You are lookin' for..?

Friday, June 4, 2010

இனிதான் உண்மையான போர்

இரண்டு வாரங்களுக்கு முன் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் எனது கிராமத்தில் இருந்தேன். சனி இரவு எனது தம்பியுடன் ஊருக்குள் நுழையும் போதே, நண்பர்கள் 'பேருந்து நிலையத்தில்' இருந்து சத்தம் தந்தனர். எனக்கு புரிந்தது 'நண்பர்கள் கொண்டாட்டத்தில்' இருப்பது.

வீட்டில் தாத்தா, அம்மாச்சி, சித்தி, தம்பியுடன் அரட்டை அடித்துவிட்டு, ஒரு குளியல் முடித்து, இரவு உணவு உண்ணும் போது நண்பன் ராமு (குடிகார குட்டி சாத்தான்) எனக்கு அலைபேசி அழைப்பு - 'செந்தில் வீட்டிற்கு வா' என. உணவு முடிந்ததும் நண்பன் செந்தில் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் நுழையும் போதே 'போர்கள' உணர்வு வந்தது.

நண்பனது வீடு. வீட்டில் Bed Room, Kitchen, and Livin' Room என இருந்தாலும் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்காது. ஒரே மிக பெரிய அறையில் இவையெல்லாம் அழகாக கட்டப்பட்டிருக்கும். செந்தில் கட்டிலில் படுத்திருக்கும் நிலையிலேயே தெரிந்தது 'இன்றைய கொண்டாட்டத்தில் இவரும் ஒருவர்' என்று. மாமா எங்கே என்று தேடினேன். அவர் Kitchen-ல் 'ஆடியபடி' ஏதோ செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். 'போர்களம்' புரிய ஆரம்பித்தது. அத்தை இருவரையும் 'அர்ச்சனை' செய்தபடி. நண்பன் ராமு இவை எதையும் அறியாதவன் போல் TV பார்ப்பதாக பாவனை.

மாமா ஏதோ செய்ய முயற்சிப்பதாக சொன்னேனே அது 'தான் சாப்பிட உணவை தட்டில் வைக்க போராடியதே.' அவர் 'ஆடும்' நிலையில் இருந்ததால் அவரால் உணவை தட்டில் வைக்க முடியவில்லை. அத்தை தனது அர்ச்சனையை நிறுத்தவில்லை. மாமா கோவமாக 'உணவு வேண்டாம்' என போக, அதற்கும் அர்ச்சனை. இந்த முறை அவரது 'வாரிசும்' வசவுகளை வீசியது. TV பார்த்தபடி அத்தையும், செந்திலும் மாமாவை வயும் போது, நானும் ராமுவும் மாமா என்ன பண்ணுகிறார் என அவரை பார்த்தபடி. அத்தை 'உனக்கு பிடிச்ச முட்டை குழம்பு வச்சிருக்கேன். ஒழுங்கா சப்பிடு மாமா' என்றார்கள்.




இவ்வளவு நேரம் நின்றபடி முயற்சி செய்தவர், இப்போது கீழே உட்கார்ந்து சாப்பிட தயார் ஆன நிலையில், அவரது தட்டு, சாதம் மற்றும் குழம்பு உள்ள Utensils எல்லாம் கீழே வந்தது. ஒரு வழியாக சாதம் தட்டிற்கு வந்துவிட்டது. குழம்பு போட முயற்சி செய்துகொண்டே இருந்தவர், ஒரு கட்டத்தில் 'போதையின்' காரணமாக தனது தலையை குழம்பு இருக்கும் பாத்திரத்தில் விட்டுவிட்டார். நான் வந்த சிரிப்பை அடக்கி கொண்டேன். நண்பன் ராமுவை பார்த்தேன், அவன் சத்தம் வராமல் சிரித்தபடி. (எப்படித்தான் சத்தம் வராமல் சிரிக்கிறானோ.!) இன்னமும் அத்தையும், செந்திலும் TV பார்த்தபடி.

ராமு கண்களால் 'வா போகலாம்' என்றான். சிரிப்பை அடக்க முடியவில்லை. வெளியே வந்ததும் 'இனிமேதான் உண்மையான போர் நடக்க போகுது. அதனால நாம அங்க இருக்கிறது சரியில்லை' என்றான். எனது உண்மையான கவலை என்னவென்றால் 'அத்தையும் செந்திலும் இன்னும் சாப்பிடவில்லை எனில், மாமாவின் நிலை ரொம்ப மோசமாகிவிடும்' என நண்பன் ராமுவிடம் கூறினேன்.


(Drink செய்தால் இப்படித்தான் நடக்கும்)

* * * * *

Ms Kushboo அவர்களின் 'களப் பணி' ஆரம்பித்துவிட்டது.

= 'தமிழ் திரைப்படங்களில் தமிழ் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். வேறு மாநில பெண்கள் இங்கு நடித்தால், வாழ்வு தரும் தமிழ் மண்ணிற்கு நன்றியாக, தமிழ் மொழியை மிக விரைவில் கற்று கொள்ள வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

= Ms Kushboo அவர்கள் தமிழ் பெண் என்பதும் அவர் தமிழக மண்ணில் பிறந்து வளர்ந்தவர் என்பதும் இவர் பேசும் 'தமிள்' மிக நல்ல தமிழ் என்பதும் நம் தமிழக மக்கள் அறியாத சில உண்மைகள்.

Ms Smita Patil - இவரை போன்ற ஒரு 'அறிவான' நடிகையை நான் நமது 'இந்திய' சினிமாவில் கண்டதில்லை. அறிவும், நல்லது எது என்று 'Analyze' செய்வதும் இவரது ஆளுமை. இப்ப உள்ள நடிகைகள் எல்லாம் 'நடிகைகள்.' அவ்வளவே..!




* * * * *

No comments:

Post a Comment