You are lookin' for..?

Showing posts with label Movie. Show all posts
Showing posts with label Movie. Show all posts

Sunday, October 30, 2011

வீம்பாக மடத்தனம் செய்வது - 2

அந்த 'தன்னை தானே' எழுத்தாளர் என சொல்லி 'கொல்லும்' நபரின் சிறந்த தமிழ் படங்களின் பட்டியலை உங்கள் கண்களுக்கு தருகிறேன். . .





இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் அந்த நபரின் 'அரசியல்'. . .


இதோடு நின்றுவிடவில்லை அவரது 'மோடி மஸ்தான்' வேலை. . .


இவர்கள் இருக்கும் வரை 'புரையேறிய' தமிழ் படங்களே 'தமிழனை மேலும் மழுங்கடிக்க' வந்து கொண்டே இருக்கும்.

Sunday, May 15, 2011

வீம்பாக மடத்தனம் செய்வது...

சிலர் 'வீம்பு' பிடித்து தனது 'முட்டாள்'தனத்தை தொடர்வதை நம்மில் பலர் பல முறை பார்த்திருப்போம். உளவியல் காரணம் 'தான் செய்தது/சொன்னது தப்பு என்று ஒப்புக்கொண்டால் நாம் அவர்களை முட்டாள் என்று எண்ணி விடுவோம்' என்று. ஆனால், ஒப்புகொள்வதில் இல்லை பிரச்சினை. காரணம், 'எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எல்லோரும் தப்பும், சரியும் கலந்தவர்களே.' மாறாக, அந்த முட்டாள்தனத்தை தொடர்வேன் என 'வீம்பு' பிடிப்பது 'ஆகப் பெரிய மடத்தனம்.'




அந்த எழுத்தாளர்/Writer 'மன்மதன் அம்பு' திரைப்படம் பற்றி 'புகழ்ந்து' எழுதிய (குறிப்பாக 'நீல வானம்' பாடல் பற்றிய) விமர்சனத்திற்கு நான் 'எதிர் வினை' செய்தேன். நிறைய கோவத்துடன் நான் செய்தேன். சில முகம் அறியா தோழர்களும். அந்த 'மன்மதன் அம்பு' Post-யே தனது blog-ல் இருந்து தூக்கிவிட்டார். நான் எழுதியது  'அப்படியே' என் மனதில் இல்லை. ஆனால், ஒரு வரி ஞாபகம் உள்ளது. அது 'உங்களை போன்ற தமிழ் bloggers, writers எல்லாம் தமிழ் வாசகனை மட சாம்பிராணி, ஞான சூன்யம் என நினைத்து இந்த மாதிரி போலிகளை கொண்டாடி எழுதும் உளவியல் என்ன' என்று. இங்கு தரப்பட்டுள்ள எதிர் வினை பரிமாற்றம் 'நடிநிசி நாய்கள்' திரைப்படத்தை அந்த 'writer' புகழ்ந்து எழுதியதால் நிகழ்ந்தது.

Saturday, October 23, 2010

தமிழ் சினிமா கீழான நிலையில் இருக்கிறது

பீப்லி (லைவ்) பற்றி சாரு நிவேதிதாவின் அனுபவம்.

பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் அனுஷா ரிஸ்வியின் இயக்கத்தில் வெளிவந்து ஒரே வாரத்தில் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் படம் பீப்லி (லைவ்). விமர்சகர்கள் இந்தப் படத்தை பதேர் பாஞ்சாலியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் பதேர் பாஞ்சாலியில் இருந்த gloominess இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் விசேஷம். இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றிய படமாக இருந்தாலும் படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், பகடியும் இதை ஒரு சுவாரசியமான கலை அனுபவமாக மாற்றுகிறது. அமிதாப் பச்சன் உட்பட இந்திப் பார்வையாளர்கள் அனைவரும் ’இப்படி ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை’ என்று வியக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து இப்படி ஒரு முழுமையான ’ப்ளாக் காமெடி’யை இந்தி சினிமாவில் இதுவரை பார்த்ததில்லை. கேதான் மேத்தாவின் பாவ்னி பவாய் (1980), மிர்ச் மசாலா (1985) என்ற இரண்டு படங்களை மட்டுமே ஓரளவுக்கு ’பீப்லி (லைவ்)’ -இன் பக்கத்தில் வரக் கூடியவையாகச் சொல்லலாம். இரண்டுமே நஸ்ருத்தீன் ஷா நடித்தவை.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகங்கள் (குறிப்பாக, தொலைக்காட்சி சேனல்கள்) என்ற மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாகவும், கிண்டலுடனும் விமர்சித்திருக்கிறார் இயக்குனர் அனுஷா ரிஸ்வி. பொதுவாக ஊடகங்களின் ஊழலைப் பற்றி விமர்சித்தால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே யாரும் விமர்சிப்பதில்லை. பீப்லி (லைவ்) இந்த மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது.


’முக்கியப் பிரதேசம்’ என்ற மாநிலத்தில் பீப்லி ஒரு சிறிய கிராமம். நத்தா, புதியா என்ற இரண்டு சகோதரர்கள். நத்தாவுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும், படுத்த படுக்கையான அம்மாவும் இருக்கிறார்கள். மூத்தவன் புதியா கொஞ்சம் புத்திசாலி. ஆனால் கஞ்சா கேஸ் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. விவசாயத்திற்காக வாங்கிய வங்கிக் கடனைத் திருப்ப முடியாததால் அவர்களின் நிலம் பறி போக இருக்கிறது. அந்த நிலையில் ஆளுங்கட்சி அரசியல்வாதியாக இருக்கும் உள்ளூர் தாதாவிடம் சென்று இருவரும் உதவி கேட்கிறார்கள். அதற்கு அவன் ”விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை தருகிறது; அது பற்றி யோசியுங்கள்; உங்கள் குடும்பமாவது பிழைத்துப் போகும்” என்று கிண்டல் செய்து அவர்களை விரட்டி விடுகிறான்.

யார் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பது பற்றி இருவரும் கலந்து ஆலோசிக்கிறார்கள். இந்த உரையாடல் படத்தின் மிக முக்கியமான பகடிகளில் ஒன்று.

புதியா: நானே தற்கொலை பண்ணிக் கொள்கிறேன்.
நத்தா: வேண்டாம், வேண்டாம். நானே பண்ணிக்கிறேன்.
புதியா: அட வேணாம்ப்பா. நீ புள்ளக்குட்டிக்காரன். உன்னால் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடியும்? நானே பண்ணிக்கிறேன்.
நத்தா: ஆங், ஏன் என்னால் முடியாது. நான்தான் பண்ணிக்குவேன்.
புதியா: அப்படியா, பக்கா?

பிறகு சாராயக் கடையில் அமர்ந்து இருவரும் இது பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்கிறான் இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ். மறுதினமே ’ஏற்கனவே சொல்லப்பட்ட மரணம்’ என்ற தலைப்பில் நத்தாவின் கதை புகைப்படத்துடன் வெளியாகிறது. எப்போதுமே செய்திப் பஞ்சத்தில் இருக்கும் ஊடகங்களுக்கு இந்த விஷயம் பெரும் தீனியாக அமைகிறது. தில்லி ஊடகங்களில் இச்செய்தி பிரதான இடத்தைப் பிடிக்கிறது.

