சிலர் 'வீம்பு' பிடித்து தனது 'முட்டாள்'தனத்தை தொடர்வதை நம்மில் பலர் பல முறை பார்த்திருப்போம். உளவியல் காரணம் 'தான் செய்தது/சொன்னது தப்பு என்று ஒப்புக்கொண்டால் நாம் அவர்களை முட்டாள் என்று எண்ணி விடுவோம்' என்று. ஆனால், ஒப்புகொள்வதில் இல்லை பிரச்சினை. காரணம், 'எல்லோருக்கும் எல்லாம் தெரியாது. எல்லோரும் தப்பும், சரியும் கலந்தவர்களே.' மாறாக, அந்த முட்டாள்தனத்தை தொடர்வேன் என 'வீம்பு' பிடிப்பது 'ஆகப் பெரிய மடத்தனம்.'
அந்த எழுத்தாளர்/Writer 'மன்மதன் அம்பு' திரைப்படம் பற்றி 'புகழ்ந்து' எழுதிய (குறிப்பாக 'நீல வானம்' பாடல் பற்றிய) விமர்சனத்திற்கு நான் 'எதிர் வினை' செய்தேன். நிறைய கோவத்துடன் நான் செய்தேன். சில முகம் அறியா தோழர்களும். அந்த 'மன்மதன் அம்பு' Post-யே தனது blog-ல் இருந்து தூக்கிவிட்டார். நான் எழுதியது 'அப்படியே' என் மனதில் இல்லை. ஆனால், ஒரு வரி ஞாபகம் உள்ளது. அது 'உங்களை போன்ற தமிழ் bloggers, writers எல்லாம் தமிழ் வாசகனை மட சாம்பிராணி, ஞான சூன்யம் என நினைத்து இந்த மாதிரி போலிகளை கொண்டாடி எழுதும் உளவியல் என்ன' என்று. இங்கு தரப்பட்டுள்ள எதிர் வினை பரிமாற்றம் 'நடிநிசி நாய்கள்' திரைப்படத்தை அந்த 'writer' புகழ்ந்து எழுதியதால் நிகழ்ந்தது.
No comments:
Post a Comment