December 26, 2009 12:16 PM (on this date I wrote this article and sent it to my Orkut Groups)
இது வரை, நமது இனத்தை அழிக்க உதவினோம். மீனவர்கள் வாழ்வில் 'சுனாமி' விட்டோம். (இந்த சட்டத்தை இயற்றிய 'உலக அறிவாளி' யாரோ.!? மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க விரும்பினால்... என்று வசனம் வேறு). மீனவர்கள் கடலில் மீன் பிடிக்காமல், Shriya Saran உடன் Item Dance போடவா போவார்கள்.!?
சரியான ஆதாரம் இல்லாமல் Dr Binayak Sen-ஐ பாடுபடுத்தினோம். திருமதி. நளினி முருகன் அவர்களின் வாழ்வில் 'குஷ்பூ தமிழ்'-ஐ விட்டோம். பதவிக்கு டெல்லி போனோம். தமிழன் வாழ்வுக்கு கடற்கரையில் 'அரை நாள்' காற்று வாங்கினோம். இந்திய வளங்களை அந்நியனுக்கு விற்றோம். நமது தாய்மண்ணை அவனது 'கழிவு' கொட்டும் சாக்கடை ஆக்கினோம். சக இந்தியனை கொன்று குவித்தோம், பல பிரிவினை காரணங்களால். ஆனால், 26/11 அன்று ஒரு அந்நியன் நம் மக்களை கொன்று குவித்தான். அந்த 'Kasab' பக்கா விஜய் படம் போல் 'நல்ல மசாலா' வாழ்க்கை வாழ்கிறான் நமது வரி பணத்தில். (இந்த நடிகன் திருந்தவே மாட்டாரோ.!? நல்ல 'கைப்புள்ள' நடிகன்பா).
இந்திய இறையான்மை: உண்மை பேசாதே. நல்லவர்களுடன் சேராதே. மக்களுக்கு அறிவை, உண்மையை புகட்டாதே. இன, மொழி உணர்வு கூடாது. இதை எல்லாம் செய்தால் 'தேசிய பாதுகாப்பு சட்டம்' எதிர்க்கும். ஆனால் Kasab-ஐ பாதுகாப்போம். இவர் இன்னும் 'நான் ஒரு இந்தியன்' என்று சொல்லவில்லை. அடிப்படை உரிமை கேட்கும் மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களிடம் 'வன்முறை' பழகுவோம். பொதுவாக அனைத்து மக்களின் 'வாழ்வியல் ஆதாரங்களை' அழிப்போம். இப்படி மக்களையும், வாழ்வியல் ஆதாரங்களையும் அழித்துவிட்டு வெறும் மயானத்தில் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் என்ன செய்ய உள்ளார்கள்.!?
நான் முன்பே சொன்னது: ஒரு நடிகனை திரையறங்கினுள் கொண்டாடுங்கள். அவரது உண்மையை, நேர்மையை & நல்ல பண்பை வெளியே கொண்டாடுங்கள். இதற்கு மேல் அவரை 'தளபதி, தலைவன் & இன்னும் சில பட்டங்கள்' கொடுத்து ஏதோ இந்த உலக மக்களை காக்க வந்தவர் போல் உங்கள் சுய நலம் & மற்ற சில வசதிகள் கருதி இல்லாத ஒன்றை உருவாக்க வேண்டாம். நடிகனுக்கு நடிப்பது தொழில். இதை எந்த நடிகரும் (திரு. அஜித் தவிர) ஒத்துக்கொள்வதில்லை. தன்னை ஒரு பெரிய 'சக்தியாக' காட்டிகொள்வதில் என்ன ஒரு ஆர்வம்.!! திரு. ரஜினிகாந்த் வைத்தாரே ஒரு ஆப்பு. அரசியல் வசனங்கள் பேசி & ரசிகர்களையும் உசிப்புவிட்டு பிறகு பழியை ரசிகர்கள் மேல் போட்டாரே (பேசிய வசனம்: 'நீங்க நான் அரசியலுக்கு வருவேனு நினைச்சா நானா பொறுப்பு). இந்த நடிகர் போல வேறு யாரும் தனது ரசிகனை முட்டாள் ஆக்கியது இல்லை. முட்டாள்கள் என்று சொன்னதும் இல்லை. அது சரி, அவர் பணம் சம்பாதிக்க இவர்களை உபயோகப்படுத்திகொண்டார். நம் மீதும் தவறு உள்ளது.
