You are lookin' for..?

Showing posts with label Eelam. Show all posts
Showing posts with label Eelam. Show all posts

Friday, February 4, 2011

ஈழத்தமிழ் சகோதரியின் ஆதங்க மடல்

நீங்கள் படிக்கும் இந்த விடயம் எனக்கு உடுமலைபேட்டையை சேர்ந்த ஆதி/மலர் இனியன் என்பவர் e-mail செய்திருந்தார். இந்த முகம் அறியா தோழர் ஒரு 'கொள்கையுடன்' செயல்படுவதும், சில விசயங்களை நடத்தி செல்வதும் அவரது e-mail மூலமாக அறிந்து கொண்டேன். என்னை அவர் எப்படி அறிந்துகொண்டார் என்பது எனக்கு தெரியாது. அவரது e-mail களுக்கும் நான் reply செய்ததில்லை. என்னை மன்னியுங்கள், தோழரே.

இந்த விடயம் முன் வைக்கும் விசயங்களை நீங்கள் உள் வாங்கிகொள்ளும் முறையும், எதிர் வினையும் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது மற்றும் பல உண்மையான உள்ளங்களின் அவா.

திரைப்படப் பாடலாசிரியை, அக்கா தாமரை அவர்களுக்கு ஒரு ஈழத் தமிழச்சியின் ஆதங்க மடல்.

அன்புடன் அக்கா தாமரை அவர்களுக்கு வணக்கம்!

நான் தமிழீழம், கிளிநொச்சியை பிறப்பிடமாகக்கொண்டவள். உங்களுடைய "வசீகரா என் நெஞ்சினிக்க" என்ற பாடல் எல்லோரையும் கவர்ந்ததுபோல் என்னையும் மிகவும் கவர்ந்திருந்தது. அந்தப்பாடலின் கவி நயமும் இனிமையும், தவிர வேறெதையும் நான் அறிய முயற்சிக்கவுமில்லை. ஆனால் அப்பாடலில் அப்படி ஒருவித்தியாசம் இருப்பதாக மனது உணர்ந்து கொண்டது. சிலகாலங்களுக்குப்பின் அந்தப்பாடலை எழுதியது ஒரு பெண்கவிஞர் என்றும், பெயர் தாமரை என்றும் படித்து அறிந்தேன், மனம் மகிழ்ச்சியை தோற்றியது. அந்த மகிழ்ச்சி ஏன் தோன்றியதென்பதுகூட எனக்குத் தெரியவில்லை.

நவீன கலை இலக்கியத்துறையில் குறிப்பிடும்படி தமிழகத்து பெண்கள் சிலர் இருந்தாலும், அனேகர் பட்டிமன்றங்களிலும் மேடை கவியரங்குகளில் மட்டுமே தங்களை வெளிப்படுத்த முடிந்திருந்த வேளையில், சினிமாவில் அதுவும் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்த ஒரு துறைக்குள், புரட்சிகரமாக ஒரு பெண் பாடலாசிரியர், வியப்பும் பெருமையுமாக இருந்தது. தொடர்யுத்தத்தினால் மூழ்கிக்கிடந்த ஈழத்தவள் நான் என்பதால், மிக அரிதாக காணக்கிடைக்கும் சினிமா, தொலைக்காட்சி, சில புத்தகங்கள் போன்ற ஊடகங்கள் மூலம் அறிதல் தவிர வேறு வழியில் தமிழகத்து கலையை அறிந்துகொள்ளக்கூடிய சந்தற்பமுமில்லை. இப்போ புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறேன்.

தாங்கள் 20.01.2011 திகதியிடப்பட்டு சீமானுக்கு என்று குறிப்பிடப்பட்டிருந்த மடல் வாசிக்கும் சந்தற்பம் கிடைத்தது. வாசித்தேன், சிந்தித்தேன். நீங்கள் சீமானுக்கு என்று விளித்திருக்கும் மடல், வெகுஜன ஊடகங்களில் வெளியிடப் பட்டிருப்பதிலிருந்து ஏதோ வில்லங்க விளையாட்டு என்பதை மட்டும் மனம் கீச்சுமூச்சு காட்டி உணர்த்தியது. தாங்கள் சீமானுக்கு அனுப்பிய மெயில், தவறுதலாக ஊடகங்களிடம் சிக்கிவிட்டதா, அல்லது நீங்கள்தான் பகிரங்க மடல் என்று குறிப்பிடாமல் ஒருதலைப்பட்சமாக யாரோ சிலருக்கு உதவும் நோக்கில் அந்த மடலை ஊடகங்களுக்கு தந்திருந்தீர்களா என்று சுய விசாரணை மனதுக்குள் நடத்திக்கொண்டிருக்கிறேன்.

தாங்கள் கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் ஏதாவது தீர்வு எட்டமுடியுமா, அல்லது ஏதாவது முயற்சியாவது செய்யலாமா என்றால், அவை தமிழகத்திலுள்ள தமிழ் மக்களால்தான் ஈட்டமுடியும். அதற்கும் அதிகபட்சம் உங்களைப்போன்ற, தமிழகத்து உணர்வாளர்கள் தான் ஒன்று திரண்டு நல்லமாற்றத்தை தோற்றுவிக்கவும் வேண்டும். களமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது. அதற்கு நீங்களும் முயற்சிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

ஆனால் நீங்கள் எந்தக்கட்சியையும் சார்ந்தவளில்லை என்றும், இனியும் இப்படியே இருக்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள், அப்படியெனில் உங்களால் எப்படி சமூகம் சார்பாக அரசியலில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. மக்கள் நலனுக்காக ஏதோ ஒன்றை மாற்ற வேண்டுமென்ற துடிப்பு வரும்போது, மறுபுறத்தே நின்று பற்றிப் பிடித்தால்தானே மாற்றத்தை காணமுடியும், அதை தவிர்த்து அதிகாரத்தை கைப்பற்றக்கூடியவர்களிடம் ஏன் பொல்லாப்பு என்று ஒரு பக்கச்சார்பான கருத்தையும் வெளிப்படுத்தி, நான் கட்சி சார்பற்றவள் என்று நழுவல்போக்கை கடைப்பிடிக்கலாமா? என்பதும் என் சிறுபுத்திக்குள் கேள்விக்குறியாகி குடைகிறது.

