Pamela Anderson அல்லது Pamee. ஒரு நல்ல விசயத்திற்கு நிறைய மக்கள் கூடும் இடத்தில் நிர்வாணமாக நின்று 'Campaign' பண்ண வேண்டும் அல்லது 'போராட' வேண்டும் என்றால் Pamee எப்பொழுதும் தயார். நிர்வாணம் பற்றி அவரிடம் கேட்டால் நிறைய புகழ்ந்து தள்ளுவார். அவரது நிர்வாணம் நமது பிரச்சினை அல்ல. நிர்வாணம் அவரது சுதந்திரம். அவர் சொன்ன ஒரு விஷயம்தான் நெருடல். 'இறக்கும் நொடியிலும் நிர்வாணமாக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நான் அதற்கு தயங்க மாட்டேன். சாகும் வரை இந்த சமுதாய பணி தொடரும்' என அறிக்கை விட்டார்.
அவர் 70\80\90\100 வயதில் நிர்வாணமாக இறப்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது நிர்வாணமாக போராடும் போது. அவரது நிர்வாணம் நன்றாக இல்லை என்று அதற்கு எதிராக யாராவது நிர்வாணமாக போராட வந்தால்.!! ரொம்ப Complicated-தான். வேற வழி இல்லை.
இவர் Silicone-(Breast)-Implant செய்து 'பெரிதாக' மாற்றிக் கொண்டவர். இது நல்லது இல்லை என்று பெண்கள் புரிந்து கொண்டால் நல்லது. Size doesn't matter. நம்புங்கள்.
* * * * *
George Clooney - a lovely person and actor. இவருக்கு Lake Como villa ஒண்று இருக்கிறது. இது Italy-ல் உள்ளது. இந்த villa-வின் அடியில் இருந்து 500lb எடை உள்ள Bomb ஒண்று கண்டெடுக்கப்பட்டது. இதுவரை வெடிக்காமல் இருந்து உள்ளது. இதுவரையா..? அப்படி என்றால் எப்பொழுது முதல்.!? ஆம், இது இரண்டாம் உலக போரை சேர்ந்தது. நிபுணர்கள் இந்த Bomb-ஐ செயலிழக்க செய்ததோடு நில்லாமல், மேலும் சில Raw Explosives கண்டெடுத்தனர் அந்த villa-வின் அடியிலிருந்து.
கவனமா இருங்க, Mr Clooney.
* * * * *
இது நமது Ranchi-ல் நடந்தது. ஒரு கிராமத்தின் அருகில் மாந்தோப்பு உள்ளது. அங்கு கிராமத்து குழந்தைகள் சென்று கீழே கிடக்கும் மாங்காய்களை எடுத்து வருவது வழக்கம். வழக்கம்போல் குழந்தைகள் மாங்காய்களை எடுக்கும் போது ஒரு குறிப்பட்ட மாங்காய் மீது ஒரு சிறுமிக்கும், ஒரு சிறுவனுக்கும் ஆசை. இருவருமே ஐந்து வயது குழந்தைகள். அந்த மாங்காயை நோக்கி ஓடிய பந்தயத்தில் சிறுமி சிறுவனிடம் தோற்றுவிடுகிறார்.
சிறுவனிடம் அந்த கனியை சிறுமி தனக்கு கேட்க, சிறுவன் மறுக்க, கோவம் மற்றும் தோற்ற வலி எல்லாம் சேர்ந்து சிறுமியை Furious ஆக்குகிறது. ஒரு குச்சியை எடுத்து அந்து சிறுவனை அடிக்கிறார். வயிற்று வலியால் சிறுவன் துடிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகும் துடிக்கிறார். நேரம் ஆக ஆக, சிறுவனின் பெற்றோர் பதற்றம் கொள்கின்றனர். மருத்துவமனை செல்கின்றனர். சிகிச்சை பயனளிக்கவில்லை. இறந்துவிடுகிறார். காரணம்: சிறுமி அடித்ததில் சிறுவனின் குடலில் இரத்த கசிவு ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது அந்த சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தயவுசெய்து, கோவம் வந்தால் முடிந்த அளவு உங்களை Control பண்ணவும்.
