நமக்கு நேர்மையை தெரியுமா? குறைந்தபட்சம் நேர்மையாய் சிந்திக்க தெரியுமா? இந்த 'முதலாளித்துவ சமுதாயம்' என்ன செய்கிறது என்று பார்ப்போம். நம்மை சுற்றி சுரண்டுபவர்களும், நம்மை அடக்கி ஆள்பவர்களும் இருக்கும் போது, 'ஏழை விவசாயிகள் தற்கொலை செய்ய தூண்டபடுகிறார்கள். எலிகளையும், பாம்புகளையும் உணவாக மாற்றிகொண்டார்கள்.'
சில மாதங்களுக்கு முன் இந்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி செய்தது, ஒரு கிலோ ரூ. 12.50 க்கு. அரசு சொன்ன காரணம் 'நம்மிடம் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளது.' ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசு தந்த கரும்பு கொள்முதல் விலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு தேனீர் அருந்தலாம் அந்த பணத்தில்.
பிறகு இதே மூளை இழந்த அரசு (அல்ல, விவசாயிகளின் உயிரை குடிக்கும் அரசு) இறக்குமதி செய்தது ஒரு கிலோ சர்க்கரை ரூ. 30 க்கு. நுகர்வோர் சந்தையில் விற்ற விலை கிலோ ரூ. 40. இந்த நாடகம் நடந்தது 5 மாத இடைவெளியில்.
எனவே ஒரு தேனீர் விலைக்கு சொந்த மண்ணின் விவசாயிகள் விற்கப்பட்டு, அதே சொந்த மண்ணின் மக்கள் அநியாய விலைக்கு அந்த பொருளை வாங்கி அவதிபடுகின்றனர். நம்மளை விட பொருளாதரத்தில் பின் தங்கிய பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் சர்க்கரை, பெட்ரோல் மற்றும் டீஸல் விலை மிக மிக குறைவு. அவர்களால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? இதோ அந்த திரை மறைவு நாடகம் உங்களுக்காக - - -
இந்த பொருள்களின் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி போக இந்த அரசுகளின் குள்ளநரி வேலை இதோ: ரூ. 12.50 க்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய, அதை கம்மி விலைக்கு வாங்கி பதுக்கி வைத்த பன்னாட்டு நிறுவனம் இந்த அரசுக்கு தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அல்லது அந்த நிறுவனம் எந்த அமைச்சருக்கு சொந்தம்? பன்னாட்டு நிறுவனம் என்றால், ரூ. 30 க்கு நம்மிடமே விற்ற அந்த நிறுவனம் இந்த அரசுக்கும், அமைச்சருக்கும் தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அந்த நிறுவனம் ஒரு அமைச்சருக்கு சொந்தம் என்றால், அவர் லாபம் பார்த்த கோடிகள் எத்தனை?
உலக அடியாள் கூட தனது நாட்டு மக்களை ஒண்றும் செய்தது இல்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைபட்டு கிடக்கும் இந்த அடிமை-சுதந்திர இந்தியாவில் சொந்த மண்ணின் மக்கள் வாழ வழி இல்லாமல். இலங்கையில் ஒரு இனம் வாழ இன்னொரு இனத்தை அழித்தது. ஆனால் பன்னாட்டு-அடிமை-இந்தியாவில் மக்கள் வீடு இழந்து, காடு இழந்து, உடமை இழந்து, சொந்தம் இழந்து, வாழ்வை தொலைத்து அகதிகளாக, முள் வேலிக்குள்ளும் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டிய நிலை.
அடக்குமுறை உள்ள இடத்தில் அடங்க மறுக்கும் சமுதாயம் முளைக்கும். குள்ளநரிகள் இருக்கும் இடத்தில் புரட்சி எந்த நேரமும் வெடிக்கும். பழங்குடிகள் அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள் பறிக்கபட்டு நிர்கதியாய் விரட்டப்படுகின்றனர். எல்லாம் இழந்து கையில் ஓட்டை காலணா இல்லாத அவர்கள் என்ன செய்வார்கள்? மலையும் மலையின் வளங்களையும் நம்பி வாழ்ந்தவர்கள், இப்போது முள் வேலிக்குள் அதுவும் தங்களது சொந்த மண்ணில்.
{In this fils photo, leerin' youth snappin' photos of a naked woman. Prasenjit Chakravorty (28), owner of a fast food joint, Ratul Barman (18), a hotel waiter, and Sudip Chakdar (20), a pan shop owner are the chief accused. What compelled these young men to strip a woman? we are always animals and are just sheddin' some hypocrisy}.
நளினி அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. காரணம் 'கொடும் செய்யல் புரிந்தவர், விடுதலை செய்தால் சமுதாயத்திற்கு நல்லது அல்ல.' தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொலை செய்தவர்கள் இன்னும் வாழவில்லையா? அல்லது அந்த அரசியல் கட்சி (அ.தி.மு.க) தமிழகத்திலிருந்து ஒழிந்துவிட்டதா? மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்டது? கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது? இந்த கொடும் செய்யல் புரிந்தவர்கள் தற்போதைய 'காந்திய' சமுதாயத்தில் இல்லாமல் போய் விட்டார்களா என்ன? சாதி பெயரில் அரசியல் செய்பவர்களும், சாதி பெயரில் வன்முறை செய்பவர்களும் நம்மை சுற்றி 'வாழும் அவதாரங்களாக' மக்களை ஆசிர்வதிகவில்லையா?
"அதிகாரிகளும், அதிகாரம் உள்ளோரும் செய்வதே ஆட்சி. சொல்வதே சட்டம்."
தற்போதைய மத்திய அரசும், மாநில அரசும் தங்களது சுய லாபத்திற்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கை மண்ணில். இலங்கை அரசை இந்திய அரசு United Nations சபையில் போருக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு இந்த நிமிடம் வரை 'ஆண்மையான' நடவடிக்கை இல்லை. ஆண்மை இல்லாத அரசு மக்களை ஆட்சி செய்வது வரலாற்றில் அழிக்கப்படவேண்டிய பக்கங்கள்.
'அங்காடித் தெரு' படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம். தமிழ் படங்களை பற்றி பேசும் போது 'அங்காடி தெரு'வை ஒதுக்க முடியாது. சிறந்த படைப்பு.
No comments:
Post a Comment