூடும்: KGB (Russia), MI6 (the UK), CIA (the USA) , ISI, MOSSAD (Israel), and RAW (India). இன்னும் பல உள்ளன, அந்தந்த நாடுகளுக்கு சொந்தமான Intelligence/Secret Bureau உள்ளது. இவைகளின் வேலை என்ன என்பதற்கு சில உதாரணங்கள் இதோ:


Terrorism: November 26, 2008

~ CIA வளர்த்த பிள்ளைதான் Mr Osama bin Laden (Osama bin Mohammed bin Awad bin Laden). உலக அடியாள் வளர்த்த பிள்ளை பின்பு ஏன் அவனையே தாக்கினார் என்பது அரசியல் விஷயங்கள்.

Face of ISI: Mumbai attack

~ ISI (Inter-services Intelligence of Pakistan) இதை பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. இதன் ஒரே வேலை நமது நாட்டிற்கு எதிராக தீவிரவாதம் செய்வது; தீவிரவாதத்தை தூண்டுவது; தீவிரவாதிகளை தயார் செய்வது. நமது பாராளுமன்றம் மீதான தாக்குதல் மற்றும் Mumbai தாக்குதல் போன்றவற்றை நடத்தியது ISI தான்.

மேலும் உளவு பார்ப்பது, ஆளும் அரசுக்கு சாதகமாக 'திரைமறைவு'' வேலைகள் செய்வது; உள்நாட்டு - வெளிநாட்டு கலவரங்களை தூண்டிவிடுவது, மேல் மட்ட மக்களை ஊழலில் மாட்ட வைப்பது - அல்லது தப்பிக்க வைப்பது போன்றவை இவைகளின் பொதுவான கடமைகளில் அடங்கும்.

Happy Hours for Tribes

சல்வா ஜூடும் - இது நமது நாட்டில் உள்ள கூலிப்படை. நமது மத்திய அரசு TATA, ESSAR, and Jindal போன்ற Corporate-காரர்களுடன் இணைந்து உருவாக்கிய படை. இவர்களின் வேலை பழங்குடி மக்களை அவர்களது மண்ணிலிருந்து துரத்துவது, பழங்குடி மக்களின் கிராமத்தை தீயிட்டு கொளுத்துவது, அவர்கள் மீது வன்முறையை பழகுவது. இந்த கூலிப்படைக்கு வேண்டியவை (சம்பளம் உட்பட) அந்த Corporate-காரர்களிடம் இருந்து வந்துவிடும். இந்த கூலிப்படை இதுவரை 700 கிராமங்களை தீயில் கருக வைத்துள்ளது. மூன்று லட்சம் பழங்குடி மக்களை துரத்தியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழங்குடி மக்களுக்கு இந்த தேதி வரை எந்த அரசும் அடிப்படை வசதிகளை/உரிமைகளை நிறைவேற்றியதில்லை. அவைகளில் சில - பள்ளிக்கூடம், மருத்துவமனை, நல்ல குடிநீர், சாலை வசதி, மின்சாரம். ஆனால் இந்த பழங்குடிகளை அழிக்க அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவைகளை செய்ய தயார்.

Sign of innocence

Gyaneshwari Rail Mishap மற்றும் Blast on the railway track in Perani செயல்களில் ஈடுபட்டது 'இவர்கள்'தான் என விசாரணை துவங்கும் முன்பே, ஆதாரம் இல்லாமலே அரசு முடிவுகட்டி விட்டது. இது மக்களை திசை திருப்பும் முயற்சி. உண்மையை மறைக்கும் செயல். மக்களை உண்மைக்கு எதிராகவும், இந்த 'மக்கள் விரோத' அரசை ஆதரிக்கவும் 'அறிவு சலவை' செய்யும் 'குள்ள நரி' வேலை. இப்பொழுது முதல் நான்கு பத்திகளை நீங்கள் படிக்கவும். அல்லது வேறு தீவிரவாத அமைப்பு இந்த செயல்களை நிறைவேற்றியிருக்கலாம். எனவே விசாரணை முடிந்து, ஆதாரங்களுடன் 'இன்னார்தான்' செய்தார்கள் என நிரூபிப்பது அரசுவின் கடமை.


Victims of Police/Salwa Judum in Chhattisgarh

உங்களுக்கு ஒரு ஆச்சரிய உண்மை - பழங்குடி மக்களுக்கு சேமிப்பு என்றால் என்னவென்று தெரியாது. வேட்டையாடுவார்கள். பகிர்ந்து உண்ணுவார்கள். விவசாயம் தெரியும்; செய்வார்கள்; பகிர்ந்து உண்டு வாழ்வார்கள். இவர்களிடம் உதிரி/சேமிப்பு என ஏதேனும் இருந்தால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். அதனால்தான் நான் எழுதினேன்: 'பழங்குடி மக்களுக்கு ஆசை - பேராசை என்றால் என்னவென்று தெரியாது' என. இந்த அளவிற்கு பழங்குடி மக்கள் இயற்கை வளத்தை பாதுகாத்தும், நிம்மதியாகவும் வாழ்வது சில 'கழிசாடைகளுக்கு' பொறுக்கவில்லை. போங்கடாங்...........


Members of Salwa Judum


This art done by Salwa Judum. Interchangeably, done by the Government of India.

Saturday, June 12, 2010

Bhopal - Hiroshima of Chemical Industry

சென்ற ஞாயிறு (6 June 2010௦) அன்று Vijay தொலைக்காட்சியில் 'நீயா? நானா?' நிகழ்ச்சி பார்த்தேன். கல்வி மீதான நமது பார்வைகளும், கருத்துகளும், வாதங்களும் மற்றும் அதான் மீதான அன்பும் பற்றி அறிய எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஒரு நல்ல இதயம் பேசிய வார்த்தைகள் எனது இரண்டு நாள் தூக்கத்தை எடுத்து சென்றது. எவ்வளவு புள்ளி விவரங்கள்; எவ்வளவு உண்மையான வார்த்தைகள்; எவ்வளவு நேசிப்பு கல்வி மீது; ஐயா, எனக்கு உங்கள் பெயர் தெரியாது. உங்கள் பாதம் தொடுகிறேன். கல்வி மீதான உங்கள் அன்பு என்றும் நிலைத்திருக்கட்டும். வாழ்க, வளர்க வளமுடன்.

