You are lookin' for..?

Saturday, July 31, 2010

எங்கள் (பகடி) அழகியல்...

நண்பன் தாதாவின் வீடு. சிறிது இடைவெளி விட்டு இவனது சிஷ்யன், நண்பன் குட்டி தாதாவின் வீடு. சிறிது இடைவெளி விட்டு நண்பன் சிம்பு வீடு. எதிர் வரிசையில் தமிழ் மாமாவின் வீடு, இன்பம் மாமாவின் வீடு, குமரு தாத்தாவின் வீடு. நண்பர்கள் எல்லாம் நண்பன் தாதாவின் வீட்டில் அரட்டை அடிப்பது வழக்கம். நேரம் காலம் எல்லாம் கிடையாது. நண்பன் தாதா வீட்டில் இருந்தால் போதும், எல்லோரும் கூடி விடுவோம்.

ஒரு நாள் இரவு ஏழு மணி போல, நண்பனின் வீட்டு வாசலில் பாய் விரித்து அரட்டை போனது. தமிழ் மாமா வேலை முடிந்து வீடு திரும்பினார்கள், 'மது' துணையுடன். தமிழ் மாமா நல்ல அறிவாளி. நானும், நண்பன் தாதாவும் அரசியல், உலக விஷயம் பற்றி இவரிடம் பேசி நிறைய தெரிந்து கொள்வோம். மாமாவிடம் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், அதிகம் பேச மாட்டாங்க. 'நச்'னு பேசுவாங்க. மாமாவும் அம்மாச்சியும் ஏதோ ஒரு விஷயம் பற்றி வாக்குவாதம் செய்தார்கள். வாக்குவாதம் முற்றியது. நாங்கள் தர்மசங்கடமாக, அமைதியாக படுத்திருந்தோம்.

ஒரு கட்டத்தில் அம்மாச்சி 'தம்பி, சாதரணமாவே உன்கிட்ட பேச முடியாது. இப்ப மது வேற அருந்தியிருக்க. அப்புறம் பேசுவோம்' என்றார்கள். அதற்கு மாமா 'இந்தா, நீயும் இத சாப்டு. நீயும் பேசு. யாரு ஜெயிக்கிறாங்கனு பார்க்கலாம்' என ஒரு Quarter பாட்டிலை தனது Trouser-ல் இருந்து எடுக்க; அம்மாச்சி 'தம்பி, ஆள விடுடா' என ஓடினார்கள். எங்களில் சிலர் சிரிப்பை அடக்க முடியாமல்.

* * * * *

இது போல சம்பந்த பட்ட மக்கள் Serious-ஆக செயல்பட, நாங்களோ அதில் உள்ள நகைசுவையை அருந்தி கொண்டிருப்போம்.

மழை காலம். எங்கள் கிராமத்து வீதிகள் மழையில் ஊறி போய். நண்பர்கள் நாங்கள் சிம்பு வீட்டு திண்ணையில் அரட்டை. குமரு தாத்தாவுக்கும், நண்பன் குட்டி தாதாவின் தாத்தாவுக்கும் ஏதோ சண்டை வந்து விட்டது. குட்டி தாதாவின் தாத்தா இயல்பா பேசும்போதே Body Language பயங்கர Comedy-ஆக இருக்கும். சண்டை போடும் போது கேட்கணுமா. அவர் பேசிய வார்த்தைகளும் எங்களுக்கு சிரிப்பை தூண்டியது. அவர் Serious-ஆக சண்டை போட, நாங்களோ அவ்வப்போது சிரிக்க; இந்த கோவம் வேறு தாத்தாவுக்கு.

குமரு தாத்தா 'எல கண்ணாடி, ரொம்ப ஆடாத. நல்லது இல்ல. வார்த்தைய கட்டுபடுத்து' என்றார்கள். கண்ணாடி தாத்தா இன்னும் Serious-ஆக சண்டை போட; ஒரு கட்டத்தில் சகதி வழுக்கி கீழே விழ, குமரு தாத்தா 'ரொம்ப ஆடாதடானு சொல்லி வாய மூடல. தரைல கிடக்குறான். உனக்கு வேணும்டா' என்றபடி வீட்டுக்குள் போய் விட்டார்கள். கண்ணாடி தாத்தா தரையில் கிடந்தபடியே எங்களை பார்த்த பார்வையும், நாங்கள் சிரித்ததும் இன்னமும் எங்கள் கண்களில்.

