You are lookin' for..?

Tuesday, March 9, 2010

தும்மிய வாசனை

எங்கள் ஊரில் ஒரு All-in-All ஆறுமுகம். இவர் உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் ஆலோசனை சொல்லுவாங்க. என்ன உதவி என்றாலும் செய்வாங்க, முடியவில்லை என்றால் அதற்கான வழிமுறைகள் சொல்லுவாங்க. உங்கள் வீட்டில், உங்கள் வயலில், உங்கள் தோட்டத்தில், உங்கள் கால்நடைகளுக்கு & உங்கள் கருவிகளில் என்ன பழுது என்றாலும் இவரை அனுகலாம்.

நல்ல மனதுகாரர். எல்லாவற்றையும் கள்ளம் இல்லாமல் உளறுவார்கள். ஆனால், சண்டைகாரர் கூட. இவங்களுக்கும் எங்கள் ஊரில் உள்ள இன்னொருவருக்கும் நீண்ட, நெடிய பகை இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் தனது எதிரியை பகை தீர்க்க அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

இதற்கு ஒருவரை உதவிக்கு வைத்து கொள்கிறார். இந்த உதவியாளர் தான் நமது கதை நாயகன். அந்த சமயம் எங்கள் ஊரில் அறுவடை காலம். அந்த எதிரி தனது நிலங்களில் மிளகாய் பயிர் செய்து இருந்தார்கள். அவரது நிலங்களை சுற்றி உள்ள சிலவற்றில் மிளகாய் அறுவடை நடந்து கொண்டிருந்தது. இவருடைய நிலங்கள் ஊரில் இருந்து சிறிது தள்ளி இருந்ததால் இரவு நேரங்களில் காட்டுக்கு காவலுக்கு போவாங்க. இந்த இரவு நேரம் தான் உகந்த நேரம் தனது பகையை தீர்க்க என்று எண்ணி, ஒரு நல்ல இரவுக்காக தனது உதவியாளருடன் காத்தது கிளி.

இரவும் வந்தது. எதிரியும் காவலுக்கு போனார்கள். கிளியும் தனது நாயகனை அழைத்து கொண்டு போனார்கள், சிறிது நேரம் தாழ்த்தி. எதிரியின் காட்டை நெருங்க நெருங்க, நடந்து சென்றால் எதிரி உஷார் ஆகிவிடுவார் என்று இருவரும் ஊர்ந்தே சென்றார்கள் எதிரி ஓய்வு எடுக்கும் மோட்டார் அறை வரை. பகல் முழுதும் வெயில் & மிளகாய் காடு வேறு. எனவே வயலின் வெக்கை மற்றும் காரம் காரணமாக, உடல் எரிய ஆரம்பித்துவிட்டது. இருவராலும் தாங்க முடியவில்லை. அதிலும் நமது நாயகனுக்கு 'நமக்கு ஏன் இந்த தலவலி'  என்ற எண்ணம் மெல்ல தோன்ற ஆரம்பித்துவிட்டது.

இருவரும் எதிரி தூங்கும் வரை காத்திருக்க முடிவு. கிளி சிறிது நேரம் கழித்து, தனது உதவியாளரிடம் (நமது நாயகனிடம்) கூறினார் 'துங்கிட்டானானு பாரு. துங்கலேன்னா, தரைலேயே பதுங்கி இரு. தூங்குனா எனக்கு சொல், நான் வந்து பாத்துகிறேன்னு' வழி அனுப்ப, நாயகனும் ஊர்ந்தே மோட்டார் அறைக்குள் சென்றார். சிக்னல் வரவில்லை. கிளி சிக்னல் வரும் வரை காத்திருக்க ஆயத்தமானார். சிறிது நேரம் சென்று நமது நாயகன் வெளியே ஊர்ந்த படி வந்தார். கிளிக்கு சந்தேகம். என்ன என்று கேட்டதற்கு நமது நாயகன் சொல்லி இருக்கிறார் 'அவர் தும்மியது போல வாசனை வந்தது' என்று.


மறு நாள் காலை எங்கள் நண்பர்கள்-குழு பல் குச்சியுடன் ஏரியில்  ஒண்று கூட, கிளியும் நாயகனுடன் வர, கிராமத்து நையாண்டிதான்.

No comments:

Post a Comment