இவர் பேசிய இன்னொரு வசனம்: 'சொன்ன சொல் கொடுத்த பொருள் திருப்பி வாங்கி பழக்கம் இல்லை.' கன்னட மக்களிடம் 'பேசியது தவறு' என்று 'உதறல்' வாங்கினாரே. இன்னொரு வசனம் 'பேர கேட்டா அதிருதல.' கன்னட மக்களுக்கு அதிரவில்லையே. கவுண்டமணி அவர்கள் ஒரு படத்தில் பேசிய வசனம்: 'நடிகர்கள்தான் விளம்பரம் செய்து கொல்கிறார்கள். உனக்கு ஏன் இந்த வேலை. இவுனுங்கதான் அவசியமா பிறந்துட்டானுங்களா. நாம எல்லாம் அவசியம் இல்லாம பிறந்துட்டோமா.!?
A R Rahman இரு Oscar Awards வாங்கினார்கள். ரசூல் பூகுட்டியும், Gulzar-ம் தலா ஒரு Oscar Award வாங்கினார்கள். ஒரு இந்தியர் நோபல் பரிசு வாங்கினார்கள். நமது இந்திய Cricket Team #1 இடம் பிடித்தது Test போட்டிகள் விளையாடும் அணிகளின் தர வரிசை பட்டியலில். இன்னும் பல நல்ல விசயங்கள் நடக்கும் என நம்பிக்கை செய்வோம். நமது திறமை உலக அரங்கில் வெளிச்சத்திற்கு வந்தது. வரும் 2010-ல் இது போல் நிறைய நடக்கும் என நம் திறமையை & மக்களை நம்புவோம்.
நேர்மையாய் இருப்போம். அறிவை வளர்ப்போம். அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அறிவை தேடுவோம். உலக அரசியல் & உலக தலைவர்கள் பற்றி & பல நல்ல நூல்களை (Books) படிப்போம். ஒரு நல்ல மாற்றத்தை நம் மக்களிடம் ஏற்படுத்துவோம்.
இலக்கியம் என்பது Sidney Sheldon மட்டும் அல்ல. இவர் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய Fiction/Semi-Fiction Books மட்டுமே இலக்கியம் அல்ல. நிறைய புதையல் உள்ளது. தேடி தேடி படிப்போம். சிலருக்கு இந்த நூல்கள் மட்டுமே இலக்கியம். என்ன கொடுமை சரவணா.!? நூல்கள் மட்டும் வாழ்க்கை அல்ல. சக மனிதனும், சரியும் & தப்பும், நம்மை சுற்றி நடக்கும் விசயங்களும் கல்விதான். இவை சொல்லி தரும் விசயம் கோடான கோடி வரும்.
நம்பிக்கையுடன் 2010-ஐ வரவேற்போம். நல்லது நடக்க முயற்சி செய்வோம். நல்ல விசயங்களுக்கு முதல் அடி எடுத்து வைப்போம். நல்லதை நடத்தி முடிப்போம். பல நல்ல செய்யல் நடக்க நம் திறமை & சக மனிதன் மீது நம்பிக்கை வைப்போம். ஒன்று கூடி நல்லது செய்வோம். உங்களுக்கு (என் அன்பு நண்பர்களுக்கு) என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். மேன்மேலும் உயர வாழ்த்துகள்.
விடைபெறுகிறேன். சந்திப்போம்.
No comments:
Post a Comment