என் பழைய கிறுக்கல்கள் உங்களுக்காக. எழுதிய மற்றும் Orkut குழுமத்திற்கு அனுப்பிய தேதியுடன்.
December 31, 2007 8:24 PM
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது உலக மக்களுக்கு. சில நாட்கள் எழுதாமல் இருந்தேன். எல்லாம் சோம்பல் காரணமாக. இந்த பகுதியில் சில கருத்துகள் பெண்கள்/பெண்ணியல் பற்றியது. எனவே என் தோழிகள் அந்த சிந்தனைகளை நடு நிலையுடன் வாசித்து, ஏதேனும் தவறு/தப்பு இருப்பின் சுட்டி காட்டி எனது அறிவு கண்ணை திறக்க வேண்டுகிறேன்.
1. இன்று (31st Dec') காலை செய்திதாளை பார்த்தால் (Times of India, Bengaluru) திரு பிரபாகரன் அவர்கள் இறந்திருக்கலாம்/கூடும் என செய்தி. இந்த கூடும்/லாம் போன்ற செய்திகளை (திரு. பிரபாகரன் போன்றவர்கள் விசயத்தில்) செய்திதாள்கள் தவிர்ப்பது நல்லது. சில மக்களுக்கு அவர் தேவைப்படுகிறார். என் மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை மனசு கஷ்டப்பட வைக்கவேண்டாம்.
2. இலங்கை, ஃபீஜி தீவு, மலேசியா, நம்ம கர்நாடக மண் எங்கும் தமிழன் ஒரு Target-ஆக ஏன் ஆக்கப்படுகிறான். எல்லா மண்ணிலும் பல கலாசாரம் & பண்பாடு & Customs & பலதரப்பட்ட மக்கள் என வாழ்க்கை முறை இருக்கும். ஆனால், ஏன் தமிழன் மட்டும்..? உலக மக்களுக்கு ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள்: தமிழனது சிறப்பு & பண்பாடு & திறமை & தனித்தன்மை, etc. நீங்கள் மதிக்கவேண்டாம் அல்லது மிதிக்கவேண்டாம். தமிழ் மக்களை உங்களைப் போல் ஒரு மனித இனம் என்று அவர்களது உணர்வுகளை மதித்தால் போதுமானது.
3. Dupatta or Dress Code ஒரு பிரச்சனையை சிண்டு முடித்து உள்ளது. ஆண்கள், பெண்களை நல்ல உடை உடுத்த சொன்னாலும் & சொல்லாமல் விட்டாலும் பிரச்சினை. உடை உங்கள் சொந்த பிரச்சினை. Moreover, it is one of the primitive rights of Men & Women. At times, Dress Code is a sign of Gen X gap. ஆனால், சில உடைகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அது பெண்களுக்கும் தெரியும். Likewise, இடம் & பொருள் தகுந்தாற் போல் Dress Code மாறும். To crown in all, is to improve the moral of.
சில பெண் புரட்சியாளர்களுக்கு ஆண்களை எதிர்ப்பது ஒரு புரட்சி. ஒரு கேள்வி: இந்த லோகத்தில் எந்த பெண்ணும் இது வரை எந்த ஆண்மகனையும் ஏமாற்றியது இல்லையா..? அல்லது, ஊருக்கு உழைத்த உத்தம தலைவர்கள் பெண்களை எதிர்த்தா போராடி புகழ் பெற்றனர்..?