மக்கள் ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் ஒரு நாட்டில், கண் கொண்டு பார்க்கமுடியாத ஊழலும், லஞ்சமும், மன்னராட்சியை ஒத்த மனித வழிபாட்டு கிலிசகேடுகளும், கலாச்சார சீர்கேடுகளும், கட்டப்பஞ்சாயத்தும், ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தி நீரூற்றி வளர்க்கப்படும்போது, தட்டிக்கேட்கக்கூடிய இடத்தில் இருப்பவர்தானே தட்டிக்கேட்க முடியும். மக்களுக்கு சரியான வழிமுறைகளை சொல்லிக்கொடுக்கும் கடமை அவர்களுக்குத்தானே உண்டு. குறைந்தபட்ஷம் மற்றவர்களுக்காக அல்லாவிட்டாலும் தமது சொந்த வாரிசுகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டாவது, சரியில்லாதவற்றை எதிர்த்து சரியெனக்காணப்படும் வலுவுள்ள சக்திக்குத் துணை நின்றால்தானே மாற்றத்தைக் காண முடியும்.

தமிழ்நாட்டு அரசியல் பற்றிப்பேச என்னிடம் அவ்வளவு அரசியலறிவில்லை. அத்துடன் தமிழகத்தின் உள்ளூர் அரசியலில் மூக்கு நுழைப்பதும் எனக்கு சரியாக இருக்காது. இருந்தாலும், அரசியல் ஒன்று இல்லாது ஈழத்தில் நாதியற்று துடித்த எம்மினத்துக்காக, இன-மொழி-மான-உணர்வு கொண்டு, ஈடுபாட்டுடன் நீங்கள் எங்களுக்காக குரல்கொடுப்பதும், உங்களைப்போல இன்னும், இன உணர்வுள்ள பலர் காலாகாலமாக தொடர்ந்து எமக்காக போராடிவருவதும், தமிழ்நாட்டு தமிழர்கள் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும் தமிழால், உறவுமுறையால், எங்கள் உறவினர்தான் என நாங்கள் தொடர்ந்து நம்பிவருகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் "தாமரையும்" சரி, சீமானும் சரி, வைகோவும் சரி, ஐயா நெடுமாறன் அவர்களும் சரி, இன்னும் உணர்வாளர்கள் எவராகினும். எவரையும் நாங்கள் பிரித்துப்பார்த்ததுமில்லை, ஆனால் நாங்கள் பட்ட மிகவும் கசப்பான மானுடம் காணாத கொடுமையான அனுபவங்களை, கண்ணால் காணாவிட்டாலும் கேள்விப்பட்ட வரையிலாவது எல்லோரும் புரிந்துகொள்ளுவீர்கள் என்றே நம்புகின்றேன்.

தமிழகம் தேர்தலை சந்திக்க இருக்கும் இந்தக்குறுகிய தருணத்தில், ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் சீமான் ஆதரிப்பது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது என்று நொந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள்!. அதற்கான காரணமாக கடந்தகாலங்களில் ஜெயலலிதா நடந்துகொண்ட விதத்தையும் குறிப்பிட்டு ஞாபகப்படுத்தியிருந்தீர்கள். உங்கள் ஆதங்கம் ஆத்திரம் நியாயமானதாக இருந்தாலும், (நீங்கள் ஈழத்தமிழர்கள் பற்றிய அரசியலை காரணம் காட்டியதால்) ஒன்றை குறிப்பிட்டுக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் ஜெயலலிதா அவர்கள் பற்றி எங்களுக்கும் கசப்பான அனுபவம் உண்டு என்பதும் மறுக்கவில்லை.

ஆனாலும் காலாகாலமாக ஜெயலலிதா விடுதலைப்புலிகளை நேரடியாகவே எதிர்த்து அரசியல் செய்து வந்திருக்கிறார். ஆனால் கருணாநிதி நல்லவர்போல் பாசாங்கு செய்து ஜெயலலிதாவின் புலி எதிர்ப்பை தனக்குச்சாதகமாக பயன்படுத்தி, வஞ்சகமாக நடந்துகொண்டது ஒன்று இரண்டல்ல. 2009 யுத்த இறுதியிலும் கொடு வஞ்சனை புரிந்து கோல்லப்பட்ட 100,000 மேலான தமிழர்களின் ஒவ்வொரு படுகொலையிலும் மறைமுகமாக, நேரடியாக கருணாநிதி சம்பந்தப்பட்டிருக்கிறார். இதற்கான ஆதாரங்கள் நிறையவுண்டு.

ராஜபக்க்ஷ சிங்களவன், ஆனால் கருணாநிதி தன்னை தமிழன் என்று சொல்லுகிறார். ஈழத்தமிழினத்துக்கு அரசியலைத் தாண்டி ராஜபக்க்ஷமீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறதோ, அதைவிடவும் கருணாநிதிமீது இரட்டிப்பு வருத்தமும் கோபமும் இருக்கிறது. சமீபத்தில் ராஜபக்க்ஷவுக்கு எதிராக இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் போர் குற்றத்தின் மூலம் மனித உரிமைமீறல், சித்திரவதைக்குட்படுத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே குற்றச்சாட்டுக்கள் கருணாநிதிமீதும் இருக்கிறது. படிப்படியாக இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தகையோடு கருணாநிதிக்கு எதிராகவும் நிச்சியமாக வழக்குப்பதிவு செய்யும் முனைப்போடுதான் புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள். அப்படி எவரும் முயற்சிக்காவிட்டாலும் நானாவது கருணாநிதிமீது படுகொலை, கொலைக்கான சதி செய்தவற்றிற்காக வழக்கு தாக்கல்செய்யும் நோக்கோடு பல ஆதாரங்களை சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசின் உறுதுணையுடன், தடைசெய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்தது போக மீந்திருந்த மக்களை கருணாநிதி தன் சுயநலன் கருதி பயன்படுத்திய, அவரது அரசியலில் மிகவும் கொடுமையான ஒன்றை நீங்கள் மறந்திருந்தாலும் ஞாபக்கப்படுத்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன்.

