You are lookin' for..?

Friday, May 14, 2010

கலகம் - இரு/ஒரு சிறிய வார்த்தை(யால்)களால்.

எங்கள் பூண்டி கல்லூரி. Semester Fee - Rs. 500/- தேர்வு வந்தால் ஒரு Theory Paper-க்கு கட்டணம் Rs. 35/- ஒரு Practical Exam-க்கு கட்டணம் Rs. 100-ஐ தாண்டியது இல்லை. எங்களை போன்ற வறுமையில் உள்ளவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி தந்த கல்லுரி. எனக்கு பெற்றோர்களை கல்வி என்ற பெயரில் 'பணம் பறிக்காமல்' படித்து முடித்த மன நிம்மதி. இந்த கல்லூரி-தகப்பன்சாமி உள்ள திசை நோக்கி வணங்குகிறோம்.

எங்கள் கல்லுரி 'Autonomous' status உள்ள கல்லூரி. எனவே பாடத் திட்டம் அவர்கள் உருவாக்குவது. எங்களுக்கு முதல் இரண்டு வருடமும் தமிழ் மற்றும் ஆங்கிலம் உண்டு. மிக மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் தென்றல் நிமிடங்கள் இவை.



எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு Hour-ம்  (ஒவ்வொரு Period-ம் ஒரு மணி நேரம் நடக்கும். எனவே நாங்கள் Hour என்றே கூறுவோம்) Attendance எடுப்பது வழக்கம். நாங்கள் Proxy கொடுப்பதில் வீரர்கள்.

இது கலகம் செய்த கதை. மிக விசாலமான வகுப்பறை எங்களது. கடைசி Bench-ல் 'மாப்பிள்ளை' போல் காலம் தள்ளியவர்கள் நாங்கள். கடைசி Bench மாணவர்களை 'மாப்பிள்ளை' என்றும், 'மாப்பிள்ளை Bench' என்றும் சொல்லுவார்கள். நீங்களும் சில அழகான பெயர் சொல்லலாம் இந்த கடைசி Bench மன்னர்களுக்கு. சில சமயங்களில் எங்களுக்கும் பின்னால் அமர்வார்கள் கோபி (867), திருமாவளவன் (866), சரவணன் (835), சிவகுமார் (831). அன்றைய தினத்தின் முதல் Hour-ன் ஆரம்பத்தில் Attendance எடுக்க மாட்டார்கள். காரணம் - தாமதமாக வருபவர்கள் நன்மைக்காக. எனவே முதல் Hour-ன் இறுதியில்தான் Attendance எடுப்பது வழக்கம். சிறைச்சாலையில் கைதிகளை எண் (Number) சொல்லி அழைப்பது போலவே எங்களையும் 801, 855, 863 என எண் சொல்லியே அழைப்பார்கள்.

கலக தினம் வந்தது. எங்கள் பின்னால் கோபி, திருமா, சரவணன், சிவா அமர்ந்திருந்தனர். ஐயப்பன் (849) அன்று இவர்களுடன் இருந்தானா என்பது எனக்கு மறந்துவிட்டது. அன்று முதல் வகுப்பு (First Hour) தமிழ். வழக்கம் போல் விரிவுரையாளர் வந்தார்கள். ஒரு 5 நிமிடம் அரட்டை அடித்து விட்டு 'பாடத்தை தொடங்குவோம்' என சொல்லி, கலகத்தை இவர்தான் ஆரம்பித்தார்கள். எடுத்தவுடனே இவர் சொல்லியது...

'கவிகோ' அப்துல் ரஹ்மான்க்கு 5.5"
கருணாநிதிக்கு 5.8"
வைரமுத்துக்கு 5.1"

என இன்னும் இரண்டு/மூன்று பெயர்களை சொன்னார்கள், இதைப் போல எண்களும் சொல்லி. தென்றல் மிக அழகாக இருந்தது இந்த புள்ளியில்.

திருமா கேட்டான் 'எது, Sir?'

அவன் சொன்னது ஒரு சிறிய வார்த்தை/இரண்டே இரண்டு மிகவும் சிறிய வார்த்தைகள். இந்த கனப்பொழுதில் இரண்டு விஷயங்கள் ஒன்றாக நடந்தது. வகுப்பு சிரிப்பலையில் திளைக்க, எங்கள் விரிவுரையாளர் கண்கள் சிவக்க சிலையாக நின்றார்கள்.

