You are lookin' for..?

Wednesday, April 28, 2010

இடுப்பை கிள்ள வேலைக்கு போறோம்.

இதோ இன்னுமொரு என் கிராமத்து-சுவையான-கதை.

உண்மையும், புனைவும் கலந்த சுவை.

தமிழமுதன் தாத்தா - பெரியார் அவர்களின் கொள்கைவாதி. தனது ஐந்து குழந்தைகளுக்கும் சுய மரியாதை திருமணம் செய்து வைத்தவர். தமிழ் ஆசிரியர். எப்பொழுதும் கருப்பு சட்டைதான். இவருடைய குழந்தைதான் 'வட்டி.' எனக்கு மாமன் முறை.



I.T.I. - தொழிற்படிப்பு பிரபலமாக இருந்த காலத்தில் எல்லோருக்கும் வாழ்வு தந்த Trainin' Institute. அரசு Institute என்பதால், இதன் மாணவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எண்பதுகளில் இங்கு படித்த பலர் இன்று நல்ல நிலைமைகளில். திருச்சி BHEL நிறுவனுத்தில், மற்றும் சில நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்களை நீங்கள் இன்றும் பார்க்கலாம்.

Temple of learnin' - a view of our I.T.I.

ராமு (நண்பன், குடிகார சாத்தான் இவர்தான்) - பத்தாவதில் கோட்டம். 'வட்டி' மாமா - பத்தாவதிலா அல்லது +2-விலா கோட்டம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. டாக்டர் அண்ணன் +2-வில் கோட்டம். மற்றும் ஒரு நண்பர் சாமிநாதன் - இவரை நான் ஊரில் பார்த்ததே இல்லை. இந்த நால்வரில் 'வட்டி மாமா' தவிர மூவரும் சிலமுறை 'முயற்சி' (Attempt) செய்தவர்கள். ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. நான்கு பேரும் வாழ்க்கையில் தங்களது அடுத்த கட்டம் பற்றி கூடி பேசியும், சிந்தித்தும் (சில நேரங்களில், தனி தனியாக) ஒரு முடிவுக்கு வருகின்றனர். அது 'I.T.I. மாணவன் ஆகி நல்ல வேலைக்கு போவது' என்று. அவரவர் வீட்டில் சந்தோசம் 'நம்ம பிள்ளை உருப்பட போகுது, நல்ல புத்தி வந்துருச்சி' என.

நால்வரும் S.S.L.C. இல்ல +2-வில் கோட்டம். என்ன செய்வது என்று தடுமாறும் போது, எங்கள் ஊரின் All-in-All ஆறுமுகம் உதவிக்கு வருகிறார். எங்கள் ஊருக்கே Fake Certificates பற்றிய தகவல்களை முதன் முறையாக தருகிறார். இந்த புள்ளியில் நால்வரும் தங்களது வீட்டாரை 'உருப்பட போறோம்' திட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். சதுரங்க ஆட்டம் ஆரம்பம், AiA-ன் உதவியுடன். வீட்டாருக்கு சந்தேகம் வந்துடுச்சி 'பசங்க சில நாட்களாக திட்டத்தை பற்றி வீட்ல யாரிடமும் பேசுவது இல்லையே' என்று. எனவே அவர்கள் கேள்விகள் கேட்டால், இவர்கள் எப்படியோ சமாளித்து வந்துள்ளனர்.

FC வேலை முடிந்துவிட்டது. நால்வரும் AiA-க்கு ரகசிய 'பாராட்டு விழா' நடத்தி விட்டு, I.T.I. மாணவனாகவும் மாறிவிட்டனர். அவரவர் வீட்டிற்கு எதுவும் தெரியாது. கிராமம் என்பதால் அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றுவது சுலபமாக இருந்தது. 'எங்கடா நாலு பேரும் போறீங்க, சாயந்தரமா வீடு வர்றிங்க' என அவர்கள் கேட்டதற்கு, இவர்கள் சமாளித்து வந்துள்ளனர். Uniform அணிய வேண்டிய தினங்களில், ஊரின் கண்களிலிருந்து மறைந்த பிறகு அணிந்துகொண்டு போவது.