போரின் உச்சக்கட்டத்தில் களத்திலிருந்த என் உறவுகள் மருந்து, உணவு, குடிநீர், உடை ஏதுமின்றித்தவித்தபோது அன்னிய தேசத்தில் வாழும் நாங்கள் மருந்து மற்றும் குழந்தைகளுக்கான பால், குடிநீர், சொற்ப உணவுப்பொருட்களை சேகரித்து "வணங்காமண்" என்ற கப்பல் மூலம் ஈழத்துக்கு அனுப்பிவைத்தோம். கப்பல் போய் சேர்வதற்குள் ஈழம் எரித்துமுடிக்கப்பட்டு விட்டது. கப்பல் செல்லுமிடமின்றி கடலில் தத்தளித்தது. அப்போ புலம்பெயர் தேசங்களிலிருந்த சில அமைப்புக்கள் தமிழக அரசை நம்பினர். கப்பலிலுள்ள பொருட்களை ஊனமுற்று மனநலன் பாதிக்கப்பட்டு வக்கரித்துக்ப்போய் "பயித்தியம்பிடித்த நாயின் நிலையில்", தடுப்பு பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த மக்களிடம் சேர்க்கும்படி, "மரமான" கருணாநிதியிடம் கருணைக்கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கருங்கல்லான கருமி கருணாநிதி, அப்பொருட்களை அந்த பாவப்பட்ட மக்களிடம் சென்றுசேர அனுமதிக்கவே இல்லையே?. இதை நீங்கள் மறந்திருக்கக்கூடும். எங்களால் எப்படி அக்கா இப்படி ஒரு கொடூரனை மறக்கமுடியும்? மன்னிக்க முடியும்.

இந்தப்பழியை வேறு எப்படித்தான் தீர்க்கமுடியும்? கோர்ட்டா கச்சேரியா. தமிழகத்தில் உள்ள தகுதிவாய்ந்த அரசியல் சக்தி ஏதாவது எம் இனத்திற்கு உதவியா நிற்கிறது? காங்கிரஸின் ஆயுதத்திற்கு பலியான ஒவ்வொரு தமிழரின் கொலைக்கும் கருணாநிதிதானே முழுக்காரணம். சோனியா இத்தாலிக்காரி, மன்மோஹன் பொம்மையான பஞ்சாபி, பிரணாப்முகர்ஜி ஹிந்திக்காரன், சிவசங்கர்மேனன் மலயாளி; நாராயணன் மலயாளி, சிதம்பரமும் கருணாநிதியும் வேட்டிகட்டிய தமிழர்கள். இந்த இருவரும் சேர்ந்து வேடங்கட்டி நடத்திய நாடகத்தால், குடிதண்ணீரும் இல்லாமல் கிடந்த என் தாயும், வயிற்றில் குழந்தையை சுமந்த சகோதரியும், அப்பனும் அண்ணன் தம்பியிம் ஷெல்க்குண்டிலும், எரிகுண்டிலும் ராணுவத்தின் ரவைகளிலும் கருகிச்சாகும்போது, தமிழகத்தில் இந்த நாசக்காரர்கள் என்ன செய்துகொண்டிருந்தனர் என்பதை பார்த்தவர்தானே நீங்கள். இப்பொழுது இரண்டு பொழுது விடிவதற்குள், அரசியலில் இல்லாத அரசியல்வாதியாக, சீமானுக்கு கடிதமெழுதி இணையத்தளங்களில் அழுகிறீர்களே, எங்களின் அவலத்தை கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?

உள்நோக்கம் எதுவுமில்லாமல் உண்மையாக ஈடுபாட்டுடன் நீங்கள் நடந்துகொள்ளுபவராக இருந்தால், குறிப்பிட்ட அந்தக் கடிதத்தை சீமானிடம் நேரடியாக சேரும் வண்ணம் அவருக்கு அனுப்பவேண்டியதுதானே. அதுதானே முறையும் கூட. அல்லது இவ்வளவு அக்கறையுள்ள நீங்கள் சீமானை சந்தித்து நேரடியாக இதுபற்றி விவாதித்து முடியாத பட்சத்தில் ஒரு அறிக்கையாக நடந்த உண்மைகளை வெளியிட்டிருக்கலாமே. அதுதானே தர்மம்.

உங்களைப்போல பலரிடம் என் இனமும் சரி, எங்கள் தலைவனும் ஏமாற்றப்பட்டிருக்கிறோம், என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்துகிறேன்.

எனது சிறுவயதில், தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் தோழர் தியாகு அவர்களால் எழுதப்பட்டு, தொடராக வெளிவந்த "சுவருக்குள் சித்திரங்கள்" தொடரை எனது தகப்பனார் படிப்பதை பார்த்திருக்கிறேன். அந்தத்தொடரில் கம்பிக்கூண்டுக்குள் தண்டனைக்கைதியின் உடையுடன் நின்றுகொண்டிருக்கும் ஒரு படம் இன்றும் எனது மனத்திரையில் பதிந்திருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்ட தியாகு அவர்கள்தான் உங்கள் கணவர் என்பதையும் உங்கள் வாக்குமூலமாகத்தான் எங்கோ படித்தறிந்தேன்.

அதே தியாகு அவர்கள், சீமான் சிறையில் இருந்தபோது சீமானின் விடுதலைக்காக சிரத்தையுடன் பாடுபட்டதும் நான் அறிந்துள்ளேன். அவ்வளவு நெருக்கத்தை சீமானுடன் கொண்டிருக்கும் நீங்கள், சீமானின் நிலைப்பாட்டையும் யதார்த்தமான ஈழமக்களின் நியாயப்பாட்டையும் அறிந்துணர்ந்து பேசி முடிவுக்கு வராமல், முற்றுமுழுதாக ஈழமக்களின் அழிவின்பால் உருவாகி ஈழத்துரோகத்திற்கு தண்டனை கொடுப்பதற்காக, காலத்தால் தோற்றப்பட்டு ஒருபெரும்சக்தியாக வளர்ந்து தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் நடுக்கத்தை உண்டுபண்ணிக்கொண்டிருக்கும், நாம் தமிழர் இயக்கத்தையும், சீமானையும், நீங்கள் வெளியிட்டுள்ள குறுகிய அரசியல் கடிதம், பாம்பும் ஏணியும் விளையாட்டில் சீமானையும் ஈழ வக்கிரங்களையும் தள்ளி விடுவதுபோலில்லையா? ஏதோ ஒன்றால் உருவான ஒன்றை முற்றிலும் சம்பந்தமில்லாத ஒன்றிற்கு முண்டு கொடுக்கச்சொல்லுகிறீர்களா?

ஜெயலலிதாவையோ, கருணாநிதியையோ நம்பி எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. ஆனாலும் குறிப்பிட்ட இரண்டு தற்குறிகளையும் அவர் தேவையில்லாமல் எதிர்க்க விரும்பவுமில்லை, இயக்கத்திலிருக்கும் உறுப்பினர்கள் சிலர் இவர்கள் மீது சிலசமயம் ஆத்திரங்கொண்டாலும், தலைவர் கூறும் பதில் 'அவர்கள் பட்டம் பதவி பணத்துக்காக போராடும் அரசியல்வாதிகள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் நடந்துகொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு எங்கள் வேலையை நாம்தான் பார்க்கவேண்டும்' என்பார்.

தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு 20 வயதாக இருக்கும்போது கருணாநிதிக்கு வயது 50. அந்த 20 வயதுகளிலேயே கருணாநிதி பற்றி நன்கு புரிந்துகொண்டு பிரயோசனமற்ற ஒரு தொடர்பாடலையும் தலைவர் பிரபாகரன் கருணாநிதியுடன் வைத்துக்கொள்ளவில்லை.

நீங்கள் கூறுவதுபோல் காங்கிரசை எதிர்க்க, காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் எதிர்த்து பிரச்சாரம் செய்து போட்டிக்கு ஆட்களையும் நிறுத்தி மற்ற இடங்களில் சமரசம் சாதித்தால் எப்படியிருக்கும் என்பதை 2009 பாராளுமன்றத்தேர்தலில் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

எதிரிக்கு எதிரிதான் நண்பன். முதலில் கருணாநிதியை களையெடுக்கவேண்டிய தேவையிருக்கிறது. 2009 ஈழத்தின் இறுதி சங்காரத்தின்போது வைகோவால் ஜெயலலிதாவை தமிழர்களுக்காக குரல் கொடுக்கச்செய்ய முடிந்தது. ஒருநாள் உண்ணாவிரதம் இருத்தமுடிந்தது. தமிழீழத்தை பெற்றுத்தருவேன் என்று சொல்லவைக்க முடிந்தது. குறைந்தபட்சம் ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்து அரசியல் செய்யும் வைகோ அவர்கள் முற்று முழுதாக ஜெயலலிதா எதிர்த்துக்கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் சார்பாக தான் நினைக்கும் அனைத்தையும் செய்ய முடிகிறது. அப்படி இறங்கிவரும் ஜெயலலிதா காலமாற்றத்தையும் யதார்த்தத்தை மனதில்கொண்டு மாறுவதற்கான சந்தற்பங்கள் நிறையவே இருக்கின்றன. ஜெயலலிதா பயப்படுகிற அல்லது எதிர்க்கிற விடுதலைப்புலிகளும் இப்போதைக்கு ஈழத்தில் இல்லையென்றாகி விட்டிருக்கிறது. ஈழத்து மக்கள் மீது கருணாநிதியைப்போல ஜெயலலிதா கொலை வெறி கொண்டவராகவும் தெரியவில்லை.

போர்முடிவடைந்து இரண்டு வருடங்களை அண்மிக்கின்றன. போர்முடிந்தபின் ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி கொடுத்த வாக்குறுதிகளும் எழுதிய கடிதங்களும் எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே நிலுவையில் கிடக்கின்றன. இந்த நிலையில் திரும்பவும் வாக்குமாறிப்போய்க்கிடக்கும் கொலை வெறி பிடித்த கருணாநிதியின் வெற்றி வாய்ப்புக்கு பரிந்துரைக்கிறீர்களே. உங்களை நினைத்து மிகவும் பரிதாபப்படுவதைத்தவிர வேறு எதுவும் முடியவில்லை.

கருணாநிதியால் இதுவரை ஏதாவது செய்ய முடிந்திருக்கிறதா? அல்லது அவரால் ஒன்றும் செய்ய முடியாமல்தான் இருக்கிறதா? தமிழகத்தில் அனேகரால் மதிக்கப்படும் அறிவாளி "தமிழருவி மணியன்" அவர்களிடம் சற்று ஆலோசனை செய்து பாருங்கள். 'தமிழினம் எக்கேடு கெட்டு அழிந்தாலும் தன் குடும்பங்களின் வளர்ச்சிக்காக காங்கிரசை விட்டு விலக கருணாநிதி தயாராக இல்லை' என்று கூறுகிறார். நானும் கூட நானும் கூட என்று கூவிக்கொண்டு கருணாநிதி செய்யும் அதி உச்சமான நரியை வென்ற தந்திரத்தை நீங்கள் அறிந்தொகொள்ளாததற்கு வருந்துகிறேன் வெட்கப்படுகிறேன்.

யுத்தநிறுத்தம் மத்திய அரசு செய்யாவிட்டால், கூண்டோடு கைலாயம் போய் பதவி விலகுவோம் என்றார். உயிரை விடுவேன் என்றார். ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவமுடியுமென்றார். ஒருநாடு இன்னொரு நாட்டுப்பிரச்சினையில் எப்படித்தலையிட முடியுமென்றார். பிரபாகரன் பயங்கரவாதியென்றார். சகோதர யுத்தம் செய்வதாக புலிகள் இயக்கத்தை குற்றம் சாட்டினார். முத்துக்குமார் தீ மூட்டி செத்தபோது மிக இளக்காரமாக அந்தப்பயலுக்கு வீட்டில் ஏதோ பிரச்சினை என்றார். இன்னுமொருவர் செத்தபோது மிக மலிவாக, மனநோய் பாதிக்கப்பட்டவர் என்றார். ஒவ்வொரு நாளும் 1,000 - 2,000 - 5,000 என்று என் உறவுகள் செத்தழிந்தபோதும் கடிதமெழுதி டில்லிக்கு அனுப்புவதாக கதை விட்டவர், தனது வாரிசுகளின் பதவிப்பேரம் பேசலுக்கு டில்லிக்கு பறந்து சோனியாவுடன் காலில் விழுந்து பதவி பெற்றாரே, எதை மறக்கச்சொல்லுகிறீர்கள்?

1/2 நாள் உணவு ஒறுப்பு வேள்வி என்று கூறி கடற்கரையில் குளிர்சாதன வசதியுடன் மனைவி, துணைவி, மக்கள், கூட்டம் சூழ காற்றுவாங்கி யுத்த நிறுத்தம் பிரகடனப்படுத்தியுள்ளேன் என்று கூறிய பச்சைப்பொய்யை ஜீரணிக்கச்சொல்லுகிறீர்களா? நீங்கள் கூறுவதும் திருமா கூறுவதும் ஒன்றுதானே, நீங்கள் அரசியலில் இல்லையென்கிறீர்கள் திருமா ஒற்றைப்பதவியுடன் அரசியலில் இருக்கிறார் அவ்வளவுதானே வித்தியாசம்.

