எங்கள் ஊரில் ஒரு 'சுப்ரமணியபுரம் காசி' உண்டு. எங்கள் அன்பு நண்பன். அவரது பெயர் ரமேஷ். மிக வெள்ளந்தியான ஒருவன். வம்பு தும்பு அதிகமாக உண்டு. ஒரு நாள் நன்றாக மது அருந்தி இருந்தார். நிக்க முடியாத நிலை. எங்கள் ஊரின் 'பேருந்து நிலையத்தில்' (எங்க ஊருக்கு அதான் நிலையம்), வயதான குழந்தைகளும் நாங்களும் கூடி சந்தோசமாக நேரம் கழிக்கும் இடங்களில் இதுவும் ஒண்று, வழக்கம் போல் அரட்டை. வீட்டில் இருந்த பணத்தை தனது மனைவிக்கும், அம்மாவுக்கும் தெரியாமல் எடுத்து சென்றுவிட்டு, இப்ப நிக்க முடியாமல்.
நாங்கள் பேச்சில் ரொம்ப தீவிரமா இருந்ததால், நண்பரது அம்மாவை கவனிக்கவில்லை. பிறகு கவனித்து விட்டோம், எங்கள் நண்பரிடமும் கூறிவிட்டோம். ஒரு நான்கு அடி தள்ளி நின்று நண்பரை முறைத்த படி, நண்பரது அம்மா. ரமேஷ் கூறினார் 'என் அழகில் அவள் மயங்கி நிற்கின்றாள்.' அவ்ளோதான். அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க.
பிறகு தனது தோழிக்கு அலைபேசி அழைப்பு விடுத்தார். அவங்களும் answered the phone. நண்பர் நிறைய வர்ணித்தார். அதில் நாங்கள் ரசித்த, கிட்ட தட்ட மயக்க நிலைக்கு எங்களை இட்டு சென்ற வர்ணிப்பு, இதோ: 'உன் குரல் மீனின் குரலை போல் அப்படியே இழையோடி வந்து என்னை தாலாட்டுகிறது.' பல கவிஞர்களை எங்கள் நண்பன் அன்று தற்கொலைக்கு தூண்டிவிட்டான். இந்த அளவிற்கு அழகான கற்பனையை, உவமையை இதற்கு முன் நாங்கள் கண்டது இல்லை. படித்து இல்லை.
இவ்வளவு நேரமும் அவரது ஒரு வயது குழந்தை எங்களுடன் விளையாடியபடி. எங்களின் செல்ல குழந்தை. பெயர் - ராஜேஷ். இப்பொழுது தனது மனைவிக்கு அலைபேசி அழைப்பு, தங்களது குழந்தையை வீட்டிற்கு தூக்கி கொண்டு போக. நாங்கள் வேண்டாம் என்றோம். கேட்கவில்லை. போதையில் 'ழ் வா, ழழச வீஜக்கு பாப்லிக் போ' என்ற ரீதியில் சில முறை கூறினார். அவங்க 'ஒன்னும் புரியலைங்க' என்று மறுமுனையில் பதில். பொறுமை இழந்த கட்டத்தில் (பொறுமை இழக்க வேண்டியது நண்பரது மனைவி) நண்பன் கூறினான், '* ! # $ @ % ~ $ & + % =.' நண்பரது மனைவியோ 'ம்ம்ம், இப்பதாங்க புரியுது' என்றார்கள். 'அதான், உங்களுக்கு எல்லாம் எப்படி பேசணுமோ அப்படி பேசுனாதானடி புரியும்' என்றார் ரமேஷ். இந்த உரையாடலையும், அவர் கூறிய கொச்சை வார்த்தைகளையும் எங்கள் நண்பர்கள் அவ்வப்போது ஞாபகபடுத்தி சிரிப்பது உண்டு.
இறுதியாக தனது தோழியிடமும், மனைவியிடமும் பேசியதை மொத்தமாக வர்ணித்தார்: 'பெண்கள் இனிமை தருவார்கள். இனிமையில் தனிமை. பூ போல் பேசுவார்கள்.' கவனிக்க: அவர் கூறியது - இனிமையில் தனிமை. ம்ம்ம், அந்த நாளும் மீண்டும் வாராதோ..?
No comments:
Post a Comment