* * * * *
தமிழனது வாழ்வு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய 'தந்தி'யால் இலங்கை மண்ணில் 'காப்பாற்றப்பட்டது' உங்களுக்கு தெரியுமா..! இந்த அகிம்சை வழியை 2010-ன் மிக சிறந்த 'அறப்போராட்டம்' என்று உலக தலைவர்கள் 'வியந்து' பாராட்டி உள்ளனர். சத்தம் இன்றி, வெடிகுண்டு இன்றி, போர் வீரர்கள் இன்றி, அரசியல் தூதுவர்கள் இன்றி முடிவுக்கு வந்த ஒரே போர் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை.' இதற்கெல்லாம் காரணம் அந்த 'தந்தி-அறப்-போராட்டம்.' அந்த தந்தி-அறப்-போராட்டம் மீண்டும் வரலாம்.
இந்த முறை நம் தலைவனை உலகிற்கு தந்த பார்வதி அம்மாள் அவர்களை காப்பாற்ற. என்ன (சோனியா-மன்மோகன்-காங்கிரஸ்) மத்திய, (கருணாநிதி) மாநில அரசோ..! வாழ்க தமிழன் - வளர்க அவனது ஏமாளித்தனம். இதுதான் தமிழன் VS சக தமிழன்.
* * * * *
3-Idiots - மிக நல்ல திரைப்படம். 'இந்த Hindi படம் தமிழில் Re-make செய்யப்பட உள்ளது. இதில் Mr Vijay நடிக்க வாய்ப்பு உள்ளதாக' நண்பர்கள் சொன்னார்கள். இவர் இதுவரை நடித்த 50 படங்களையும் 'உலக திரைபடங்களாக' அறிவிக்க கோரி என்ன செய்ய வேண்டுமோ அதனை தமிழ் மக்கள் செய்ய கடமைபட்டுள்ளோம். Please, எம் மக்களை இதற்கு மேல் கொடுமை செய்ய வேண்டாம். அவர்கள் அனுபவித்த கொடுமைகள் போதும்.
இந்த Hero-க்கள் என்ற பெயரில் இருக்கும் Comedy Piece மற்றும் Villain-களை விட உலக அளவில் பெரிய வியாபாரம் உள்ள Hindi and Hollywood நடிகர்கள் தங்கள் பெயரின் முன்னால் 'அடை/வடை மொழி' போடுவது இல்லை. தங்களின் புகழை??? தாங்களே Punch Dialogue என்ற பெயரில் மொக்கை போடுவதில்லை. Haiti தீவு மக்களுக்கு Mr John Travolta தனது சொந்த விமானத்தில் மருத்துவ குழு மற்றும் நிவாரண பொருட்களுடன் சென்று உதவி செய்தார். செலவு முழுவதும் Mr Travolta-வுடையது. இங்கு உள்ள உலகை-காக்க-வந்த-நடிகர்களுக்கு 'தளபதி' என்ற சொல்லின் அர்த்தம் தெரியுமா.??