* * * * *
சிவகங்கை மாவட்டத்தில் நமது தமிழக அரசால் தரப்பட்ட Educational CDs/DVDs களில் Porn Movie இருந்ததால் ஆசிரியர்களும், மாணவர்களும் 'உணர்ச்சிகளின் கலவையாய்' மாறியிருந்தனர். தமிழக அரசு Sarva Shiksha Abhiyan திட்டத்தில் கல்வியை வளர்க்க Educational CDs/DVDs தந்தால், அதில் சிலர் இந்த Sha Sha Sleazin' விளையாட்டு செய்கிறார்கள். இது சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* * * * *
Union Carbide gas leak case - - -


26 வருட 'நீதி போராட்டத்திற்கு' பிறகு சொற்ப நிவாரண நிதியும்; உயிர், உடமை, உறுப்புகள், சொந்தங்கள், வாழ்வை மற்றும் எதிர்காலத்தை இழந்தவர்களுக்கு இந்த 'மக்களை அழிக்கும்' மத்திய அரசும், 'உலக நாடுகளை அழிக்கும்' உலக அடியாலும் தந்த நிவாரணம் சொற்ப காசு, அநீதி, கண்ணீர், மனதில் வலியும் - என்றும் மன்னிக்கமுடியாத வடுவும்.

உலக அடியாலும் மற்றும் சில நாடுகளும் இந்தியாவிற்கு வந்து தொழில் செய்யலாம். Corporate -காரர்களிடம் அடிமை பட்டு கிடக்கும் இந்த இந்தியாவில் மனித உயிர் இலவசம். வாருங்கள்; இரத்தத்தை உறிஞ்சுங்கள்; உயிரை உறிஞ்சுங்கள்;  உலக அடியாளுக்கு இந்த உலகில் உள்ள எண்ணெய் வளத்தில் 26% சொந்தம். அடியாளை எதிர்த்தால் மட்டும் அல்ல, ஒரு நாடு எண்ணெய் வளமுள்ளதாக இருந்தால் போர் தொடுத்து அல்லது நம் போன்ற 'உலக நடிகர்கள் - விலை போகிறவர்கள்' ஆட்சி செய்யும் நாடுகளை எளிதாக மடக்கி அந்த நாட்டின் வளங்களை மடக்கி விடுவான்.

அப்போதைய முதலமைச்சர் Arjun Singh சொல்கிறார் 'எனக்கு எந்தவித Pressure-ம்  இல்லை. Warren Anderson-ஐ விடுதலை செய்தது நான்தான்.' ஆனால் அடுத்து உள்ள statement-ஐ படியுங்கள், உங்களுக்கு இந்த Impotent அரசியல்வாதிகளை புரியும்.

AICC general Secretary Digvijay Singh sent a message in which he stated that 'the whole case was dealt by the Government of India and the Supreme Court. State government hardly had any role to play in this case. But I am sure it must have been under US pressure.'




Bhopal-ன் அப்போதைய Collector, Moti Singh, சொல்வதையும் படியுங்கள்; 'Anderson was freed under Chief Secretary's orders. We kept Anderson in a room, when we arrested him, where he had access to a telephone due to which he made calls and got things done in his favour. Albeit Anderson got things done over the telephone, no one was willin' to stand surety for Anderson. Our Government officials got a junior employee of the plant to give him surety and we were followin' the Government's orders.'

மக்களே, அரசியல்வாதிகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். இதில் நமது அரசும், உலக அடியாலும் செய்த அநீதிகள் உங்களுக்கு சொல்லிவிட்டோம். எனக்கு யாராவது 'நான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவன் என்றோ, இந்த கட்சிக்குத்தான் நான் Vote போடுவேன் என்றோ' சொன்னால் அவரை பரிதாபமாக பார்ப்பேன். நமது நாட்டை ஆண்ட எந்த கட்சியும் நம் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கவில்லை. ஒரு சில கட்சிகளில் ஒரு சில நல்ல தலைவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் எந்த கட்சியும் 'மக்கள் நன்மைக்காக' இல்லை. எனவே நாளைய தலைமுறையாவது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக உழைக்கட்டும்.

சுருக்கமாக - அரசியல் என்பது ஒரு தனி மனிதன் பணம் சம்பாதிபதற்க்கு. இங்கு உண்மை, நீதி, நேர்மை, மக்கள் நலன் போன்றவை இருக்காது. மனித உயிர் இவர்களுக்கு தூசு. தற்போதுள்ள 'அணு ஒப்பந்தம்' கூட எந்த பாதுகாப்பும் அற்றது; நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும். இதன்படி உலக அடியாள் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். நாம் கேள்வி கேட்க முடியாது. அப்படி ஒரு 'அறிவான' ஒப்பந்தம் உலக அடியாள் பயன் பெறுவது போல்.

நமது சட்டம், பிரதமர், அரசியல் அமைப்பு, நீதிமன்றம், நீதிமான்கள் மற்றும் சக மனிதன் உட்பட யாரும் இந்த Hiroshima of Chemical Industry விசயத்தில் நேர்மையாக இல்லை. இந்த வழக்கை விசாரித்த C.B.I. மத்திய அரசு வழிகாட்டுதலின் பேரில் சொதப்பியது. Bhopal-இல் 26 வருடமாக நல்ல குடிநீர் இல்லை. விளைச்சல் இல்லை. உணவு பொருள் உற்பத்தி இல்லை. விபத்து நடந்து போது 800,000 மக்கள் வாழ்ந்தனர் அங்கு. விபத்து நடந்து போது உயிர் இழந்தவர்கள் 2,000 பேர்; and 300,000 were injured and as many as 8,000 have died since. இந்த விபத்தின் காரணமாக அன்று முதல் பல நோய்கள் இந்த மண்ணில்.




Instead of showin' some sympathy and the will to fight for the victims, the government is worried about loosin' the investment in the country. They feel any overtures to hold Dow liable for Bhopal-related issues will scare away Dow’s promised $1 billion investment in India and also discourage other American investors. Dow even admitted paying $22,000 (Rs 88 lakhs) as bribe to agriculture ministry officials to expedite registration of the three pesticides namely Dursban, Nurelle and Pride.

Investigators say the accident occurred when water entered a sealed tank containing the highly reactive gas, causing pressure in the tank to rise too high.

Union Carbide Corp., an American chemical company, said the accident was an act of sabotage by a disgruntled employee who was never identified. It has denied the disaster was the result of lax safety standards or faulty plant design, as claimed by some activists.

The Central Bureau of Investigation said the plant had not been following proper safety procedures.


Sharad Pawar வாழ்க; பிரதமர் வாழ்க; Arjun Singh, அப்போதைய பிரதமர் late.Rajiv Gandhi மற்றும் இந்த Disaster-இல் பங்கு கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும், மேல் மட்ட மக்களும் நீடூழி வாழ்க. வளர்க.

Monday, April 19, 2010

உணர்வு, மூளை & மனசாட்சி இல்லா பதர்கள்.

