You are lookin' for..?

Friday, May 21, 2010

வழக்கமான அமைதி. மாடு வாங்குவ.



பள்ளிகளில் கல்வி கட்டணம் குறைக்கப்படுவதாக தமிழக அரசு 'ஆணை' பிறப்பித்துள்ளது. வரவேற்கத்தக்கது. பள்ளிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சும்மா வரும் பணம் வராமல் போனால் யாருக்குதான் 'படப்பிடிப்பு' வராது. படப்பிடிப்பு என்றே படிக்கவும். பிழை இல்லை.

ஆனால் எனது கவலை - வழக்கம் போல் பண முதலைகள் அரசுடன் 'வியாபாரம்' பேசி, ஒரு நல்ல 'விலை'க்கு அவர்களை வாங்கி விடுவார்களோ என. கல்வி என்றால் 'பணம்' என அருஞ்சற்பொருள் மாறி பல யுகங்கள் கடந்துவிட்டது. 'களை' எடுக்க வேண்டிய நாட்களில் நீர் பாய்ச்சி வளர்த்து விட்டு, இப்போது 'அறுவடை' நேரத்தில் களை எடுக்க வந்துள்ளனர் நமது அரசு - அதிகாரிகள். சரி, இப்பொழுதாவது மாற்றம் நிகழும் என அமைதி காப்போம். இல்லை என்றால் 'வழக்கமான அமைதி' காப்போம். நாம் அறியாத 'அமைதியா.'




நம் கல்வி முறை என்று Independent-Thought மற்றும் Creativity பற்றி போதிக்க போகிறது??? என்று 'மா'நகரங்களிலும், கிராமங்களிலும் பயிலும் மாணவர்கள் Equal Exposure-வுடன் திகழுவார்கள்???




* * * * *

'பருத்திவீரன்' திரைப்படத்தில் வரும் வசனம் - - - - -

=> 'இன்னிக்கி மாடு வாங்குவ. பிறகு வீடு வாங்குவ. Car வாங்குவ. ஒரு அரசியல் கட்சில சேர்ந்து, வட்ட செயலாளர் ஆவ. தேர்தல் வரும், அதுல ஜெயிச்சி M.L.A. ஆவ. அப்புறம் மந்திரி ஆவ. அப்படியே முதல் அமைச்சர் ஆயிடுவ.'
=> 'நான் ஒத்த மாடுதானையா வாங்க போறேன்னு சொன்னேன். அதுக்கு என்னய கோட்டை வரைக்கும் கொண்டு போய்ட்டியே.'




அதை போல் 'திரைப்படத்தில் நடித்து, முதல் முறையாக 'கதை நாயகியும்' ஆடை குறைக்கலாம் என்பதை தமிழில் அறிமுகப்படுத்தி, 'தாழ்வு மனப்பான்மை' நோயால் ஆட்கொண்ட தமிழனை கோவில் கட்டவைத்து, 'கற்பு' என்பது 'பொய்' என்ற உண்மை சொல்லி 'நன்மை' செய்து, சில 'முகமூடிகள்' எதிர்ப்பு என்ற பெயரில் 'கருத்து சொன்னவருக்கு' புகழை தேடி தர, நீதிமன்றமும் அதிசயமாக 'உண்மை'யின் பக்கம் நிற்க, இந்த Pristine புள்ளியில் இவர் ஒரு அரசியல் கட்சியில் சேர, அக்கட்சியின் தலைவரோ 'முற்போக்கு சிந்தனை கொண்ட வாழும் மணியம்மை இவரே' என புகழ் குத்து குத்த, இனி அவர் 'மேலவை. பிறகு கோட்டை' என்று செல்ல வேண்டிய இரண்டு இடங்கள் மட்டுமே மீதி உள்ளது.

வாழ்க Ms Khushboo. இவரது களப்பணி இனி எப்படி இருக்கும் என கவனிப்போம். யாரும் அரசியலுக்கு வரலாம். இவரையும் வரவேற்போம். எனக்கு இன்னொரு கவலை - காரணம்: நாகம்மையாக நடித்த Ms Jyothirmayi அரசியலுக்கு வந்துவிட்டால்.!?

* * * * *

Tuesday, May 18, 2010

முகமூடிகளை கழட்டுங்கள்.

'அங்காடித் தெரு'வின் எதிர்மறை விஷயம் பற்றி ஏன் பேசவில்லை என்று நண்பர்கள் கேட்கின்றனர். ஒரு நல்ல படத்தில், நல்ல விஷயம் மட்டும் பற்றி பேசுவோம் என்றுதான். படம் நல்ல Result தந்துள்ளது. இருந்தாலும் உங்களுக்காக இப்போது பேசுவோம் -  எல்லா கதாபாத்திரமும் ஒரு சோக கதை சொல்லி, உடனே கண்ணீர் விடுகிறார்கள். இது நாடக பாணியில் உள்ளது. காரணம் - நிறைய சோகம் பார்த்தவர்கள், அதுவும் சிறிய வயது முதல் பார்த்தவர்கள், இது போல் உடைந்து அழ மாட்டார்கள். ஒரு இறுக்கம் அவர்களிடம் இருக்கும். கண்கள் பேசும். உடல்மொழி பேசும். மேலும், யாரையாவது கட்டிபிடித்து கண்ணீர்விடுவதில் ஏதோ செயற்கைத்தனம். Eg: நாயகனும், நாயகனின் நண்பனும் மீண்டும் சேரும்போது கட்டிக்கொள்வது. இப்பெல்லாம் யாரும் இப்படி கட்டி, அழுது சேர்வது இல்லை.



நண்பர்கள் 'Cliche' விஷயத்தை ஏன் விட்டுவிட்டாய் என கேட்டனர். இதோ, அதுவும் - if a char is of dark-complexion, அவர் ஏதாவது ஒரு Cream-ஐ அல்லது Talc-ஐ முகத்தில் தடவி, தடவி, தடவி, தடவி..... இதை எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம். அப்புறம், அந்த Sneha வரும் Scenes. Pucca Cliche என்று சொல்ல வேண்டியதில்லை. நண்பர்கள் அந்த நேரம், எப்படா இந்த Scene முடிவுக்கு வரும் என்று நெளிய ஆரம்பித்துவிட்டனர். 'சீக்கிரம் யாராவது அள்ளிக்கிட்டு Scene-ஐ முடிச்சி வைங்கப்பா' என கூச்சல். இன்னும் சில. போதும் இத்துடன்.
* * * * *

'சோ' அவர்கள் 'ஜெயலலிதா மிக சிறப்பாக செயல்படுவதாகவும், Active-வாக இருப்பதாகவும், நேர்மையாக தொண்டாற்றுவதாகவும், இன்னும் சில -தாகவும்' ஒரு வாரப்பத்திரிகையில் சொன்னதாக நண்பர்கள் சொன்னார்கள். ஐயா 'சோ' அவர்களே, நான் உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' பற்றி ஒண்றும் சொல்ல விரும்பவில்லை. உங்கள் 'இன'பற்று நாங்கள் அறிவோம். எனக்கு இந்த 'இன'பற்று மீது எள்ளளவும் நம்பிக்கை இல்லை. ஆனால், நீங்கள் ஜெயலலிதா பற்றி தொடர்ந்து கூறி வரும் 'நேர்மையற்ற வார்த்தைகள்' - அப்படி ஒண்று ('இன'பற்று) இருப்பதாக எனது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது.

மக்களுக்கு நன்மையை எடுத்து சொல்வோர், 'தார்மீக' கோவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். யார் மீதும் 'பற்று சார்ந்த கருத்து சொல்லுதல் கூடாது.' நீ யாராக இருந்தாலும், தீங்கு செய்யின் 'தீங்கு' என்பேன் என்றும் நெற்றிகண் திறக்க வேண்டும். என்  குழந்தை பருவம் முதல் இந்த நேர்மையை நான் உங்களிடம் கண்டது இல்லை.

'Cho' Gue Vara T-shirt. This title takes the toll. Funny and more profound than the picture.




ஜெயலலிதா அவர்களின் Activeness பற்றி தமிழக மக்கள் நன்றாக அறிவார்கள். அவரது சிறுதாவூர் மற்றும் கொடநாடு 'ஓய்வு தளங்கள்' பற்றியும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். ஒருவேளை, உங்களுக்கு Amnesia அல்லது Short Term Memory Loss இருப்பின், it is time to take a test. திரு. பாமரன் 'குமுதம்' வார இதழில் ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாக கேள்விபட்டேன். அதனை நீங்கள் படித்து, உங்கள் 'நேர்மையற்ற வார்த்தைகளை' திருத்திக்கொள்ளவும். அல்லது, தமிழக 'சாதாரண' மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கவும்.

* * * * *




'Mexico சலவைக்காரி' அவர்கள் நமது Blog-ல் துணி துவைக்க துளியும் வாய்ப்பில்லை. இது நாம் தனிமையில் பேசி, சிரிக்க. Yea, we need to shed our Hypocrisy. ஆனால், இது தவறு என என் மனம் சொல்லுகிறது. Reason - நாம் நமது Hypocrisy களைய 'கற்பித்தல்' சார்ந்த அணுகுமுறைதான் அவசியம். சில நேரங்களில் நாம் நமது 'முகமூடிகளை' கழட்டி வைக்க நமது Blog-ல் சில 'கற்பித்தல்' சார்ந்த விஷயங்கள் எழுத நான் தயார். ஆனால் இந்த Joke நமது Blog-ஐ Porno என முத்திரை பதிக்க காரணமாக இருந்துவிட்டால், எனது/நமது 'உழைப்பு' வீணாகிவிடும்.



* * * * *




இந்த வருடம் 'பருவமழை' தவறாமல் வரும் என்றும், 'வறண்ட நிலங்கள் இருக்க' துளியும் வாய்ப்பில்லை என்றும், நமக்கு தேவையான 'குறைந்த அளவு' மழையாவது பொழிந்துவிடும் என்றும் Meteorological Data/Scientific Forecast சொல்கிறது. நம்பிக்கை வைப்போம். மழையை வரவேற்போம். புதிய வசந்தத்தில் திளைப்போம்.




* * * * *

தப்பும் சரியும் கலந்த மனிதனின் Starvin' என்னவென்று உங்களுக்கு தெரியுமா..? சரி, யார் அந்த தப்பும் சரியும் கலந்த மனிதன்..? வேறு யார்... நானும் நீங்களும்தான். நாம் எல்லோரும் 'சராசரி'தான். அதுதான் தப்பும் சரியும்.

இப்பொழுது நமது Starvin' விசயத்திற்கு வருவோம். எழுதியவரின் பெயர் Mr Royce Radcliffe.

Girls with tight and short clothes, lonely inside
Boys with crazy hairstyles, out of their mind
All searching for the same thing,
Eternally Denied Attention!
But how can one give it when the world itself seems so wide?

உங்களுக்கு இந்த கவிதையின் அர்த்தம் புரிகிறது என்று நம்புகிறேன். இல்லை என்றால், இதன் தலைப்பு தருகிறேன் - Starvin' for Attention! - எவ்வளவு அழகான உண்மையான வார்த்தைகள், நம்மை பற்றி.




உண்மையான Starvin' பற்றிய கவிதை இதோ -

Blessed with abundance of land
I simply cannot undertstand the uniform sufferring
calling on global humanity.

Struggling nations without a decent education
Multipying populations being forced out of their cities
by war and invasion.

Starving Children
Parents cradling them in distress
The land is barren from wars and famine which are countless
There is simply no easy way out of this mess.

Starving nations
Third world nations
Years of little or no rain have put a huge strain
on the government.

Relief agencies
leading the way for a good cause
Yet there are those of us
who can afford to give a toss.

எழுதியவரின் பெயர் Ms Sylvia Chidi. தலைப்பு - Starvin' Nations.


Friday, May 14, 2010

கலகம் - இரு/ஒரு சிறிய வார்த்தை(யால்)களால்.

