You are lookin' for..?

Thursday, April 15, 2010

பகடி செய்வோம்.

பகடி எழுத்தில் நுண்ணதிர்வுகள் இருக்கும். உளவியல் (சார்ந்த) விசயமும் இருக்கும்.

சென்னையில் இருந்த காலத்தில், நண்பன் காண்டீபன் உடன் வாசம் செய்தேன். நான் கொஞ்சம் கிறுக்கு பாடகன். பிடித்த பாடல்களை வாயில் music-உடன் பாடுவது வழக்கம். 'டேய், படுத்தாதடா. இதுல வாயால Music வேற போடுற' என்பான். அதிலும் சில நேரம் நாம் (நம்மையும் அறியாமல்) ஒரே பாடலை மட்டுமே சில மணி நேரம் பாடிக் கொண்டிருப்போம். அல்லது நாள் முழுதும். இந்த விஷயம் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும்.

ஒரு நாள் மாலை 6 மணியளவில் 'வா, அடையார் போவோம்' என்றான். ஏதோ Mobile Bill-ல் பிரச்சினை இருப்பதாகவும், அவனது Network Service Provider-ன் outlet சென்று அதை சரி செய்ய வேண்டும் என்றும், நீ வந்தால் நல்லது என்றும் சொன்னான். 'சைதாபேட்டை போவோம்டா. நமக்கு அதாண்டா பக்கம். மேலும் Bus-Stop பக்கத்துலேயே உன்னோட NSP-ன் outlet இருக்குடா' என்றேன் நான். அவன் 'அது எனக்கும் தெரியும். ஆனால் Customer Care-ல என்னை அடையார் வர சொன்னாங்க' என்று சொன்னான்.

வேளச்சேரி விஜய நகரில் பேருந்து பிடித்து அடையார் நோக்கி. நான் 6 மணி முதல் 'கஜினி' படத்தின் 'சுட்டும் விழி சுடரே' பாடலை தொடர்ந்து பாடியபடியும், music போட்டபடியும். அடையார் Bus-stop-ல் இறங்கி, NSP-ன் விலாசம் சொல்லி ஒரு Auto ஓட்டுனரிடம் விசாரித்தான். அவர் 'நேரா போய் right-ல திரும்புங்க' என்று சொன்னார்கள். நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தபடி. Right-ல திரும்பினோம். (எங்களை கவனமாக பின் தொடர்ந்து வரவும்). அங்கு ஒருவரிடம் விலாசம் விசாரித்தான். கிடைத்த பதில் 'நேரா போங்க.' நான் பாடலையும், இசையும் போட்டபடி.

இப்படி குறைந்தது 7 பேரிடம் விசாரித்து இருப்போம். அந்த முதல் Auto ஓட்டுனர் தவிர, மீதி எல்லோரும் 'நேரா போங்க' என்ற பதில் மட்டுமே தந்தனர். நான் பாடலையும், இசையையும் விடவில்லை. ஒரு கட்டத்தில் 'டேய், Landmark சொல்லி விசாரிடா. அப்பதான் சரியா சொல்லுவாங்க' என்றேன். அதற்கு 'நான் Landmark பற்றி Customer Care-ல  கேட்கலை' என்றான். மீண்டும் நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தேன். சிறிது தூரம் வந்ததும் 'சுட்டும் விழி சுடரே ரே ரே ரே ரே' என்று நவரசங்களையும் (மகிழ்ச்சி தவிர) கொட்டி பாடினேன். காரணம் என் கண்ணில் பட்டது 'தியாகராஜா' Theatre.

'டேய், என்னடா இது. திருவான்மியூர்-ல இருக்கோம்டா. அடையார்ல இருந்து நடந்தே வந்துட்டோம்டா. ஏன்டா, ஒழுங்கா விலாசம் வாங்க மாட்டியாடா உன்னோட NSP-கிட்ட. விலாசம் சொன்ன ஒருத்தராவது 'இது திருவான்மியூர்ல இருக்குங்க-னு' சொல்லி இருக்கலாமேடா. அது எப்படிடா எல்லாம் ஒரே மாதிரி விலாசம் சொன்னாங்க..! ரொம்ப நல்லா இருக்குடா' என்றேன். சிரித்தான், பேசவில்லை அவன். நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தேன்.

மீண்டும் கோவம் வர 'டேய், விஜய நகர்ல M70 புடிச்சி, S R P Tools வழியா 5 நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு, 21L புடிச்சி 6 மணிலேர்ந்து 9 மணி வரை வந்துருக்கோம்டா' என்று கத்தினேன். பிறகு பாடலும், இசையும் தொடர்ந்தது.

Outlet உள்ளே போனால் 'we are closed' என்றனர். நடந்து வந்ததில் Time's up. பாடலும், இசையும் நின்றது. 'டேய், எவ்ளோ நேரம் Business Hours-னு கேட்டு தொலைக்க  மாட்டியாடா' என அடி வயிற்றில் இருந்து நான் கேட்டேன். அவன் பேசவில்லை.  மீண்டும் இசையும், பாடலும். இப்பொழுது குரலில் உற்சாகம் இல்லை. ஆனால், மற்ற ரசங்கள் எல்லாம் இருந்தன.



ஜெயந்தி Theatre அருகே வந்து Bus பிடித்து வேளச்சேரி விஜய நகர் வந்தோம். பாடலும், இசையும் தொடர்ந்து ஓடுகிறது. ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இசையும், பாடலும். நடந்து ராஜலக்ஷ்மி Theatre வரை. நாங்கள் உள்ளே வரவும், Ticket கொடுக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நல்ல Seat தேடி பிடித்தோம். இன்னமும் பாடலும், இசையும்.

கூறினான் 'டேய், நிறுத்துடா. ரொம்ப பண்ணாத. Music வேற' என்று. நிறுத்திவிட்டேன். படம் முடிந்தது.

பிறகு பொன்ராஜ், செந்தில், காண்டீபன், நான், ஸ்ரீகணேஷ், மணிமாறன் எல்லோரும் Bangalore-க்கு வேலை கிடைத்து போனோம். நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில். பூபாலன் என்பவர் எங்க வீட்டிற்கு தினமும் மூன்று வேலை வந்து போவார். காண்டீபன் Colleague. சென்னையில் இவனுடன் ஒரே Company-ல் வேலை பார்த்தவர். இப்போது இங்கும் இவனது Colleague. பக்கத்துக்கு தெருவில் எங்கள் மற்ற மூன்று நண்பர்களுடன் ஒரு வீட்டில் இவர் தங்கி இருந்தார். இந்த Area முழுக்க எங்கள் நண்பர்கள்.

வேலை இல்லாத நாட்களில் ஒண்று கூடினால் அலப்பறைதான். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பூபாலன் 'Mike மோகன்' என்று காண்டீபன்-ஐ அழைத்தார். பெயர் காரணம் கேட்க, இவனுடன் வேலை பார்க்கும் ஸ்ரீகணேஷ், மணிமாறன், பூபாலன் மூவரும் சொன்னார்கள் 'Office-ல எப்ப பார்த்தாலும் பாட்டு பாடுவான். அதைவிட, அந்த பாட்டுக்கு வாயால் Music போடுவான் பாருங்க. கலகலனு இருக்கும் Office-ல. எல்லாம் இவனை பயங்கரமா கலாய்ப்போம்' என்று. அடப்பாவி நண்பா.

பிறகு அடையார் மற்றும் 'சுட்டும் விழி சுடரே' விஷயத்தை நான் கூற, தர்பார் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

No comments:

Post a Comment