அத்தனை தொலைக்காட்சி சேனல்களும் தங்கள் குழுவை பீப்லி கிராமத்துக்கு அனுப்புகின்றன. ஒரு பெரிய சேனல் படையே பீப்லி கிராமத்துக்குத் திரண்டு வருகிறது. பீப்லி கிராமமே ஒரு பெரிய மேளா நடப்பது போல் ஆகி விடுகிறது. பாப் கார்ன், பலூன், கோக் விற்பனை, குடை ராட்டினம் என்று அமர்க்களப்படுகிறது.

நத்தாவின் தற்கொலையை எந்த சேனல் மக்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கிறதோ அந்த சேனலே டி.ஆர்.பி. தர வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிக்கும். அதை வைத்துத்தான் விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன. ’நத்தா தற்கொலை செய்து கொள்வாரா, மாட்டாரா?’ என்பது பற்றி சேனல்களில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறுகின்றன. நிருபர்கள் ‘லைவ்’ ஆக பீப்லியின் நிகழ்வுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் நத்தாவின் தற்கொலையையே ’லைவ்’ ஆகக் காட்டினால் அவரே சிறந்த நிருபர்; அப்படிக் காட்டும் சேனலே முன்னணி சேனல். ஒவ்வொரு நிருபரிடமும் அந்தத் தீவிரம் தெரிகிறது. எனவே, நத்தா மலம் கழிக்கப் போகும்போது கூட அவர்கள் அவனைத் துரத்துகிறார்கள்.. செய்திகளைத் திரட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்ட குமார் தீபக் என்ற இந்தி சேனல்காரன் ஒரு தற்காலிகமான டவரை அமைத்து அதன் மேல் ஏறி நத்தா மலம் கழிக்கும் இடத்தைத் தேடுகிறான்.

ஒருநாள் நத்தா மலம் கழிக்கச் செல்லும் போது போலீஸ் மற்றும் சேனல் நிருபர்களின் துரத்தலையும் மீறித் தப்பி விடுகிறான் நத்தா. அப்போது நத்தா மலம் கழித்திருக்கும் இடத்தை வைத்து அவனுடைய ‘உளவியலை’ டி.வி. பார்வையாளர்களுக்கு விளக்க முயற்சிக்கிறான் குமார் தீபக். அதுவும் ஒரு ’வித்தியாசமான’ அணுகுமுறை அல்லவா? அதனால் கூட டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரிப்பதற்கு வழி இருக்கிறது அல்லவா?

அதைத் தொடர்ந்து, ’பீப்லி மாதா என்ன சொல்கிறாள்?’ என்று ஒரு ’லைவ்’ நிகழ்ச்சியைக் காண்பிக்கிறான் குமார். இரண்டு கிராமத்துப் பெண்கள் சிவப்புப் புடவை அணிந்து தலையை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சாமியாடுகிறார்கள். ’நத்தா தற்கொலை செய்து கொள்வானா இல்லையா?’ ’செய்து கொள்வான், செய்து கொள்வான்’ என்று சொல்கிறது சாமி.

நத்தாவின் பால்ய கால சிநேகிதனிடம் பேட்டி எடுக்கிறார்கள். நத்தா காணாமல் போனதற்கான காரணங்கள் சேனல்களில் ஆராயப்படுகின்றன. ’நத்தா காணாமல் போனதற்கு யார் காரணமாக இருக்க முடியும்?’ என்று பார்வையாளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

ஒரு கருத்துக் கணிப்பு “முஸ்லீம் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம்” என்று சொல்கிறது.

ஊடகங்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான கள்ள உறவையும் முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறார் இயக்குனர். ஆங்கில சேனலை சேர்ந்த நந்திதா விவசாயத் துறை மந்திரியான நஸ்ருத்தீன் ஷாவை நத்தாவின் தற்கொலை விஷயமாகப் பேட்டி காண்கிறாள். பேட்டிக்கு முன் வெகுநாள் பழகிய நண்பர்களைப் போல் பேசிக் கொள்ளும் அவர்கள் பேட்டியின் போது வேறு தொனியில் ஏதோ முதல்முதலாக சந்தித்துக் கொள்வது போல் பேசுகிறார்கள்; அதைப் போலவே குமார் தீபக் ’முக்கியப் பிரதேச’த்தின் முதல் மந்திரியிடம் அவருடைய கட்சித் தொண்டனைப் போல் பேசிக் கொண்டிருந்து விட்டு, கேமராவுக்கு முன்னால் முதல் மந்திரியை முதல்முதலாகப் பார்ப்பவனைப் போல் பேசுகிறான். இதுவரை இந்திய சினிமாவில் ஊடகங்களைப் பற்றிய இவ்வளவு காட்டமான விமர்சனம் வந்ததில்லை. இந்தியாவைக் கொள்ளையடிப்பதிலும், விதேசி கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்ப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களோடு ஊடகங்களும் ஆதரவாக இருந்து கூட்டுச்சதி செய்கின்றன என்பதுதான் ’பீப்லி (லைவ்)’ -இன் உபகதை.

இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ் நந்திதாவின் சேனலில் சேர்வதற்கு விருப்பப்படுகிறான். நத்தாவைப் பற்றி முதலில் செய்தி தந்தவன் என்ற முறையில் அவன் மீது ஆர்வம் காட்டுகிறாள் நந்திதா. ஆனால் பீப்லி கிராமத்தில் வேறொரு விவசாயி தண்ணீருக்காக ஒற்றை ஆளாக கிணறு தோண்டித் தோண்டி செத்துப் போகிறான். ”இந்த விவசாயியின் மரணம் செய்தி இல்லையா?” என்று நந்திதாவிடம் ஆக்ரோஷமாகக் கேட்கிறான் ராகேஷ். “இல்லை. நத்தாதான் நமக்கான செய்தி. அந்த ஊர் பெயர் தெரியாத இன்னொரு விவசாயியைப் பற்றி செய்தி சேகரிக்க நாம் இங்கே வரவில்லை. இப்படியெல்லாம் முக்கியமில்லாத செய்திகளில் கவனம் செலுத்துவதாக இருந்தால் நீ தவறான உத்தியோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று அர்த்தம்” என்கிறாள் நந்திதா.

கதை பீப்லி கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நகரமும் கிராமுமாக மாறி மாறிச் செல்கிறது. விவசாயத் துறை மந்திரியின் செயலாளர் சென் குப்தாவிடம் நத்தாவின் பிரச்சினை பற்றிக் கேட்கப் படுகிறது. இது தற்கொலை குறித்த விஷயமாக இருப்பதால் இதை உயர்நீதி மன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் அவர். நிருபர்கள் சென் குப்தாவிடம் இது பற்றிக் கேட்கும் போதெல்லாம் ”உயர்நீதி மன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். படம் முழுவதும் இந்த பதில் சொல்லப்படும் போதெல்லாம் ஒரு மிகப் பெரிய அபத்த நாடகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் பார்வையாளர்களின் சிரிப்பில் அரங்கம் அதிர்கிறது.

இந்தப் பிரச்சினை விவசாயத் துறை மந்திரியிடம் (நஸ்ருத்தீன் ஷா) வரும் போது அவர் ஒரு யோசனை சொல்கிறார். ’நத்தா கார்டு’ என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வோம். அதன்படி ஏழை விவசாயிகளுக்கு இலவசக் கடன் வழங்கப்படும். ஆனால் அதற்கெல்லாம் மத்திய அரசிடம் நிதி இருக்காதே? ”நிதியைப் பற்றி மாநில அரசல்லவா கவலைப்பட வேண்டும்? திட்டத்தை மட்டும் நாம் போடுவோம். அதை நிறைவேற்றுவது மாநில அரசின் பொறுப்பு. நிறைவேற்றினாலும் மாநில அரசுக்குப் பிரச்சினை. (அரசே திவாலாகி விடும்). நிறைவேற்றா விட்டாலும் பிரச்சினை. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டத்தை நிறைவேற்றாத மாநிலக் கட்சி தேர்தலில் தோற்று விடும்” என்கிறார் மாநிலக் கட்சிக்கு எதிரான தேசியக் கட்சியைச் சேர்ந்த மத்திய விவசாயத் துறை மந்திரி.

