எங்கள் கிராமமும் மற்றவை போலவே. ஊரில் யார் இறந்தாலும் சண்டை, அடிதடி, வெட்டு/குத்து இல்லாமல் இறந்தவரை வழி அனுப்பியதில்லை. ஊரின் மிக வயதான கோவிந்தம்மாள் (சுருக்கமாக கொய்ந்தி) பாட்டி இறந்து விட்டார். பாட்டி இறந்த நிமிடத்திலேயே, பாட்டியின் மகன்களுக்குள் சண்டை ஆரம்பித்துவிட்டது. பிறகு இன்னொரு சண்டை; சண்டையின் தொடர்ச்சியாக ஓரிரு சண்டைகள்; அப்படியே ஓரிரு சம்பந்தமில்லாத சண்டைகள்; நீண்ட நாள் 'கோவம்' தீர்க்க ஓரிரு சண்டைகள்; இப்படி அந்த நாள் மிகவும் கலவரமாக போனது.
நாம் 'சம்பந்தமே இல்லாமல்' வந்த சண்டையை பார்ப்போம் - உருப்படிக்கும் (நண்பன் பூமி), 'குடி-Repeat'க்கும் வந்த சண்டை இது. (குடி Repeat என்னவென்றால் - 'மது' அருந்திய பிறகு 'இவர்' ஒரே விஷயத்தை ஆயிரம் முறை சொல்லி நம்மை கொன்றுவிடுவார். அதனால் இவரை கண்டால் எங்கள் நண்பர்கள் குழு ஓட்டம் பிடிப்போம்.) இந்த சண்டை உருவான விதம் நமக்கு இப்பொழுது வேண்டாம். உருப்படியை அடிக்கனும்னா குறைந்தது ஐந்து ஆட்கள் வேண்டும்; குடி Repeat-ம் நல்ல பலசாலி. இவரை அடிக்கனும்னாலும் ஐந்து ஆட்கள் வேண்டும்.
ஒரு கட்டத்தில் இருவரும் சண்டையை விட்டுவிட்டு போய்விட்டார்கள். ஆனால் குடி Repeat-ன் மனைவி தனது சொந்தங்களுக்கு அலைபேசி வழியே தகவல் தர; (எங்கள் ஊருக்கும் இந்த சொந்தங்களின் ஊருக்கும் ஒரு 25KM தொலைவு வரும்) ஒரு பதினைந்து பேர் வண்டிகளில் வந்து 'உருட்டு கட்டைகளுடன்' உருப்படியின் வீடு சென்றனர். உருப்படியின் அம்மாவும், இளைய சகோதரனும் வீட்டில் இருந்த கருவேல விறகுடன் 'வாங்கடா ஒரு கை பாக்கலாம்' என தயாராக; உருப்படி அந்த நேரம் வீட்டில் இல்லை. நண்பர்களோ 'மது' விருந்தில்; அக்கம் பக்கம் உள்ளவர்கள் உருப்படிக்கும் எங்கள் நண்பர்களுக்கும் அலைபேசியில் தகவல் தர, வந்து சேர்ந்தோம்.
'குட்டி - எபுக, எபுக, எபுக' என குட்டி தாதாவின் அப்பா கோவத்தில் கதற,
'என்னடா உங்க அப்பா சொல்றாங்க' என நாங்கள் அவனிடம் கேட்க,
'எல்லாரையும் புடிச்சி கட்டி போட சொல்றார்' என்று மொழிபெயர்த்தான்.
தொப்புளி 'எந்த தைரியத்துல ஊருக்குள்ள வந்திங்கடா எல்லாம்? அவன அடிச்சிட்டு போய்ட முடியுமா உங்களால? நாங்க அடிச்சிப்போம், அப்பறம் சேர்ந்துபோம். நீங்க எப்படிடா ஊருக்குள்ள வரலாம்?' என ஒருவனை அடித்த பிறகு, சமாதானம் பேசினர் அசலூர்காரர்கள்.
'அவங்கள விட்டுடுங்கையா' என குடி Repeat-ன் அம்மா தனது சொந்தங்களுக்காக பரிந்து பேச,
'எதுக்குடி விடனும் அவனுங்கள? போடி அந்தாண்ட. இல்ல ஒ*த்து தூக்கி வீசிடுவேன் உன்னை' என பெரிய பானை (அப்படி இருக்கும் அவரது வயிறு) சொல்ல,
'நீ ஒரு மானங் கெட்ட ஆளுயா. இப்படியா பேசுவ' என சுய்யானின் (40 வயதிற்கு மேல் இருக்கும். இயற்பெயர் ராம கிருஷ்ணன்) அம்மா சொல்ல,
'நீயும் போடி அந்தாண்ட. இல்ல உன்னையும் ஒ*த்து வீசிடுவேன்' என்றார் பெரிய பானை,
'உனக்கு இங்க என்ன வேலை? அந்த ஆளு என்ன வார்த்த சொல்றான்.!' என்றபடி சுய்யான் தனது அம்மாவை கன்னத்தில் அறைய, (ஒரு கிளை சண்டை ஆரம்பம் ஆனது).
எல்லோரும் இந்த அசலூர்காரர்களை என்ன பண்ணலாம் என பேசும்போது, கட்ட குண்டு (குள்ளமாக முறுக்கேறிய உடம்பு உள்ளதால்) சொன்ன ஒரு யோசனை அங்கம்மா/(சிலருக்கும்) என்ற 20-களில் இருக்கும் பெண்ணுக்கு பிடிக்கவில்லை. இதன் பொருட்டு இருவருக்கும் வாக்குவாதம் வர,
'போடி ஓ*' என்று அங்கம்மாவை நோக்கி கட்ட குண்டு சொல்ல,
'என் தங்கத்தை எப்படி நீ அப்படி சொல்லலாம்' என அங்கம்மாவின் அம்மா வக்காலத்து வாங்க,
'அப்டியா.! போங்கடி ஓ*களா' என அவர் சொல்ல,
'அப்டியா.! போங்கடி ஓ*களா' என அவர் சொல்ல,
நண்பர்கள் நாங்கள் 'பார்ரா... தமிழ் இலக்கணம் சொல்லி தரும் முறையையும், நேரத்தையும்' என்றதும் 'கலவர பூமி' சிறிது குளிர்ந்தது. அசலூர்காரர்களை ஊர் பெரியவர்கள் 'இனி இப்படி எங்க ஊர் பக்கம் வராதீக' என மன்னித்து அனுப்பி வைத்தனர்.
கவனிக்க:
சுய்யானுக்கும் சுள்ளான் திரை'கொடுமைக்கும்' எந்த சம்பந்தமும் இல்லை. இவரது வயது 40-க்கு மேல.
இதில் பெண்கள் பேசிய, முக்கியமாக அங்கம்மாவின் அம்மா பேசிய வார்த்தைகளை 'கத்திரி' போட்டுள்ளேன். இல்லையென்றால் உங்களுக்கு 'ஒரு உண்மையான கிராம அனுபவம்' ஏற்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment