You are lookin' for..?

Wednesday, March 24, 2010

தமிழக முதல்வர் அவர்களே

November 26, 2009 1:40 PM  - sent by Am Stardivarius? (On which date I wrote it originally for my Orkut Groups).

எம் தலைவன் சகோதர யுத்தம் நடத்தினரா..? சிங்கள இன வெறியர் நமக்கு சகோதரனா..? இன வெறியர் நடத்திய கொடூர ஆட்டம் 'சகோதர' யுத்தம் ஆகுமா..? திருத்தி கொள்ளுங்கள்: 'இன படுகொலை' என்று, இனியாவது.

தமிழ் பெண்களின் மார்புகளை தொட்டு 'வெடிகுண்டு' இருக்கா என்று சோதனை செய்தது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? தந்தை முன் மகள்களை நிர்வாணமாக்கி கொடும் செய்யல் புரிந்தது நீங்கள் சொன்ன சகோதர யுத்தமா..? இன படுகொலை முடிந்த பிறகும் 'முள் வேலியில்' எஞ்சிய உயிர்கள் உணவு, நீர், மருந்து பொருட்கள் இல்லாமல் சிறுக, சிறுக சாவது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? தமிழ் மாணவர்கள் இன்றும் 85 அல்லது 90 விழுக்காடு மேல் வாங்கினால் மட்டுமே தேர்வு பெறுவார்கள் என்பது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..?

கணவன் கண் முன்பும், மகனின் கண் முன்பும், சகோதரனின் கண் முன்பும் தமிழ் பெண்களை 'வன் புணர்ச்சி' செய்தது நீங்கள் கூறிய சகோதர யுத்தமா..? ராணுவத்தில் சிங்கள இனம் மட்டுமே வேலைக்கு அமர்த்த படுவது..? பல நடுநாயகமான பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள் கொல்லப்பட்டது..? செஞ்சிலுவை சங்கம் நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது..?

குழந்தைகளும் கர்பிணி பெண்களும் என்ன பாவம் செய்தார்கள்..? பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் போராளிகள் அல்லவே. அவர்களை ஏன் கொன்றான் அந்த அசுரன்..? இந்த போராட்டம் 'அரசியல்' அப்பாற்பட்டது. ஆம், இயக்கம் சில தவறும் தப்பும் செய்து இருக்கலாம். அதற்காக ஒரு இனம் வேரறக்கப்பட வேண்டுமா..?

உங்கள் 'அரசியல்' இனப்படு கொலையில் வேண்டாமே..! நீங்கள் வாழும் வரை இனப்படுகொலையை ஆதரியுங்கள். ஒரு தலைவன் வேண்டும். அவனிடம் உரம் வேண்டும். இந்த இனம் வளமாக, நிம்மதியாக அந்த மண்ணில் வாழும் போது, அவன் எங்கள் மனதில் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

ஒரு வேண்டுகோள் உண்டு எங்களிடம்: சகோதர யுத்தம் என்றால் என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும். எனவே, இது 'இனப் படுகொலை' என்று எங்களுடன் சேர்ந்து, ஒரு நல்ல விடியலை நோக்கி போவோமாக. ஒன்றுபட்டு.

தீவிரவாதத்துக்கு தீவிரவாதமே பதில். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கிறான். எனவே, அவனது வினை அவனை திருப்பி தாக்கியது.

பல கேள்விகள். விடைகள் எல்லாம் தமிழனையே குற்றம் சாடி. என்ன பாவம் செய்தான்..? அவனக்கு நல்வாழ்வு என்பது கானல் நீர்தானா..?



விடை பெறுகிறேன். சந்திப்போம்.

No comments:

Post a Comment