ஒரு கொசுறு செய்தி: இது வரை எந்த கடவுளும் பெண்களின் இயற்கை நிகழ்வின் போது தனது ஆலயத்தின் உள் வர கூடாது என சொன்னது இல்லை. சில மனிதர்கள் சொன்ன இந்த (கிறுக்கு) செய்தியால் அல்லது உருவாக்கிய மூட நம்பிக்கையால், நீங்கள் கடவுளை புறக்கணித்தால் அது முட்டாள்தனம். பெரிய புரட்சி அல்ல. அதற்கு பதில், பெண்களை ஆலயத்தின் உள் இயற்கை நிகழ்வின் போதும் அனுமதிக்க போராடி இருந்தால் அது புரட்சி. இந்த கருத்து யாருக்கு என்று சில மக்களுக்கு தெரியும். மேலும் இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல. நான் அவரை கேட்டுக் கொள்வது: ஆண்டவன் என்றும் மனிதனிடம், எனக்கு இது & அது செய் என்றும் - இவற்றை செய்தால் நான் உனக்கு நீ வேண்டும் சிலவற்றை தருகிறேன் என்றும் சொன்னது இல்லை. எனவே சில கிறுக்கு மனிதர்களை & கிறுக்கு செய்யல்களை எதிர்த்து போராடவும்.
இந்த தனிப்பட்ட விசயததிற்கு திரு. பாமரன், திரு. பாலு மகேந்திரா போன்றோர் சண்டை போடவில்லை என்று அவருக்கு வருத்தம். ஒரு சினிமா வசனம் (நம்ம மக்களுக்கு சினிமா மூலம் கருத்து பிடிக்கும்): ஆச்சி மனோராமா சொன்ன வசனம் (எந்த சினிமா என்று எனக்கு தெரியாது): "என் பாவாடை அவிழ்ந்து விழுந்தது தப்பு இல்லை. ஆனால் அதை அவன் பார்த்ததுதான் தப்பு." எனவே, உன்னாலே உன்னாலே படமாவது பாருங்க. சும்மா எல்லாத்துக்கும் ஆண்களை வசை பாடாதீர்கள்.

மேலும் நாம் எல்லோரும் (அட, இந்த பரட்டையும் சேர்த்து) உடை நமக்கே நமக்காகவா உடுததுகிறோம்..! இல்லை. மற்றவர்கள் admire பண்ண வேண்டும் என்ற ஒரு எண்ணமும் உண்டு அல்லவா..! பிறகு ஏன் இந்த Hypocrisy.!? Please, don't do any over react.
4. 2007 உங்களுக்கு என்ன பண்ணியது என நான் சொல்ல முடியாது. சரி நாம் 2007-ல மத்தவங்களுக்கு என்ன செய்தோம்..? இந்த சிந்தனையுடன் 2008-ஐ துவக்குவோம். இந்த 2008-ஐ மட்டுமல்ல. வாழும்வரை. அட நான் தப்புகளும் செய்து உள்ளேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். எனவே வாருங்கள் சிறப்பான எதிர்காலம் செய்வோம்.
இந்த பொறுக்கி விடை பெறுகிறேன், இந்த வருடத்தின் கடைசி கிறுக்கல்களுடன்.
* * * * *
February 5, 2008 8:39 PM
1. இன்னும் 20/25 வருடங்களுக்குப் பிறகு அரசியல் செய்ய வரும் ராஜாக்கள், நான் திரு. M.G.R. அவர்களின் வாரிசு என்று சொன்னால் ஒரு Vote-கூட விழாது, அந்த ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கு. திரு. M.G.R. அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அதாவது, நல்ல பண்புகள் கொண்டவர். ஆனால், Administration Elements-ல் அவர் சோபிக்கவில்லை. பிறகு எதற்கு இந்த வாரிசு போட்டி? (சரத்குமார், விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் ஜெயலலிதா அவர்கள்). நான், சிலர் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என்று எதிர் பார்த்தால், வாரிசு சண்டை நடந்து கொண்டுள்ளது. இந்த சண்டை முடிந்து, மக்களுக்கு நல்லது செய்ய வரும்போது, குதிரை கொம்பு முளைத்து ஒரு புதிய உயிரினம் உலகிற்கு வந்து இருக்கும். போங்கப்பா, நீங்களும் உங்க வாரிசு அரசியலும்..!