திருடனுக்கு தேள் கொட்டனுமே. கொட்டியும்விட்டது. ஒரு நல்ல நாளில் நால்வரும் Principal முன். 'என் Institute-லேயே உங்க கைவரிசையை காட்டி இருக்கீங்க. எவ்வளவு தில் உங்களுக்கு.!? ஒரு complaint கொடுத்தேன், நாலு பேரும் மாமியார் வீட்ல இருப்பீங்க' என்றதோடு நில்லாமல், அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ச்சனை செய்ததோடு நிறைய அறிவுரைகளும். 'மாமியார் வீடு' என்ற சொல்லை கேட்டதில் 'வட்டி' மாமாவுக்கு 100-99 வர போறேன், வர போறேன் என்று signal.



Princi 'வட்டி' மாமாவிடம் ' நீ எந்த வருடம் Attempt எழுதினாய்?' என்கிற வினாவை போட, 'வர போறேன்' என்று சொல்லியது உண்மையில் வந்துவிட்டது. இவர்தான் எழுதவே இல்லையே. 'பதில் சொல்லுடா' என Princi அலற, சாமிநாதன் 'வட்டி' மாமாவின் இடுப்பில் ரகசியமாக கிள்ள, மாமா '87'  என்று பதில். 'அந்த அளவுக்கு நல்லா படிச்சி இருந்தா நீ இப்ப என் முன்னாடி நிக்க மாட்ட. என் பொறுமைய சோதிக்காம உண்மைய சொல்லுடா' என்றார் Princi. காரணம், 87-ல் மாமாவுக்கு 13 அல்லது 14 வயதுதான் இருக்கும். எனவே Princi கண்களை உருட்ட, சாமிநாதன் மாமாவின் இடுப்பில் கிள்ள, மாமா சொன்னது '89' என. சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில் கிள்ள, இந்த முறை '85' என பதில். Princi கோவத்தில் கண்களை நெருக்கி, பற்களை கடிக்க; சாமிநாதன் மாமாவின் இடுப்பை கிள்ள; மாமா சொன்னது '99'. Princi 'அப்ப சில வருடம் கழிச்சி நீ இங்க மறுபடியும் வருவியாடா?' என தனது நாக்கை சுழற்றுகிறார். சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில். அப்பதான் மாமாவுக்கு புரியுது 'Advance-ஆ' போய்டோம்னு. மாமா இந்த முறை ஒரே அடியாக அடிக்கிறார் '83' என்று. Princi சிரிப்பதா, இல்ல இவனுங்களை அடிப்பதா என்ற பரமபதத்தில் 'வட்டி' மாமாவை நோக்க, 'இப்படியும் ஒருவனா' என்று சிரித்துவிடுகிறார். 'போய் ஒழுங்கா பொழப்ப பாருங்கப்பா' என மன்னித்து, ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்.

இந்த விஷயம் மெல்ல ஊருக்கு தெரிந்துவிட்டது. டாக்டர் அண்ணனை பெரியப்பா 'நீ இனி வீட்ல இருக்க கூடாது. எங்காவது போய் பொழச்சிக்க' என்றதால் சென்னைக்கு போனது. ராமு இப்போ Cement Factory-ல Contract basis-ல வேலைக்கு போகிறார். சாமிநாதன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. சென்னையில் அல்லது கேரளாவில் எங்காவது இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆம், வீட்டை விட்டு போனவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. எனக்கும் அவர் யார் என்றே தெரியாமல் போய்விட்டது. 'வட்டி' மாமாவின் நிலைமைதான் Comedy. பெரியார் கொள்கைவாதியை எப்படி சமாளிப்பது.?! இரவு 12 மணிக்கு மேல் வீட்டின் திண்ணையில் வந்து படுப்பது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து எங்காவது போய் விடுவது. குளியல், உணவு எல்லாம் நண்பர்கள் வீட்டில். இந்த நாடகம் ஒரு மாதம் போல் ஓடியது. கிராமம் என்பதால் ஊர் முழுவதும் சொந்தங்கள். எனவே மாமா சமாளித்து வந்தார். தாத்தா ஒரு நாள் 3 மணிக்கெல்லாம் எழுந்து, போர்வையோடு கட்டிபோட்டு அடிக்க, அடிகள் ஒவ்வொன்றும் தகிடுதம்பாக விழ, மாமா கதற; ஊரே எழுந்து மாமாவின் கதறலை கேட்டது, சிரித்தபடி - பரிதாபம் - இரக்கம் காட்டியபடி.

No comments:

Post a Comment