April 8, 2008 11:48 AM    - இந்த தேதியில் எழுதிய கட்டுரையில் ஒரு Scotland-Yard கதை சொல்லி இருந்தேன். அதை மிஞ்சும் இன்னொரு கதை இதோ - - -

நமது 'நீதி'மன்றத்தில் நீதிபதி அவர்கள், குற்றவாளி கூண்டில் உள்ளவரிடம் 'உங்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளதற்க்கு உங்கள் வாதம் என்ன?' என்று கேட்கிறார். அவர் கேட்ட பதில் 'பசியால் வாடுகிறேன். சாப்பிட எதாவது கொடுங்களேன்' என. என்னடா குரல்தான் வருகிறது, ஆளை காணோமே என்று நீதிபதி தேடுகிறார் - ஒரு ஆறு வயது பொடிசு குற்றவாளி கூண்டில் நிற்கிறது. அந்த பொடிசு உண்மையாகவே வாடி போய் நிற்கிறது. நீதிபதி அந்த குட்டிக்கு உணவு வாங்கி வர சொல்லி, அந்த பிஞ்சுவின் பசியை போக்குகிறார்.


நடந்தது என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன்: இந்த பொடிசுவின் தந்தைக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் தகராறு. இது Police Case-ஆகி Court வரை வந்துடுச்சி. இந்த 'உலக அரசியல் தலைவர் படுகொலை' சதியில் அந்த பிஞ்சுக்கும் தொடர்பு உண்டு என குற்றவாளியாக்கப்பட்டு 3K.M. நடத்தி (அல்லது இழுத்து) அழைத்து வந்துள்ளனர் 'நீதி'மன்றம் வரை.

இந்த பொடிசு இதன் சத்துக்கு என்ன செய்து இருக்கும் இந்த Case-ல் குற்றவாளி என்று சேர்க்கும் அளவிற்கு? ஒரு குட்டி உருவத்தை & பிஞ்சு மனசை எப்படி 3K.M. நடத்தியே அழைத்து வந்தனர்? இந்த 'வெங்காயங்கள்' எல்லாம் எப்படி வேலைக்கு வராங்க? உண்மையில் 'பழுத்த கழிசாடைகள்.'

நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? 'இந்த பொடிசு சம்பந்தப்பட்ட Case எவ்ளோ பெரியதாக இருந்தாலும் அதனை Dismiss செய்கிறேன்' என்பது அவரது தீர்ப்பு. Bravo, நீதிபதி அவர்களே. இது நடந்தது நமது இந்தியா என்று சொல்ல வேண்டியது இல்லை. மாநிலம் - உத்திரப்பிரதேசம்.

* * * * *

எம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவிற்குள் நுழைய 'அனுமதி மறுக்கப்பட்டவர்களில்' ஒருவர் என அவரை Airport-லேயே திருப்பி அனுப்பிவிட்டனர் Malaysia-விற்கு.

திருமதி. பார்வதி வேலுப்பிள்ளை அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது, இந்தியா வருவதற்கு. இது நடந்தது காலையில். அதே இரவு அந்த Visa-வுடன்  இந்தியா வர, தவறுதலாக Visa வழங்கிவிட்டோம் என்று அவரை திருப்பிய அனுப்பிவிட்டனர், அவர் வந்த விமானத்திலேயே. அவர் சிகிச்சைக்காக தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது. 12 மணி நேரத்தில் அரசியல் விளையாடிவிட்டது..!

In this file photo, Mr and Mrs Velupillai are seen with Mr and Mrs Prabhakaran and Mr Charles Antony.


இந்த விளையாட்டில் சம்பந்தபட்டவர்களுக்கு - காலமும், எம் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் உங்களை. நீங்கள் மனம் திருந்தி, மனசாட்சி உறுத்தலால் உழலும் போது உங்களை மன்னிக்க எம் மக்களும், காலமும் இல்லாமல் போயிருக்கும். அப்போது தெரியும் ஒரு இனம் பட்ட வேதனைகளும், வலிகளும்.

* * * * *

பழங்குடி மக்களுக்கு ஆசை, பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. காடும் காடு சார்ந்த இடமும் (வளமும்), மலையும் மலை சார்ந்த இடமும் (வளமும்) என அமைதியாக (நாம் அறியாத ஒண்று)வாழ்ந்தவர்களை Corporate காரர்களிடம் விற்றதால் வந்தது பிரச்னை. ஒரு நாள் அவர்களிடம் 'வாழ்வியல் ஆதாரங்கள்' எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுங்கள் என்றால் எங்கு போவார்கள்? சில லட்சம் மக்கள் முள் வேலிக்குள், புரட்சி செய்ய கூடாது என்பதற்காக.

இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. தனது மண்ணின் சொந்த மக்களை வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு கொடுமை செய்து இருக்காது. Maiost-கள் போராடி வருகிறார்கள் இந்த அரசுக்கு எதிராக. Maiost-கள் இல்லை என்றால் பாதி இந்தியா விலை போயிருக்கும் எப்பொழுதோ. முழு இந்தியாவும் வெகு விரைவில்.

அரசுவின் படை வீரர்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல், போதிய அளவு உன்ன உணவு இல்லாமல், தங்க ஆரோக்கியமான Camp இல்லாமல், இல்லாமல் - இல்லாமல் - இல்லாமல், இறுதியில் Maiost-களுக்கு எதிரான போரில் ஆளே இல்லாமல் போகிறார்கள். Dantewada Attack-ன் போது அரசு படை வீரர்களின் Camp-ன் நிலை இதோ - படுப்பதற்கு, சமைப்பதற்கு, ஓய்வு எடுப்பதற்கு, தங்கள் அனைத்து உடமைகளையும் வைப்பதற்கு, -ற்கு -ற்கு - ற்கு என ஒரே Camp-ஐ  உபயோகப்படுத்தி உள்ளனர். இவர்கள் உயிர் போனாலும் சொற்பமான ஓய்வுதியம். இந்த அரசு என்று இல்லை, எந்த அரசும் ஏன் இந்த அப்பாவி & நெஞ்சுரம் மிகுந்த வீரர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வதில்லை???

'ஐயா, எங்கள் நாட்டின் அரசு வீரர்களே. நீங்கள்தான் வாழும் தெய்வங்கள். உங்கள் உயிரை தந்து எங்களை காப்பதால். நீங்கள் இந்த நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் உங்கள் உயிர் தந்து எங்களை காக்க நிற்கிறீர்களோ, அந்த திசை எல்லாம் நோக்கி உங்களை நான்/நாங்கள் வணங்குகிறேன்/றோம்.'

Maiost-களுடன் அரசும் & அதிகாரிகளும் Negotiate செய்யவேண்டிய நேரம் இது. உயிர் Maiost-கள் பக்கம் போனாலும், அரசு தரப்பில் போனாலும் எங்கோ ஒரு மூலையில் அவரை நம்பி இருக்கும் பல உயிர்கள் மீளாத்துயரில் வாடுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். இது செய்த தப்புகளை திருத்திக்கொள்ளும் நேரம். வாய்ப்பை தவற விட வேண்டாம்.

This file picture shows you the Naxal or Maoist Corridor. This picture was illustrated in 2007. Today, the corridor is much bigger than you think.

தமிழன் Vs சக தமிழன்.

