You are lookin' for..?

Monday, August 2, 2010

நொ(ள்ளி)ல்லி நரி

நண்பர்கள் சிலர் அந்த 'குட்டியின் பாட்டி' என்பவர் 'நொ(ள்ளி)ல்லி' என சொல்லும் பாட்டிதானே என்று கேட்டிருந்தனர். பதில் 'ஆம்.' இன்னொரு சிறந்த கதை இதோ:

பலாப்பழம் பருவத்தில் எங்கள் கிராமத்திற்கு இரும்புலிகுறிச்சி என்ற ஊரில் இருந்து வியாபாரிகள் வந்து பலாப்பழம் விற்பது வழக்கம். இரும்புலிகுறிச்சி பலாப்பழத்திற்கு பேர் போனது. இந்த வியாபாரிகள் குறைந்தது ஐம்பது வயதிற்கு குறையமாட்டார்கள். இந்த பழக்கம் இவர்களுக்கு சிறு வயதில் இருந்தே உள்ளது. எனவே, இந்த வயதிலும் இதனை விட முடியாமல் அவர்கள் ஊரிலிருந்து எங்கள் கிராமத்திற்கு வருவது வாடிக்கை. இதன் காரணமாக, எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகுவார்கள். இதில் உள்ள அழகு, இவர்கள் சந்தித்து அளவளாவது இந்த பலாப்பழம் பருவத்தில்தான். 'இவர்களுக்கு பிறகு இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது யார்?' என்ற கவலை எனக்கு. இந்த உறவுப்பாலம் காலம் காலமாக தொடராதா என்று எங்கள் மனம் வலிக்கிறது. இது 'பலாப்பழத்தையும்' தாண்டியது. வாழ்க்கை புதிர் நிரம்பியது. நம் தலைமுறை (என்னையும் சேர்த்துதான்) நிறைய அழகியலை உணரவில்லை; அவர்கள் தவறான தேடல்களில் தங்களது வாழ்வை தொலைக்கின்றனர்.

அங்கிருந்து வரும் வியாபாரிகளில் எங்களுக்கு பிடித்த ஒரு தாத்தா (எல்லோரும் ஐம்பது வயதிற்கு மேல்) மிக அழகாக 'பலாச்சுளை'யை உச்சரிப்பார்கள். நாங்கள் எல்லாம் அவ்வாறு சொல்லி பார்ப்பதும், விளையாடுவதும் வழக்கம்; சிறு வயது முதல். இந்த தாத்தாவும், குட்டியின் தாத்தாவும் (கண்ணாடி) நெருங்கிய தோழர்கள். ஆகவே, வியாபாரத்திற்கு வரும் போதெல்லாம் குட்டியின் வீட்டில் இரு தாத்தாக்களும் தங்களது நட்பின் பகிர்தலை அனுபவிப்பதும், அதில் மூழ்குவதும் கொள்ளை அழகு.

I captured this picture usin' my mobile n the moment when I captured this one will stay in my heart till I die. In this picture: Navarasu aka Nari with our friend Bharathi.


இதிலிருந்து நண்பன் தாதா சொன்ன கதை - - - சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன் நடந்தது:

நண்பர்கள் எல்லோரும் அந்த தாத்தா சொல்வது போல 'பலாச்சுளை' என்று சொல்வதை கவனித்த குட்டியின் பாட்டி 'நாங்கள் எல்லோரும் அந்த தாத்தாவையும் இந்த பாட்டியையும் தவறாக சித்தரித்து கிண்டல் செய்வதாக' தவறாக நினைத்துவிட்டார்கள். இதன் காரணமாக நண்பர்கள் எல்லோருக்கும் அவர் முழிக்கும் அந்த அதிகாலை பொழுதில் அவரிடம் இருந்து அர்ச்சனை கிடைக்கும். அந்த அளவிற்கு எங்கள் நண்பர்கள் மீது கோவம். இதில் குட்டி தாதா சொன்னதுதான் Highlight 'இந்த வயசுல எங்க கிழவிக்கு ரவுச பார்த்தியா. இத அடக்க நாம ஏதாவது செய்யணும்' என்று நண்பன் தாதாவிடம் கூறியுள்ளார். இந்த அர்ச்சனை பொறுக்க முடியாமல், நண்பர்களும் ஒரு முடிவில்தான் இருந்தனர். பழி வாங்க நண்பர்கள் செய்த (குட்டியும் இந்த பழி வாங்கும் படலத்தில் அடக்கம்) குறும்பு விளையாட்டை பிறகு ஒரு கிளை கதையாக உங்களுக்கு நான் சொல்கிறேன்.

