You are lookin' for..?

Friday, April 30, 2010

100ml கூட இல்லை. Scene போடுறானே. இவனை??

வெங்கட்டும் நானும் ஒரு இடத்தில் இருந்தால் எங்களை சுற்றியுள்ள ஒருவரையாவது 'இந்த ரெண்டு பேரையும் கொலை பண்ணா நல்லது'னு நினைக்கிற மாதிரி எதையாவது பண்ணுவோம். இந்த கதை எங்கள் கல்லூரி நாட்களில் நடந்தது.

நான் மது அருந்த ஆரம்பித்த நாள் 14 February, 2004. (ரொம்ப நல்ல நாள் என்று நினைக்கிறேன்). எனக்கு சில விதிமுறை உள்ளது. அவைகள் - அருந்தினால் Beer அல்லது Tequila (உச்சரிப்பு - Teˈkila). முதலில் உள்ளதை ஒண்ணுக்கு (Full Beer) மேல இந்த உடம்பு தாங்காது. இரண்டாவதாக உள்ளதை 90ml-க்கு மேல இந்த உடம்பு ஏத்துக்காது. ஒருமுறை அருந்தினால் மறுமுறை அருந்த குறைந்தது 3 மாதம் எடுத்துக்கொள்வேன். ரொம்ப நேரம் அருந்துவேன் இந்த குறைவான அளவுகளை. Beer என்றால் Foster, Heineken, Budweiser மற்றும் நம்ம Kingfisher Strong. வேற Brand எந்த காரணம் கொண்டும் தொடுவதுயில்லை. B'lore-ல் இந்த நாலு Brand-ல் எதாவது ஒண்று. வேறு எங்கு போனாலும் Kingfisher-ஐ தொட மாட்டேன். காரணம், நன்றாக இருக்காது. இந்த விதிமுறைகள் எந்த நிலையிலும் மீறுதல் இல்லை.

Temple of Delicious - a beautiful rack for Tequila.


நான் காலையிலேயே Beer வாங்க போனால் என்னோடு தங்கியிருக்கும் நண்பர்கள் காண்டு ஆயிடுவாங்க. ஒரு Beer வாங்கிட்டு வந்து, ரெண்டு மடக்கு உள்ள தள்ளிட்டு துணி துவைப்பேன். மீண்டும் ஒரு ரெண்டு மடக்கு தள்ளிட்டு ஒரு படம் பார்ப்பேன். அப்புறம் ஒரு ரெண்டு மடக்க போட்டுட்டு கொஞ்ச நேரம் தூங்குவேன். இப்படி காலை 11 மணிலேருந்து இரவு 7 மணிவரைக்கும் ஆட்டம் போடுவேன். என் நண்பர்கள் விதம் விதமா திட்டுவார்கள் 'ஒரு Beer-க்கு இவன் போடுற Scene இருக்கே, உலக கொடுமைடா சாமி' என்கிற வகையில். இந்த 'உலக விருது வாங்கிய மது அருந்தும் பழக்கத்தை' நிறுத்தி இரண்டு வருடம் ஆகிவிட்டது.



எங்களோட Atrocity-க்கு வருவோம். வெங்கட், பொன்ராஜ், முரளி, பார்த்திபன், முபாரக் & நானும் சேர்ந்து கோயம்புத்தூர் மாநகரத்தில் செய்தது. இரவு 7 மணிக்கு மேல் மது அருந்தலாம் என முடிவு செய்கிறோம். முபாரக்கும் நானும் மது கடையை நோக்கி. போகிற வழியில் முபாரக் ஒரு பெண்ணை பார்த்துவிடுகிறார். இருவரும் Signal பரிமாற்றம். அவருடன் வரும் எனக்கு இது எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு கூமுட்டை நான். மது கடைக்குதான் போறோம்னு நானும் நம்பி அவருடன். திடீரென்று ஒரு கண்காட்சி வளாகத்தில் நுழைகிறார். நான் 'என்ன முபாரக் இங்க வந்துட்டீங்க' என்றதற்கு, 'ஒரு பெண்ணை பார்த்தேன். அவர் இதுக்குள்ள வந்தார். நானும்' என்று பதில் தந்தார். ஒரு அரை மணிநேரம் வீணானது.

ஒலம்பஸ் Area-வில் பத்து கடைகள் ஏறி, இறங்கினோம் எனது மற்ற மூன்று Brand-ல் ஒண்ணாவது வாங்க. இல்லை. எங்கும். வேறு வழி இல்லாமல் 'சிங்கங்களின் Zingaro', Black Knight, Golconda மற்றும் Kalyani என கலந்துகட்டி வாங்கிகொண்டு நாங்கள் தங்கியிருந்த  வீடு வந்தோம். ரவுண்டு கட்டி உட்கார்ந்து ஆரம்பித்தோம். வாங்கியதில் இதுதான் உனக்கு சேரும் என்று ஒன்றை கையில் தந்தனர். ஆரம்பிக்கவே இல்லே, அதுக்குள்ள 'மொத்த' Side-Dish-ல பாதிய முடிச்சேன். 'இந்த பாவத்துக்கு இவனை இன்னிக்கி காவு கொடுக்க வேண்டியதுதான்' என்ற கொலை வெறியுடன் நண்பர்கள் கச்சேரிய ஆரம்பித்தனர்.

100ml முடிக்கவில்லை நான். அதுக்குள்ள தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. 'இதுக்குதான் மாற்றான் தோட்டத்து மல்லி வேண்டாம்னு நான் சொல்வது' என நிறுத்திவிட்டேன். பயங்கர காட்டம். அன்று இரவு 10 மணி K.P.N. பேருந்தில் தஞ்சாவூர் செல்வதற்கு வெங்கட்டும் நானும் Ticket வாங்கி இருந்தோம். காந்திபுரம் Office தான் Boardin' Point. காரைக்கால் வரை செல்லும் பேருந்து இது, கும்பகோணம் வழியாக. எனவே நான் உடை மாற்ற போனேன். நண்பர்கள் கச்சேரி ஆர்வத்தில். Pant மாட்ட முடியல. உடல் ஆட ஆரம்பித்துவிட்டது. ஆக, நான் Wall-ஐ பிடித்து கொண்டு Pant மாட்ட முயற்சி. இதை எதிரி-நண்பர்கள் பார்த்துவிட்டனர். பொன்ராஜ் 'எங்களை கேவலப்படுத்தாதடா. செவுத்த புடிச்சி இப்ப எதுக்கு நீ தள்ளிகிட்டு இருக்க. அந்த அளவுக்கா அடிச்ச, டோமரு' என திட்டியபடி எனக்கு உடை அணிவித்தான்.



ஒரு வழியா பேருந்துல ரெண்டு பேரும் ஏறிட்டோம். எங்களை Bike-ல் காந்திபுரம் கூட்டிவந்தது பொன்ராஜ் & முரளி. K.P.N. Office-ல, அங்கு மற்ற பேருந்துகளுக்கு Wait செய்தவர்கள் எல்லாம் 'யார் இந்த ரெண்டு அராத்துகள்' என்ற தொனியில் பார்த்தனர். எங்கள் பேருந்தின் உள்ளே நாங்கள் போகும்போது 'அப்படி ஒரு நிசப்தம்.' காரணங்கள் - எங்கள் உருவம், எங்கள் மது வாசனை, எனது 'ஆடும்' நிலை, நாங்கள் பேசிய 'ங்கொயால ஆங்கிலம்.' பேருந்து எடுக்கும் நேரத்தில் ஒருவனை காணவில்லை என்று பேருந்து காத்தியிருந்தது. அந்த ஒருவன் நானேதான். Beer வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. 100-99 அவசர அழைப்பு. நான் அடிச்ச Beer அளவை வெளிய சொன்னா கேவலம்.!! Main Driver & அவரது Assistant இருவரையும் Friend புடிச்சிகிட்டோம்.

காந்திபுரம் வந்ததிலேருந்து இருவரும் ஆங்கிலம். பேருந்துனில் நாங்க ரெண்டு பேர் மட்டுமே 'கஷ் புஷ்'னு அரட்டை. மெதுவாதான் பேசினோம். மற்றவர்கள் பேசாததால் எங்கள் முன், பின் இருந்தவர்களுக்கு நாங்கள் Nuisance. எங்கள் இரு இருக்கைகளின் நடுவே ஒரு புதிய தலை முளைத்தது பின்னாலிருந்து. ரொம்ப பாவமான குரலில் 'நீங்க ரெண்டு பேரும் எங்க போறீங்க'னு கேட்க, 'நாங்கள் தஞ்சாவூர் போகிறோம்'னு சொல்ல, அதற்கு அவர் 'அப்ப அதுவரைக்கும் இப்படிதானா.?! விதி வலியது' என்று சொல்ல, மப்பிலும் சிரித்து விட்டோம். இதைவிட பெரிய கொடுமை 20 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்தை நிறுத்த சொல்லி இருவரும் 100-99 அவசர அழைப்பு.