இதற்கிடையில் அந்தத் தொகுதியில் தேர்தலும் வர இருப்பதால் நத்தாவின் தற்கொலைச் செய்தி மிகுந்த சூடு பிடிக்கிறது. இந்தப் பிரச்சினையின் காரணமாகவே ஆளும் மாநிலக் கட்சி தோற்று விடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சிக்கும் மாநிலக் கட்சிக்கும் நத்தாவை முன்வைத்து பெரும் போட்டி ஏற்படுகிறது. நத்தா தற்கொலை செய்து கொண்டால் மாநிலக் கட்சி தோற்று விடும். அதனால் நத்தாவின் குடும்பத்துக்கு லால்பகதூர் திட்டத்தின் கீழ் ஒரு தண்ணீர் பம்ப் கொடுக்கிறார் முதலமைச்சர். ஆனால் அந்த பம்ப் கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. உள்ளூர் அரசியல்வாதி ஒருவன் நத்தா குடும்பத்துக்கு ஒரு கலர் டிவியை வாங்கிக் கொடுத்து தன் கட்சிக்கு ஓட்டு சேகரிக்கலாம் என்று திட்டமிடுகிறான். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அரசுத் திட்டங்களைப் பற்றிய கிண்டல் எக்காளமிடுகிறது. இந்த நேரத்தில் முதல் மந்திரிக்கும் லோக்கல் தாதாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் தாதா புதியாவை மிரட்டுகிறான்: ”இன்னும் இரண்டு நாளில் நத்தா சாகவில்லையானால் நீ செத்து விடுவாய்.”

கடைசியில் நத்தாவைத் தனியாக விட்டால் தற்கொலை செய்து கொள்வான்; அதனால் தன் கட்சி தோற்று விடும் என்று அஞ்சும் முதல்மந்திரி போலீஸை விட்டு நத்தாவைக் கடத்திக் கொண்டு வந்து ஒரு கிடங்கில் போட்டு அடைத்து விடுகிறார். ஆனால் இதைக் கண்டு பிடித்து விடும் ராகேஷ் அங்கே வரும்போது கிடங்கு தீப்பற்றி விடுகிறது. தீயில் ஒரு பிணம் கிடைக்கிறது. அதுதான் நத்தா என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் தீயில் இறந்தது ராகேஷ் என்பது பார்வையாளர்களுக்கு சூசகமாக உணர்த்தப்படுகிறது. நத்தா பிரச்சினை முடிந்து சேனல்காரர்கள் பீப்லியை விட்டுக் கிளம்பும்போது ”எங்கே ராகேஷ், கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம்?” என்கிறாள் நந்திதா.

நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் தீ விபத்தில் இறந்ததால் நஷ்ட ஈடு ஒரு லட்ச ரூபாய் நத்தா குடும்பத்துக்குக் கிடைப்பதில்லை. இறுதிக் காட்சியில் ஒரு நகரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. கட்டிடத் தொழிலாளிகளின் இடையே மிகுந்த சோர்வுடன் அமர்ந்திருக்கிறான் நத்தா.

பீப்லி (லைவ்)-இன் மற்றொரு சிறப்பு அம்சம், இதில் பங்கேற்றிருக்கும் அத்தனை நடிகர்களின் அசாதாரணமான நடிப்பு. அதிலும் குறிப்பாக ஓம்கார் தாஸ் மணிக்புரி (நத்தா), ரகுபீர் யாதவ் (புதியா), படுக்கையிலேயே கிடக்கும் அம்மா (ஃபரூக் ஜாஃபர்), ஷாலினி வத்ஸா (நத்தாவின் மனைவி) ஆகியோரின் நடிப்பு இந்தி சினிமாவுக்குப் புதிது. நத்தாவை சேனல்காரர்கள் ஒரு சர்க்கஸ் விலங்கைப் போல் பாவித்து படமெடுக்கிறார்கள். அதற்குத் தோதாக நத்தாவின் ஒவ்வொரு அசைவும் சர்க்கஸ் பிராணியைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரங்கள் அனைவரும் இந்தி நாடகாசிரியர் ஹபீப் தன்வீரின் ’நயா தியேட்டர்’ என்ற நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தப் படம் எடுக்கப்பட்ட பத்வாய் (மத்தியப் பிரதேசம்) என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். தமிழ் சினிமாவில் நாடக நடிகர்களின் பங்கேற்பை நினைத்தால் அது கண்ணீரை வரவழைக்கும் சோகக் கதை. நிஜ நாடக இயக்கத்தைச் சேர்ந்த மு. ராமசாமி ’களவாணி’யில் பெரியப்பா வேடத்தில் வருகிறார். பரிதாபமாக இருந்தது. இதை கோடம்பாக்கத்தில் உள்ள எந்தத் துணை நடிகரும் செய்து விட முடியும். அதேபோல் கூத்துப் பட்டறை நடிகர்களை தமிழ் சினிமா எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றித் தனியாக எழுத வேண்டியதில்லை. பாவம், பசுபதி படும் பாடே போதும்.

ஷங்கர் ராமனின் ஒளிப்பதிவும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாக உள்ளது. அநேகமாக பீப்லி (லைவ்) ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இதன் தயாரிப்பாளர் ஆமிர் கான். லகானிலிருந்து தாரே ஸமீன் பர், மூன்று முட்டாள்கள், பீப்லி (லைவ்) வரையிலான ஆமிரின் பயணம் இதுவரை வேறு எந்த இந்திய சினிமா நடிகரும் செய்திராத சாதனை. இந்திய அரசுக்கு எதிரான இவ்வளவு கடுமையான அரசியல் சினிமாவை எடுக்க தமிழில் ஒரு நடிகருக்காவது தைரியமும் துணிச்சலும் வருமா என்று யோசித்துப் பார்க்கிறேன். அது மட்டுமல்ல; படத்தின் எந்த இடத்திலும் ஆமிர் கான் என்ற தயாரிப்பாளரும், நடிகரும் எட்டிப் பார்க்கவே இல்லை. முதலில் ஓம்கார் தாஸ் மணிக்புரி நடித்திருக்கும் நத்தா பாத்திரத்தில் ஆமிர் கான் தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் ’ஆடிஷன்’ தேர்வின் போது ஆமிரை விட ஓம்கார் தாஸ் சிறப்பாகச் செய்ததாக ஆமிர் கான் நினத்ததால் ஓம்கார் தாஸையே அந்தப் பாத்திரத்தைச் செய்யும்படி சொல்லியிருக்கிறார். ’சினிமா முக்கியமல்ல; நாம்தான் முக்கியம்’ என்று நினைக்கும் தன்முனைப்பு நடிகர்களால் நிரம்பியுள்ள தமிழ் சினிமா ஏன் இவ்வளவு கீழான நிலையில் இருக்கிறது என்பதை இந்த ஒரே சம்பவத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆபாசமான 150 கோடி பட்ஜெட் சினிமாக்காரர்கள் யோசிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. வெறும் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பீப்லி (லைவ்)’, அது வெளிவந்த முதல் வாரத்திலேயே 21 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபி தியோலின் ’ஹெல்ப்’புக்கு வசூலே இல்லை. இதனால் மசாலா படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாக வெற்றி அடையும் என்ற மிகப் பெரிய கட்டுக்கதை பொய்யாகி இருக்கிறது. மேலும், மசாலா படங்கள்தான் சுவாரசியமாக இருக்கும்; சீரியஸான கதைக் களனைக் கொண்ட படங்கள் சுவாரசியமாக இருக்காது என்ற கட்டுக்கதையும் இந்தப் படத்தினால் உடைந்திருக்கிறது. மூன்றாவது கட்டுக்கதை, பெரிய நடிகர்கள் பற்றியது. பீப்லி (லைவ்)-இல் நஸ்ருத்தீன் ஷா மற்றும் ரகுபீர் யாதவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சினிமாவுக்குப் புதிய முகங்கள்.