இந்திய நடிகர்களையே உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். Mr Aamir Khan மிக சிறந்த நடிகன். தனது பெயரின் முன்னால் 'Super Actor அல்லது Padma Shree அல்லது உலக நாயகன் அல்லது அது-இது-எது' என்று போட்டுக்கொள்வதில்லை. 3-Idiots படத்தில் அவரது Body Language பாருங்கள். Ghajini (Hindi) படத்தில் அவரது உடல் மொழியை கவனியுங்கள். ஒரு சின்ன மொக்கை இருக்காது. 3-Idiots படத்திற்கு என்ன உடல் மொழி வேண்டுமோ, அது இருக்கும். Ghajini படத்திற்கு என்ன உடல் மொழி வேண்டுமோ, அதை மீறி நடிக்காமல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஒரு பாடல் முழுவதும் தன்னை பற்றி பாடுவது - மற்ற நடிகர்களும் Hero நடிகனை புகழ்வது - உலகிலுள்ள பெண்கள் எல்லாம் இந்த தமிழ் நடிகனை காதல் செய்ய ஏங்குவது - 'இயற்கையே' இவுனுங்க முன்னால் மண்டியிடுவது - பல் விளக்குவதற்கும் Punch Dialogue பேசுவது - நடிகையை பூமிக்கு வந்த 'அரிய ஜந்து' என நினைத்து தலை முதல் உள்ளங்கால் வரை மோப்பம் பிடிப்பது - பக்கம் பக்கமா இவர்களே இவர்களை பற்றி பேசும் போது மற்ற நடிகர்கள் பொறுமையாக கேட்பது - நாலு பேர் முன்னால் நிக்கவே முடியாதவர்கள், ஒரு ஊரையே அடித்து வெளுப்பது - உண்மையில் 'ஜால்ரா' போடுபவர்கள், திரையில் யாரையும் எதிர்ப்பது - இன்னும் நிறைய உள்ளது இந்த 'ஐயோ..! நடிகர்களை' பற்றி சொல்ல.
கடவுள் இல்லை என்பவரது பாடல் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா.' நான் ரசிக்கும் நடிகர்தான். இருந்தாலும் இதுபோல் நிறைய உள்ளது இவரிடம் சொல்லவேண்டிய குறைகள். Mr Rajini இல்லாமலா. ஒரு விழா. வழக்கம் போல் தமிழக முதல்வர் மற்றும் பலர். இவர் பேசியபோது கூறுகிறார் '.... நான்தான் ரொம்ப அடக்கமானவன் என்று நினைத்திருந்தேன். இவர் என்னை விட அடக்கமானவராக இருக்கிறார்' என்று ஒருவரை பற்றி. இன்னொருவரை புகழும் போதும் தன்னை நுழைத்துக்கொள்கிறார்.
Mr Vijay நம் தமிழின் சிறந்த இயக்குனர்கள் விரும்பும் நடிகன் இல்லை. 3-Idiots படத்தில் இவர் நடித்தால் - தயவுசெய்து, மொக்கை Dialogue இல்லாமல், தன்னை பற்றி பாடி மற்றும் பேசி மக்களை கொல்லாமல், மற்ற நடிகர்களும் இவரை புகழாமல், அது-இது-எதுவும் இல்லாமல் 'நடிக்க' மட்டும் செய்வாரா.?? இவருக்க 'நடிக்க' தெரியுமா.?? கவலை வேண்டாம் மக்களே. இவருக்கு நடிக்க தெரியும். தனது படம் Release ஆகும் போதெல்லாம் சரியாக 'அரசியலுக்கு வருவேன்' என்று அறிக்கை விடுகிறாரே. அது போதாதா.!! ஏற்கனவே ஒரு 'குழப்ப குத்த' நம் தமிழக மக்கள் கண்டுகளித்தோம். மீண்டும் 'இன்னொரு வடையா.!!' தமிழகம் தாங்காது.
மக்கள் இப்படி சொல்லலாம், அவர் 3-Idiots படத்தில் நடித்தால் - 'Hindi-ல இந்த படம் எத்தனை அழகு. Hmmm.... எல்லாம் நேரக் கொடுமை.' எதற்கு/வேண்டாமே இந்த விபரீதம். To our surprise, இவர் நன்றாக 3-Idiots படத்தில் நடித்துவிட்டால் - இவர் படம் Release ஆகும் போதெல்லாம் கிண்டல் செய்து அனுப்பப்படும் பல்லாயிரம் SMS-களும் E-mail-களையும் நம் மக்கள் நிறுத்த முயற்சி செய்வார்கள்.
No comments:
Post a Comment