இந்த Incident-ஐ வெங்கட்டும் நானும் தினம் பேசி சிரிப்பது வழக்கம். எங்கள் அரட்டையை அன்று பொறுத்துக்கொண்ட முன், பின் இருக்கை பொறுமையாளர்களுக்கும், எங்கள் அவசர அழைப்பு நிறுத்தங்களை பொறுத்துக்கொண்ட சக பயணிகளுக்கும், எங்களை நல்லபடியாக கவனித்துக்கொண்ட - சொன்னதெல்லாம் செய்த அந்த இரு ஓட்டுனர் தகப்பன்சாமிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

Wednesday, April 28, 2010

இடுப்பை கிள்ள வேலைக்கு போறோம்.

இதோ இன்னுமொரு என் கிராமத்து-சுவையான-கதை.

உண்மையும், புனைவும் கலந்த சுவை.

தமிழமுதன் தாத்தா - பெரியார் அவர்களின் கொள்கைவாதி. தனது ஐந்து குழந்தைகளுக்கும் சுய மரியாதை திருமணம் செய்து வைத்தவர். தமிழ் ஆசிரியர். எப்பொழுதும் கருப்பு சட்டைதான். இவருடைய குழந்தைதான் 'வட்டி.' எனக்கு மாமன் முறை.



I.T.I. - தொழிற்படிப்பு பிரபலமாக இருந்த காலத்தில் எல்லோருக்கும் வாழ்வு தந்த Trainin' Institute. அரசு Institute என்பதால், இதன் மாணவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எண்பதுகளில் இங்கு படித்த பலர் இன்று நல்ல நிலைமைகளில். திருச்சி BHEL நிறுவனுத்தில், மற்றும் சில நிறுவனங்களில் இங்கு படித்த மாணவர்களை நீங்கள் இன்றும் பார்க்கலாம்.

Temple of learnin' - a view of our I.T.I.

ராமு (நண்பன், குடிகார சாத்தான் இவர்தான்) - பத்தாவதில் கோட்டம். 'வட்டி' மாமா - பத்தாவதிலா அல்லது +2-விலா கோட்டம் என்று எனக்கு ஞாபகம் இல்லை. டாக்டர் அண்ணன் +2-வில் கோட்டம். மற்றும் ஒரு நண்பர் சாமிநாதன் - இவரை நான் ஊரில் பார்த்ததே இல்லை. இந்த நால்வரில் 'வட்டி மாமா' தவிர மூவரும் சிலமுறை 'முயற்சி' (Attempt) செய்தவர்கள். ஆனால் தேர்ச்சி பெற முடியவில்லை. நான்கு பேரும் வாழ்க்கையில் தங்களது அடுத்த கட்டம் பற்றி கூடி பேசியும், சிந்தித்தும் (சில நேரங்களில், தனி தனியாக) ஒரு முடிவுக்கு வருகின்றனர். அது 'I.T.I. மாணவன் ஆகி நல்ல வேலைக்கு போவது' என்று. அவரவர் வீட்டில் சந்தோசம் 'நம்ம பிள்ளை உருப்பட போகுது, நல்ல புத்தி வந்துருச்சி' என.

நால்வரும் S.S.L.C. இல்ல +2-வில் கோட்டம். என்ன செய்வது என்று தடுமாறும் போது, எங்கள் ஊரின் All-in-All ஆறுமுகம் உதவிக்கு வருகிறார். எங்கள் ஊருக்கே Fake Certificates பற்றிய தகவல்களை முதன் முறையாக தருகிறார். இந்த புள்ளியில் நால்வரும் தங்களது வீட்டாரை 'உருப்பட போறோம்' திட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். சதுரங்க ஆட்டம் ஆரம்பம், AiA-ன் உதவியுடன். வீட்டாருக்கு சந்தேகம் வந்துடுச்சி 'பசங்க சில நாட்களாக திட்டத்தை பற்றி வீட்ல யாரிடமும் பேசுவது இல்லையே' என்று. எனவே அவர்கள் கேள்விகள் கேட்டால், இவர்கள் எப்படியோ சமாளித்து வந்துள்ளனர்.

FC வேலை முடிந்துவிட்டது. நால்வரும் AiA-க்கு ரகசிய 'பாராட்டு விழா' நடத்தி விட்டு, I.T.I. மாணவனாகவும் மாறிவிட்டனர். அவரவர் வீட்டிற்கு எதுவும் தெரியாது. கிராமம் என்பதால் அவர்களது குடும்பத்தினரை ஏமாற்றுவது சுலபமாக இருந்தது. 'எங்கடா நாலு பேரும் போறீங்க, சாயந்தரமா வீடு வர்றிங்க' என அவர்கள் கேட்டதற்கு, இவர்கள் சமாளித்து வந்துள்ளனர். Uniform அணிய வேண்டிய தினங்களில், ஊரின் கண்களிலிருந்து மறைந்த பிறகு அணிந்துகொண்டு போவது.



திருடனுக்கு தேள் கொட்டனுமே. கொட்டியும்விட்டது. ஒரு நல்ல நாளில் நால்வரும் Principal முன். 'என் Institute-லேயே உங்க கைவரிசையை காட்டி இருக்கீங்க. எவ்வளவு தில் உங்களுக்கு.!? ஒரு complaint கொடுத்தேன், நாலு பேரும் மாமியார் வீட்ல இருப்பீங்க' என்றதோடு நில்லாமல், அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அர்ச்சனை செய்ததோடு நிறைய அறிவுரைகளும். 'மாமியார் வீடு' என்ற சொல்லை கேட்டதில் 'வட்டி' மாமாவுக்கு 100-99 வர போறேன், வர போறேன் என்று signal.



Princi 'வட்டி' மாமாவிடம் ' நீ எந்த வருடம் Attempt எழுதினாய்?' என்கிற வினாவை போட, 'வர போறேன்' என்று சொல்லியது உண்மையில் வந்துவிட்டது. இவர்தான் எழுதவே இல்லையே. 'பதில் சொல்லுடா' என Princi அலற, சாமிநாதன் 'வட்டி' மாமாவின் இடுப்பில் ரகசியமாக கிள்ள, மாமா '87'  என்று பதில். 'அந்த அளவுக்கு நல்லா படிச்சி இருந்தா நீ இப்ப என் முன்னாடி நிக்க மாட்ட. என் பொறுமைய சோதிக்காம உண்மைய சொல்லுடா' என்றார் Princi. காரணம், 87-ல் மாமாவுக்கு 13 அல்லது 14 வயதுதான் இருக்கும். எனவே Princi கண்களை உருட்ட, சாமிநாதன் மாமாவின் இடுப்பில் கிள்ள, மாமா சொன்னது '89' என. சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில் கிள்ள, இந்த முறை '85' என பதில். Princi கோவத்தில் கண்களை நெருக்கி, பற்களை கடிக்க; சாமிநாதன் மாமாவின் இடுப்பை கிள்ள; மாமா சொன்னது '99'. Princi 'அப்ப சில வருடம் கழிச்சி நீ இங்க மறுபடியும் வருவியாடா?' என தனது நாக்கை சுழற்றுகிறார். சாமிநாதன் மீண்டும் மாமாவின் இடுப்பில். அப்பதான் மாமாவுக்கு புரியுது 'Advance-ஆ' போய்டோம்னு. மாமா இந்த முறை ஒரே அடியாக அடிக்கிறார் '83' என்று. Princi சிரிப்பதா, இல்ல இவனுங்களை அடிப்பதா என்ற பரமபதத்தில் 'வட்டி' மாமாவை நோக்க, 'இப்படியும் ஒருவனா' என்று சிரித்துவிடுகிறார். 'போய் ஒழுங்கா பொழப்ப பாருங்கப்பா' என மன்னித்து, ஆசிர்வதித்து அனுப்பிவிடுகிறார்.

இந்த விஷயம் மெல்ல ஊருக்கு தெரிந்துவிட்டது. டாக்டர் அண்ணனை பெரியப்பா 'நீ இனி வீட்ல இருக்க கூடாது. எங்காவது போய் பொழச்சிக்க' என்றதால் சென்னைக்கு போனது. ராமு இப்போ Cement Factory-ல Contract basis-ல வேலைக்கு போகிறார். சாமிநாதன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. சென்னையில் அல்லது கேரளாவில் எங்காவது இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆம், வீட்டை விட்டு போனவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. எனக்கும் அவர் யார் என்றே தெரியாமல் போய்விட்டது. 'வட்டி' மாமாவின் நிலைமைதான் Comedy. பெரியார் கொள்கைவாதியை எப்படி சமாளிப்பது.?! இரவு 12 மணிக்கு மேல் வீட்டின் திண்ணையில் வந்து படுப்பது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து எங்காவது போய் விடுவது. குளியல், உணவு எல்லாம் நண்பர்கள் வீட்டில். இந்த நாடகம் ஒரு மாதம் போல் ஓடியது. கிராமம் என்பதால் ஊர் முழுவதும் சொந்தங்கள். எனவே மாமா சமாளித்து வந்தார். தாத்தா ஒரு நாள் 3 மணிக்கெல்லாம் எழுந்து, போர்வையோடு கட்டிபோட்டு அடிக்க, அடிகள் ஒவ்வொன்றும் தகிடுதம்பாக விழ, மாமா கதற; ஊரே எழுந்து மாமாவின் கதறலை கேட்டது, சிரித்தபடி - பரிதாபம் - இரக்கம் காட்டியபடி.