முன்பு எழுதிய & Orkut குழுமத்திற்கு அனுப்பிய தேதியும் தந்து உள்ளேன்.

April 8, 2008 11:48 AM

எனது அபிமான நடிகர் திரு. ரகுவரன் அவர்கள் இழப்பு எதிர்பாரா ஒன்று. Style + திறமையான நடிப்பு என்றால் அது திரு. ரகுவரன் அவர்கள்தான்.

~ Hogenakkal குடிநீர் திட்டம் மீதான பிரச்னை: இங்கு எல்லோரும் ஒன்றுபட்டு போராடி வரும் வேளையில், சில பல அரசியல் காரணங்களால் போராட்டம் வேண்டாம் என திட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது, நமது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால். அப்படி என்றால், இதற்காக போராடிய மக்கள் முட்டாள்களா..? அல்லது தமிழ் உணர்வுடன் பேசி கன்னட மக்களை பகைத்து கொண்ட திரு. ரஜினி அவர்கள் இளிச்சவாயரா..? இப்படி ஏதோ ஓர்/சில/பல அரசியல் நாடகத்தினால்தான் காவேரி நதி பிரச்சினை இன்னும் நடந்து வருகிறது. அதே நாடகம் இந்த விசயத்திலும். இந்த உலக மக்களுக்கு ஓர் செய்தி: நீங்கள் தமிழனை தாக்க வேண்டாம். தமிழன், சக தமிழனால் அழிந்து போவான். மற்ற மக்கள் ஏன் தேவை இல்லாமல் தமிழனை தாக்கி கொண்டு..?

~ ~ Common-sense/கடமை..? இதில் எது high-priority உள்ளது..? It depends. நம் சக மனிதன் ஒருவர் தனது தந்தை இருதய வலியால் துடிக்க, தனது சொந்த Auto-வில் மருத்துவமனை நோக்கி - தாய் மற்றும் இருதய வலியால் துடிக்கும் தந்தையும் Auto-வில். ஓர் இடத்தில் Traffic-signal. பரபரப்பில் அவர் கடந்து செல்ல, அங்கு Duty பார்த்த Scotland-yard கடமை வீரர் (Police தான். வேற யாரு?)  அந்த மகனை சட்டம் என்ற பெயரில் கொடுமை படுத்த, இதனைப் பார்த்த தந்தை 'என்னால் எனது மகன் துன்பம் அனுபவிக்கிறாரே' என அந்த Auto-விலேயே தனது மனைவி மடியில் உயிர் நீத்தார். இந்த புல்லரிக்கும் கடமை தவறாத கர்மவீரர் காட்சி இங்கு நடந்தது. இந்த பழுத்த கழிசாடைகள் இருந்து என்ன பயன்..?

இந்த பகுதி மக்கள் அந்த Scotland-Yard (மூளை இல்லா Police)  வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் செய்தனர். அது எப்படி? சுதந்திர இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் நீதி கிடைக்க போராடி, அது வெற்றியும் பெற்று விட்டால், நீதி-தேவதை தனது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்திவிடுவாள் அல்லவா.!?


~ ~ ~ சமீபத்தில் நடந்து முடிந்த கோவை CPI-M மாநாடு நிகழ்ச்சிகளை (சில நண்பர்களையும்) காண போயிருந்தேன். இந்த மாநாட்டில் சில அரிய புகைப்படங்கள் என் கண்ணில் பட்டது. அவைகளில் சில எனது ஆல்பத்தில் உள்ளது.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 4:24 AM

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: நடு நிலையுடன் வாசியுங்கள். நிறைய சொல்லி குறைவாக புரிந்து கொண்டால்..? குறைவாக சொல்லி தவறாக புரிந்து கொண்டால்..? ஆம், இதில் எதை சொல்வது அல்லது எதை விடுவது என்று புரியவில்லை.


ஒரு சின்ன தகவல்: நாம் எல்லோரும் 'வக்கிரம்' கலந்த எண்ணம் கொண்ட மனிதர்கள். நாம் அதனை காதல்/காமம் என்று முலாம் பூசி சொல்லலாம். இந்த 'வக்கிரம்' அளவு அதிகரிக்கும் போது/எப்பொழுதும் அதிக அளவு உள்ள, அவர்கள் வெறி கொண்ட மனிதர்களாக சமுதாயத்திற்கு ஒவ்வாத செய்யல் செய்கின்றனர். நாம் தேவையான அளவில் இந்த எண்ணம் உள்ளவர்கள் என்பதால் 'நல்லவர்கள்.' கொடுமைதான். வக்கிரம் அதிகமாக உள்ளவர்கள், சரி செய்யப்பட வேண்டியவர்கள்.

பெண்கள் செய்வது இல்லையா..? உண்டு. அவர்களால் ஆண்களை போல தாக்குதல் தொடுக்க முடியாது. ஆனாலும், ஆண்கள் மீதான அவர்களது 'பாலியல் வன்முறை' நடக்கிறது. மிக குறைவாக. இது மிக குறைவு என்பதால், வெளியே தெரிவது இல்லை. அவர்களது இன்னோர் வழி..? Mind Game. இதனால் வெளி உலகம் இதனை தெரியாத போல் இருந்து விடும். ஒரு சின்ன உதாரணம்: ஒரு ஆண் தன்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டதாக சொன்னால், சக ஆண்களே கிண்டல் செய்வார்கள். முதல் கேள்வி: நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..? ஒரு வேளை எதிர் காலத்தில் நடக்கலாம், இவ்வாறு: என்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டார் என்று காவல் துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு. இந்த 'பரிணாம வளர்ச்சி' நடக்க எத்தனை 100/1000 கோடி வருடங்கள் ஆகும் என்று கூற முடியாது.


ஒரு விசயம் மறுக்க முடியாது: இந்த லோகத்தில் 'ஆணின் உலகம் பெண்ணை சார்ந்தது- 'பெண்ணின் உலகம் ஆண் சார்ந்தது- விதிவிலக்கு இருக்கலாம். பிறகு ஏன் இந்த 'வன்முறை'? இந்த தப்பு எப்பொழுது சரி செய்யப்படும்..? ஆகாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சம்பவமாவது நடக்கும்.

ஒரு இயற்கை/அறிவியல் சார்ந்த உண்மை: அது எப்படி ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடன் 'ஏதேதோ' எண்ணம் கொள்கிறான்.!? இது எப்பொழுதும் அல்ல. சில நேரங்களில். காரணங்கள்: ஒரு பெண்ணின் உடல் & மனது இயங்கும் பாணி, காதல்/காமம் போன்ற விசயங்களுக்கு Respond செய்யும் விதம், இவைகளுக்கு மூளை இயங்கும் விதம் எல்லாம் ஒரு ஆண் விசயத்தில் நடப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்னொரு விசயமும் உள்ளது. இதனை நான் கூற விரும்பவில்லை. காரணம் - புரிந்து கொள்ள எல்லோரும் தயார் என்று எனக்கு தோன்றவில்லை. இது ரொம்ப Sensitive.