* * * * *

நண்பன் குட்டி தாதா Lorry ஓட்டுனர். ஒண்று அல்லது இரண்டு மாதங்களுக்கு India முழுவதும் சுற்றிவிட்டு, நன்றாக சம்பாதித்து; அதனை அந்த அந்த இடங்களிலேயே செலவு செய்துவிட்டு, வீட்டிற்கு சும்மா வருவது வழக்கம். அம்மா செல்லம். எனவே அப்பாவிடம் இருந்து தப்பித்து கொள்வார். ஒரு வாரம், பத்து நாட்கள், ஒரு மாதம் அல்லது வந்த அன்று இரவே மீண்டும் கிளம்புவார். அவரது மனநிலையை பொறுத்து.

ஒரு நாள் இரவு நண்பன் தாதாவின் வீட்டு வாசலில் நண்பர்கள் படுத்தபடி அரட்டை. பதினொரு மணிக்கு மேல் குட்டி தாதா வேலை முடிந்து வந்தார். 'குளித்து, சாப்பிட்டு விட்டு' வருகிறேன் என்றார்கள். நாங்கள் அரட்டையை தொடர்ந்தபடி. 12 மணி போல் வந்தார். அரட்டை தொடர்ந்தது. ஒவ்வொருவராக தூங்கிபோனோம். எங்களையும் அறியாமல் தூங்கினால், நண்பன் வீட்டு வாசலிலேயே தூங்கி விடுவோம். விடியும் நேரத்தில் அவரவர் வீடு செல்வோம்.

அதிகாலை ஐந்து மணியளவில், எங்கள் காதருகில் நல்ல சத்தம். எல்லோரும் 'என்ன எழவுடா இது. காலங்காத்தால தூங்கவிடாம' என முழித்து பார்த்தால், குட்டி தாதாவை அவங்க அப்பா அர்ச்சனை செய்தபடி. தூங்கிய குட்டிய எழுப்பி, நிற்க வைத்து, வசவுகளை வீசி கொண்டிருந்தார்கள் குட்டியின் அப்பா. கண்ணாடி தாத்தா பேசும் போது Body Language சிரிப்பை வரவழைக்கும் என்றால், அவரது பிள்ளை - குட்டியின் அப்பாவின் பேச்சே சிரிப்பை வரவழைக்கும். இயல்பா பேசும் போது நன்றாக பேசுவார்கள். ஊரில் இவரை 'பெரிய கை' என்பார்கள். ஆனால் கோவத்தில் பேசும் போது 'அனைத்து' வார்த்தைகளையும் 'மூன்று முறை, மிக வேகமாக' கூறுவார்கள். நமக்கு ஒண்றும் புரியாது.

இவர் திட்டியதில் ஒண்றும் எங்களுக்கு புரியவில்லை. தூக்கம் போச்சே என்ற கவலை, கோவம் வேறு. அப்பா திட்டியதில் எங்கள் எல்லோருக்கும் கொஞ்சம் புரிந்தது 'நி இனி வீல இலது. நி இனி வீல இலது. நி இனி வீல இலது.' எல்லோரும் லாவகமாக நழுவி அவரவர் வீடு சென்றோம். ஏழு மணியளவில் வாயில் பல் குச்சியுடன் எல்லோரும் ஒண்று கூடிய போது குட்டியிடம் விசாரணை போட்டோம். நடந்தது இதோ: இவர் வேலை முடிந்து வந்த போது அப்பா நல்ல தூக்கத்தில். அம்மாவிடம் 'இந்த முறையும் ஐந்து பைசா கூட வீட்டிற்க்கு எடுத்து வரவில்லை' என்று உண்மையை சொல்லிவிட்டு, எங்களிடம் வந்து தூக்கம். அதிகாலை எழுந்த அப்பா 'பிள்ளை வேலை முடிந்து வந்துவிட்டானா?' என கேட்டதோடு, மேலும் சில கேள்விகள் கேட்டு உண்மையை அம்மாவிடம் தெரிந்து கொண்ட அப்பா, கோவத்தை அடக்க முடியாமல் அந்த நேரமே தனது ஆற்றாமையை கொட்டிவிட்டார்கள். 'சரி, அது என்ன நி இனி வீல இலது. நி இனி வீல இலது. நி இனி வீல இலது?' எனக் கேட்டோம். 'இனி நீ வீட்ல இருக்க  கூடாது' என்பதின் சுருக்கம் எங்கள் அப்பாவின் மொழியில் என்றார் குட்டி. ஆக, நாங்கள் ஒரு வார்த்தை கூட புரிந்துகொள்ள முடியாது அவரது மொழியில்.