நீங்கள் கூறும்படி காங்கிரசை ஒட்ட அழிக்கவேண்டுமென்றால், காங்கிரஸ் என்ற நச்சுமரத்தை பசளையிட்டு நீரூற்றி பாதுகாக்கும் சக்திகளையும், நச்சுமரங்கள் வேரூன்றி வளர்வதற்கு காரணமான புறம்போக்கு நிலத்தையும், தீயிட்டு எரித்து அழித்துத்தானே சுத்தப்படுத்தி புனிதமாக்க முடியும். வெறுமெனவே நீரூற்றுவதை தற்காலிகமாக நிறுத்தினால், நீண்டதொலைவுக்கு வேரோடி நாட்டின் ஈரத்தன்மையையே உறுஞ்சிக்கொண்டிருக்கும் அந்த விஷமரங்களின் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் கட்டுப்படுத்திவிட முடியுமா?

இன்று முதலாவதாக அப்புறப்படுத்தப் படவேண்டிய தீயசக்திகள், கருணாநிதியும் தி.மு.க.வும் கூட்டுச்சேர்ந்து இனப்படுகொலை செய்த காங்கிரஸையும் இல்லாமல் செய்ய வேண்டிய, கலாச்சாரப்புரட்சி தமிழகத்துக்கும் தமிழனுக்கும் தேவைப்படுகிறது. இந்த கலாச்சாரப்புரட்சிக்கு சரியான நேரமும் இதுதான். இந்த விடயம் வெற்றியளிக்கும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் கட்சியாக இருந்தாலும் சரி, வேறெந்தக் கட்சியாகவிருந்தாலும் சரி; தமிழனிடம் சரியான பாடம் கற்றுக்கொண்ட படிப்பினையை பட்டறிவாக புரிந்துகொள்ளும்.

கடைசியாக ஒன்று. குறுகிய ஒரு காலத்துக்குள் உங்கள் பால் மிகவும் ஈர்க்கப்பட்டவள் நான். எனது கணினியின் முகப்பிலும் சத்தியமாக உங்கள் படத்தையும் தலைவரின் படத்துடன் ஐந்து ஆறு மாதங்களாக வைத்திருக்கிறேன். இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அது இருப்பதும் இல்லாமல் போவதும் உங்கள் நடவடிக்கையும் காலமும் தீர்மானிக்கட்டும். தலைவரின் மறுபிரவேசத்தை தர்மத்தாயும் ஈழப்பூமித்தாயும் நீண்டகாலத்துக்கு தள்ளிப்போடப்போவதுமில்லை. கவலையற்றிருந்த எங்களை தலைவரின் இடைவெளி பல சக்திகளுக்கு பதிலளிக்க வைத்து சோதிக்கிறது.

எங்கள் விடுதலைப்போராட்டத்தை தலைவரோ, நாங்களோ விரும்பி வேண்டி எடுத்துக்கொண்டதுமில்லை. ஈழத்தில் கிட்டத்தட்ட 45-50 விடுதலை இயக்கங்கள் உருவாகியிருந்தாலும், முற்று முழுதான போராட்ட இயக்கமாகவும், மக்கள் இயக்கமாகவும், மிகவும் கட்டுப்பாடு கொண்ட வழிமுறையை தோற்றுவித்த தீர்க்கதரிசனமான தலைவனைக் கொண்ட இயக்கமாக, தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலில் வந்த ஒன்றுதான் "தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்." இன்று ஒரு பின்னடைவை என்னினமும் என் "தலைவனும்" சந்தித்து நிற்கும் காலகட்டம். ஆனாலும் தலைவன் கொண்டகொள்கையிலிருந்து எந்த ஒரு ஈழத்தமிழ் பிறப்பும் நிமிடத்துக்கு ஒன்றென மாற்றி சிந்திக்க பழக்கப்படவில்லை. புலம்பெயர் தேசத்திலோ சந்திர மண்டலத்திலோ நாடு விட்டுச்சென்று வாழ நேரிட்டாலும் ஈழத்தமிழன் அழியும் வரை ஈழப் போராட்டம் தொடரும்.

தமிழ்நாட்டின் அரசியல் விளையாட்டு எங்களுக்கு ஒருபோதும் ஒத்துப்போவதுமில்லை. எவராவது உதவினால் நாங்கள் நன்றியுடன் சிரம் தாழ்த்தி வரவேற்போம். மாறாக எவராவது துரோகமிழைத்தாலும் அவர்களை புறக்கணித்து ஒதுக்கிவிட்டு ஒதுங்கி எங்கள் முயற்சியை முன்னெடுத்து தமிழீழம் கிடைக்கும்வரை போராடுவோம்.

இப்போ சகோதரன் செந்தமிழன் சீமான், அவர்களின் உணர்வும் ஈடுபாடும் எங்களை அவரோடு மிக நெருக்கமாக இணைத்திருக்கிறது. உள்ளூரில் அவர் எடுக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாளி. நாங்கள் அதை புரிந்து கொள்ளவும் முடியாது. முள்ளில் விழுந்துள்ள சகோதரியின் புடவையை சமயோசிதமாக அவர் எடுக்கத்தலைப்பட்டிருக்கிறார். எங்கள் மன எண்ணங்களையும் அவருக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். இருந்தும் அவர் வெற்றிபெறுவார் என்பதுதான் எங்கள் நம்பிக்கையும், அத்துடன் சீமான் கொண்டகுறியிலிருந்து சிதறமாட்டார் என்பதும் ஈழ மக்களின் அசையாத நம்பிக்கையுமாகும்.

இருந்தும் வெல்வோம்.

உங்களை எனது மடல் எந்தவகையிலாவது புண் படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் நான் வேதனையே வாழ்வாக பழகிக் கொண்டவள்.

அன்புடன் ஈழத்தமிழச்சி
ஆரணி.

இம்மடல்
ஈழதேசம் இணையம் ஊடாக.

Monday, April 19, 2010

உணர்வு, மூளை & மனசாட்சி இல்லா பதர்கள்.