எங்கள் பூண்டி கல்லூரி. Semester Fee - Rs. 500/- தேர்வு வந்தால் ஒரு Theory Paper-க்கு கட்டணம் Rs. 35/- ஒரு Practical Exam-க்கு கட்டணம் Rs. 100-ஐ தாண்டியது இல்லை. எங்களை போன்ற வறுமையில் உள்ளவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் கல்வி தந்த கல்லுரி. எனக்கு பெற்றோர்களை கல்வி என்ற பெயரில் 'பணம் பறிக்காமல்' படித்து முடித்த மன நிம்மதி. இந்த கல்லூரி-தகப்பன்சாமி உள்ள திசை நோக்கி வணங்குகிறோம்.

எங்கள் கல்லுரி 'Autonomous' status உள்ள கல்லூரி. எனவே பாடத் திட்டம் அவர்கள் உருவாக்குவது. எங்களுக்கு முதல் இரண்டு வருடமும் தமிழ் மற்றும் ஆங்கிலம் உண்டு. மிக மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் தென்றல் நிமிடங்கள் இவை.



எங்கள் கல்லூரியில் ஒவ்வொரு Hour-ம்  (ஒவ்வொரு Period-ம் ஒரு மணி நேரம் நடக்கும். எனவே நாங்கள் Hour என்றே கூறுவோம்) Attendance எடுப்பது வழக்கம். நாங்கள் Proxy கொடுப்பதில் வீரர்கள்.

இது கலகம் செய்த கதை. மிக விசாலமான வகுப்பறை எங்களது. கடைசி Bench-ல் 'மாப்பிள்ளை' போல் காலம் தள்ளியவர்கள் நாங்கள். கடைசி Bench மாணவர்களை 'மாப்பிள்ளை' என்றும், 'மாப்பிள்ளை Bench' என்றும் சொல்லுவார்கள். நீங்களும் சில அழகான பெயர் சொல்லலாம் இந்த கடைசி Bench மன்னர்களுக்கு. சில சமயங்களில் எங்களுக்கும் பின்னால் அமர்வார்கள் கோபி (867), திருமாவளவன் (866), சரவணன் (835), சிவகுமார் (831). அன்றைய தினத்தின் முதல் Hour-ன் ஆரம்பத்தில் Attendance எடுக்க மாட்டார்கள். காரணம் - தாமதமாக வருபவர்கள் நன்மைக்காக. எனவே முதல் Hour-ன் இறுதியில்தான் Attendance எடுப்பது வழக்கம். சிறைச்சாலையில் கைதிகளை எண் (Number) சொல்லி அழைப்பது போலவே எங்களையும் 801, 855, 863 என எண் சொல்லியே அழைப்பார்கள்.

கலக தினம் வந்தது. எங்கள் பின்னால் கோபி, திருமா, சரவணன், சிவா அமர்ந்திருந்தனர். ஐயப்பன் (849) அன்று இவர்களுடன் இருந்தானா என்பது எனக்கு மறந்துவிட்டது. அன்று முதல் வகுப்பு (First Hour) தமிழ். வழக்கம் போல் விரிவுரையாளர் வந்தார்கள். ஒரு 5 நிமிடம் அரட்டை அடித்து விட்டு 'பாடத்தை தொடங்குவோம்' என சொல்லி, கலகத்தை இவர்தான் ஆரம்பித்தார்கள். எடுத்தவுடனே இவர் சொல்லியது...

'கவிகோ' அப்துல் ரஹ்மான்க்கு 5.5"
கருணாநிதிக்கு 5.8"
வைரமுத்துக்கு 5.1"

என இன்னும் இரண்டு/மூன்று பெயர்களை சொன்னார்கள், இதைப் போல எண்களும் சொல்லி. தென்றல் மிக அழகாக இருந்தது இந்த புள்ளியில்.

திருமா கேட்டான் 'எது, Sir?'

அவன் சொன்னது ஒரு சிறிய வார்த்தை/இரண்டே இரண்டு மிகவும் சிறிய வார்த்தைகள். இந்த கனப்பொழுதில் இரண்டு விஷயங்கள் ஒன்றாக நடந்தது. வகுப்பு சிரிப்பலையில் திளைக்க, எங்கள் விரிவுரையாளர் கண்கள் சிவக்க சிலையாக நின்றார்கள்.