இதன் இரண்டாம் பாகத்தில் உங்களை சந்திக்கிறேன்.

குறிப்பு: இதனை March 24, 2008 அன்று எழுதியுள்ளேன். இன்று வரை அதான் இரண்டாம் பாகம் எழுதவில்லை. காரணம் - நம் மக்களின் Hypocrisy.

* * * * *
September 1, 2008 2:46 PM

An Infant, just a day old, struggles to open his eyes. Flies n Ants were all over his body when they found him under a tree. Ms Mala, mother of two, took the baby to the University Health Centre. Afterwards, Police took the baby to Panacea Hospital. When the baby was brought to the hospital, he came with insect bites on his face. His sugar was low. Authorities suspected a damage in his Cornea.

Do you friends understand what happened to the baby..? The baby was abandoned by his parents n placed under a tree at BU's campus.


If they (parents) had an intention to abandon their baby, they should have given the baby to any one of the charity organisations which controlled by Govt. (I may be sounded goose. If you decided to abandon, there is no point to look after the baby anymore). Therefore, they (his parents) did a fantastic job. If they did it intentionally, as sayin' goes, I wanna call them 'Fu***n' Machines.' (Sorry for my F).

Ms Mala has been lookin' after the baby since Friday. Hats off to Ms Mala. Bravo..!

Wednesday, April 14, 2010

கிறுக்கல்கள். உணர்வுகள். முட்டாள்தனம்.

என் பழைய கிறுக்கல்கள் உங்களுக்காக. எழுதிய மற்றும் Orkut குழுமத்திற்கு அனுப்பிய  தேதியுடன்.

December 31, 2007 8:24 PM

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது உலக மக்களுக்கு. சில நாட்கள் எழுதாமல் இருந்தேன். எல்லாம் சோம்பல் காரணமாக. இந்த பகுதியில் சில கருத்துகள் பெண்கள்/பெண்ணியல் பற்றியது. எனவே என் தோழிகள் அந்த சிந்தனைகளை நடு நிலையுடன் வாசித்து, ஏதேனும் தவறு/தப்பு இருப்பின் சுட்டி காட்டி எனது அறிவு கண்ணை திறக்க வேண்டுகிறேன்.

1. இன்று (31st Dec') காலை செய்திதாளை பார்த்தால் (Times of India, Bengaluru) திரு பிரபாகரன் அவர்கள் இறந்திருக்கலாம்/கூடும் என செய்தி. இந்த கூடும்/லாம் போன்ற செய்திகளை (திரு. பிரபாகரன் போன்றவர்கள் விசயத்தில்) செய்திதாள்கள் தவிர்ப்பது நல்லது. சில மக்களுக்கு அவர் தேவைப்படுகிறார். என் மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை மனசு கஷ்டப்பட வைக்கவேண்டாம்.

2. இலங்கை, ஃபீஜி தீவு, மலேசியா, நம்ம கர்நாடக மண் எங்கும் தமிழன் ஒரு Target-ஆக ஏன் ஆக்கப்படுகிறான். எல்லா மண்ணிலும் பல கலாசாரம் & பண்பாடு & Customs & பலதரப்பட்ட மக்கள் என வாழ்க்கை முறை இருக்கும். ஆனால், ஏன் தமிழன் மட்டும்..? உலக மக்களுக்கு ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள்: தமிழனது சிறப்பு & பண்பாடு & திறமை & தனித்தன்மை, etc. நீங்கள் மதிக்கவேண்டாம் அல்லது மிதிக்கவேண்டாம். தமிழ் மக்களை உங்களைப் போல் ஒரு மனித இனம் என்று அவர்களது உணர்வுகளை மதித்தால் போதுமானது.



3. Dupatta or Dress Code ஒரு பிரச்சனையை சிண்டு முடித்து உள்ளது. ஆண்கள், பெண்களை நல்ல உடை உடுத்த சொன்னாலும் & சொல்லாமல் விட்டாலும் பிரச்சினை. உடை உங்கள் சொந்த பிரச்சினை. Moreover, it is one of the primitive rights of Men & Women. At times, Dress Code is a sign of Gen X gap. ஆனால், சில உடைகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அது பெண்களுக்கும் தெரியும். Likewise, இடம் & பொருள் தகுந்தாற் போல் Dress Code மாறும். To crown in all, is to improve the moral of.

சில பெண் புரட்சியாளர்களுக்கு ஆண்களை எதிர்ப்பது ஒரு புரட்சி. ஒரு கேள்வி: இந்த லோகத்தில் எந்த பெண்ணும் இது வரை எந்த ஆண்மகனையும் ஏமாற்றியது இல்லையா..? அல்லது, ஊருக்கு உழைத்த உத்தம தலைவர்கள் பெண்களை எதிர்த்தா போராடி புகழ் பெற்றனர்..?

ஒரு கொசுறு செய்தி: இது வரை எந்த கடவுளும் பெண்களின் இயற்கை நிகழ்வின் போது தனது ஆலயத்தின் உள் வர கூடாது என சொன்னது இல்லை. சில மனிதர்கள் சொன்ன இந்த (கிறுக்கு) செய்தியால் அல்லது உருவாக்கிய மூட நம்பிக்கையால், நீங்கள் கடவுளை புறக்கணித்தால் அது முட்டாள்தனம். பெரிய புரட்சி அல்ல. அதற்கு பதில், பெண்களை ஆலயத்தின் உள் இயற்கை நிகழ்வின் போதும் அனுமதிக்க போராடி இருந்தால் அது புரட்சி. இந்த கருத்து யாருக்கு என்று சில மக்களுக்கு தெரியும். மேலும் இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல. நான் அவரை கேட்டுக் கொள்வது: ஆண்டவன் என்றும் மனிதனிடம், எனக்கு இது & அது செய் என்றும் - இவற்றை செய்தால் நான் உனக்கு நீ வேண்டும் சிலவற்றை தருகிறேன் என்றும் சொன்னது இல்லை. எனவே சில கிறுக்கு மனிதர்களை & கிறுக்கு செய்யல்களை எதிர்த்து போராடவும்.

இந்த தனிப்பட்ட விசயததிற்கு திரு. பாமரன், திரு. பாலு மகேந்திரா போன்றோர் சண்டை போடவில்லை என்று அவருக்கு வருத்தம். ஒரு சினிமா வசனம் (நம்ம மக்களுக்கு சினிமா மூலம் கருத்து பிடிக்கும்): ஆச்சி மனோராமா சொன்ன வசனம் (எந்த சினிமா என்று எனக்கு தெரியாது): "என் பாவாடை அவிழ்ந்து விழுந்தது தப்பு இல்லை. ஆனால் அதை அவன் பார்த்ததுதான் தப்பு." எனவே, உன்னாலே உன்னாலே படமாவது பாருங்க. சும்மா எல்லாத்துக்கும் ஆண்களை வசை பாடாதீர்கள்.