* * * * *

குட்டியின் பாட்டி போட்ட சண்டை இதோ. குட்டி வீட்டில் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா எல்லோரும் மிக சீக்கிரம் விழிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மிக சரியான விவசாயி என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இவர்களது குடும்பம்.

அன்று குட்டியின் அப்பாவிற்கு உடல் சுகமில்லை. எனவே நல்ல தூக்கம். நாங்கள் எல்லோரும் நண்பன் தாதாவின் வீட்டு வாசலில் தூக்கம். ஐந்து மணியளவில் நாங்களும் ஒவ்வொருவராக விழித்தோம். தூக்கம் கலையாமல் பாயிலேயே உட்கார்ந்து இருந்தோம்.

குட்டியின் பாட்டி தான் வளர்க்கும் ஆடுகளை கவனிக்க போனார்கள். எதிர்த்த வீட்டில் (குமரு தாத்தா) அம்மாச்சி பாத்திரங்கள் விளக்க வந்தார்கள். ஆடுகளுக்கு உணவு வைக்கும் போது, கோழிகளும் குட்டியின் பாட்டியை சுற்றி சுற்றி வந்து அன்பு தொல்லை செய்தன. கோழிகள் கத்தியது குட்டியின் பாட்டிக்கு பிடிக்கல. அவைகளை அடக்க ஒரு குச்சியை எடுத்து கோழிகளை அடிக்க வீச, அந்த அடி குமரு தாத்தா அம்மாச்சி மீது பிடித்துவிட்டது. அவ்வளவுதான்..! வேற என்ன, போர் மூண்டுவிட்டது. நாங்கள் சிரித்த சிரிப்பு... யப்பா, இப்பவும் அடக்க முடியல.

உடல் முடியாமல் இருந்த குட்டியின் அப்பாவால் சகிக்க முடியல. 'கந்தசாமி' திரைப்படத்தில் வடிவேலு 'விக்ரம்' மாதிரி சேவல் வேஷம் போடுவது போல, அப்பா போர்வையை போர்த்தியபடி வெளியே வந்து, ஒண்றும் பேசாமல் இருவரையும் ஒரு நிமிடத்திற்கு முறைத்து பார்த்தபடி நிற்க, இருவரும் வாயை மூடினார்கள். மீண்டும் தூங்க போனார்கள், அப்பா. இவர்கள் மீண்டும் போரை ஆரம்பித்தனர். மீண்டும் எழுந்து வந்த அப்பா அமைதியா, நிறுத்தி, நிதானமா 'கிழவிகளா, இன்னிக்கி சாயந்தரம் ரெண்டு புனம் நம்ம ஊர்ல வடக்கு நோக்கி போகனுமா?' என கேள்வி கேட்க, ரெண்டு பேரும் முனகியபடி தங்களது வீட்டினுள் சென்றனர். 'கிழவிங்க காலையிலேயே எழுந்தது இல்லாமல், அடுத்தவன் உசுர வாங்குதுங்க' என அப்பா நொந்து கொண்டார்கள். இந்த போரை நினைத்து நண்பர்கள் நாங்கள் சிரிக்காத நாட்களே இல்லை.

No comments:

Post a Comment