கோவம் கண்களிலும், கன்னத்திலும் வெளிப்பட்டது. ஆனால் நாங்களோ சிரிப்பை அடக்க முடியாமல். இது அவரது கோவத்தை மேலும் தூண்டிவிட்டது. 'ஒரு விரிவுரையாளரை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது?' என நொந்து போய் கேட்டார்கள். ஆனாலும் அவரது கண்கள் குண்டுகளை வீசியது எங்கள் மீது. எங்கள் 'வசவு கேட்கும் காண்டம்' தொடங்கியது. அவர் திட்டுரை எங்கள் காதில் விழவில்லை. நாங்கள் எல்லாம் நண்பனது Timin' வார்த்தைகளை எண்ணியும், கண்களில் ஆனந்த கண்ணீரும், வயிற்றில் வலியும்.

இந்த ஜென்மங்களுக்கு திட்டினால் உரைக்காது என ரொம்ப Late-ஆக எங்கள் விரிவுரையாளர் புரிந்துகொண்டு, தண்டனை தரும் 'தீர்ப்பு' விசயத்திற்கு வந்தார்கள். எங்கள் வகுப்பில் மூன்று Rows இருக்கும். அவரது வலது பக்கம் முதல் Row-ல் கடைசி Bench-ல் இருந்துதான் அந்த 'கேள்வி' வந்தது என்று அவருக்கு தெரியும். யார் என்று குறிப்பிட்டு தெரியாது. எனவே திருமா இருந்த கடைசி மற்றும் எங்களது Bench மன்னர்களையும் எழுந்து நிற்கும்படி கட்டளை. நாங்கள் ஏழு பேரும் நின்றோம். 'உங்கள்  ஏழு பேர்ல ஒருத்தன்தான் அந்த 'முக்கியமான' கேள்விய கேட்டது. யார்னு ஒத்துகிட்டா நல்லது. இல்லை என்றால் இந்த விஷயம் எல்லா Dept.களின் HOD-களுக்கு கொண்டு செல்லப்படும். பிறகு உங்கள் Dept.(கணிப்பொறி) உங்களை வாட்டி எடுத்து விடுவார்கள்' என பூச்சாண்டி காட்ட, நாங்கள் அசரவில்லை.

எங்கள் மூவரையும் உட்கார சொன்னார்கள். அவர் முடிவுக்கு வந்துவிட்டார் 'இந்த வரலாற்று கேள்விய கேட்டது திருமா உள்ள Bench-தான்' என்று. இந்த கோவம் மற்றும் Trauma-வுடன்  Attendance எடுக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து Proxy-யாவது தருவோம் எங்கள் வகுப்பில். Attendance எடுத்து முடித்துவிட்டு, எங்களை எண்ணும்போது இடிக்க, மீண்டும் Attendace எடுத்தார்கள். மீண்டும் எண்ணிக்கை இடிக்க, மீண்டும் Attendance. இப்படியாக குறைந்தது இருபது முறை எடுத்தார்கள். ஆம், இருபது முறை. ஆனாலும் கணக்கு நேர் ஆகவில்லை. இந்த Hour முடிவுக்கு வந்தது. 'இதன் பின் விளைவுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்' என அபாய சங்கு ஊதியபடி விரிவுரையாளர் விடைபெற்றார்கள்.

அடுத்த Hour எங்கள் Dept-வுடையது. வெங்கடேஷ் வந்தார்கள். வந்ததும் Attendance எடுக்க போக, அந்த Attendace-ஐ பார்த்து அவருக்கு மயக்கம் வராத நிலை. 'என்ன நடந்தது' என எங்களை கேட்க, நாங்கள் நடந்ததை சொன்னோம். Third Hour முதல் கலகம் ஆரம்பித்துவிட்டது. சொன்னது போல இந்த விஷயம் HOD-களுக்கு கொண்டு சென்றதோடு நில்லாமல், எங்கள் வகுப்புகள் ஒரு வாரத்திற்கு Suspend செய்யப்பட்டது. நாங்கள் இதனை கொண்டாடினோம் என்று சொல்லவும் வேண்டுமா..!