Monday, April 19, 2010

உணர்வு, மூளை & மனசாட்சி இல்லா பதர்கள்.

April 8, 2008 11:48 AM    - இந்த தேதியில் எழுதிய கட்டுரையில் ஒரு Scotland-Yard கதை சொல்லி இருந்தேன். அதை மிஞ்சும் இன்னொரு கதை இதோ - - -

நமது 'நீதி'மன்றத்தில் நீதிபதி அவர்கள், குற்றவாளி கூண்டில் உள்ளவரிடம் 'உங்கள் மீது குற்றம் சாட்டபட்டுள்ளதற்க்கு உங்கள் வாதம் என்ன?' என்று கேட்கிறார். அவர் கேட்ட பதில் 'பசியால் வாடுகிறேன். சாப்பிட எதாவது கொடுங்களேன்' என. என்னடா குரல்தான் வருகிறது, ஆளை காணோமே என்று நீதிபதி தேடுகிறார் - ஒரு ஆறு வயது பொடிசு குற்றவாளி கூண்டில் நிற்கிறது. அந்த பொடிசு உண்மையாகவே வாடி போய் நிற்கிறது. நீதிபதி அந்த குட்டிக்கு உணவு வாங்கி வர சொல்லி, அந்த பிஞ்சுவின் பசியை போக்குகிறார்.


நடந்தது என்ன என்று உங்களுக்கு சொல்லுகிறேன்: இந்த பொடிசுவின் தந்தைக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கும் தகராறு. இது Police Case-ஆகி Court வரை வந்துடுச்சி. இந்த 'உலக அரசியல் தலைவர் படுகொலை' சதியில் அந்த பிஞ்சுக்கும் தொடர்பு உண்டு என குற்றவாளியாக்கப்பட்டு 3K.M. நடத்தி (அல்லது இழுத்து) அழைத்து வந்துள்ளனர் 'நீதி'மன்றம் வரை.

இந்த பொடிசு இதன் சத்துக்கு என்ன செய்து இருக்கும் இந்த Case-ல் குற்றவாளி என்று சேர்க்கும் அளவிற்கு? ஒரு குட்டி உருவத்தை & பிஞ்சு மனசை எப்படி 3K.M. நடத்தியே அழைத்து வந்தனர்? இந்த 'வெங்காயங்கள்' எல்லாம் எப்படி வேலைக்கு வராங்க? உண்மையில் 'பழுத்த கழிசாடைகள்.'

நீதிபதி சொன்ன தீர்ப்பு என்ன தெரியுமா? 'இந்த பொடிசு சம்பந்தப்பட்ட Case எவ்ளோ பெரியதாக இருந்தாலும் அதனை Dismiss செய்கிறேன்' என்பது அவரது தீர்ப்பு. Bravo, நீதிபதி அவர்களே. இது நடந்தது நமது இந்தியா என்று சொல்ல வேண்டியது இல்லை. மாநிலம் - உத்திரப்பிரதேசம்.

* * * * *

எம் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவிற்குள் நுழைய 'அனுமதி மறுக்கப்பட்டவர்களில்' ஒருவர் என அவரை Airport-லேயே திருப்பி அனுப்பிவிட்டனர் Malaysia-விற்கு.

திருமதி. பார்வதி வேலுப்பிள்ளை அவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது, இந்தியா வருவதற்கு. இது நடந்தது காலையில். அதே இரவு அந்த Visa-வுடன்  இந்தியா வர, தவறுதலாக Visa வழங்கிவிட்டோம் என்று அவரை திருப்பிய அனுப்பிவிட்டனர், அவர் வந்த விமானத்திலேயே. அவர் சிகிச்சைக்காக தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது. 12 மணி நேரத்தில் அரசியல் விளையாடிவிட்டது..!

In this file photo, Mr and Mrs Velupillai are seen with Mr and Mrs Prabhakaran and Mr Charles Antony.


இந்த விளையாட்டில் சம்பந்தபட்டவர்களுக்கு - காலமும், எம் மக்களும் மன்னிக்க மாட்டார்கள் உங்களை. நீங்கள் மனம் திருந்தி, மனசாட்சி உறுத்தலால் உழலும் போது உங்களை மன்னிக்க எம் மக்களும், காலமும் இல்லாமல் போயிருக்கும். அப்போது தெரியும் ஒரு இனம் பட்ட வேதனைகளும், வலிகளும்.

* * * * *

பழங்குடி மக்களுக்கு ஆசை, பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. காடும் காடு சார்ந்த இடமும் (வளமும்), மலையும் மலை சார்ந்த இடமும் (வளமும்) என அமைதியாக (நாம் அறியாத ஒண்று)வாழ்ந்தவர்களை Corporate காரர்களிடம் விற்றதால் வந்தது பிரச்னை. ஒரு நாள் அவர்களிடம் 'வாழ்வியல் ஆதாரங்கள்' எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடுங்கள் என்றால் எங்கு போவார்கள்? சில லட்சம் மக்கள் முள் வேலிக்குள், புரட்சி செய்ய கூடாது என்பதற்காக.

இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. தனது மண்ணின் சொந்த மக்களை வேறு எந்த நாடும் இந்த அளவிற்கு கொடுமை செய்து இருக்காது. Maiost-கள் போராடி வருகிறார்கள் இந்த அரசுக்கு எதிராக. Maiost-கள் இல்லை என்றால் பாதி இந்தியா விலை போயிருக்கும் எப்பொழுதோ. முழு இந்தியாவும் வெகு விரைவில்.

அரசுவின் படை வீரர்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல், போதிய அளவு உன்ன உணவு இல்லாமல், தங்க ஆரோக்கியமான Camp இல்லாமல், இல்லாமல் - இல்லாமல் - இல்லாமல், இறுதியில் Maiost-களுக்கு எதிரான போரில் ஆளே இல்லாமல் போகிறார்கள். Dantewada Attack-ன் போது அரசு படை வீரர்களின் Camp-ன் நிலை இதோ - படுப்பதற்கு, சமைப்பதற்கு, ஓய்வு எடுப்பதற்கு, தங்கள் அனைத்து உடமைகளையும் வைப்பதற்கு, -ற்கு -ற்கு - ற்கு என ஒரே Camp-ஐ  உபயோகப்படுத்தி உள்ளனர். இவர்கள் உயிர் போனாலும் சொற்பமான ஓய்வுதியம். இந்த அரசு என்று இல்லை, எந்த அரசும் ஏன் இந்த அப்பாவி & நெஞ்சுரம் மிகுந்த வீரர்களின் நலனில் அக்கறை எடுத்து கொள்வதில்லை???

'ஐயா, எங்கள் நாட்டின் அரசு வீரர்களே. நீங்கள்தான் வாழும் தெய்வங்கள். உங்கள் உயிரை தந்து எங்களை காப்பதால். நீங்கள் இந்த நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் உங்கள் உயிர் தந்து எங்களை காக்க நிற்கிறீர்களோ, அந்த திசை எல்லாம் நோக்கி உங்களை நான்/நாங்கள் வணங்குகிறேன்/றோம்.'

Maiost-களுடன் அரசும் & அதிகாரிகளும் Negotiate செய்யவேண்டிய நேரம் இது. உயிர் Maiost-கள் பக்கம் போனாலும், அரசு தரப்பில் போனாலும் எங்கோ ஒரு மூலையில் அவரை நம்பி இருக்கும் பல உயிர்கள் மீளாத்துயரில் வாடுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம். இது செய்த தப்புகளை திருத்திக்கொள்ளும் நேரம். வாய்ப்பை தவற விட வேண்டாம்.

This file picture shows you the Naxal or Maoist Corridor. This picture was illustrated in 2007. Today, the corridor is much bigger than you think.

தமிழன் Vs சக தமிழன்.

முன்பு எழுதிய & Orkut குழுமத்திற்கு அனுப்பிய தேதியும் தந்து உள்ளேன்.

April 8, 2008 11:48 AM

எனது அபிமான நடிகர் திரு. ரகுவரன் அவர்கள் இழப்பு எதிர்பாரா ஒன்று. Style + திறமையான நடிப்பு என்றால் அது திரு. ரகுவரன் அவர்கள்தான்.

~ Hogenakkal குடிநீர் திட்டம் மீதான பிரச்னை: இங்கு எல்லோரும் ஒன்றுபட்டு போராடி வரும் வேளையில், சில பல அரசியல் காரணங்களால் போராட்டம் வேண்டாம் என திட்டம் ஒத்தி வைக்கப் படுகிறது, நமது தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால். அப்படி என்றால், இதற்காக போராடிய மக்கள் முட்டாள்களா..? அல்லது தமிழ் உணர்வுடன் பேசி கன்னட மக்களை பகைத்து கொண்ட திரு. ரஜினி அவர்கள் இளிச்சவாயரா..? இப்படி ஏதோ ஓர்/சில/பல அரசியல் நாடகத்தினால்தான் காவேரி நதி பிரச்சினை இன்னும் நடந்து வருகிறது. அதே நாடகம் இந்த விசயத்திலும். இந்த உலக மக்களுக்கு ஓர் செய்தி: நீங்கள் தமிழனை தாக்க வேண்டாம். தமிழன், சக தமிழனால் அழிந்து போவான். மற்ற மக்கள் ஏன் தேவை இல்லாமல் தமிழனை தாக்கி கொண்டு..?