மேலும் நாம் எல்லோரும் (அட, இந்த பரட்டையும் சேர்த்து) உடை நமக்கே நமக்காகவா உடுததுகிறோம்..! இல்லை. மற்றவர்கள் admire பண்ண வேண்டும் என்ற ஒரு எண்ணமும் உண்டு அல்லவா..! பிறகு ஏன் இந்த Hypocrisy.!? Please, don't do any over react.

4. 2007 உங்களுக்கு என்ன பண்ணியது என நான் சொல்ல முடியாது. சரி நாம் 2007-ல மத்தவங்களுக்கு என்ன செய்தோம்..? இந்த சிந்தனையுடன் 2008-ஐ துவக்குவோம். இந்த 2008-ஐ மட்டுமல்ல. வாழும்வரை. அட நான் தப்புகளும் செய்து உள்ளேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். எனவே வாருங்கள் சிறப்பான எதிர்காலம் செய்வோம்.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன், இந்த வருடத்தின் கடைசி கிறுக்கல்களுடன்.

* * * * *
February 5, 2008 8:39 PM

1. இன்னும் 20/25 வருடங்களுக்குப் பிறகு அரசியல் செய்ய வரும் ராஜாக்கள், நான் திரு. M.G.R. அவர்களின் வாரிசு என்று சொன்னால் ஒரு Vote-கூட விழாது, அந்த ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கு. திரு. M.G.R. அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அதாவது, நல்ல பண்புகள் கொண்டவர். ஆனால், Administration Elements-ல் அவர் சோபிக்கவில்லை. பிறகு எதற்கு இந்த வாரிசு போட்டி? (சரத்குமார், விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் ஜெயலலிதா அவர்கள்).   நான், சிலர் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என்று எதிர் பார்த்தால், வாரிசு சண்டை நடந்து கொண்டுள்ளது. இந்த சண்டை முடிந்து, மக்களுக்கு நல்லது செய்ய வரும்போது, குதிரை கொம்பு முளைத்து ஒரு புதிய உயிரினம் உலகிற்கு வந்து இருக்கும். போங்கப்பா, நீங்களும் உங்க வாரிசு அரசியலும்..!





2. Divide n Rule..! 'வெள்ளையனே வெளியேறு' என்று முழங்கி விடுதலை வாங்கினோம். இன்னும் சில வாங்கி உள்ளோம்: ஆங்கில மோகம் + நமது Traditional Values-ஐ தொலைத்தது + இத்யாதி + இத்யாதி + Last but not least: Divide n Rule. சில அரசியல்வாதிகள் இந்த Principle-ஐ இன்னும் பின்பற்றி வருகின்றனர். பார்க்க: North Indian crisis in Mumbai. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளை குடியுரிமை நீக்கி தண்டிக்க வேண்டும். இந்த மாதிரி விசமம் செய்யும் மக்கள் விசயத்தில், We need un-compromisin' Integrity.




3. புகை: Swiss, Norway, Sweden மற்றும் சில நாடுகளில் புகையின் தீமை சொல்லும் படங்களை Pack-மீது போட சொல்லி அந்த நாட்டு அரசுகள் சட்டம் போட, இன்று புகைக்கும் பழக்கம் ஓர் அளவிற்கு குறைந்து உள்ளது. அதை நமது மத்திய அரசு செய்யாது. காரணம்: வருமானம் போய்விடும் அல்லவா.




இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 1:37 AM

திருவண்ணாமலையில்  ஒரு 3 நாட்கள் இருந்து அண்ணாமலை அவர்களை தரிசித்த ஒரு நாள், திரு. சுஜாதா அவர்கள் மறைந்த செய்தி. நெஞ்சம் கனத்தது உண்மை. எனக்கு சில விசயங்களில் உலகம் புரிய வைத்த ஆசான்.

~ ஒரு 2 வருட இடைவெளிக்கு பிறகு, தமிழக பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. இங்கிருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு பேருந்தில் சென்றேன். வரும் போதும். திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் சொல்ல வேண்டாம். இந்த தருணங்களில், நான் பார்த்த ஒரு விசயம்: ஏன் தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு நமது முதல்வர் சொன்ன ஒரு விசயம் உள்ளது..?

நமது முதல்வரின் கருத்துக்கு, திருக்குறள் அழிக்கப்பட வேண்டுமா..? நமது முதல்வர் அவர்கள் விளம்பரம், கட்-அவுட் கலாசாரம், இத்யாதி: விசயங்களுக்கு முற்று புள்ளி வைக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்கும் வேளையில், இந்த விசயம் சிறிது வருத்தம் தருகிறது.




~ ~ ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு: Etiquette. இது நமது அரசு பேருந்துகளில் பணி புரியும் சில நடுத்துனர் & ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. காரணம்: திருவண்ணாமலைக்கு  இங்கிருந்து போன பேருந்தில், திரைப்படம் (அய்யோ) ஒலி-ஒளி'பட்டது. நேரம் கடந்தது. சிலர் நிறுத்துமாறு விண்ணப்பம். நடக்கவில்லை. நான் முன் இருக்கையில் இருந்த நடத்துனரிடம், ஒலி அளவை குறைக்க விண்ணப்பம். ஒலி அளவு ஏற்றப்பட்டது. என்ன ஒரு முரண். பிறகு எனக்கு ஒரு ஐயம்: இந்த திரைப்படம் ஓட்டுனர் உறங்க கூடாது என மிகுந்த ஒலியுடன் ஒளிபரப்ப படுகிறதோ என்று.




~ ~ ~ தமிழ்க அரசு மூன்றாம் பால் இனத்தை மதித்து அவர்களுக்கு 'T' என்று முத்திரை உள்ள குடும்ப அட்டை (Ration-Card) தந்தது மகிழ்ச்சி. அவர்களை மதிக்க ஆரம்பித்தால் அவர்கள் நல்ல வாழ்வுக்கு திரும்புவர். நாம் ஆண்/பெண் என்ற போதும் தப்புகள் இல்லாமலா வாழ்கிறோம்..? ஒரு ஐயம்: இந்த 'T' அவர்கள் வாழ்நாள் முழுமைக்குமா அல்லது அந்த பால் வேறுபாடு முழுதாக அங்கீகரீக்கப்பட்டு சில நாட்களில் ஆண் அல்லது பெண் என்று மதிககப்படுவார்களா..?

இந்த பொறுக்கி விடைபெறுகிறேன்.

Thursday, April 8, 2010

மயானத்தில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்.

December 26, 2009 12:16 PM (on this date I wrote this article and sent it to my Orkut Groups)
இது வரை, நமது இனத்தை அழிக்க உதவினோம். மீனவர்கள் வாழ்வில் 'சுனாமி' விட்டோம். (இந்த சட்டத்தை இயற்றிய 'உலக அறிவாளி' யாரோ.!? மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க விரும்பினால்... என்று வசனம் வேறு). மீனவர்கள் கடலில் மீன் பிடிக்காமல், Shriya Saran உடன் Item Dance போடவா போவார்கள்.!?