செயற்கைக் கோள், ராக்கெட் போன்ற சாதனங்களைத் தயாரிக்கும் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாசாமி போன்றவர்களும், மன்மோகன் சிங்குகளும் இந்தியா வல்லரசாகி விட்டது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்திய கிராமங்கள் அவை இருந்த தடமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் வாழவே முடியவில்லை. சாலைகள் இல்லை; பள்ளிக்கூடம் இல்லை; மருத்துவமனைகள் இல்லை. தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்கள் இல்லை. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உயிர் தரித்திருக்கும் விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் மோதல். சட்டீஸ்கர் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஆதிவாசிகளின் நிலங்களை பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள் தில்லி அரசியல்வாதிகள்.

சுதந்திர தினம் என்பது வெறும் கொடியேற்றும் சடங்காகி விட்டது. சட்டைப் பாக்கெட்டில் கொடிச் சின்னத்தை குண்டூசியால் குத்திக் கொள்வதும் அரசியல்வாதிகளின் சுதந்திர தின உரைகளும்தான் சுதந்திர தினத்தின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கின்றன. காஷ்மீர் முதல்வர் அப்துல்லா கொடியேற்றும் போது பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் சப்பாத்தை எடுத்து வீசியிருக்கிறார். சட்டீஸ்கரில் போலீஸ்காரர்கள் கொத்துக் கொத்தாக மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுகிறார்கள். ஒரு பக்கம், அரசாங்கத்தின் சேமிப்புக் கிடங்குகளில் கோதுமையும் அரிசியும் விநியோகிக்கப்படாமல் கெட்டுப் போய்க் கிடக்கின்றன. இதெல்லாம்தான் இந்தியாவின் சமகால வரலாற்றின் மறுபக்கம். இந்த மறுபக்கத்தின் மீது ஆமிர் கான் கவனம் செலுத்தியிருக்கிறார். இந்த வகையில் இந்த ஆண்டின் சுதந்திர தினத்தில் வெளியாகியிருக்கும் ’பீப்லி (லைவ்)’ அரசியல்வாதி, அதிகார வர்க்கம், ஊடகம் என்ற மூன்றின் மீதும் வைக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான விமர்சனம்.

மிக மோசமான ஒரு வறுமைச் சூழலை இத்தனை பகடியுடன் எடுக்க முடியுமா என்று யோசித்தால் சார்லி சாப்ளினின் மௌனப் படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஆனாலும் இந்தப் படத்தை வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாதபடி இருப்பதே இதை ஒரு மறக்க முடியாத கலாஅனுபவமாக ஆக்கி விடுகிறது. ஓம்கார் நாத்துக்கு வசனம் மிகவும் குறைவு. ஒரு இடத்தில் நத்தாவின் ஆடு கூட அவனைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. அவனுடைய மகனும் “நீ எப்போது தற்கொலை செய்து கொள்வாய்?” என்று கேட்கிறான். அப்பா தற்கொலை செய்து கொண்டால் கிடைக்கும் பணத்தில் படித்து போலீஸ்காரன் ஆகலாம் என்று நினைக்கிறான் சிறுவன்.

மத்தியப் பிரதேசத்துக்கும், உத்தரப் பிரதேசத்துக்கும் நடுவில் உள்ள Bundelkhand மாவட்டத்தின் வட்டார மொழி மிகுந்த கெட்ட வார்த்தைகளைக் கொண்டது. அந்த வட்டார மொழியில் எடுக்கப்பட்டிருப்பதால் பீப்லி (லைவ்)-க்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. (உ-ம்) நத்தாவும் புதியாவும் லோக்கல் தாதாவிடம் கடன் கேட்கப் போகிறார்கள். வழிநடையாகச் செல்லும் போது நத்தா ஜாலியாகப் பாடிக் கொண்டே போகிறான். அப்போது புதியா அவனிடம் “இங்கே குண்டி கிழியுது; உனக்கு பாட்டு கேக்குதா?” என்று அதட்டும் காட்சி.

இந்தப் படத்தின் இசை பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். நகீன் தன்வீர், ராம் சம்பத் என்ற இருவரும், இண்டியன் ஓஷன் என்ற ராக் குழுவும் சேர்ந்து பீப்லி (லைவ்)-க்கு இசை அமைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசை பற்றி ஏராளமாக பேசப்பட்டது. ஆனால் உண்மையான தமிழ் நாட்டுப்புற இசை தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கவில்லை என்பது என் கருத்து. நாட்டுப்புற இசையிலிருந்து சிறிது சிறிதாகப் பிய்த்து எடுத்து அதை பாரதிராஜாவின் ’ரொமாண்டிக்’ கிராமத்துக்கு ஏற்றாற்போல் ஜிகினா வேலை செய்து கிளுகிளுப்பாக்கினார்கள். பீப்லி (லைவ்)-இல் இப்படி நடக்கவில்லை. இந்தியாவின் உண்மையான நாட்டுப்புற இசையை இதில் கேட்க முடிகிறது. இந்தி புரியாவிட்டாலும் பரவாயில்லை, பீப்லி (லைவ்)-இல் ரகுபீர் யாதவ் (புதியா) பாடியுள்ள ’மஹங்காய் தயான்’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். இப்படி ஒரு குரலையும், பாடலையும் நம்முடைய கிராமங்களில் கேட்டிருக்கிறோம்; ஆனால் தமிழ் சினிமாவில் கேட்டதில்லை. பருத்தி வீரன் மட்டுமே விதி விலக்கு. அதேபோல் தேஷ் மேரா, ஜிந்தகி ஸே டர்த்தே ஹோ என்ற இண்டியன் ஓஷனின் இரண்டு பாடல்கள், நகீன் தன்வீர் பாடிய ’சோலா மாட்டி கே ராம்’, போன்ற பாடல்களும் குறிப்பிடத் தக்கவை. இந்தக் குரல்களையும், இந்த இசையையும் இதுவரை இந்தி சினிமா பார்த்ததில்லை. அந்த வகையில் ’பீப்லி (லைவ்)’-இன் இசை இந்தி சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம்.

நன்றி: சாரு நிவேதிதா.

Saturday, September 18, 2010

யார் எங்கள் ரட்சகன்?