~ ~ Common-sense/கடமை..? இதில் எது high-priority உள்ளது..? It depends. நம் சக மனிதன் ஒருவர் தனது தந்தை இருதய வலியால் துடிக்க, தனது சொந்த Auto-வில் மருத்துவமனை நோக்கி - தாய் மற்றும் இருதய வலியால் துடிக்கும் தந்தையும் Auto-வில். ஓர் இடத்தில் Traffic-signal. பரபரப்பில் அவர் கடந்து செல்ல, அங்கு Duty பார்த்த Scotland-yard கடமை வீரர் (Police தான். வேற யாரு?)  அந்த மகனை சட்டம் என்ற பெயரில் கொடுமை படுத்த, இதனைப் பார்த்த தந்தை 'என்னால் எனது மகன் துன்பம் அனுபவிக்கிறாரே' என அந்த Auto-விலேயே தனது மனைவி மடியில் உயிர் நீத்தார். இந்த புல்லரிக்கும் கடமை தவறாத கர்மவீரர் காட்சி இங்கு நடந்தது. இந்த பழுத்த கழிசாடைகள் இருந்து என்ன பயன்..?

இந்த பகுதி மக்கள் அந்த Scotland-Yard (மூளை இல்லா Police)  வீரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியல் செய்தனர். அது எப்படி? சுதந்திர இந்தியாவில் ஒரு சாதாரண குடிமகன் நீதி கிடைக்க போராடி, அது வெற்றியும் பெற்று விட்டால், நீதி-தேவதை தனது இந்திய குடியுரிமையை தூக்கி எறிந்திவிடுவாள் அல்லவா.!?


~ ~ ~ சமீபத்தில் நடந்து முடிந்த கோவை CPI-M மாநாடு நிகழ்ச்சிகளை (சில நண்பர்களையும்) காண போயிருந்தேன். இந்த மாநாட்டில் சில அரிய புகைப்படங்கள் என் கண்ணில் பட்டது. அவைகளில் சில எனது ஆல்பத்தில் உள்ளது.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 4:24 AM

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: நடு நிலையுடன் வாசியுங்கள். நிறைய சொல்லி குறைவாக புரிந்து கொண்டால்..? குறைவாக சொல்லி தவறாக புரிந்து கொண்டால்..? ஆம், இதில் எதை சொல்வது அல்லது எதை விடுவது என்று புரியவில்லை.


ஒரு சின்ன தகவல்: நாம் எல்லோரும் 'வக்கிரம்' கலந்த எண்ணம் கொண்ட மனிதர்கள். நாம் அதனை காதல்/காமம் என்று முலாம் பூசி சொல்லலாம். இந்த 'வக்கிரம்' அளவு அதிகரிக்கும் போது/எப்பொழுதும் அதிக அளவு உள்ள, அவர்கள் வெறி கொண்ட மனிதர்களாக சமுதாயத்திற்கு ஒவ்வாத செய்யல் செய்கின்றனர். நாம் தேவையான அளவில் இந்த எண்ணம் உள்ளவர்கள் என்பதால் 'நல்லவர்கள்.' கொடுமைதான். வக்கிரம் அதிகமாக உள்ளவர்கள், சரி செய்யப்பட வேண்டியவர்கள்.

பெண்கள் செய்வது இல்லையா..? உண்டு. அவர்களால் ஆண்களை போல தாக்குதல் தொடுக்க முடியாது. ஆனாலும், ஆண்கள் மீதான அவர்களது 'பாலியல் வன்முறை' நடக்கிறது. மிக குறைவாக. இது மிக குறைவு என்பதால், வெளியே தெரிவது இல்லை. அவர்களது இன்னோர் வழி..? Mind Game. இதனால் வெளி உலகம் இதனை தெரியாத போல் இருந்து விடும். ஒரு சின்ன உதாரணம்: ஒரு ஆண் தன்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டதாக சொன்னால், சக ஆண்களே கிண்டல் செய்வார்கள். முதல் கேள்வி: நீயெல்லாம் ஒரு ஆம்பளையா..? ஒரு வேளை எதிர் காலத்தில் நடக்கலாம், இவ்வாறு: என்னை ஒரு பெண் மோசம் செய்து விட்டார் என்று காவல் துறையிடம் புகார் கொடுக்கும் அளவிற்கு. இந்த 'பரிணாம வளர்ச்சி' நடக்க எத்தனை 100/1000 கோடி வருடங்கள் ஆகும் என்று கூற முடியாது.


ஒரு விசயம் மறுக்க முடியாது: இந்த லோகத்தில் 'ஆணின் உலகம் பெண்ணை சார்ந்தது- 'பெண்ணின் உலகம் ஆண் சார்ந்தது- விதிவிலக்கு இருக்கலாம். பிறகு ஏன் இந்த 'வன்முறை'? இந்த தப்பு எப்பொழுது சரி செய்யப்படும்..? ஆகாது. உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சம்பவமாவது நடக்கும்.

ஒரு இயற்கை/அறிவியல் சார்ந்த உண்மை: அது எப்படி ஆண் ஒரு பெண்ணை பார்த்த உடன் 'ஏதேதோ' எண்ணம் கொள்கிறான்.!? இது எப்பொழுதும் அல்ல. சில நேரங்களில். காரணங்கள்: ஒரு பெண்ணின் உடல் & மனது இயங்கும் பாணி, காதல்/காமம் போன்ற விசயங்களுக்கு Respond செய்யும் விதம், இவைகளுக்கு மூளை இயங்கும் விதம் எல்லாம் ஒரு ஆண் விசயத்தில் நடப்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இன்னொரு விசயமும் உள்ளது. இதனை நான் கூற விரும்பவில்லை. காரணம் - புரிந்து கொள்ள எல்லோரும் தயார் என்று எனக்கு தோன்றவில்லை. இது ரொம்ப Sensitive.

இதன் இரண்டாம் பாகத்தில் உங்களை சந்திக்கிறேன்.

குறிப்பு: இதனை March 24, 2008 அன்று எழுதியுள்ளேன். இன்று வரை அதான் இரண்டாம் பாகம் எழுதவில்லை. காரணம் - நம் மக்களின் Hypocrisy.

* * * * *
September 1, 2008 2:46 PM

An Infant, just a day old, struggles to open his eyes. Flies n Ants were all over his body when they found him under a tree. Ms Mala, mother of two, took the baby to the University Health Centre. Afterwards, Police took the baby to Panacea Hospital. When the baby was brought to the hospital, he came with insect bites on his face. His sugar was low. Authorities suspected a damage in his Cornea.

Do you friends understand what happened to the baby..? The baby was abandoned by his parents n placed under a tree at BU's campus.


If they (parents) had an intention to abandon their baby, they should have given the baby to any one of the charity organisations which controlled by Govt. (I may be sounded goose. If you decided to abandon, there is no point to look after the baby anymore). Therefore, they (his parents) did a fantastic job. If they did it intentionally, as sayin' goes, I wanna call them 'Fu***n' Machines.' (Sorry for my F).

Ms Mala has been lookin' after the baby since Friday. Hats off to Ms Mala. Bravo..!

Thursday, April 15, 2010

பகடி செய்வோம்.

பகடி எழுத்தில் நுண்ணதிர்வுகள் இருக்கும். உளவியல் (சார்ந்த) விசயமும் இருக்கும்.

சென்னையில் இருந்த காலத்தில், நண்பன் காண்டீபன் உடன் வாசம் செய்தேன். நான் கொஞ்சம் கிறுக்கு பாடகன். பிடித்த பாடல்களை வாயில் music-உடன் பாடுவது வழக்கம். 'டேய், படுத்தாதடா. இதுல வாயால Music வேற போடுற' என்பான். அதிலும் சில நேரம் நாம் (நம்மையும் அறியாமல்) ஒரே பாடலை மட்டுமே சில மணி நேரம் பாடிக் கொண்டிருப்போம். அல்லது நாள் முழுதும். இந்த விஷயம் எல்லோர் வாழ்விலும் நடந்திருக்கும்.

ஒரு நாள் மாலை 6 மணியளவில் 'வா, அடையார் போவோம்' என்றான். ஏதோ Mobile Bill-ல் பிரச்சினை இருப்பதாகவும், அவனது Network Service Provider-ன் outlet சென்று அதை சரி செய்ய வேண்டும் என்றும், நீ வந்தால் நல்லது என்றும் சொன்னான். 'சைதாபேட்டை போவோம்டா. நமக்கு அதாண்டா பக்கம். மேலும் Bus-Stop பக்கத்துலேயே உன்னோட NSP-ன் outlet இருக்குடா' என்றேன் நான். அவன் 'அது எனக்கும் தெரியும். ஆனால் Customer Care-ல என்னை அடையார் வர சொன்னாங்க' என்று சொன்னான்.