சரியான ஆதாரம் இல்லாமல் Dr Binayak Sen-ஐ பாடுபடுத்தினோம். திருமதி. நளினி முருகன் அவர்களின் வாழ்வில் 'குஷ்பூ தமிழ்'-ஐ விட்டோம். பதவிக்கு டெல்லி போனோம். தமிழன் வாழ்வுக்கு கடற்கரையில் 'அரை நாள்' காற்று வாங்கினோம். இந்திய வளங்களை அந்நியனுக்கு விற்றோம். நமது தாய்மண்ணை அவனது 'கழிவு' கொட்டும் சாக்கடை ஆக்கினோம். சக இந்தியனை கொன்று குவித்தோம், பல பிரிவினை காரணங்களால். ஆனால், 26/11 அன்று ஒரு அந்நியன் நம் மக்களை கொன்று குவித்தான். அந்த 'Kasab' பக்கா விஜய் படம் போல் 'நல்ல மசாலா' வாழ்க்கை வாழ்கிறான் நமது வரி பணத்தில். (இந்த நடிகன் திருந்தவே மாட்டாரோ.!? நல்ல 'கைப்புள்ள' நடிகன்பா).

இந்திய இறையான்மை: உண்மை பேசாதே. நல்லவர்களுடன் சேராதே. மக்களுக்கு அறிவை, உண்மையை புகட்டாதே. இன, மொழி உணர்வு கூடாது. இதை எல்லாம் செய்தால் 'தேசிய பாதுகாப்பு சட்டம்' எதிர்க்கும். ஆனால் Kasab-ஐ பாதுகாப்போம். இவர் இன்னும் 'நான் ஒரு இந்தியன்' என்று சொல்லவில்லை. அடிப்படை உரிமை கேட்கும் மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களிடம் 'வன்முறை' பழகுவோம். பொதுவாக அனைத்து மக்களின் 'வாழ்வியல் ஆதாரங்களை' அழிப்போம். இப்படி மக்களையும், வாழ்வியல் ஆதாரங்களையும் அழித்துவிட்டு வெறும் மயானத்தில் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் என்ன செய்ய உள்ளார்கள்.!?

நான் முன்பே சொன்னது: ஒரு நடிகனை திரையறங்கினுள் கொண்டாடுங்கள். அவரது உண்மையை, நேர்மையை & நல்ல பண்பை வெளியே கொண்டாடுங்கள். இதற்கு மேல் அவரை 'தளபதி, தலைவன் & இன்னும் சில பட்டங்கள்' கொடுத்து ஏதோ இந்த உலக மக்களை காக்க வந்தவர் போல் உங்கள் சுய நலம் & மற்ற சில வசதிகள் கருதி இல்லாத ஒன்றை உருவாக்க வேண்டாம். நடிகனுக்கு நடிப்பது தொழில். இதை எந்த நடிகரும் (திரு. அஜித் தவிர) ஒத்துக்கொள்வதில்லை. தன்னை ஒரு பெரிய 'சக்தியாக' காட்டிகொள்வதில் என்ன ஒரு ஆர்வம்.!! திரு. ரஜினிகாந்த் வைத்தாரே ஒரு ஆப்பு. அரசியல் வசனங்கள் பேசி & ரசிகர்களையும் உசிப்புவிட்டு பிறகு பழியை ரசிகர்கள் மேல் போட்டாரே (பேசிய வசனம்: 'நீங்க நான் அரசியலுக்கு வருவேனு நினைச்சா நானா பொறுப்பு). இந்த நடிகர் போல வேறு யாரும் தனது ரசிகனை முட்டாள் ஆக்கியது இல்லை. முட்டாள்கள் என்று சொன்னதும் இல்லை. அது சரி, அவர் பணம் சம்பாதிக்க இவர்களை உபயோகப்படுத்திகொண்டார். நம் மீதும் தவறு உள்ளது.

இவர் பேசிய இன்னொரு வசனம்: 'சொன்ன சொல் கொடுத்த பொருள் திருப்பி வாங்கி பழக்கம் இல்லை.' கன்னட மக்களிடம் 'பேசியது தவறு' என்று 'உதறல்' வாங்கினாரே. இன்னொரு வசனம் 'பேர கேட்டா அதிருதல.' கன்னட மக்களுக்கு அதிரவில்லையே. கவுண்டமணி அவர்கள் ஒரு படத்தில் பேசிய வசனம்: 'நடிகர்கள்தான் விளம்பரம் செய்து கொல்கிறார்கள். உனக்கு ஏன் இந்த வேலை. இவுனுங்கதான் அவசியமா பிறந்துட்டானுங்களா. நாம எல்லாம் அவசியம் இல்லாம பிறந்துட்டோமா.!?

A R Rahman இரு Oscar Awards வாங்கினார்கள். ரசூல் பூகுட்டியும், Gulzar-ம் தலா ஒரு Oscar Award வாங்கினார்கள். ஒரு இந்தியர் நோபல் பரிசு வாங்கினார்கள். நமது இந்திய Cricket Team #1 இடம் பிடித்தது Test போட்டிகள் விளையாடும் அணிகளின் தர வரிசை பட்டியலில். இன்னும் பல நல்ல விசயங்கள் நடக்கும் என நம்பிக்கை செய்வோம். நமது திறமை உலக அரங்கில் வெளிச்சத்திற்கு வந்தது. வரும் 2010-ல் இது போல் நிறைய நடக்கும் என நம் திறமையை & மக்களை நம்புவோம்.

நேர்மையாய் இருப்போம். அறிவை வளர்ப்போம். அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அறிவை தேடுவோம். உலக அரசியல் & உலக தலைவர்கள் பற்றி & பல நல்ல நூல்களை (Books) படிப்போம். ஒரு நல்ல மாற்றத்தை நம் மக்களிடம் ஏற்படுத்துவோம்.

இலக்கியம் என்பது Sidney Sheldon மட்டும் அல்ல. இவர் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய Fiction/Semi-Fiction Books மட்டுமே இலக்கியம் அல்ல. நிறைய புதையல் உள்ளது. தேடி தேடி படிப்போம். சிலருக்கு இந்த நூல்கள் மட்டுமே இலக்கியம். என்ன கொடுமை சரவணா.!? நூல்கள் மட்டும் வாழ்க்கை அல்ல. சக மனிதனும், சரியும் & தப்பும், நம்மை சுற்றி நடக்கும் விசயங்களும் கல்விதான். இவை சொல்லி தரும் விசயம் கோடான கோடி வரும்.