2. Divide n Rule..! 'வெள்ளையனே வெளியேறு' என்று முழங்கி விடுதலை வாங்கினோம். இன்னும் சில வாங்கி உள்ளோம்: ஆங்கில மோகம் + நமது Traditional Values-ஐ தொலைத்தது + இத்யாதி + இத்யாதி + Last but not least: Divide n Rule. சில அரசியல்வாதிகள் இந்த Principle-ஐ இன்னும் பின்பற்றி வருகின்றனர். பார்க்க: North Indian crisis in Mumbai. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளை குடியுரிமை நீக்கி தண்டிக்க வேண்டும். இந்த மாதிரி விசமம் செய்யும் மக்கள் விசயத்தில், We need un-compromisin' Integrity.
3. புகை: Swiss, Norway, Sweden மற்றும் சில நாடுகளில் புகையின் தீமை சொல்லும் படங்களை Pack-மீது போட சொல்லி அந்த நாட்டு அரசுகள் சட்டம் போட, இன்று புகைக்கும் பழக்கம் ஓர் அளவிற்கு குறைந்து உள்ளது. அதை நமது மத்திய அரசு செய்யாது. காரணம்: வருமானம் போய்விடும் அல்லவா.
இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.
* * * * *
March 24, 2008 1:37 AM
திருவண்ணாமலையில் ஒரு 3 நாட்கள் இருந்து அண்ணாமலை அவர்களை தரிசித்த ஒரு நாள், திரு. சுஜாதா அவர்கள் மறைந்த செய்தி. நெஞ்சம் கனத்தது உண்மை. எனக்கு சில விசயங்களில் உலகம் புரிய வைத்த ஆசான்.
~ ஒரு 2 வருட இடைவெளிக்கு பிறகு, தமிழக பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. இங்கிருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு பேருந்தில் சென்றேன். வரும் போதும். திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் சொல்ல வேண்டாம். இந்த தருணங்களில், நான் பார்த்த ஒரு விசயம்: ஏன் தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு நமது முதல்வர் சொன்ன ஒரு விசயம் உள்ளது..?
நமது முதல்வரின் கருத்துக்கு, திருக்குறள் அழிக்கப்பட வேண்டுமா..? நமது முதல்வர் அவர்கள் விளம்பரம், கட்-அவுட் கலாசாரம், இத்யாதி: விசயங்களுக்கு முற்று புள்ளி வைக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்கும் வேளையில், இந்த விசயம் சிறிது வருத்தம் தருகிறது.
~ ~ ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு: Etiquette. இது நமது அரசு பேருந்துகளில் பணி புரியும் சில நடுத்துனர் & ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. காரணம்: திருவண்ணாமலைக்கு இங்கிருந்து போன பேருந்தில், திரைப்படம் (அய்யோ) ஒலி-ஒளி'பட்டது. நேரம் கடந்தது. சிலர் நிறுத்துமாறு விண்ணப்பம். நடக்கவில்லை. நான் முன் இருக்கையில் இருந்த நடத்துனரிடம், ஒலி அளவை குறைக்க விண்ணப்பம். ஒலி அளவு ஏற்றப்பட்டது. என்ன ஒரு முரண். பிறகு எனக்கு ஒரு ஐயம்: இந்த திரைப்படம் ஓட்டுனர் உறங்க கூடாது என மிகுந்த ஒலியுடன் ஒளிபரப்ப படுகிறதோ என்று.
~ ~ ~ தமிழ்க அரசு மூன்றாம் பால் இனத்தை மதித்து அவர்களுக்கு 'T' என்று முத்திரை உள்ள குடும்ப அட்டை (Ration-Card) தந்தது மகிழ்ச்சி. அவர்களை மதிக்க ஆரம்பித்தால் அவர்கள் நல்ல வாழ்வுக்கு திரும்புவர். நாம் ஆண்/பெண் என்ற போதும் தப்புகள் இல்லாமலா வாழ்கிறோம்..? ஒரு ஐயம்: இந்த 'T' அவர்கள் வாழ்நாள் முழுமைக்குமா அல்லது அந்த பால் வேறுபாடு முழுதாக அங்கீகரீக்கப்பட்டு சில நாட்களில் ஆண் அல்லது பெண் என்று மதிககப்படுவார்களா..?
இந்த பொறுக்கி விடைபெறுகிறேன்.

No comments:
Post a Comment