You are lookin' for..?

Friday, July 16, 2010

உலக கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக...

'ரெண்டு மணி நேரம்டா, மச்சி. முட்டி வலிக்குதுடா' என்றான் எங்கள் நண்பன். உங்கள் கற்பனையை தட்டி விடாமல், என்ன என்று தெரிய முழுதும் படியுங்கள், நண்பர்களே.




அன்று கடைசி Bench-ல் நான் மட்டும் இருந்தேன். என்னுடன் இருக்கும் ராஜ்குமார் அன்று வேறு ஒரு Bench-ல் நண்பர்கள் பிரசன்னா, காண்டீபன், கார்த்தி-வுடன் இருந்தான். முதல் Hour முடிய ஒரு பத்து நிமிடம் இருக்கும் போதுதான் சிவசந்திரன், காளிதாஸ் இருவரும் வகுப்புக்குள் நுழைந்தனர். காளிதாஸ் மற்ற இரண்டு Rows ஏதோ ஒன்றில் கடைசி Bench-ல் அமர்ந்துவிட்டான். சிவா என்னுடன். சிவா வந்ததும் செய்த வேலை 'வாசனை வருதா பாரு?' என ஊதினான். 'ஆமாம்' என்றேன். 'சரி எனக்கு Proxy தந்துடு' என்று கூறிவிட்டு தூங்கிபோனான்.

நான் காளியை தேடினேன். அவன் ராஜ்வுடன் ஏதோ பேசியபடி. அப்ப எந்த வம்பும் இன்று வராது என நம்பினேன். வந்தது, Attendance வடிவில். வகுப்பு முடியும் தருவாயில் Attendance எடுக்க ஆரம்பித்தார்கள் நாங்கள் 'அத்தை' என்று அழைக்கும் பேராசிரியர். முதல் தடவை ஒரு இருபது பேருக்கு எடுத்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து. இந்த முறை ஒரு நாற்பது பேருக்கு எடுத்துவிட்டு, மீண்டும் முதலில் இருந்து. இந்த முறை ஒரு முப்பது பேருக்கு, வழக்கம் போல் மீண்டும் முதலில் இருந்து. நான்காவது முறை ஒரு ஐந்து பேருக்கு கூட எடுக்கவில்லை, அதற்குள் காளிதாசை 'எழுந்து நிற்கும்படி' பேராசிரியர் கூற, இவனும் எழுந்து நின்றான், ஆடிக்கொண்டே. 'அருகில் வா' என ஆசிரியர் அழைக்க, எப்படியோ போய் சேர்ந்தான். 'ஊது' என ஆசிரியர் கட்டளையிட, இதற்கு மட்டும் நடுநாயகமாக சிரித்து வைத்தான்.




நடந்தது இதோ - ஆசிரியர் Attendance எடுக்கும் போதெல்லாம் எங்கள் நண்பன் எல்லோருக்கும் 'Yes, Sir' என சொல்லிவிட்டான். 'என்னடா, ஒவ்வொரு முறையும் இரண்டு தடவை பசங்க Response பண்றாங்க. அந்த அளவுக்கு 'இந்த' பசங்க மரியாதை தர மாட்டனுங்களே. அல்லது வேணும்னே குறும்பு பண்ணாலும் யார்னு அமுக்கணும். அப்ப இதில் ஏதோ விஷமம் இருக்கு' என ஆசிரியர் உணர்ந்துகொண்டார்கள். நான்கு முறையும் நன்றாக இவனை கவனித்து, இவன் செய்யும் குறும்புகளை படித்து, பிறகு ஒரு முடிவு எடுத்த பிறகே ஆசிரியர் எங்கள் நண்பனை சோதித்து உள்ளார்கள். சில சமயம் நண்பன் சொல்லுவான் என சிலர் 'Yes, Sir' சொல்லாமல் இருக்க, இவனும் சிலருக்கு சரியாக சொல்லாமல் இருக்க, Conflict and வகுப்பு முழுதும் சிரிப்பு உருவானது. இது இவன் வேண்டும் என்று செய்யவில்லை. அவனையும் அறியாமல் நடந்தது. அவன் செய்வது எல்லாமே அவன் Control-ல் இல்லை.

'என்ன சிரிப்பு. வா நமது Dept. Room-க்கு போவோம்' என நண்பனை அழைத்து சென்றார்கள். இருவரும் சென்றார்கள். சிவா நல்ல உறக்கத்தில். 'உடல் முடியவில்லை' என்று நண்பனை காத்தோம். எங்களுக்கு முதல் மூன்று Hours முடிந்த பிறகு 20 நிமிட Break உண்டு. Break போகும் போது கண்டோம் எங்கள் நண்பன் காளிதாஸ் முழங்கால் (முட்டி) இட்டபடி. நாங்கள் இருந்த Block-ல் கணிப்பொறி வகுப்புகள் மட்டுமே. அதிலும் எங்கள் Block மற்ற Blocks-வுடன் தொடர்பின்றி தனியாக இருக்கும். எனவே, எங்கள் நண்பன் எங்களை கண்டதும் மகிழ்ச்சி அடைந்தான். எங்கள் HOD வந்தார்கள். 'காளி, நீ போகலாம்' என எங்களுடன் அனுப்பி வைத்தார்கள். 'என்னடா ஆச்சி' என்றோம், 'ஒன்னும் இல்லடா. அத்தை HOD-கிட்ட போட்டு தந்துட்டாரு. அப்புறம் நம்ம ஆசிரியர்களின் செயற்குழு எனக்கு இந்த தண்டனை என முடிவு எடுத்தாங்க. ரெண்டு மணி நேரம்டா, மச்சி. முட்டி வலிக்குதுடா' என்றான்.




'சிவா எங்க மச்சி', என்றான்.
'தூக்கத்தில் இருக்கான்', என்றோம்.

No comments:

Post a Comment