எங்கள் ஐயப்பனால் ஒரு மாதத்திற்கு வகுப்புகள் Suspend செய்யப்பட்ட கதையும் ஒண்று உள்ளது. மேலும் திரு. சுஜாதா அவர்கள் பிரபலப்படுத்திய 'Mexico சலவைக்காரி' Joke-ஐ எழுதும்படி நண்பர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். அது தனிமையில் பேசி சிரிக்க. நம் Blog-ல் வேண்டாம் என்பது என் யோசனை. பிறகு உங்கள் விருப்பம்.

Sunday, May 9, 2010

Newsy

SU-DO-KU
If you would love to play SU-DO-KU, you gotta rack your brains harder as the game may soon get a lot tougher. Dr Paul Newton and Stephen DeSalvo of the University of Southern California in Los Angeles have published their report on SU-DO-KU. The report reveals 'we think SU-DO-KU will develop its multi-dimensional puzzles, and answer about how to give the initial-clues in order to create a hard, but still solvable SU-DO-KU puzzles.'


A basic SU-DO-KU with sub-blocks.

A SU-DO-KU puzzle comprises of a 9 * 9 matrix of numbers from 1 to 9. Each number should only appear once along any row and once down any column as well as only once in each of the three 3 * 3 sub-blocks that make-up the matrix.


This picture illustrates two-dimensional SU-DO-KU puzzle.

There are about 1021 different matrices to develop its multi-dimensional puzzles. Friends, get ready for some action. It's time to sharpen our brain.


This picture illustrates multi-dimonsional SU-DO-KU puzzle.

* * * * *

Pill Turns 50

~ The birth control pill has been called 'the most important scientific advance of the 20th century.'
~ More than 200 million women worldwide have used the pill since its arrival.

Also known as Sexual Revolution. I will give you a couple of valid points to zero-in.....
~ it allows women to control their own fertility.
~ it leads to an explosion of casual sex.


This picture illustrates how the pill works.


Facts
~ the pill first went on sale in West Germany in 1956.
~ more than 200 million women worldwide still need or want acces to the pill.
~ if they are given contraception, it could prevent more than 50 million un-wanted pregnancies.
~ and this could save 150,000 lives of women and 640,000 newborns'.

% of women on the pill around the world (age b/w 15 and 49)
~ Bangladesh 28.5
~ Indonesia    34.6
~ Chile           29.1
~ UK             29
~ Germany     52.6
~ Canada       21
~ USA           18.3

But in India, accordin' to 'The National Family Health Survey-3 Statistics', 49% of Indian women use modern contraception and of this 49% women just 3.1% of women use this magic pill.

It gives liberty to women when it comes to pre-marital sex. And women DO NOT need to get the nod from anybody for birth control procedures. This pill was introduced as a device and you gotta use this with a care-attitude. Just apply yourself.




To know more 'bout this magic device, just visit the followin' link - - -

http://www.tpill72.com/about-tpill72.html

* * * * *

About Patient Zero

Patient Zero is the first patient who indicates the outbreak of a disease and may indicate its source and possible spread.





The term was used by Dr William Darrow to refer to the spread of HIV in North America, who showed how 'patient zero' had infected multiple partners with HIV and how the virus had spread across the world.




About Baker's Dozen

It means 13, instead of 12 itmes/quantity.




The tale behind its origin is that a mediaeval law specified the weight of bread loaves, and any baker who supplied less to a customer was in for dire consequence. Therefore, bakers would include a thirteenth (13th) loaf with each dozen just to be safe.

About Wet Wing

A wet wing is an aerospace engineerin' technique where an aircraft's wing structure is sealed and used as a fuel tank. Because the tanks are an integral part of the structure, they cannot be removed, and require access panels for routine maintenance and visual inspections. By eliminatin' the need for fuel bladders, aircraft can weigh less and offer improved performance.





A disadvantage of the wet wing is that every rivet, bolt and nutplate, hose and/or tubin' that penetrates the wing must be sealed to prevent fuel leakin' or seepin' around these hardware components.