ஒரு ஞாயிற்று கிழமை. நண்பன் தாதா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். அப்பாவும் அம்மாவும் ஒரு உறவினரின் திருமண விசயமாக முதல் நாள் சென்னை சென்றுள்ளனர். தாதா, மற்றும் தாதாவின் அக்காள் பையன் நரியும் வீட்டில். தாதாவின் இரண்டாவது அண்ணன் காலை முதல் இரவு வரை அரியலூரில்தான் இருப்பார். எனவே தாதாவும், நரியும் காலை திருப்தியாக தோசை வார்த்து சாப்பிட்டு உள்ளனர். மதியம் ஏதோ ஒரு சாதம் செய்த தாதா, அதற்கு குழம்பு செய்ய தெரியாமல், குட்டியின் பாட்டியிடம் கேட்டிருக்கிறார். அவரும் 'வந்து வங்கிக்கோ, பேரான்டி' என எப்பொழுதும் போல அன்பாக கூறியுள்ளார்கள்.

நண்பன் தாதா, நரியிடம் ஒரு கிண்ணத்தை தந்து, குழம்பு வாங்கி வர வழி அனுப்பி வைத்துள்ளார். அந்த சமயம் நரிக்கு ஏழு வயதுதான் இருக்கும். நரி ஒரு ரெண்டு நிமிடத்தில் 'வெறும்' கிண்ணத்துடன் திரும்பி வந்துள்ளார். தாதாக்கு ஒரே குழப்பம். 'டே, பாட்டிகிட்ட நான்தான் முன்னமே சொல்லி வச்சியிருந்தேனே. நீ போய் கிண்ணத்த தந்தாலே போதுமே, அவங்க குழம்பு தந்துருவாங்களே. பின்ன ஏன்டா தரல?' என நரியிடம் விசாரணை.

நடந்தது என்னன்னா - - -

'இல்ல மாமா, பாட்டியும் ஒன்னும் சொல்லல. நான் போய் கிண்ணத்த பாட்டிகிட்ட தந்தனா, குட்டி பாட்டி என்கிட்ட 'பாட்டியும், தாத்தாவும் சென்னைலயிருந்து எப்ப வருவாங்கன்னு' கேட்டாங்களா, நானும் 'நாளைக்கு வந்துருவாங்கனு' சொன்னேனா, அப்ப அவங்க குழம்ப கரண்டியில எடுத்து கிண்ணத்துல ஊத்த போறப்ப....
'ஊத்த போறப்ப...', என்று தாதா விடை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க,
'ஊத்த போறப்ப...', என நரி தயங்கி தயங்கி அங்கனவே நிற்க,
'சொல்லுடா'னு தாதா அதட்ட,
 'இல்ல மாமா, ஊத்த போறப்ப என்னையும் அறியாமல் 'பலாச்சுளை'னு நாம எல்லாம் சொல்லி விளையாடுவது போல சொல்லிட்டேன். அதனால, உனக்கு 'குழம்பு' இல்லைன்னு சொல்லிட்டாங்க' என்று பரிதாபமாக சொல்ல: தாதா ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து, பிறகு நரிய பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்க: நரியும் சேர்ந்து சிரிக்க: பிறகு இருவரும் தயிர் சாதம் சாப்பிட்டு 'சிரித்து' கொண்டாடியுள்ளனர்.

No comments:

Post a Comment