April 8, 2008 11:48 AM    - இந்த தேதியில் எழுதிய கட்டுரையில் ஒரு Scotland-Yard கதை சொல்லி இருந்தேன். அதை மிஞ்சும் இன்னொரு கதை இதோ - - -

நமது 'நீதி'மன்றத்தில் நீதிபதி அவர்கள், குற்றவாளி கூண்டில் உள்ளவரிடம் 'உங்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளதற்க்கு உங்கள் வாதம் என்ன?' என்று கேட்கிறார். அவர் கேட்ட பதில் 'பசியால் வாடுகிறேன். சாப்பிட எதாவது கொடுங்களேன்' என. என்னடா குரல்தான் வருகிறது, ஆளை காணோமே என்று நீதிபதி தேடுகிறார் - ஒரு ஆறு வயது பொடிசு குற்றவாளி கூண்டில் நிற்கிறது. அந்த பொடிசு உண்மையாகவே வாடி போய் நிற்கிறது. நீதிபதி அந்த குட்டிக்கு உணவு வாங்கி வர சொல்லி, அந்த பிஞ்சுவின் பசியை போக்குகிறார்.


நடந்தது என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன்: இந்த பொடிசுவின் தந்தைக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் தகராறு. இது Police Case-ஆகி Court வரை வந்துடுச்சி. இந்த 'உலக அரசியல் தலைவர் படுகொலை' சதியில் அந்த பிஞ்சுக்கும் தொடர்பு உண்டு என குற்றவாளியாக்கப்பட்டு 3K.M. நடத்தி (அல்லது இழுத்து) அழைத்து வந்துள்ளனர் 'நீதி'மன்றம் வரை.

இந்த பொடிசு இதன் சத்துக்கு என்ன செய்து இருக்கும் இந்த Case-ல் குற்றவாளி என்று சேர்க்கும் அளவிற்கு? ஒரு குட்டி உருவத்தை & பிஞ்சு மனசை எப்படி 3K.M. நடத்தியே அழைத்து வந்தனர்? இந்த 'வெங்காயங்கள்' எல்லாம் எப்படி வேலைக்கு வராங்க? உண்மையில் 'பழுத்த கழிசாடைகள்.'

நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? 'இந்த பொடிசு சம்பந்தப்பட்ட Case எவ்ளோ பெரியதாக இருந்தாலும் அதனை Dismiss செய்கிறேன்' என்பது அவரது தீர்ப்பு. Bravo, நீதிபதி அவர்களே. இது நடந்தது நமது இந்தியா என்று சொல்ல வேண்டியது இல்லை. மாநிலம் - உத்திரப்பிரதேசம்.

* * * * *

எம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவிற்குள் நுழைய 'அனுமதி மறுக்கப்பட்டவர்களில்' ஒருவர் என அவரை Airport-லேயே திருப்பி அனுப்பிவிட்டனர் Malaysia-விற்கு.

திருமதி. பார்வதி வேலுப்பிள்ளை அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது, இந்தியா வருவதற்கு. இது நடந்தது காலையில். அதே இரவு அந்த Visa-வுடன்  இந்தியா வர, தவறுதலாக Visa வழங்கிவிட்டோம் என்று அவரை திருப்பிய அனுப்பிவிட்டனர், அவர் வந்த விமானத்திலேயே. அவர் சிகிச்சைக்காக தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது. 12 மணி நேரத்தில் அரசியல் விளையாடிவிட்டது..!

In this file photo, Mr and Mrs Velupillai are seen with Mr and Mrs Prabhakaran and Mr Charles Antony.


இந்த விளையாட்டில் சம்பந்தபட்டவர்களுக்கு - காலமும், எம் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் உங்களை. நீங்கள் மனம் திருந்தி, மனசாட்சி உறுத்தலால் உழலும் போது உங்களை மன்னிக்க எம் மக்களும், காலமும் இல்லாமல் போயிருக்கும். அப்போது தெரியும் ஒரு இனம் பட்ட வேதனைகளும், வலிகளும்.

* * * * *

பழங்குடி மக்களுக்கு ஆசை, பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. காடும் காடு சார்ந்த இடமும் (வளமும்), மலையும் மலை சார்ந்த இடமும் (வளமும்) என அமைதியாக (நாம் அறியாத ஒண்று)வாழ்ந்தவர்களை Corporate காரர்களிடம் விற்றதால் வந்தது பிரச்னை. ஒரு நாள் அவர்களிடம் 'வாழ்வியல் ஆதாரங்கள்' எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுங்கள் என்றால் எங்கு போவார்கள்? சில லட்சம் மக்கள் முள் வேலிக்குள், புரட்சி செய்ய கூடாது என்பதற்காக.

இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. தனது மண்ணின் சொந்த மக்களை வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு கொடுமை செய்து இருக்காது. Maiost-கள் போராடி வருகிறார்கள் இந்த அரசுக்கு எதிராக. Maiost-கள் இல்லை என்றால் பாதி இந்தியா விலை போயிருக்கும் எப்பொழுதோ. முழு இந்தியாவும் வெகு விரைவில்.

அரசுவின் படை வீரர்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல், போதிய அளவு உன்ன உணவு இல்லாமல், தங்க ஆரோக்கியமான Camp இல்லாமல், இல்லாமல் - இல்லாமல் - இல்லாமல், இறுதியில் Maiost-களுக்கு எதிரான போரில் ஆளே இல்லாமல் போகிறார்கள். Dantewada Attack-ன் போது அரசு படை வீரர்களின் Camp-ன் நிலை இதோ - படுப்பதற்கு, சமைப்பதற்கு, ஓய்வு எடுப்பதற்கு, தங்கள் அனைத்து உடமைகளையும் வைப்பதற்கு, -ற்கு -ற்கு - ற்கு என ஒரே Camp-ஐ  உபயோகப்படுத்தி உள்ளனர். இவர்கள் உயிர் போனாலும் சொற்பமான ஓய்வுதியம். இந்த அரசு என்று இல்லை, எந்த அரசும் ஏன் இந்த அப்பாவி & நெஞ்சுரம் மிகுந்த வீரர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வதில்லை???

'ஐயா, எங்கள் நாட்டின் அரசு வீரர்களே. நீங்கள்தான் வாழும் தெய்வங்கள். உங்கள் உயிரை தந்து எங்களை காப்பதால். நீங்கள் இந்த நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் உங்கள் உயிர் தந்து எங்களை காக்க நிற்கிறீர்களோ, அந்த திசை எல்லாம் நோக்கி உங்களை நான்/நாங்கள் வணங்குகிறேன்/றோம்.'