This sealant must allow for expansion and contraction due to rapid temperature changes (i.e when cold fuel is pumped into a warm wing tank) and must retain its sealin' properties when submerged in fuel and when left dry for long periods of time. Workin' with this sealant can be difficult and replacin' old sealant inside a small wing tank even worse if the old sealant needs to be removed as well.
 
* * * * *
 
Watch Out - Naomi 'Biter' Campbell
 
Who would have known someone with a completely out of control temper and taste for cocaine would be such a freak?

 
 
 
We all know Naomi Campbell is probably a complete animal in the bedroom. Here she is with Russian boyfriend Vladislav Doronin, 46, and this guy is worth billions and ain’t too bad lookin' at all. But for some reason he has a couple loose screws – he’s slippin' it to this crazy woman.
 
This picture has to be about the most repulsive lookin' kiss ever. And the guy next to them checkin' it out is pretty creepy too - and I think he’s actually sportin' wood.!!??

Thursday, May 6, 2010

Bizzare

Pamela Anderson அல்லது Pamee. ஒரு நல்ல விசயத்திற்கு நிறைய மக்கள் கூடும் இடத்தில் நிர்வாணமாக நின்று 'Campaign' பண்ண வேண்டும் அல்லது 'போராட' வேண்டும் என்றால் Pamee எப்பொழுதும் தயார். நிர்வாணம் பற்றி அவரிடம் கேட்டால் நிறைய புகழ்ந்து தள்ளுவார். அவரது நிர்வாணம் நமது பிரச்சினை அல்ல. நிர்வாணம் அவரது சுதந்திரம். அவர் சொன்ன ஒரு விஷயம்தான் நெருடல். 'இறக்கும் நொடியிலும் நிர்வாணமாக இருக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நான் அதற்கு தயங்க மாட்டேன். சாகும் வரை இந்த சமுதாய பணி தொடரும்' என அறிக்கை விட்டார்.


அவர் 70\80\90\100 வயதில் நிர்வாணமாக இறப்பதாக வைத்துக்கொள்வோம். அல்லது நிர்வாணமாக போராடும் போது. அவரது நிர்வாணம் நன்றாக இல்லை என்று அதற்கு எதிராக யாராவது நிர்வாணமாக போராட வந்தால்.!! ரொம்ப Complicated-தான். வேற வழி இல்லை.

இவர் Silicone-(Breast)-Implant செய்து 'பெரிதாக' மாற்றிக் கொண்டவர். இது நல்லது இல்லை என்று பெண்கள் புரிந்து கொண்டால் நல்லது. Size doesn't matter. நம்புங்கள்.
* * * * *

George Clooney - a lovely person and actor. இவருக்கு Lake Como villa ஒண்று இருக்கிறது. இது Italy-ல் உள்ளது. இந்த villa-வின் அடியில் இருந்து 500lb எடை உள்ள Bomb ஒண்று கண்டெடுக்கப்பட்டது. இதுவரை வெடிக்காமல் இருந்து உள்ளது. இதுவரையா..? அப்படி என்றால் எப்பொழுது முதல்.!? ஆம், இது இரண்டாம் உலக போரை சேர்ந்தது. நிபுணர்கள் இந்த Bomb-ஐ செயலிழக்க செய்ததோடு நில்லாமல், மேலும் சில Raw Explosives கண்டெடுத்தனர் அந்த villa-வின் அடியிலிருந்து.


கவனமா இருங்க, Mr Clooney.

* * * * *

இது நமது Ranchi-ல் நடந்தது. ஒரு கிராமத்தின் அருகில் மாந்தோப்பு உள்ளது. அங்கு கிராமத்து குழந்தைகள் சென்று கீழே கிடக்கும் மாங்காய்களை எடுத்து வருவது வழக்கம். வழக்கம்போல் குழந்தைகள் மாங்காய்களை எடுக்கும் போது ஒரு குறிப்பட்ட மாங்காய் மீது ஒரு சிறுமிக்கும், ஒரு சிறுவனுக்கும் ஆசை. இருவருமே ஐந்து வயது குழந்தைகள். அந்த மாங்காயை நோக்கி ஓடிய பந்தயத்தில் சிறுமி சிறுவனிடம் தோற்றுவிடுகிறார்.