இம் மாதம் ஐந்தாம் தேதி நண்பன் ஜவஹர்-க்கு தஞ்சாவூரில் நிச்சயதார்த்தம். நண்பன் செந்திலுக்கு அதே தினம் அரியலூரில் கல்யாணம். அதே தினம் நண்பன் கார்த்திக்கிற்கு ஈரோடில் திருமணம். எங்கு போவது, யாரை நேரில் வாழ்த்துவது என குழப்பம். அரியலூரில் எம் மக்களும், நண்பர்களும் நண்பன் செந்திலின் திருமணம் முடிந்து அவரவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எங்கள் நண்பன் குட்டி தாதாவின் தந்தை அகால மரணம் எய்துள்ளார்கள். நண்பர்கள் மதியம் 1 மணியளவில் அலைபேசியில் செய்தி தந்தனர். நெஞ்சம் மீளா துயரில் ஆழ்ந்தது. இனி அந்த Unique வசனங்களை யாரிடம் கேட்க போகிறோம்..? அப்பா, உங்கள் நினைவு எங்களுடன்.

* * * * *

அடுத்த அடி 'நடிகர்' முரளி அவர்களின் 'திடீர்' மரணம் மூலம். 1997-இல் 'இளவரசி' Diana அவர்கள் Car விபத்தில் மறைந்த போது, முரளி அவர்கள் 'தன்னை மிகவும் பாதித்த மரணம்' என பேட்டி தந்தார்கள். தற்போது இவரது மரணமும் அனைவரையும் மீளா துயரிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


இன்னுமொரு அதிர்ச்சி 'பாடகி' ஸ்வர்ணலதா அவர்களது மரணம். தனது குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்த அந்த நல்ல உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.

* * * * *


'எந்திரன்' திரைப்படம் தயாரிக்க நிறைய 'கல்லா' செலவாகியுள்ளது, நமது இந்திய திரைப்பட வரலாற்றில். அதனை விட அதிகம் 'லாபம்' பார்க்க 'ரஜினி' என்ற பேர் போதும். ஆனாலும், இந்த தயாரிப்பு நிறுவனம் செய்யும் Cheap Promo-Events மிக அயர்ச்சியாக உள்ளது. நம் மக்கள் யாரிடமும் சக மனிதனை வழி நடத்தும் ஆளுமை இல்லை. நம்மை பிரம்மிக்க வைத்த சில உதாரணங்கள்: நம் 'முண்டாசு கவி' பாரதியார் அவர்கள், நம்மை விட்டு பிரிந்த தமிழக அமைச்சர் 'கக்கன்', Nobel Prize-winning physicist Richard Feynman, பெரியார் அவர்கள், Alexander Petrovics aka Sándor Petőfi, the author of the "Nemzeti dal".



அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி, பிறகு 'அது நடிப்பு. நான் அரசியலுக்கு வருவேன்னு நீங்க நினைச்சா, நானா பொறுப்பு..?' (இதையும் திரைப்படம் மூலமாகவே சொன்னதுதான் அவரது சாமர்த்தியம்) என தனது ரசிகர்களை நோக்கி கேள்வி கேட்டவரை மன்னித்து நம் மக்கள் அடுத்த 'கொண்டாட்டத்திற்கு' தயார்.


* * * * *

தமிழக முதல்வர் கருணாநிதியின் முட்டாள் தனமான புள்ளி விவரங்கள், எந்த விதத்திலும் உதவாத ஒப்பீடுகள்; அதிலும் முந்தைய ஆட்சியுடன்/Mr Barack Obama-வின் ஆட்சியுடன் (அட கொடுமையிலும் கொடுமையே!?!); இது போதாது என்று இன துரோகம், எப்பொழுதும் 'பாராட்டு' விழா, 'இப்படி செய்தால் மக்களுக்கு நல்லது' என்று சொல்பவர்கள் மீது 'நடவடிக்கை', தமிழ் உணர்வாளர்களை 'அழித்தல்', 'ஆட்சியை' காப்பாற்றும் நோக்கம், தனது 'மிக பெரிய குடும்பம்' தழைக்க தமிழக மக்களை 'காவு' கொடுத்தல், இன்னும் இன்னும் பல இலவசம் என்று தமிழக 'கஜானாவை' போண்டி ஆக்கும் வேகம், தொலைநோக்கு பார்வை இல்லாமல், ஏதோ ஐந்து வருடம் 'ஓட்டினால்' போதும் என்று இருந்தால் நம் மக்களின் 'வாழ்வு' எப்பிடி/என்று ஒளிரும்..?



யார் எங்கள் 'ரட்சகன்'? எங்கே அவன்? எப்போது வருவான்?

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.

Tuesday, May 18, 2010

முகமூடிகளை கழட்டுங்கள்.

'அங்காடித் தெரு'வின் எதிர்மறை விஷயம் பற்றி ஏன் பேசவில்லை என்று நண்பர்கள் கேட்கின்றனர். ஒரு நல்ல படத்தில், நல்ல விஷயம் மட்டும் பற்றி பேசுவோம் என்றுதான். படம் நல்ல Result தந்துள்ளது. இருந்தாலும் உங்களுக்காக இப்போது பேசுவோம் -  எல்லா கதாபாத்திரமும் ஒரு சோக கதை சொல்லி, உடனே கண்ணீர் விடுகிறார்கள். இது நாடக பாணியில் உள்ளது. காரணம் - நிறைய சோகம் பார்த்தவர்கள், அதுவும் சிறிய வயது முதல் பார்த்தவர்கள், இது போல் உடைந்து அழ மாட்டார்கள். ஒரு இறுக்கம் அவர்களிடம் இருக்கும். கண்கள் பேசும். உடல்மொழி பேசும். மேலும், யாரையாவது கட்டிபிடித்து கண்ணீர்விடுவதில் ஏதோ செயற்கைத்தனம். Eg: நாயகனும், நாயகனின் நண்பனும் மீண்டும் சேரும்போது கட்டிக்கொள்வது. இப்பெல்லாம் யாரும் இப்படி கட்டி, அழுது சேர்வது இல்லை.



நண்பர்கள் 'Cliche' விஷயத்தை ஏன் விட்டுவிட்டாய் என கேட்டனர். இதோ, அதுவும் - if a char is of dark-complexion, அவர் ஏதாவது ஒரு Cream-ஐ அல்லது Talc-ஐ முகத்தில் தடவி, தடவி, தடவி, தடவி..... இதை எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம். அப்புறம், அந்த Sneha வரும் Scenes. Pucca Cliche என்று சொல்ல வேண்டியதில்லை. நண்பர்கள் அந்த நேரம், எப்படா இந்த Scene முடிவுக்கு வரும் என்று நெளிய ஆரம்பித்துவிட்டனர். 'சீக்கிரம் யாராவது அள்ளிக்கிட்டு Scene-ஐ முடிச்சி வைங்கப்பா' என கூச்சல். இன்னும் சில. போதும் இத்துடன்.
* * * * *

'சோ' அவர்கள் 'ஜெயலலிதா மிக சிறப்பாக செயல்படுவதாகவும், Active-வாக இருப்பதாகவும், நேர்மையாக தொண்டாற்றுவதாகவும், இன்னும் சில -தாகவும்' ஒரு வாரப்பத்திரிகையில் சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். ஐயா 'சோ' அவர்களே, நான் உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' பற்றி ஒண்றும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் 'இன'பற்று நாங்கள் அறிவோம். எனக்கு இந்த 'இன'பற்று மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால், நீங்கள் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து கூறி வரும் 'நேர்மையற்ற வார்த்தைகள்' - அப்படி ஒண்று ('இன'பற்று) இருப்பதாக எனது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது.