வேளச்சேரி விஜய நகரில் பேருந்து பிடித்து அடையார் நோக்கி. நான் 6 மணி முதல் 'கஜினி' படத்தின் 'சுட்டும் விழி சுடரே' பாடலை தொடர்ந்து பாடியபடியும், music போட்டபடியும். அடையார் Bus-stop-ல் இறங்கி, NSP-ன் விலாசம் சொல்லி ஒரு Auto ஓட்டுனரிடம் விசாரித்தான். அவர் 'நேரா போய் right-ல திரும்புங்க' என்று சொன்னார்கள். நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தபடி. Right-ல திரும்பினோம். (எங்களை கவனமாக பின் தொடர்ந்து வரவும்). அங்கு ஒருவரிடம் விலாசம் விசாரித்தான். கிடைத்த பதில் 'நேரா போங்க.' நான் பாடலையும், இசையும் போட்டபடி.

இப்படி குறைந்தது 7 பேரிடம் விசாரித்து இருப்போம். அந்த முதல் Auto ஓட்டுனர் தவிர, மீதி எல்லோரும் 'நேரா போங்க' என்ற பதில் மட்டுமே தந்தனர். நான் பாடலையும், இசையையும் விடவில்லை. ஒரு கட்டத்தில் 'டேய், Landmark சொல்லி விசாரிடா. அப்பதான் சரியா சொல்லுவாங்க' என்றேன். அதற்கு 'நான் Landmark பற்றி Customer Care-ல  கேட்கலை' என்றான். மீண்டும் நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தேன். சிறிது தூரம் வந்ததும் 'சுட்டும் விழி சுடரே ரே ரே ரே ரே' என்று நவரசங்களையும் (மகிழ்ச்சி தவிர) கொட்டி பாடினேன். காரணம் என் கண்ணில் பட்டது 'தியாகராஜா' Theatre.

'டேய், என்னடா இது. திருவான்மியூர்-ல இருக்கோம்டா. அடையார்ல இருந்து நடந்தே வந்துட்டோம்டா. ஏன்டா, ஒழுங்கா விலாசம் வாங்க மாட்டியாடா உன்னோட NSP-கிட்ட. விலாசம் சொன்ன ஒருத்தராவது 'இது திருவான்மியூர்ல இருக்குங்க-னு' சொல்லி இருக்கலாமேடா. அது எப்படிடா எல்லாம் ஒரே மாதிரி விலாசம் சொன்னாங்க..! ரொம்ப நல்லா இருக்குடா' என்றேன். சிரித்தான், பேசவில்லை அவன். நான் பாடலையும், இசையையும் தொடர்ந்தேன்.

மீண்டும் கோவம் வர 'டேய், விஜய நகர்ல M70 புடிச்சி, S R P Tools வழியா 5 நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு, 21L புடிச்சி 6 மணிலேர்ந்து 9 மணி வரை வந்துருக்கோம்டா' என்று கத்தினேன். பிறகு பாடலும், இசையும் தொடர்ந்தது.

Outlet உள்ளே போனால் 'we are closed' என்றனர். நடந்து வந்ததில் Time's up. பாடலும், இசையும் நின்றது. 'டேய், எவ்ளோ நேரம் Business Hours-னு கேட்டு தொலைக்க  மாட்டியாடா' என அடி வயிற்றில் இருந்து நான் கேட்டேன். அவன் பேசவில்லை.  மீண்டும் இசையும், பாடலும். இப்பொழுது குரலில் உற்சாகம் இல்லை. ஆனால், மற்ற ரசங்கள் எல்லாம் இருந்தன.



ஜெயந்தி Theatre அருகே வந்து Bus பிடித்து வேளச்சேரி விஜய நகர் வந்தோம். பாடலும், இசையும் தொடர்ந்து ஓடுகிறது. ஒரு உணவகத்தில் சாப்பிட்டோம். இசையும், பாடலும். நடந்து ராஜலக்ஷ்மி Theatre வரை. நாங்கள் உள்ளே வரவும், Ticket கொடுக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நல்ல Seat தேடி பிடித்தோம். இன்னமும் பாடலும், இசையும்.

கூறினான் 'டேய், நிறுத்துடா. ரொம்ப பண்ணாத. Music வேற' என்று. நிறுத்திவிட்டேன். படம் முடிந்தது.

பிறகு பொன்ராஜ், செந்தில், காண்டீபன், நான், ஸ்ரீகணேஷ், மணிமாறன் எல்லோரும் Bangalore-க்கு வேலை கிடைத்து போனோம். நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில். பூபாலன் என்பவர் எங்க வீட்டிற்கு தினமும் மூன்று வேலை வந்து போவார். காண்டீபன் Colleague. சென்னையில் இவனுடன் ஒரே Company-ல் வேலை பார்த்தவர். இப்போது இங்கும் இவனது Colleague. பக்கத்துக்கு தெருவில் எங்கள் மற்ற மூன்று நண்பர்களுடன் ஒரு வீட்டில் இவர் தங்கி இருந்தார். இந்த Area முழுக்க எங்கள் நண்பர்கள்.

வேலை இல்லாத நாட்களில் ஒண்று கூடினால் அலப்பறைதான். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பூபாலன் 'Mike மோகன்' என்று காண்டீபன்-ஐ அழைத்தார். பெயர் காரணம் கேட்க, இவனுடன் வேலை பார்க்கும் ஸ்ரீகணேஷ், மணிமாறன், பூபாலன் மூவரும் சொன்னார்கள் 'Office-ல எப்ப பார்த்தாலும் பாட்டு பாடுவான். அதைவிட, அந்த பாட்டுக்கு வாயால் Music போடுவான் பாருங்க. கலகலனு இருக்கும் Office-ல. எல்லாம் இவனை பயங்கரமா கலாய்ப்போம்' என்று. அடப்பாவி நண்பா.

பிறகு அடையார் மற்றும் 'சுட்டும் விழி சுடரே' விஷயத்தை நான் கூற, தர்பார் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

Wednesday, April 14, 2010

கிறுக்கல்கள். உணர்வுகள். முட்டாள்தனம்.

என் பழைய கிறுக்கல்கள் உங்களுக்காக. எழுதிய மற்றும் Orkut குழுமத்திற்கு அனுப்பிய  தேதியுடன்.

December 31, 2007 8:24 PM

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது உலக மக்களுக்கு. சில நாட்கள் எழுதாமல் இருந்தேன். எல்லாம் சோம்பல் காரணமாக. இந்த பகுதியில் சில கருத்துகள் பெண்கள்/பெண்ணியல் பற்றியது. எனவே என் தோழிகள் அந்த சிந்தனைகளை நடு நிலையுடன் வாசித்து, ஏதேனும் தவறு/தப்பு இருப்பின் சுட்டி காட்டி எனது அறிவு கண்ணை திறக்க வேண்டுகிறேன்.

1. இன்று (31st Dec') காலை செய்திதாளை பார்த்தால் (Times of India, Bengaluru) திரு பிரபாகரன் அவர்கள் இறந்திருக்கலாம்/கூடும் என செய்தி. இந்த கூடும்/லாம் போன்ற செய்திகளை (திரு. பிரபாகரன் போன்றவர்கள் விசயத்தில்) செய்திதாள்கள் தவிர்ப்பது நல்லது. சில மக்களுக்கு அவர் தேவைப்படுகிறார். என் மக்களின் உணர்வுகளுடன் விளையாடி, அவர்களை மனசு கஷ்டப்பட வைக்கவேண்டாம்.

2. இலங்கை, ஃபீஜி தீவு, மலேசியா, நம்ம கர்நாடக மண் எங்கும் தமிழன் ஒரு Target-ஆக ஏன் ஆக்கப்படுகிறான். எல்லா மண்ணிலும் பல கலாசாரம் & பண்பாடு & Customs & பலதரப்பட்ட மக்கள் என வாழ்க்கை முறை இருக்கும். ஆனால், ஏன் தமிழன் மட்டும்..? உலக மக்களுக்கு ஒரு விண்ணப்பம்/வேண்டுகோள்: தமிழனது சிறப்பு & பண்பாடு & திறமை & தனித்தன்மை, etc. நீங்கள் மதிக்கவேண்டாம் அல்லது மிதிக்கவேண்டாம். தமிழ் மக்களை உங்களைப் போல் ஒரு மனித இனம் என்று அவர்களது உணர்வுகளை மதித்தால் போதுமானது.



3. Dupatta or Dress Code ஒரு பிரச்சனையை சிண்டு முடித்து உள்ளது. ஆண்கள், பெண்களை நல்ல உடை உடுத்த சொன்னாலும் & சொல்லாமல் விட்டாலும் பிரச்சினை. உடை உங்கள் சொந்த பிரச்சினை. Moreover, it is one of the primitive rights of Men & Women. At times, Dress Code is a sign of Gen X gap. ஆனால், சில உடைகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட மரியாதை உள்ளது. அது பெண்களுக்கும் தெரியும். Likewise, இடம் & பொருள் தகுந்தாற் போல் Dress Code மாறும். To crown in all, is to improve the moral of.