கோவம் கண்களிலும், கன்னத்திலும் வெளிப்பட்டது. ஆனால் நாங்களோ சிரிப்பை அடக்க முடியாமல். இது அவரது கோவத்தை மேலும் தூண்டிவிட்டது. 'ஒரு விரிவுரையாளரை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது?' என நொந்து போய் கேட்டார்கள். ஆனாலும் அவரது கண்கள் குண்டுகளை வீசியது எங்கள் மீது. எங்கள் 'வசவு கேட்கும் காண்டம்' தொடங்கியது. அவர் திட்டுரை எங்கள் காதில் விழவில்லை. நாங்கள் எல்லாம் நண்பனது Timin' வார்த்தைகளை எண்ணியும், கண்களில் ஆனந்த கண்ணீரும், வயிற்றில் வலியும்.

இந்த ஜென்மங்களுக்கு திட்டினால் உரைக்காது என ரொம்ப Late-ஆக எங்கள் விரிவுரையாளர் புரிந்துகொண்டு, தண்டனை தரும் 'தீர்ப்பு' விசயத்திற்கு வந்தார்கள். எங்கள் வகுப்பில் மூன்று Rows இருக்கும். அவரது வலது பக்கம் முதல் Row-ல் கடைசி Bench-ல் இருந்துதான் அந்த 'கேள்வி' வந்தது என்று அவருக்கு தெரியும். யார் என்று குறிப்பிட்டு தெரியாது. எனவே திருமா இருந்த கடைசி மற்றும் எங்களது Bench மன்னர்களையும் எழுந்து நிற்கும்படி கட்டளை. நாங்கள் ஏழு பேரும் நின்றோம். 'உங்கள்  ஏழு பேர்ல ஒருத்தன்தான் அந்த 'முக்கியமான' கேள்விய கேட்டது. யார்னு ஒத்துகிட்டா நல்லது. இல்லை என்றால் இந்த விஷயம் எல்லா Dept.களின் HOD-களுக்கு கொண்டு செல்லப்படும். பிறகு உங்கள் Dept.(கணிப்பொறி) உங்களை வாட்டி எடுத்து விடுவார்கள்' என பூச்சாண்டி காட்ட, நாங்கள் அசரவில்லை.

எங்கள் மூவரையும் உட்கார சொன்னார்கள். அவர் முடிவுக்கு வந்துவிட்டார் 'இந்த வரலாற்று கேள்விய கேட்டது திருமா உள்ள Bench-தான்' என்று. இந்த கோவம் மற்றும் Trauma-வுடன்  Attendance எடுக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து Proxy-யாவது தருவோம் எங்கள் வகுப்பில். Attendance எடுத்து முடித்துவிட்டு, எங்களை எண்ணும்போது இடிக்க, மீண்டும் Attendace எடுத்தார்கள். மீண்டும் எண்ணிக்கை இடிக்க, மீண்டும் Attendance. இப்படியாக குறைந்தது இருபது முறை எடுத்தார்கள். ஆம், இருபது முறை. ஆனாலும் கணக்கு நேர் ஆகவில்லை. இந்த Hour முடிவுக்கு வந்தது. 'இதன் பின் விளைவுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்' என அபாய சங்கு ஊதியபடி விரிவுரையாளர் விடைபெற்றார்கள்.

அடுத்த Hour எங்கள் Dept-வுடையது. வெங்கடேஷ் வந்தார்கள். வந்ததும் Attendance எடுக்க போக, அந்த Attendace-ஐ பார்த்து அவருக்கு மயக்கம் வராத நிலை. 'என்ன நடந்தது' என எங்களை கேட்க, நாங்கள் நடந்ததை சொன்னோம். Third Hour முதல் கலகம் ஆரம்பித்துவிட்டது. சொன்னது போல இந்த விஷயம் HOD-களுக்கு கொண்டு சென்றதோடு நில்லாமல், எங்கள் வகுப்புகள் ஒரு வாரத்திற்கு Suspend செய்யப்பட்டது. நாங்கள் இதனை கொண்டாடினோம் என்று சொல்லவும் வேண்டுமா..!

எங்கள் ஐயப்பனால் ஒரு மாதத்திற்கு வகுப்புகள் Suspend செய்யப்பட்ட கதையும் ஒண்று உள்ளது. மேலும் திரு. சுஜாதா அவர்கள் பிரபலப்படுத்திய 'Mexico சலவைக்காரி' Joke-ஐ எழுதும்படி நண்பர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். அது தனிமையில் பேசி சிரிக்க. நம் Blog-ல் வேண்டாம் என்பது என் யோசனை. பிறகு உங்கள் விருப்பம்.

No comments:

Post a Comment