Maiost-களுடன் அரசும் & அதிகாரிகளும் Negotiate செய்யவேண்டிய நேரம் இது. உயிர் Maiost-கள் பக்கம் போனாலும், அரசு தரப்பில் போனாலும் எங்கோ ஒரு மூலையில் அவரை நம்பி இருக்கும் பல உயிர்கள் மீளாத்துயரில் வாடுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். இது செய்த தப்புகளை திருத்திக்கொள்ளும் நேரம். வாய்ப்பை தவற விட வேண்டாம்.

This file picture shows you the Naxal or Maoist Corridor. This picture was illustrated in 2007. Today, the corridor is much bigger than you think.

Wednesday, April 14, 2010

கிறுக்கல்கள். உணர்வுகள். முட்டாள்தனம்.

என் பழைய கிறுக்கல்கள் உங்களுக்காக. எழுதிய மற்றும் Orkut குழுமத்திற்கு அனுப்பிய  தேதியுடன்.

December 31, 2007 8:24 PM

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது உலக மக்களுக்கு. சில நாட்கள் எழுதாமல் இருந்தேன். எல்லாம் சோம்பல் காரணமாக. இந்த பகுதியில் சில கருத்துகள் பெண்கள்/பெண்ணியல் பற்றியது. எனவே என் தோழிகள் அந்த சிந்தனைகளை நடு நிலையுடன் வாசித்து, ஏதேனும் தவறு/தப்பு இருப்பின் சுட்டி காட்டி எனது அறிவு கண்ணை திறக்க வேண்டுகிறேன்.

1. இன்று (31st Dec') காலை செய்திதாளை பார்த்தால் (Times of India, Bengaluru) திரு பிரபாகரன் அவர்கள் இறந்திருக்கலாம்/கூடும் என செய்தி. இந்த கூடும்/லாம் போன்ற செய்திகளை (திரு. பிரபாகரன் போன்றவர்கள் விசயத்தில்) செய்திதாள்கள் தவிர்ப்பது நல்லது. சில மக்களுக்கு அவர் தேவைப்படுகிறார். என் மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை மனசு கஷ்டப்பட வைக்கவேண்டாம்.

2. இலங்கை, ஃபீஜி தீவு, மலேசியா, நம்ம கர்நாடக மண் எங்கும் தமிழன் ஒரு Target-ஆக ஏன் ஆக்கப்படுகிறான். எல்லா மண்ணிலும் பல கலாசாரம் & பண்பாடு & Customs & பலதரப்பட்ட மக்கள் என வாழ்க்கை முறை இருக்கும். ஆனால், ஏன் தமிழன் மட்டும்..? உலக மக்களுக்கு ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள்: தமிழனது சிறப்பு & பண்பாடு & திறமை & தனித்தன்மை, etc. நீங்கள் மதிக்கவேண்டாம் அல்லது மிதிக்கவேண்டாம். தமிழ் மக்களை உங்களைப் போல் ஒரு மனித இனம் என்று அவர்களது உணர்வுகளை மதித்தால் போதுமானது.



3. Dupatta or Dress Code ஒரு பிரச்சனையை சிண்டு முடித்து உள்ளது. ஆண்கள், பெண்களை நல்ல உடை உடுத்த சொன்னாலும் & சொல்லாமல் விட்டாலும் பிரச்சினை. உடை உங்கள் சொந்த பிரச்சினை. Moreover, it is one of the primitive rights of Men & Women. At times, Dress Code is a sign of Gen X gap. ஆனால், சில உடைகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அது பெண்களுக்கும் தெரியும். Likewise, இடம் & பொருள் தகுந்தாற் போல் Dress Code மாறும். To crown in all, is to improve the moral of.

சில பெண் புரட்சியாளர்களுக்கு ஆண்களை எதிர்ப்பது ஒரு புரட்சி. ஒரு கேள்வி: இந்த லோகத்தில் எந்த பெண்ணும் இது வரை எந்த ஆண்மகனையும் ஏமாற்றியது இல்லையா..? அல்லது, ஊருக்கு உழைத்த உத்தம தலைவர்கள் பெண்களை எதிர்த்தா போராடி புகழ் பெற்றனர்..?

ஒரு கொசுறு செய்தி: இது வரை எந்த கடவுளும் பெண்களின் இயற்கை நிகழ்வின் போது தனது ஆலயத்தின் உள் வர கூடாது என சொன்னது இல்லை. சில மனிதர்கள் சொன்ன இந்த (கிறுக்கு) செய்தியால் அல்லது உருவாக்கிய மூட நம்பிக்கையால், நீங்கள் கடவுளை புறக்கணித்தால் அது முட்டாள்தனம். பெரிய புரட்சி அல்ல. அதற்கு பதில், பெண்களை ஆலயத்தின் உள் இயற்கை நிகழ்வின் போதும் அனுமதிக்க போராடி இருந்தால் அது புரட்சி. இந்த கருத்து யாருக்கு என்று சில மக்களுக்கு தெரியும். மேலும் இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல. நான் அவரை கேட்டுக் கொள்வது: ஆண்டவன் என்றும் மனிதனிடம், எனக்கு இது & அது செய் என்றும் - இவற்றை செய்தால் நான் உனக்கு நீ வேண்டும் சிலவற்றை தருகிறேன் என்றும் சொன்னது இல்லை. எனவே சில கிறுக்கு மனிதர்களை & கிறுக்கு செய்யல்களை எதிர்த்து போராடவும்.

இந்த தனிப்பட்ட விசயததிற்கு திரு. பாமரன், திரு. பாலு மகேந்திரா போன்றோர் சண்டை போடவில்லை என்று அவருக்கு வருத்தம். ஒரு சினிமா வசனம் (நம்ம மக்களுக்கு சினிமா மூலம் கருத்து பிடிக்கும்): ஆச்சி மனோராமா சொன்ன வசனம் (எந்த சினிமா என்று எனக்கு தெரியாது): "என் பாவாடை அவிழ்ந்து விழுந்தது தப்பு இல்லை. ஆனால் அதை அவன் பார்த்ததுதான் தப்பு." எனவே, உன்னாலே உன்னாலே படமாவது பாருங்க. சும்மா எல்லாத்துக்கும் ஆண்களை வசை பாடாதீர்கள்.