சில பெண் புரட்சியாளர்களுக்கு ஆண்களை எதிர்ப்பது ஒரு புரட்சி. ஒரு கேள்வி: இந்த லோகத்தில் எந்த பெண்ணும் இது வரை எந்த ஆண்மகனையும் ஏமாற்றியது இல்லையா..? அல்லது, ஊருக்கு உழைத்த உத்தம தலைவர்கள் பெண்களை எதிர்த்தா போராடி புகழ் பெற்றனர்..?

ஒரு கொசுறு செய்தி: இது வரை எந்த கடவுளும் பெண்களின் இயற்கை நிகழ்வின் போது தனது ஆலயத்தின் உள் வர கூடாது என சொன்னது இல்லை. சில மனிதர்கள் சொன்ன இந்த (கிறுக்கு) செய்தியால் அல்லது உருவாக்கிய மூட நம்பிக்கையால், நீங்கள் கடவுளை புறக்கணித்தால் அது முட்டாள்தனம். பெரிய புரட்சி அல்ல. அதற்கு பதில், பெண்களை ஆலயத்தின் உள் இயற்கை நிகழ்வின் போதும் அனுமதிக்க போராடி இருந்தால் அது புரட்சி. இந்த கருத்து யாருக்கு என்று சில மக்களுக்கு தெரியும். மேலும் இது தனிப்பட்ட விமர்சனம் அல்ல. நான் அவரை கேட்டுக் கொள்வது: ஆண்டவன் என்றும் மனிதனிடம், எனக்கு இது & அது செய் என்றும் - இவற்றை செய்தால் நான் உனக்கு நீ வேண்டும் சிலவற்றை தருகிறேன் என்றும் சொன்னது இல்லை. எனவே சில கிறுக்கு மனிதர்களை & கிறுக்கு செய்யல்களை எதிர்த்து போராடவும்.

இந்த தனிப்பட்ட விசயததிற்கு திரு. பாமரன், திரு. பாலு மகேந்திரா போன்றோர் சண்டை போடவில்லை என்று அவருக்கு வருத்தம். ஒரு சினிமா வசனம் (நம்ம மக்களுக்கு சினிமா மூலம் கருத்து பிடிக்கும்): ஆச்சி மனோராமா சொன்ன வசனம் (எந்த சினிமா என்று எனக்கு தெரியாது): "என் பாவாடை அவிழ்ந்து விழுந்தது தப்பு இல்லை. ஆனால் அதை அவன் பார்த்ததுதான் தப்பு." எனவே, உன்னாலே உன்னாலே படமாவது பாருங்க. சும்மா எல்லாத்துக்கும் ஆண்களை வசை பாடாதீர்கள்.

மேலும் நாம் எல்லோரும் (அட, இந்த பரட்டையும் சேர்த்து) உடை நமக்கே நமக்காகவா உடுததுகிறோம்..! இல்லை. மற்றவர்கள் admire பண்ண வேண்டும் என்ற ஒரு எண்ணமும் உண்டு அல்லவா..! பிறகு ஏன் இந்த Hypocrisy.!? Please, don't do any over react.

4. 2007 உங்களுக்கு என்ன பண்ணியது என நான் சொல்ல முடியாது. சரி நாம் 2007-ல மத்தவங்களுக்கு என்ன செய்தோம்..? இந்த சிந்தனையுடன் 2008-ஐ துவக்குவோம். இந்த 2008-ஐ மட்டுமல்ல. வாழும்வரை. அட நான் தப்புகளும் செய்து உள்ளேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டேன். எனவே வாருங்கள் சிறப்பான எதிர்காலம் செய்வோம்.

இந்த பொறுக்கி விடை பெறுகிறேன், இந்த வருடத்தின் கடைசி கிறுக்கல்களுடன்.

* * * * *
February 5, 2008 8:39 PM

1. இன்னும் 20/25 வருடங்களுக்குப் பிறகு அரசியல் செய்ய வரும் ராஜாக்கள், நான் திரு. M.G.R. அவர்களின் வாரிசு என்று சொன்னால் ஒரு Vote-கூட விழாது, அந்த ராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் விதிவிலக்கு. திரு. M.G.R. அவர்கள் ஒரு சிறந்த மனிதர். அதாவது, நல்ல பண்புகள் கொண்டவர். ஆனால், Administration Elements-ல் அவர் சோபிக்கவில்லை. பிறகு எதற்கு இந்த வாரிசு போட்டி? (சரத்குமார், விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க. கட்சியின் ஜெயலலிதா அவர்கள்).   நான், சிலர் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார்கள் என்று எதிர் பார்த்தால், வாரிசு சண்டை நடந்து கொண்டுள்ளது. இந்த சண்டை முடிந்து, மக்களுக்கு நல்லது செய்ய வரும்போது, குதிரை கொம்பு முளைத்து ஒரு புதிய உயிரினம் உலகிற்கு வந்து இருக்கும். போங்கப்பா, நீங்களும் உங்க வாரிசு அரசியலும்..!





2. Divide n Rule..! 'வெள்ளையனே வெளியேறு' என்று முழங்கி விடுதலை வாங்கினோம். இன்னும் சில வாங்கி உள்ளோம்: ஆங்கில மோகம் + நமது Traditional Values-ஐ தொலைத்தது + இத்யாதி + இத்யாதி + Last but not least: Divide n Rule. சில அரசியல்வாதிகள் இந்த Principle-ஐ இன்னும் பின்பற்றி வருகின்றனர். பார்க்க: North Indian crisis in Mumbai. இந்த கேடு கேட்ட அரசியல்வாதிகளை குடியுரிமை நீக்கி தண்டிக்க வேண்டும். இந்த மாதிரி விசமம் செய்யும் மக்கள் விசயத்தில், We need un-compromisin' Integrity.




3. புகை: Swiss, Norway, Sweden மற்றும் சில நாடுகளில் புகையின் தீமை சொல்லும் படங்களை Pack-மீது போட சொல்லி அந்த நாட்டு அரசுகள் சட்டம் போட, இன்று புகைக்கும் பழக்கம் ஓர் அளவிற்கு குறைந்து உள்ளது. அதை நமது மத்திய அரசு செய்யாது. காரணம்: வருமானம் போய்விடும் அல்லவா.




இந்த பொறுக்கி விடை பெறுகிறேன்.

* * * * *
March 24, 2008 1:37 AM

திருவண்ணாமலையில்  ஒரு 3 நாட்கள் இருந்து அண்ணாமலை அவர்களை தரிசித்த ஒரு நாள், திரு. சுஜாதா அவர்கள் மறைந்த செய்தி. நெஞ்சம் கனத்தது உண்மை. எனக்கு சில விசயங்களில் உலகம் புரிய வைத்த ஆசான்.

~ ஒரு 2 வருட இடைவெளிக்கு பிறகு, தமிழக பேருந்துகளில் பயணம் செய்யும் வாய்ப்பு. இங்கிருந்து திருவண்ணாமலைக்கு தமிழக அரசு பேருந்தில் சென்றேன். வரும் போதும். திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் சொல்ல வேண்டாம். இந்த தருணங்களில், நான் பார்த்த ஒரு விசயம்: ஏன் தமிழக அரசு பேருந்துகளில் திருக்குறள் அழிக்கப்பட்டு நமது முதல்வர் சொன்ன ஒரு விசயம் உள்ளது..?

நமது முதல்வரின் கருத்துக்கு, திருக்குறள் அழிக்கப்பட வேண்டுமா..? நமது முதல்வர் அவர்கள் விளம்பரம், கட்-அவுட் கலாசாரம், இத்யாதி: விசயங்களுக்கு முற்று புள்ளி வைக்க முதல் அடி எடுத்து வைத்து இருக்கும் வேளையில், இந்த விசயம் சிறிது வருத்தம் தருகிறது.




~ ~ ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு: Etiquette. இது நமது அரசு பேருந்துகளில் பணி புரியும் சில நடுத்துனர் & ஓட்டுனர்களுக்கு தெரிவதில்லை. காரணம்: திருவண்ணாமலைக்கு  இங்கிருந்து போன பேருந்தில், திரைப்படம் (அய்யோ) ஒலி-ஒளி'பட்டது. நேரம் கடந்தது. சிலர் நிறுத்துமாறு விண்ணப்பம். நடக்கவில்லை. நான் முன் இருக்கையில் இருந்த நடத்துனரிடம், ஒலி அளவை குறைக்க விண்ணப்பம். ஒலி அளவு ஏற்றப்பட்டது. என்ன ஒரு முரண். பிறகு எனக்கு ஒரு ஐயம்: இந்த திரைப்படம் ஓட்டுனர் உறங்க கூடாது என மிகுந்த ஒலியுடன் ஒளிபரப்ப படுகிறதோ என்று.




~ ~ ~ தமிழ்க அரசு மூன்றாம் பால் இனத்தை மதித்து அவர்களுக்கு 'T' என்று முத்திரை உள்ள குடும்ப அட்டை (Ration-Card) தந்தது மகிழ்ச்சி. அவர்களை மதிக்க ஆரம்பித்தால் அவர்கள் நல்ல வாழ்வுக்கு திரும்புவர். நாம் ஆண்/பெண் என்ற போதும் தப்புகள் இல்லாமலா வாழ்கிறோம்..? ஒரு ஐயம்: இந்த 'T' அவர்கள் வாழ்நாள் முழுமைக்குமா அல்லது அந்த பால் வேறுபாடு முழுதாக அங்கீகரீக்கப்பட்டு சில நாட்களில் ஆண் அல்லது பெண் என்று மதிககப்படுவார்களா..?