மக்களுக்கு நன்மையை எடுத்து சொல்வோர், 'தார்மீக' கோவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யார் மீதும் 'பற்று சார்ந்த கருத்து சொல்லுதல் கூடாது.' நீ யாராக இருந்தாலும், தீங்கு செய்யின் 'தீங்கு' என்பேன் என்றும் நெற்றிகண் திறக்க வேண்டும். என்  குழந்தை பருவம் முதல் இந்த நேர்மையை நான் உங்களிடம் கண்டது இல்லை.

'Cho' Gue Vara T-shirt. This title takes the toll. Funny and more profound than the picture.




ஜெயலலிதா அவர்களின் Activeness பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். அவரது சிறுதாவூர் மற்றும் கொடநாடு 'ஓய்வு தளங்கள்' பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒருவேளை, உங்களுக்கு Amnesia அல்லது Short Term Memory Loss இருப்பின், it is time to take a test. திரு. பாமரன் 'குமுதம்' வார இதழில் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கேள்விபட்டேன். அதனை நீங்கள் படித்து, உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' திருத்திக்கொள்ளவும். அல்லது, தமிழக 'சாதாரண' மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும்.

* * * * *




'Mexico சலவைக்காரி' அவர்கள் நமது Blog-ல் துணி துவைக்க துளியும் வாய்ப்பில்லை. இது நாம் தனிமையில் பேசி, சிரிக்க. Yea, we need to shed our Hypocrisy. ஆனால், இது தவறு என என் மனம் சொல்லுகிறது. Reason - நாம் நமது Hypocrisy களைய 'கற்பித்தல்' சார்ந்த அணுகுமுறைதான் அவசியம். சில நேரங்களில் நாம் நமது 'முகமூடிகளை' கழட்டி வைக்க நமது Blog-ல் சில 'கற்பித்தல்' சார்ந்த விஷயங்கள் எழுத நான் தயார். ஆனால் இந்த Joke நமது Blog-ஐ Porno என முத்திரை பதிக்க காரணமாக இருந்துவிட்டால், எனது/நமது 'உழைப்பு' வீணாகிவிடும்.



* * * * *




இந்த வருடம் 'பருவமழை' தவறாமல் வரும் என்றும், 'வறண்ட நிலங்கள் இருக்க' துளியும் வாய்ப்பில்லை என்றும், நமக்கு தேவையான 'குறைந்த அளவு' மழையாவது பொழிந்துவிடும் என்றும் Meteorological Data/Scientific Forecast சொல்கிறது. நம்பிக்கை வைப்போம். மழையை வரவேற்போம். புதிய வசந்தத்தில் திளைப்போம்.




* * * * *

தப்பும் சரியும் கலந்த மனிதனின் Starvin' என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? சரி, யார் அந்த தப்பும் சரியும் கலந்த மனிதன்..? வேறு யார்... நானும் நீங்களும்தான். நாம் எல்லோரும் 'சராசரி'தான். அதுதான் தப்பும் சரியும்.

இப்பொழுது நமது Starvin' விசயத்திற்கு வருவோம். எழுதியவரின் பெயர் Mr Royce Radcliffe.

Girls with tight and short clothes, lonely inside
Boys with crazy hairstyles, out of their mind
All searching for the same thing,
Eternally Denied Attention!
But how can one give it when the world itself seems so wide?

உங்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை என்றால், இதன் தலைப்பு தருகிறேன் - Starvin' for Attention! - எவ்வளவு அழகான உண்மையான வார்த்தைகள், நம்மை பற்றி.




உண்மையான Starvin' பற்றிய கவிதை இதோ -

Blessed with abundance of land
I simply cannot undertstand the uniform sufferring
calling on global humanity.

Struggling nations without a decent education
Multipying populations being forced out of their cities
by war and invasion.

Starving Children
Parents cradling them in distress
The land is barren from wars and famine which are countless
There is simply no easy way out of this mess.

Starving nations
Third world nations
Years of little or no rain have put a huge strain
on the government.

Relief agencies
leading the way for a good cause
Yet there are those of us
who can afford to give a toss.

எழுதியவரின் பெயர் Ms Sylvia Chidi. தலைப்பு - Starvin' Nations.


Monday, April 19, 2010

தமிழன் Vs சக தமிழன்.

முன்பு எழுதிய & Orkut குழுமத்திற்கு அனுப்பிய தேதியும் தந்து உள்ளேன்.

April 8, 2008 11:48 AM

எனது அபிமான நடிகர் திரு. ரகுவரன் அவர்கள் இழப்பு எதிர்பாரா ஒன்று. Style + திறமையான நடிப்பு என்றால் அது திரு. ரகுவரன் அவர்கள்தான்.

~ Hogenakkal குடிநீர் திட்டம் மீதான பிரச்னை: இங்கு எல்லோரும் ஒன்றுபட்டு போராடி வரும் வேளையில், சில பல அரசியல் காரணங்களால் போராட்டம் வேண்டாம் என திட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது, நமது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால். அப்படி என்றால், இதற்காக போராடிய மக்கள் முட்டாள்களா..? அல்லது தமிழ் உணர்வுடன் பேசி கன்னட மக்களை பகைத்து கொண்ட திரு. ரஜினி அவர்கள் இளிச்சவாயரா..? இப்படி ஏதோ ஓர்/சில/பல அரசியல் நாடகத்தினால்தான் காவேரி நதி பிரச்சினை இன்னும் நடந்து வருகிறது. அதே நாடகம் இந்த விசயத்திலும். இந்த உலக மக்களுக்கு ஓர் செய்தி: நீங்கள் தமிழனை தாக்க வேண்டாம். தமிழன், சக தமிழனால் அழிந்து போவான். மற்ற மக்கள் ஏன் தேவை இல்லாமல் தமிழனை தாக்கி கொண்டு..?

~ ~ Common-sense/கடமை..? இதில் எது high-priority உள்ளது..? It depends. நம் சக மனிதன் ஒருவர் தனது தந்தை இருதய வலியால் துடிக்க, தனது சொந்த Auto-வில் மருத்துவமனை நோக்கி - தாய் மற்றும் இருதய வலியால் துடிக்கும் தந்தையும் Auto-வில். ஓர் இடத்தில் Traffic-signal. பரபரப்பில் அவர் கடந்து செல்ல, அங்கு Duty பார்த்த Scotland-yard கடமை வீரர் (Police தான். வேற யாரு?)  அந்த மகனை சட்டம் என்ற பெயரில் கொடுமை படுத்த, இதனைப் பார்த்த தந்தை 'என்னால் எனது மகன் துன்பம் அனுபவிக்கிறாரே' என அந்த Auto-விலேயே தனது மனைவி மடியில் உயிர் நீத்தார். இந்த புல்லரிக்கும் கடமை தவறாத கர்மவீரர் காட்சி இங்கு நடந்தது. இந்த பழுத்த கழிசாடைகள் இருந்து என்ன பயன்..?

இந்த பகுதி மக்கள் அந்த Scotland-Yard (மூளை இல்லா Police)  வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் செய்தனர். அது எப்படி? சுதந்திர இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் நீதி கிடைக்க போராடி, அது வெற்றியும் பெற்று விட்டால், நீதி-தேவதை தனது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்திவிடுவாள் அல்லவா.!?


~ ~ ~ சமீபத்தில் நடந்து முடிந்த கோவை CPI-M மாநாடு நிகழ்ச்சிகளை (சில நண்பர்களையும்) காண போயிருந்தேன். இந்த மாநாட்டில் சில அரிய புகைப்படங்கள் என் கண்ணில் பட்டது. அவைகளில் சில எனது ஆல்பத்தில் உள்ளது.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 4:24 AM

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: நடு நிலையுடன் வாசியுங்கள். நிறைய சொல்லி குறைவாக புரிந்து கொண்டால்..? குறைவாக சொல்லி தவறாக புரிந்து கொண்டால்..? ஆம், இதில் எதை சொல்வது அல்லது எதை விடுவது என்று புரியவில்லை.


