You are lookin' for..?

Friday, May 21, 2010

வழக்கமான அமைதி. மாடு வாங்குவ.



பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு 'ஆணை' பிறப்பித்துள்ளது. வரவேற்கத்தக்கது. பள்ளிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சும்மா வரும் பணம் வராமல் போனால் யாருக்குதான் 'படப்பிடிப்பு' வராது. படப்பிடிப்பு என்றே படிக்கவும். பிழை இல்லை.

ஆனால் எனது கவலை - வழக்கம் போல் பண முதலைகள் அரசுடன் 'வியாபாரம்' பேசி, ஒரு நல்ல 'விலை'க்கு அவர்களை வாங்கி விடுவார்களோ என. கல்வி என்றால் 'பணம்' என அருஞ்சற்பொருள் மாறி பல யுகங்கள் கடந்துவிட்டது. 'களை' எடுக்க வேண்டிய நாட்களில் நீர் பாய்ச்சி வளர்த்து விட்டு, இப்போது 'அறுவடை' நேரத்தில் களை எடுக்க வந்துள்ளனர் நமது அரசு - அதிகாரிகள். சரி, இப்பொழுதாவது மாற்றம் நிகழும் என அமைதி காப்போம். இல்லை என்றால் 'வழக்கமான அமைதி' காப்போம். நாம் அறியாத 'அமைதியா.'




நம் கல்வி முறை என்று Independent-Thought மற்றும் Creativity பற்றி போதிக்க போகிறது??? என்று 'மா'நகரங்களிலும், கிராமங்களிலும் பயிலும் மாணவர்கள் Equal Exposure-வுடன் திகழுவார்கள்???




* * * * *

'பருத்திவீரன்' திரைப்படத்தில் வரும் வசனம் - - - - -

=> 'இன்னிக்கி மாடு வாங்குவ. பிறகு வீடு வாங்குவ. Car வாங்குவ. ஒரு அரசியல் கட்சில சேர்ந்து, வட்ட செயலாளர் ஆவ. தேர்தல் வரும், அதுல ஜெயிச்சி M.L.A. ஆவ. அப்புறம் மந்திரி ஆவ. அப்படியே முதல் அமைச்சர் ஆயிடுவ.'
=> 'நான் ஒத்த மாடுதானையா வாங்க போறேன்னு சொன்னேன். அதுக்கு என்னய கோட்டை வரைக்கும் கொண்டு போய்ட்டியே.'




அதை போல் 'திரைப்படத்தில் நடித்து, முதல் முறையாக 'கதை நாயகியும்' ஆடை குறைக்கலாம் என்பதை தமிழில் அறிமுகப்படுத்தி, 'தாழ்வு மனப்பான்மை' நோயால் ஆட்கொண்ட தமிழனை கோவில் கட்டவைத்து, 'கற்பு' என்பது 'பொய்' என்ற உண்மை சொல்லி 'நன்மை' செய்து, சில 'முகமூடிகள்' எதிர்ப்பு என்ற பெயரில் 'கருத்து சொன்னவருக்கு' புகழை தேடி தர, நீதிமன்றமும் அதிசயமாக 'உண்மை'யின் பக்கம் நிற்க, இந்த Pristine புள்ளியில் இவர் ஒரு அரசியல் கட்சியில் சேர, அக்கட்சியின் தலைவரோ 'முற்போக்கு சிந்தனை கொண்ட வாழும் மணியம்மை இவரே' என புகழ் குத்து குத்த, இனி அவர் 'மேலவை. பிறகு கோட்டை' என்று செல்ல வேண்டிய இரண்டு இடங்கள் மட்டுமே மீதி உள்ளது.

வாழ்க Ms Khushboo. இவரது களப்பணி இனி எப்படி இருக்கும் என கவனிப்போம். யாரும் அரசியலுக்கு வரலாம். இவரையும் வரவேற்போம். எனக்கு இன்னொரு கவலை - காரணம்: நாகம்மையாக நடித்த Ms Jyothirmayi அரசியலுக்கு வந்துவிட்டால்.!?

* * * * *

No comments:

Post a Comment