இந்த பொறுக்கி விடைபெறுகிறேன்.

Sunday, April 11, 2010

Our soil ain't for SALE. Stay away, buggers.

The toxins produced by Bacillus thuringienis (Bt) were identified long ago and they became part of an integrated pest management (an alternative to chemical control of insects) of various food and non-food crops includin' cotton.

Experts in ecology, nutrition and toxicology also documented the impact of these formulations on human health, besides other detrimental factors they create in the environment. Hence, it is incorrect to state that Bt. is safe in all respects.

The era of Bt. crops started in India durin' 2001. Please, remember that the failure of various groups of insecticides (organo-chlorines, organo-phosphates, carbamates, synthetic phrethroids, neonicotinoids, avermetins, spinosins, etc) that were periodically claimed as wonderful (miracle) tools of pest management until their negative sides started surfacin'.

The existin' technologies in Indian agriculture are in-sufficient to reduce the impact of weather aberrations: extreme drought and inundative rains and degraded soils. Many bio-technology experts frequently highlight the role of new approach to solvin' such problems of dire need for the small and marginal farmers. But nothin' has emerged so far.

Experts in Bio-technology or molecular biology claim that the ecology, includin' the behavior of major insect pests of cotton or brinjal, was well understood. Since the negative sides of Bt. are well understood, they could not predict the threat of 'selection pressure' through the pink bollworm in cotton and the fruit borer in brinjal.

Source: A professor at ANGR Agricultural University, AP.



More on negative sides of Bt.
- - -
As for the toxin content, the revelations of the European and American scientists aired in their papers and submitted to the Genetical Engineerin' Approval Committee (GEAC) and the science journal, Nature, are appallin'.

Accordin' to the fact, the experiments conducted with Bt. brinjal on livin' things such as rats, goats and cows revealed a host of problems - adverse changes in the physical metabolism, change in the blood-clottin' time, decrease in liver weight, reduction in water intake, decrease in appetite, non-responsiveness to antibiotics and occurrence of diarrhoea.



The body of Doctors for Food and Bio Safety, which has sent its findings to the GEAC, objected to the introduction of the new Bt. brinjal.
- - -

Buggers (who involved in this conspiracy) - we request you DO NOT make our soil as INFERTILITY. We need our brinjal and it is enough for us. If you buggers want money from those Nuke-the-People-in-India-by-Multi National Companies, please find an any other option which will not kill our People and Soil in India. Go away, BUGGERS.

Thursday, April 8, 2010

மயானத்தில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்.

December 26, 2009 12:16 PM (on this date I wrote this article and sent it to my Orkut Groups)
இது வரை, நமது இனத்தை அழிக்க உதவினோம். மீனவர்கள் வாழ்வில் 'சுனாமி' விட்டோம். (இந்த சட்டத்தை இயற்றிய 'உலக அறிவாளி' யாரோ.!? மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க விரும்பினால்... என்று வசனம் வேறு). மீனவர்கள் கடலில் மீன் பிடிக்காமல், Shriya Saran உடன் Item Dance போடவா போவார்கள்.!?

சரியான ஆதாரம் இல்லாமல் Dr Binayak Sen-ஐ பாடுபடுத்தினோம். திருமதி. நளினி முருகன் அவர்களின் வாழ்வில் 'குஷ்பூ தமிழ்'-ஐ விட்டோம். பதவிக்கு டெல்லி போனோம். தமிழன் வாழ்வுக்கு கடற்கரையில் 'அரை நாள்' காற்று வாங்கினோம். இந்திய வளங்களை அந்நியனுக்கு விற்றோம். நமது தாய்மண்ணை அவனது 'கழிவு' கொட்டும் சாக்கடை ஆக்கினோம். சக இந்தியனை கொன்று குவித்தோம், பல பிரிவினை காரணங்களால். ஆனால், 26/11 அன்று ஒரு அந்நியன் நம் மக்களை கொன்று குவித்தான். அந்த 'Kasab' பக்கா விஜய் படம் போல் 'நல்ல மசாலா' வாழ்க்கை வாழ்கிறான் நமது வரி பணத்தில். (இந்த நடிகன் திருந்தவே மாட்டாரோ.!? நல்ல 'கைப்புள்ள' நடிகன்பா).

இந்திய இறையான்மை: உண்மை பேசாதே. நல்லவர்களுடன் சேராதே. மக்களுக்கு அறிவை, உண்மையை புகட்டாதே. இன, மொழி உணர்வு கூடாது. இதை எல்லாம் செய்தால் 'தேசிய பாதுகாப்பு சட்டம்' எதிர்க்கும். ஆனால் Kasab-ஐ பாதுகாப்போம். இவர் இன்னும் 'நான் ஒரு இந்தியன்' என்று சொல்லவில்லை. அடிப்படை உரிமை கேட்கும் மலைவாழ் மக்கள், பழங்குடி மக்களிடம் 'வன்முறை' பழகுவோம். பொதுவாக அனைத்து மக்களின் 'வாழ்வியல் ஆதாரங்களை' அழிப்போம். இப்படி மக்களையும், வாழ்வியல் ஆதாரங்களையும் அழித்துவிட்டு வெறும் மயானத்தில் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் என்ன செய்ய உள்ளார்கள்.!?

நான் முன்பே சொன்னது: ஒரு நடிகனை திரையறங்கினுள் கொண்டாடுங்கள். அவரது உண்மையை, நேர்மையை & நல்ல பண்பை வெளியே கொண்டாடுங்கள். இதற்கு மேல் அவரை 'தளபதி, தலைவன் & இன்னும் சில பட்டங்கள்' கொடுத்து ஏதோ இந்த உலக மக்களை காக்க வந்தவர் போல் உங்கள் சுய நலம் & மற்ற சில வசதிகள் கருதி இல்லாத ஒன்றை உருவாக்க வேண்டாம். நடிகனுக்கு நடிப்பது தொழில். இதை எந்த நடிகரும் (திரு. அஜித் தவிர) ஒத்துக்கொள்வதில்லை. தன்னை ஒரு பெரிய 'சக்தியாக' காட்டிகொள்வதில் என்ன ஒரு ஆர்வம்.!! திரு. ரஜினிகாந்த் வைத்தாரே ஒரு ஆப்பு. அரசியல் வசனங்கள் பேசி & ரசிகர்களையும் உசிப்புவிட்டு பிறகு பழியை ரசிகர்கள் மேல் போட்டாரே (பேசிய வசனம்: 'நீங்க நான் அரசியலுக்கு வருவேனு நினைச்சா நானா பொறுப்பு). இந்த நடிகர் போல வேறு யாரும் தனது ரசிகனை முட்டாள் ஆக்கியது இல்லை. முட்டாள்கள் என்று சொன்னதும் இல்லை. அது சரி, அவர் பணம் சம்பாதிக்க இவர்களை உபயோகப்படுத்திகொண்டார். நம் மீதும் தவறு உள்ளது.

இவர் பேசிய இன்னொரு வசனம்: 'சொன்ன சொல் கொடுத்த பொருள் திருப்பி வாங்கி பழக்கம் இல்லை.' கன்னட மக்களிடம் 'பேசியது தவறு' என்று 'உதறல்' வாங்கினாரே. இன்னொரு வசனம் 'பேர கேட்டா அதிருதல.' கன்னட மக்களுக்கு அதிரவில்லையே. கவுண்டமணி அவர்கள் ஒரு படத்தில் பேசிய வசனம்: 'நடிகர்கள்தான் விளம்பரம் செய்து கொல்கிறார்கள். உனக்கு ஏன் இந்த வேலை. இவுனுங்கதான் அவசியமா பிறந்துட்டானுங்களா. நாம எல்லாம் அவசியம் இல்லாம பிறந்துட்டோமா.!?

A R Rahman இரு Oscar Awards வாங்கினார்கள். ரசூல் பூகுட்டியும், Gulzar-ம் தலா ஒரு Oscar Award வாங்கினார்கள். ஒரு இந்தியர் நோபல் பரிசு வாங்கினார்கள். நமது இந்திய Cricket Team #1 இடம் பிடித்தது Test போட்டிகள் விளையாடும் அணிகளின் தர வரிசை பட்டியலில். இன்னும் பல நல்ல விசயங்கள் நடக்கும் என நம்பிக்கை செய்வோம். நமது திறமை உலக அரங்கில் வெளிச்சத்திற்கு வந்தது. வரும் 2010-ல் இது போல் நிறைய நடக்கும் என நம் திறமையை & மக்களை நம்புவோம்.

நேர்மையாய் இருப்போம். அறிவை வளர்ப்போம். அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வோம். அறிவை தேடுவோம். உலக அரசியல் & உலக தலைவர்கள் பற்றி & பல நல்ல நூல்களை (Books) படிப்போம். ஒரு நல்ல மாற்றத்தை நம் மக்களிடம் ஏற்படுத்துவோம்.