ஒரு சின்ன தகவல்: நாம் எல்லோரும் 'வக்கிரம்' கலந்த எண்ணம் கொண்ட மனிதர்கள். நாம் அதனை காதல்/காமம் என்று முலாம் பூசி சொல்லலாம். இந்த 'வக்கிரம்' அளவு அதிகரிக்கும் போது/எப்பொழுதும் அதிக அளவு உள்ள, அவர்கள் வெறி கொண்ட மனிதர்களாக சமுதாயத்திற்கு ஒவ்வாத செய்யல் செய்கின்றனர். நாம் தேவையான அளவில் இந்த எண்ணம் உள்ளவர்கள் என்பதால் 'நல்லவர்கள்.' கொடுமைதான். வக்கிரம் அதிகமாக உள்ளவர்கள், சரி செய்யப்பட வேண்டியவர்கள்.

பெண்கள் செய்வது இல்லையா..? உண்டு. அவர்களால் ஆண்களை போல தாக்குதல் தொடுக்க முடியாது. ஆனாலும், ஆண்கள் மீதான அவர்களது 'பாலியல் வன்முறை' நடக்கிறது. மிக குறைவாக. இது மிக குறைவு என்பதால், வெளியே தெரிவது இல்லை. அவர்களது இன்னோர் வழி..? Mind Game. இதனால் வெளி உலகம் இதனை தெரியாத போல் இருந்து விடும். ஒரு சின்ன உதாரணம்: ஒரு ஆண் தன்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டதாக சொன்னால், சக ஆண்களே கிண்டல் செய்வார்கள். முதல் கேள்வி: நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..? ஒரு வேளை எதிர் காலத்தில் நடக்கலாம், இவ்வாறு: என்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டார் என்று காவல் துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு. இந்த 'பரிணாம வளர்ச்சி' நடக்க எத்தனை 100/1000 கோடி வருடங்கள் ஆகும் என்று கூற முடியாது.


ஒரு விசயம் மறுக்க முடியாது: இந்த லோகத்தில் 'ஆணின் உலகம் பெண்ணை சார்ந்தது- 'பெண்ணின் உலகம் ஆண் சார்ந்தது- விதிவிலக்கு இருக்கலாம். பிறகு ஏன் இந்த 'வன்முறை'? இந்த தப்பு எப்பொழுது சரி செய்யப்படும்..? ஆகாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சம்பவமாவது நடக்கும்.

ஒரு இயற்கை/அறிவியல் சார்ந்த உண்மை: அது எப்படி ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடன் 'ஏதேதோ' எண்ணம் கொள்கிறான்.!? இது எப்பொழுதும் அல்ல. சில நேரங்களில். காரணங்கள்: ஒரு பெண்ணின் உடல் & மனது இயங்கும் பாணி, காதல்/காமம் போன்ற விசயங்களுக்கு Respond செய்யும் விதம், இவைகளுக்கு மூளை இயங்கும் விதம் எல்லாம் ஒரு ஆண் விசயத்தில் நடப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்னொரு விசயமும் உள்ளது. இதனை நான் கூற விரும்பவில்லை. காரணம் - புரிந்து கொள்ள எல்லோரும் தயார் என்று எனக்கு தோன்றவில்லை. இது ரொம்ப Sensitive.

இதன் இரண்டாம் பாகத்தில் உங்களை சந்திக்கிறேன்.

குறிப்பு: இதனை March 24, 2008 அன்று எழுதியுள்ளேன். இன்று வரை அதான் இரண்டாம் பாகம் எழுதவில்லை. காரணம் - நம் மக்களின் Hypocrisy.

* * * * *
September 1, 2008 2:46 PM

An Infant, just a day old, struggles to open his eyes. Flies n Ants were all over his body when they found him under a tree. Ms Mala, mother of two, took the baby to the University Health Centre. Afterwards, Police took the baby to Panacea Hospital. When the baby was brought to the hospital, he came with insect bites on his face. His sugar was low. Authorities suspected a damage in his Cornea.

Do you friends understand what happened to the baby..? The baby was abandoned by his parents n placed under a tree at BU's campus.


If they (parents) had an intention to abandon their baby, they should have given the baby to any one of the charity organisations which controlled by Govt. (I may be sounded goose. If you decided to abandon, there is no point to look after the baby anymore). Therefore, they (his parents) did a fantastic job. If they did it intentionally, as sayin' goes, I wanna call them 'Fu***n' Machines.' (Sorry for my F).

Ms Mala has been lookin' after the baby since Friday. Hats off to Ms Mala. Bravo..!

Monday, April 5, 2010

எங்களுக்கும் வாழ ஆசை, மூடர்களே.

நமக்கு நேர்மையை தெரியுமா? குறைந்தபட்சம் நேர்மையாய் சிந்திக்க தெரியுமா? இந்த 'முதலாளித்துவ சமுதாயம்' என்ன செய்கிறது என்று பார்ப்போம். நம்மை சுற்றி சுரண்டுபவர்களும், நம்மை அடக்கி ஆள்பவர்களும் இருக்கும் போது, 'ஏழை விவசாயிகள் தற்கொலை செய்ய தூண்டபடுகிறார்கள். எலிகளையும், பாம்புகளையும் உணவாக மாற்றிகொண்டார்கள்.'




சில மாதங்களுக்கு முன் இந்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி செய்தது, ஒரு கிலோ ரூ. 12.50 க்கு. அரசு சொன்ன காரணம் 'நம்மிடம் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளது.' ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசு தந்த கரும்பு கொள்முதல் விலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு தேனீர் அருந்தலாம் அந்த பணத்தில்.

பிறகு இதே மூளை இழந்த அரசு (அல்ல, விவசாயிகளின் உயிரை குடிக்கும் அரசு) இறக்குமதி செய்தது ஒரு கிலோ சர்க்கரை ரூ. 30 க்கு. நுகர்வோர் சந்தையில் விற்ற விலை கிலோ ரூ. 40. இந்த நாடகம் நடந்தது 5 மாத இடைவெளியில்.

எனவே ஒரு தேனீர் விலைக்கு சொந்த மண்ணின் விவசாயிகள் விற்கப்பட்டு, அதே சொந்த மண்ணின் மக்கள் அநியாய விலைக்கு அந்த பொருளை வாங்கி அவதிபடுகின்றனர். நம்மளை விட பொருளாதரத்தில் பின் தங்கிய பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் சர்க்கரை, பெட்ரோல் மற்றும் டீஸல் விலை மிக மிக குறைவு. அவர்களால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? இதோ அந்த திரை மறைவு நாடகம் உங்களுக்காக - - -

இந்த பொருள்களின் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி போக இந்த அரசுகளின் குள்ளநரி வேலை இதோ: ரூ. 12.50 க்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய, அதை கம்மி விலைக்கு வாங்கி பதுக்கி வைத்த பன்னாட்டு நிறுவனம் இந்த அரசுக்கு தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அல்லது அந்த நிறுவனம் எந்த அமைச்சருக்கு சொந்தம்? பன்னாட்டு நிறுவனம் என்றால், ரூ. 30 க்கு நம்மிடமே விற்ற அந்த நிறுவனம் இந்த அரசுக்கும், அமைச்சருக்கும் தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அந்த நிறுவனம் ஒரு அமைச்சருக்கு சொந்தம் என்றால், அவர் லாபம் பார்த்த கோடிகள் எத்தனை?