நம்பிக்கையுடன் 2010-ஐ வரவேற்போம். நல்லது நடக்க முயற்சி செய்வோம். நல்ல விசயங்களுக்கு முதல் அடி எடுத்து வைப்போம். நல்லதை நடத்தி முடிப்போம். பல நல்ல செய்யல் நடக்க நம் திறமை & சக மனிதன் மீது நம்பிக்கை வைப்போம். ஒன்று கூடி நல்லது செய்வோம். உங்களுக்கு (என் அன்பு நண்பர்களுக்கு) என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். மேன்மேலும் உயர வாழ்த்துகள்.

விடைபெறுகிறேன். சந்திப்போம்.

Monday, April 5, 2010

எங்களுக்கும் வாழ ஆசை, மூடர்களே.

நமக்கு நேர்மையை தெரியுமா? குறைந்தபட்சம் நேர்மையாய் சிந்திக்க தெரியுமா? இந்த 'முதலாளித்துவ சமுதாயம்' என்ன செய்கிறது என்று பார்ப்போம். நம்மை சுற்றி சுரண்டுபவர்களும், நம்மை அடக்கி ஆள்பவர்களும் இருக்கும் போது, 'ஏழை விவசாயிகள் தற்கொலை செய்ய தூண்டபடுகிறார்கள். எலிகளையும், பாம்புகளையும் உணவாக மாற்றிகொண்டார்கள்.'




சில மாதங்களுக்கு முன் இந்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி செய்தது, ஒரு கிலோ ரூ. 12.50 க்கு. அரசு சொன்ன காரணம் 'நம்மிடம் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளது.' ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசு தந்த கரும்பு கொள்முதல் விலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு தேனீர் அருந்தலாம் அந்த பணத்தில்.

பிறகு இதே மூளை இழந்த அரசு (அல்ல, விவசாயிகளின் உயிரை குடிக்கும் அரசு) இறக்குமதி செய்தது ஒரு கிலோ சர்க்கரை ரூ. 30 க்கு. நுகர்வோர் சந்தையில் விற்ற விலை கிலோ ரூ. 40. இந்த நாடகம் நடந்தது 5 மாத இடைவெளியில்.

எனவே ஒரு தேனீர் விலைக்கு சொந்த மண்ணின் விவசாயிகள் விற்கப்பட்டு, அதே சொந்த மண்ணின் மக்கள் அநியாய விலைக்கு அந்த பொருளை வாங்கி அவதிபடுகின்றனர். நம்மளை விட பொருளாதரத்தில் பின் தங்கிய பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் சர்க்கரை, பெட்ரோல் மற்றும் டீஸல் விலை மிக மிக குறைவு. அவர்களால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? இதோ அந்த திரை மறைவு நாடகம் உங்களுக்காக - - -

இந்த பொருள்களின் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி போக இந்த அரசுகளின் குள்ளநரி வேலை இதோ: ரூ. 12.50 க்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய, அதை கம்மி விலைக்கு வாங்கி பதுக்கி வைத்த பன்னாட்டு நிறுவனம் இந்த அரசுக்கு தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அல்லது அந்த நிறுவனம் எந்த அமைச்சருக்கு சொந்தம்? பன்னாட்டு நிறுவனம் என்றால், ரூ. 30 க்கு நம்மிடமே விற்ற அந்த நிறுவனம் இந்த அரசுக்கும், அமைச்சருக்கும் தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அந்த நிறுவனம் ஒரு அமைச்சருக்கு சொந்தம் என்றால், அவர் லாபம் பார்த்த கோடிகள் எத்தனை?




உலக அடியாள் கூட தனது நாட்டு மக்களை ஒண்றும் செய்தது இல்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைபட்டு கிடக்கும் இந்த அடிமை-சுதந்திர இந்தியாவில் சொந்த மண்ணின் மக்கள் வாழ வழி இல்லாமல். இலங்கையில் ஒரு இனம் வாழ இன்னொரு இனத்தை அழித்தது. ஆனால் பன்னாட்டு-அடிமை-இந்தியாவில் மக்கள் வீடு இழந்து, காடு இழந்து, உடமை இழந்து, சொந்தம் இழந்து, வாழ்வை தொலைத்து அகதிகளாக, முள் வேலிக்குள்ளும் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டிய நிலை.

அடக்குமுறை உள்ள இடத்தில் அடங்க மறுக்கும் சமுதாயம் முளைக்கும். குள்ளநரிகள் இருக்கும் இடத்தில் புரட்சி எந்த நேரமும் வெடிக்கும். பழங்குடிகள் அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள் பறிக்கபட்டு நிர்கதியாய் விரட்டப்படுகின்றனர். எல்லாம் இழந்து கையில் ஓட்டை காலணா இல்லாத அவர்கள் என்ன செய்வார்கள்? மலையும் மலையின் வளங்களையும் நம்பி வாழ்ந்தவர்கள், இப்போது முள் வேலிக்குள் அதுவும் தங்களது சொந்த மண்ணில்.

{In this fils photo, leerin' youth snappin' photos of a naked woman. Prasenjit Chakravorty (28), owner of a fast food joint, Ratul Barman (18), a hotel waiter, and Sudip Chakdar (20), a pan shop owner are the chief accused. What compelled these young men to strip a woman? we are always animals and are just sheddin' some hypocrisy}.



நளினி அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. காரணம் 'கொடும் செய்யல் புரிந்தவர், விடுதலை செய்தால் சமுதாயத்திற்கு நல்லது அல்ல.'  தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொலை செய்தவர்கள் இன்னும் வாழவில்லையா? அல்லது அந்த அரசியல் கட்சி (அ.தி.மு.க) தமிழகத்திலிருந்து ஒழிந்துவிட்டதா? மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்டது? கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது? இந்த கொடும் செய்யல் புரிந்தவர்கள் தற்போதைய 'காந்திய' சமுதாயத்தில் இல்லாமல் போய் விட்டார்களா என்ன? சாதி பெயரில் அரசியல் செய்பவர்களும், சாதி பெயரில் வன்முறை செய்பவர்களும் நம்மை சுற்றி 'வாழும் அவதாரங்களாக' மக்களை ஆசிர்வதிகவில்லையா?

"அதிகாரிகளும், அதிகாரம் உள்ளோரும் செய்வதே ஆட்சி. சொல்வதே சட்டம்."

தற்போதைய மத்திய அரசும், மாநில அரசும் தங்களது சுய லாபத்திற்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கை மண்ணில். இலங்கை அரசை இந்திய அரசு United Nations சபையில் போருக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு இந்த நிமிடம் வரை 'ஆண்மையான' நடவடிக்கை இல்லை. ஆண்மை இல்லாத அரசு மக்களை ஆட்சி செய்வது வரலாற்றில் அழிக்கப்படவேண்டிய பக்கங்கள்.

'அங்காடித் தெரு' படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம். தமிழ் படங்களை பற்றி பேசும் போது 'அங்காடி தெரு'வை ஒதுக்க முடியாது. சிறந்த படைப்பு.