இலக்கியம் என்பது Sidney Sheldon மட்டும் அல்ல. இவர் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய Fiction/Semi-Fiction Books மட்டுமே இலக்கியம் அல்ல. நிறைய புதையல் உள்ளது. தேடி தேடி படிப்போம். சிலருக்கு இந்த நூல்கள் மட்டுமே இலக்கியம். என்ன கொடுமை சரவணா.!? நூல்கள் மட்டும் வாழ்க்கை அல்ல. சக மனிதனும், சரியும் & தப்பும், நம்மை சுற்றி நடக்கும் விசயங்களும் கல்விதான். இவை சொல்லி தரும் விசயம் கோடான கோடி வரும்.

நம்பிக்கையுடன் 2010-ஐ வரவேற்போம். நல்லது நடக்க முயற்சி செய்வோம். நல்ல விசயங்களுக்கு முதல் அடி எடுத்து வைப்போம். நல்லதை நடத்தி முடிப்போம். பல நல்ல செய்யல் நடக்க நம் திறமை & சக மனிதன் மீது நம்பிக்கை வைப்போம். ஒன்று கூடி நல்லது செய்வோம். உங்களுக்கு (என் அன்பு நண்பர்களுக்கு) என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள். மேன்மேலும் உயர வாழ்த்துகள்.

விடைபெறுகிறேன். சந்திப்போம்.

மௌன விரதம் Vs பேச்சு போட்டி

ஒரு முகம் அறிய தோழன்/தோழி எழுதிய மடக்கு வரி கதை.

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.

இதை படித்த நாள் முதல் ஈர்க்கப்பட்டேன். கொஞ்சம் எனது கையால் கிள்ளியும் பார்த்தேன். இதோ அந்த வலி - - -

காதல் -
சிலருக்கு பேச்சு போட்டி.
சிலருக்கு மௌன விரதம்.
எனக்கு எதனின் மிச்சம்.
முட்டாள் எனக்கு தேடல்.
எல்லோருக்கும் வடிகால்.
காமமும் அழகு -
கண் மூடினால்.
திறப்பின் -
காதல் இருக்காது.
உறுதியாக.

Monday, April 5, 2010

எங்களுக்கும் வாழ ஆசை, மூடர்களே.

நமக்கு நேர்மையை தெரியுமா? குறைந்தபட்சம் நேர்மையாய் சிந்திக்க தெரியுமா? இந்த 'முதலாளித்துவ சமுதாயம்' என்ன செய்கிறது என்று பார்ப்போம். நம்மை சுற்றி சுரண்டுபவர்களும், நம்மை அடக்கி ஆள்பவர்களும் இருக்கும் போது, 'ஏழை விவசாயிகள் தற்கொலை செய்ய தூண்டபடுகிறார்கள். எலிகளையும், பாம்புகளையும் உணவாக மாற்றிகொண்டார்கள்.'




சில மாதங்களுக்கு முன் இந்த மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதி செய்தது, ஒரு கிலோ ரூ. 12.50 க்கு. அரசு சொன்ன காரணம் 'நம்மிடம் அளவுக்கு அதிகமாக சர்க்கரை உள்ளது.' ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசு தந்த கரும்பு கொள்முதல் விலையை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு தேனீர் அருந்தலாம் அந்த பணத்தில்.

பிறகு இதே மூளை இழந்த அரசு (அல்ல, விவசாயிகளின் உயிரை குடிக்கும் அரசு) இறக்குமதி செய்தது ஒரு கிலோ சர்க்கரை ரூ. 30 க்கு. நுகர்வோர் சந்தையில் விற்ற விலை கிலோ ரூ. 40. இந்த நாடகம் நடந்தது 5 மாத இடைவெளியில்.

எனவே ஒரு தேனீர் விலைக்கு சொந்த மண்ணின் விவசாயிகள் விற்கப்பட்டு, அதே சொந்த மண்ணின் மக்கள் அநியாய விலைக்கு அந்த பொருளை வாங்கி அவதிபடுகின்றனர். நம்மளை விட பொருளாதரத்தில் பின் தங்கிய பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் சர்க்கரை, பெட்ரோல் மற்றும் டீஸல் விலை மிக மிக குறைவு. அவர்களால் இதை எப்படி சாதிக்க முடிந்தது? இதோ அந்த திரை மறைவு நாடகம் உங்களுக்காக - - -

இந்த பொருள்களின் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரி போக இந்த அரசுகளின் குள்ளநரி வேலை இதோ: ரூ. 12.50 க்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய, அதை கம்மி விலைக்கு வாங்கி பதுக்கி வைத்த பன்னாட்டு நிறுவனம் இந்த அரசுக்கு தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அல்லது அந்த நிறுவனம் எந்த அமைச்சருக்கு சொந்தம்? பன்னாட்டு நிறுவனம் என்றால், ரூ. 30 க்கு நம்மிடமே விற்ற அந்த நிறுவனம் இந்த அரசுக்கும், அமைச்சருக்கும் தந்த லஞ்சம் எத்தனை கோடிகள்? அந்த நிறுவனம் ஒரு அமைச்சருக்கு சொந்தம் என்றால், அவர் லாபம் பார்த்த கோடிகள் எத்தனை?




உலக அடியாள் கூட தனது நாட்டு மக்களை ஒண்றும் செய்தது இல்லை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைபட்டு கிடக்கும் இந்த அடிமை-சுதந்திர இந்தியாவில் சொந்த மண்ணின் மக்கள் வாழ வழி இல்லாமல். இலங்கையில் ஒரு இனம் வாழ இன்னொரு இனத்தை அழித்தது. ஆனால் பன்னாட்டு-அடிமை-இந்தியாவில் மக்கள் வீடு இழந்து, காடு இழந்து, உடமை இழந்து, சொந்தம் இழந்து, வாழ்வை தொலைத்து அகதிகளாக, முள் வேலிக்குள்ளும் தங்கள் சொந்த மண்ணில் வாழ வேண்டிய நிலை.

அடக்குமுறை உள்ள இடத்தில் அடங்க மறுக்கும் சமுதாயம் முளைக்கும். குள்ளநரிகள் இருக்கும் இடத்தில் புரட்சி எந்த நேரமும் வெடிக்கும். பழங்குடிகள் அவர்களது வாழ்வியல் ஆதாரங்கள் பறிக்கபட்டு நிர்கதியாய் விரட்டப்படுகின்றனர். எல்லாம் இழந்து கையில் ஓட்டை காலணா இல்லாத அவர்கள் என்ன செய்வார்கள்? மலையும் மலையின் வளங்களையும் நம்பி வாழ்ந்தவர்கள், இப்போது முள் வேலிக்குள் அதுவும் தங்களது சொந்த மண்ணில்.

{In this fils photo, leerin' youth snappin' photos of a naked woman. Prasenjit Chakravorty (28), owner of a fast food joint, Ratul Barman (18), a hotel waiter, and Sudip Chakdar (20), a pan shop owner are the chief accused. What compelled these young men to strip a woman? we are always animals and are just sheddin' some hypocrisy}.



நளினி அவர்களுக்கு விடுதலை மறுக்கப்படுகிறது. காரணம் 'கொடும் செய்யல் புரிந்தவர், விடுதலை செய்தால் சமுதாயத்திற்கு நல்லது அல்ல.'  தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொலை செய்தவர்கள் இன்னும் வாழவில்லையா? அல்லது அந்த அரசியல் கட்சி (அ.தி.மு.க) தமிழகத்திலிருந்து ஒழிந்துவிட்டதா? மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் எரித்து கொல்லப்பட்டது? கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டது? இந்த கொடும் செய்யல் புரிந்தவர்கள் தற்போதைய 'காந்திய' சமுதாயத்தில் இல்லாமல் போய் விட்டார்களா என்ன? சாதி பெயரில் அரசியல் செய்பவர்களும், சாதி பெயரில் வன்முறை செய்பவர்களும் நம்மை சுற்றி 'வாழும் அவதாரங்களாக' மக்களை ஆசிர்வதிகவில்லையா?

"அதிகாரிகளும், அதிகாரம் உள்ளோரும் செய்வதே ஆட்சி. சொல்வதே சட்டம்."

தற்போதைய மத்திய அரசும், மாநில அரசும் தங்களது சுய லாபத்திற்காக தமிழ் இனத்தை அழித்தது இலங்கை மண்ணில். இலங்கை அரசை இந்திய அரசு United Nations சபையில் போருக்கு எதிரான நடவடிக்கையில் இருந்து காப்பாற்றியது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதற்கு இந்த நிமிடம் வரை 'ஆண்மையான' நடவடிக்கை இல்லை. ஆண்மை இல்லாத அரசு மக்களை ஆட்சி செய்வது வரலாற்றில் அழிக்கப்படவேண்டிய பக்கங்கள்.

'அங்காடித் தெரு' படம் பாருங்கள். பார்க்க வேண்டிய படம். தமிழ் படங்களை பற்றி பேசும் போது 'அங்காடி தெரு'வை ஒதுக்க முடியாது. சிறந்த படைப்பு.