உலக அடியாள் கூட தனது நாட்டு மக்களை ஒண்றும் செய்தது இல்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைபட்டு கிடக்கும் இந்த அடிமை-சுதந்திர இந்தியாவில் சொந்த மண்ணின் மக்கள் வாழ வழி இல்லாமல். இலங்கையில் ஒரு இனம் வாழ இன்னொரு இனத்தை அழித்தது. ஆனால் பன்னாட்டு-அடிமை-இந்தியாவில் மக்கள் வீடு இழந்து, காடு இழந்து, உடமை இழந்து, சொந்தம் இழந்து, வாழ்வை தொலைத்து அகதிகளாக, முள் வேலிக்குள்ளும் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டிய நிலை.

அடக்குமுறை உள்ள இடத்தில் அடங்க மறுக்கும் சமுதாயம் முளைக்கும். குள்ளநரிகள் இருக்கும் இடத்தில் புரட்சி எந்த நேரமும் வெடிக்கும். பழங்குடிகள் அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள் பறிக்கபட்டு நிர்கதியாய் விரட்டப்படுகின்றனர். எல்லாம் இழந்து கையில் ஓட்டை காலணா இல்லாத அவர்கள் என்ன செய்வார்கள்? மலையும் மலையின் வளங்களையும் நம்பி வாழ்ந்தவர்கள், இப்போது முள் வேலிக்குள் அதுவும் தங்களது சொந்த மண்ணில்.

{In this fils photo, leerin' youth snappin' photos of a naked woman. Prasenjit Chakravorty (28), owner of a fast food joint, Ratul Barman (18), a hotel waiter, and Sudip Chakdar (20), a pan shop owner are the chief accused. What compelled these young men to strip a woman? we are always animals and are just sheddin' some hypocrisy}.



நளினி அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. காரணம் 'கொடும் செய்யல் புரிந்தவர், விடுதலை செய்தால் சமுதாயத்திற்கு நல்லது அல்ல.'  தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொலை செய்தவர்கள் இன்னும் வாழவில்லையா? அல்லது அந்த அரசியல் கட்சி (அ.தி.மு.க) தமிழகத்திலிருந்து ஒழிந்துவிட்டதா? மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்டது? கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது? இந்த கொடும் செய்யல் புரிந்தவர்கள் தற்போதைய 'காந்திய' சமுதாயத்தில் இல்லாமல் போய் விட்டார்களா என்ன? சாதி பெயரில் அரசியல் செய்பவர்களும், சாதி பெயரில் வன்முறை செய்பவர்களும் நம்மை சுற்றி 'வாழும் அவதாரங்களாக' மக்களை ஆசிர்வதிகவில்லையா?

"அதிகாரிகளும், அதிகாரம் உள்ளோரும் செய்வதே ஆட்சி. சொல்வதே சட்டம்."

தற்போதைய மத்திய அரசும், மாநில அரசும் தங்களது சுய லாபத்திற்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கை மண்ணில். இலங்கை அரசை இந்திய அரசு United Nations சபையில் போருக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு இந்த நிமிடம் வரை 'ஆண்மையான' நடவடிக்கை இல்லை. ஆண்மை இல்லாத அரசு மக்களை ஆட்சி செய்வது வரலாற்றில் அழிக்கப்படவேண்டிய பக்கங்கள்.

'அங்காடித் தெரு' படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம். தமிழ் படங்களை பற்றி பேசும் போது 'அங்காடி தெரு'வை ஒதுக்க முடியாது. சிறந்த படைப்பு.

Wednesday, March 24, 2010

தமிழ் மக்களை விற்பது/ஏமாற்றுவது சுலபம்.

sent: April 9, 2008 11:50 AM (on this date I originally wrote this article to my Orkut Groups)

Hogenakkal குடிநீர் பிரச்சினை பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்: எதிர் காலத்தில் 'பல்லி விழுந்த தேநீர்' போல் வரலாறு இந்த திட்டத்தின் கசப்பான பக்கங்களை புரட்டும் போது, இத்தனை நாடகத்திற்கும் ஆரம்ப புள்ளி 'தமிழ் இன காவலர் / தமிழ் மூதறிஞர் / அன்றைய முதல்வர்' என்று இன்றைய முதல்வர் கருணாநிதி 'வஞ்ச புகழ்ச்சி அணியில்' வைக்கும். ஏன் என்று பார்ப்போம் - - -

1. அடுத்து வர போகும் கர்நாடக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற விடுவார்களா என்பது உலக வங்கி விவசாய தொழிலை புரிவோர்க்கு கடன் தருவோம் என்பதை போன்றது.

2. யாரும் ஆட்சி செய்யாத போதே இந்த நிலை. ஆட்சிக்கு வந்தால்..? வேதாளம் முருங்கை மரம் கதைதான். அவர்கள் அப்படித்தான். இறங்கி வருவார்கள் என்று நம் முதல்வர் அவர்கள் கவிதை வேண்டுமானால் 'அவரது' பத்திரிகையில் எழுதலாம்.

3. ஓர் சில அரசு வெற்றிகரமாக இதனை தடுத்து விட்டால், மற்ற அரசால் இந்த வட்டத்தை விட்டு வெளியே வர முடியாது. காரணம், எந்த ஒரு அரசு விட்டு கொடுக்கிறதோ, அந்த அரசுக்கு எதிராக நடக்கும் வன்முறை பற்றி உங்களுக் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு உள்ள கன்னட Media, அந்த அரசை மக்கள் விரோத அரசாக பிரச்சாரம் செய்யும். எனவே, எந்த அரசும் இதை வைத்து அரசியல் செய்வார்களே தவிர தமிழ் மக்களுக்காக விட்டு தர மாட்டார்கள்.




4. இங்கு உள்ள கட்சிகள், வர போகும் தேர்தலில் 'Hogenakkal குடிநீர் திட்டம் நிறைவேற விட மாட்டோம்' என வாக்குறுதி தந்தால் நமது முதல்வர் அவர்கள் என்ன செய்வார்..? அப்படி வாக்குறுதி தரும் கட்சி, வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் என்ன செய்வார்..? இருக்கவே இருக்கு ஓர் கவிதை. அதை எழுதி விட்டு போய் விடுவார்.

5. திருமதி. சோனியா அவர்கள் அவரது கட்சியின் நலன் கருதி (கவனிக்க:மக்கள் நலன் கருதி அல்ல) வரும் தேர்தலில் கர்நாடக மண்ணில் விளையாட தமிழர் வாழ்வில் விளையாடுவது தவறு (மன்னிக்க: தப்பு) இல்லை என்று நமது முதல்வர் அவர்களுடன் பேரம் பேசி இருக்கலாம். இது உண்மை என்றால், நமது தமிழக Congress கட்சியின் உலக தலைவர்கள் குறைந்த பட்சம் வேட்டியுடன் வந்து தமிழக மக்களுக்காக போராடுவார்களா..? அல்லது அன்னை சோனியா அவர்கள் பின்னால் சென்று தமிழன் ஓர் இ.வா. இனம் என்று பறை சாற்றுவார்களா..? வாழ்க அரசியல். வளர்க அரசியல்வாதிகளின் மக்கள் நலன் மீதான அக்கறை.

ஓ தமிழக மக்களே, என்று உங்கள் அறிவு கண்ணை திறக்க போகிறீர்கள்..?