மேலும் நாம் எல்லோரும் (அட, இந்த பரட்டையும் சேர்த்து) உடை நமக்கே நமக்காகவா உடுததுகிறோம்..! இல்லை. மற்றவர்கள் admire பண்ண வேண்டும் என்ற ஒரு எண்ணமும் உண்டு அல்லவா..! பிறகு ஏன் இந்த Hypocrisy.!? Please, don't do any over react.

4. 2007 உங்களுக்கு என்ன பண்ணியது என நான் சொல்ல முடியாது. சரி நாம் 2007-ல மத்தவங்களுக்கு என்ன செய்தோம்..? இந்த சிந்தனையுடன் 2008-ஐ துவக்குவோம். இந்த 2008-ஐ மட்டுமல்ல. வாழும்வரை. அட நான் தப்புகளும் செய்து உள்ளேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். எனவே வாருங்கள் சிறப்பான எதிர்காலம் செய்வோம்.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன், இந்த வருடத்தின் கடைசி கிறுக்கல்களுடன்.

* * * * *
February 5, 2008 8:39 PM

1. இன்னும் 20/25 வருடங்களுக்குப் பிறகு அரசியல் செய்ய வரும் ராஜாக்கள், நான் திரு. M.G.R. அவர்களின் வாரிசு என்று சொன்னால் ஒரு Vote-கூட விழாது, அந்த ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கு. திரு. M.G.R. அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அதாவது, நல்ல பண்புகள் கொண்டவர். ஆனால், Administration Elements-ல் அவர் சோபிக்கவில்லை. பிறகு எதற்கு இந்த வாரிசு போட்டி? (சரத்குமார், விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் ஜெயலலிதா அவர்கள்).   நான், சிலர் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என்று எதிர் பார்த்தால், வாரிசு சண்டை நடந்து கொண்டுள்ளது. இந்த சண்டை முடிந்து, மக்களுக்கு நல்லது செய்ய வரும்போது, குதிரை கொம்பு முளைத்து ஒரு புதிய உயிரினம் உலகிற்கு வந்து இருக்கும். போங்கப்பா, நீங்களும் உங்க வாரிசு அரசியலும்..!





2. Divide n Rule..! 'வெள்ளையனே வெளியேறு' என்று முழங்கி விடுதலை வாங்கினோம். இன்னும் சில வாங்கி உள்ளோம்: ஆங்கில மோகம் + நமது Traditional Values-ஐ தொலைத்தது + இத்யாதி + இத்யாதி + Last but not least: Divide n Rule. சில அரசியல்வாதிகள் இந்த Principle-ஐ இன்னும் பின்பற்றி வருகின்றனர். பார்க்க: North Indian crisis in Mumbai. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளை குடியுரிமை நீக்கி தண்டிக்க வேண்டும். இந்த மாதிரி விசமம் செய்யும் மக்கள் விசயத்தில், We need un-compromisin' Integrity.




3. புகை: Swiss, Norway, Sweden மற்றும் சில நாடுகளில் புகையின் தீமை சொல்லும் படங்களை Pack-மீது போட சொல்லி அந்த நாட்டு அரசுகள் சட்டம் போட, இன்று புகைக்கும் பழக்கம் ஓர் அளவிற்கு குறைந்து உள்ளது. அதை நமது மத்திய அரசு செய்யாது. காரணம்: வருமானம் போய்விடும் அல்லவா.




இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 1:37 AM

திருவண்ணாமலையில்  ஒரு 3 நாட்கள் இருந்து அண்ணாமலை அவர்களை தரிசித்த ஒரு நாள், திரு. சுஜாதா அவர்கள் மறைந்த செய்தி. நெஞ்சம் கனத்தது உண்மை. எனக்கு சில விசயங்களில் உலகம் புரிய வைத்த ஆசான்.

~ ஒரு 2 வருட இடைவெளிக்கு பிறகு, தமிழக பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. இங்கிருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு பேருந்தில் சென்றேன். வரும் போதும். திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் சொல்ல வேண்டாம். இந்த தருணங்களில், நான் பார்த்த ஒரு விசயம்: ஏன் தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு நமது முதல்வர் சொன்ன ஒரு விசயம் உள்ளது..?

நமது முதல்வரின் கருத்துக்கு, திருக்குறள் அழிக்கப்பட வேண்டுமா..? நமது முதல்வர் அவர்கள் விளம்பரம், கட்-அவுட் கலாசாரம், இத்யாதி: விசயங்களுக்கு முற்று புள்ளி வைக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்கும் வேளையில், இந்த விசயம் சிறிது வருத்தம் தருகிறது.




~ ~ ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு: Etiquette. இது நமது அரசு பேருந்துகளில் பணி புரியும் சில நடுத்துனர் & ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. காரணம்: திருவண்ணாமலைக்கு  இங்கிருந்து போன பேருந்தில், திரைப்படம் (அய்யோ) ஒலி-ஒளி'பட்டது. நேரம் கடந்தது. சிலர் நிறுத்துமாறு விண்ணப்பம். நடக்கவில்லை. நான் முன் இருக்கையில் இருந்த நடத்துனரிடம், ஒலி அளவை குறைக்க விண்ணப்பம். ஒலி அளவு ஏற்றப்பட்டது. என்ன ஒரு முரண். பிறகு எனக்கு ஒரு ஐயம்: இந்த திரைப்படம் ஓட்டுனர் உறங்க கூடாது என மிகுந்த ஒலியுடன் ஒளிபரப்ப படுகிறதோ என்று.




~ ~ ~ தமிழ்க அரசு மூன்றாம் பால் இனத்தை மதித்து அவர்களுக்கு 'T' என்று முத்திரை உள்ள குடும்ப அட்டை (Ration-Card) தந்தது மகிழ்ச்சி. அவர்களை மதிக்க ஆரம்பித்தால் அவர்கள் நல்ல வாழ்வுக்கு திரும்புவர். நாம் ஆண்/பெண் என்ற போதும் தப்புகள் இல்லாமலா வாழ்கிறோம்..? ஒரு ஐயம்: இந்த 'T' அவர்கள் வாழ்நாள் முழுமைக்குமா அல்லது அந்த பால் வேறுபாடு முழுதாக அங்கீகரீக்கப்பட்டு சில நாட்களில் ஆண் அல்லது பெண் என்று மதிககப்படுவார்களா..?

இந்த பொறுக்கி விடைபெறுகிறேன்.