எங்கள் ஊரில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையில் பேருந்து ஓட்டுனர்க்கு ஆள் சேர்த்தார்கள். மிக எளிய பணி. பணியாளர்கள் வேலை விட்டு போகும் போதும், அடுத்த shift-க்கு பணியாளர்கள் வரும் போதும் பேருந்து ஓட்டினால் போதும், எட்டு மணி நேரத்தில். பள்ளி வாகனம் ஓட்ட என்றால், இதை போல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் போதும், பள்ளி விட்டு போகும் போதும் பேருந்து இயக்கினால் போதும்.
இந்த பணிக்கு எங்கள் நண்பன் ஒருவன் போக முடிவு செய்தார். இந்த நண்பர் சரக்கு லாரி ஓட்டுகிறார். ஆனால் எங்கள் அரியலூரில் மட்டும். அது ஏன் என்று இறுதியில் உங்களுக்கு புரியும். சிறிது காலம் மினி பேருந்து ஓட்டிய அனுபவமும் உண்டு. உண்மையில் மிக திறமையான ஓட்டுனர்.
இவர் Test Drive செய்து காட்ட வேண்டிய நாள் வந்தது. எங்கள் ஊரை சேர்ந்த மக்கள் (பெரும்பாலும்) எல்லோரும் அரசு சிமெண்ட் ஆலையில் வேலை பார்ப்பதால், அங்கு உள்ள அதிகாரிகள் எல்லோரும் எங்கள் மக்களுக்கு நல்ல பழக்கம். எங்கள் நண்பர் Supervisor வருவதற்கு முன்னால் போய், பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். Supervisor வந்து Test Drive செய்து காட்ட சொன்னார்கள். மிக அருமையாக செய்து விட்டான், எங்கள் நண்பன்.
ஓட்டுனர் பேருந்தில் ஏறும் வழி அருகே Supervisor சென்று, எங்கள் நண்பனிடம் 'நீ வேலைக்கு வந்து சேர்ந்து கொள்ளலாம்' என்று சொல்லி கொண்டிருக்கும் போதுதான் கவனித்தார்கள் எங்கள் நண்பனுக்கு 'மாறு கண்' என்று. நம்ம நடிகர் திரு. குமரிமுத்து அவர்களுக்கு உள்ளது போல. உடனே 'உனக்கு வேலை இல்லை' என்று Supervisor மறுத்து உள்ளார்கள். எங்கள் நண்பனுக்கு கவலை மற்றும் கோவம். ஒரு 15 நிமிடத்திருக்கு கடும் விவாதம் செய்து உள்ளான் Supervisor உடன். அவரது இதயம் உருகவில்லை.
கோவமாக எங்கள் நண்பன் பேருந்தில் இருந்து இறங்கி வந்து 'ஏன் Sir எனக்கு வேலை இல்லை. நான்தான் மிக நன்றாக Drive செய்தேனே' என்று கூறிய படி வர, Supervisor கூறினார் 'இந்த அழகுல இது வேறயா. நான் வேலை குடுக்கலாம் என்று இருந்தேன். ஆனா இப்ப சுத்தமா தர முடியாது' என்று துரத்திவிட்டார்கள் . காரணம் எங்கள் நண்பன் கொஞ்சம் நடக்க கஷ்டபடுபவன். ஊர் மக்களும், நாங்களும் எங்கள் நண்பனை சிறிது நாட்களுக்கு சீண்டியபடியே இருந்தோம்.
No comments:
Post a Comment