சிறுவனிடம் அந்த கனியை சிறுமி தனக்கு கேட்க, சிறுவன் மறுக்க, கோவம் மற்றும் தோற்ற வலி எல்லாம் சேர்ந்து சிறுமியை Furious ஆக்குகிறது. ஒரு குச்சியை எடுத்து அந்து சிறுவனை அடிக்கிறார். வயிற்று வலியால் சிறுவன் துடிக்கிறார். வீட்டிற்கு வந்த பிறகும் துடிக்கிறார். நேரம் ஆக ஆக, சிறுவனின் பெற்றோர் பதற்றம் கொள்கின்றனர். மருத்துவமனை செல்கின்றனர். சிகிச்சை பயனளிக்கவில்லை. இறந்துவிடுகிறார். காரணம்: சிறுமி அடித்ததில் சிறுவனின் குடலில் இரத்த கசிவு ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது அந்த சிறுமி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தயவுசெய்து, கோவம் வந்தால் முடிந்த அளவு உங்களை Control பண்ணவும்.

* * * * *

தமிழனது வாழ்வு தமிழக முதல்வர் கருணாநிதி எழுதிய 'தந்தி'யால் இலங்கை மண்ணில் 'காப்பாற்றப்பட்டது' உங்களுக்கு தெரியுமா..! இந்த அகிம்சை வழியை 2010-ன் மிக சிறந்த 'அறப்போராட்டம்' என்று உலக தலைவர்கள் 'வியந்து' பாராட்டி உள்ளனர். சத்தம் இன்றி, வெடிகுண்டு இன்றி, போர் வீரர்கள் இன்றி, அரசியல் தூதுவர்கள் இன்றி முடிவுக்கு வந்த ஒரே போர் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை.' இதற்கெல்லாம் காரணம் அந்த 'தந்தி-அறப்-போராட்டம்.' அந்த தந்தி-அறப்-போராட்டம் மீண்டும் வரலாம்.




இந்த முறை நம் தலைவனை உலகிற்கு தந்த பார்வதி அம்மாள் அவர்களை காப்பாற்ற. என்ன (சோனியா-மன்மோகன்-காங்கிரஸ்) மத்திய, (கருணாநிதி) மாநில அரசோ..! வாழ்க தமிழன் - வளர்க அவனது ஏமாளித்தனம். இதுதான் தமிழன் VS சக தமிழன்.

* * * * *

3-Idiots - மிக நல்ல திரைப்படம். 'இந்த Hindi படம் தமிழில் Re-make செய்யப்பட உள்ளது. இதில் Mr Vijay நடிக்க வாய்ப்பு உள்ளதாக' நண்பர்கள் சொன்னார்கள். இவர் இதுவரை நடித்த 50 படங்களையும் 'உலக திரைபடங்களாக' அறிவிக்க கோரி என்ன செய்ய வேண்டுமோ அதனை தமிழ் மக்கள் செய்ய கடமைபட்டுள்ளோம். Please, எம் மக்களை இதற்கு மேல் கொடுமை செய்ய வேண்டாம். அவர்கள் அனுபவித்த கொடுமைகள் போதும்.

இந்த Hero-க்கள் என்ற பெயரில் இருக்கும் Comedy Piece மற்றும் Villain-களை விட உலக அளவில் பெரிய வியாபாரம் உள்ள Hindi and Hollywood நடிகர்கள் தங்கள் பெயரின் முன்னால் 'அடை/வடை மொழி' போடுவது இல்லை. தங்களின் புகழை??? தாங்களே Punch Dialogue என்ற பெயரில் மொக்கை போடுவதில்லை. Haiti தீவு மக்களுக்கு Mr John Travolta தனது சொந்த விமானத்தில் மருத்துவ குழு மற்றும் நிவாரண பொருட்களுடன் சென்று உதவி செய்தார். செலவு முழுவதும் Mr Travolta-வுடையது. இங்கு உள்ள உலகை-காக்க-வந்த-நடிகர்களுக்கு 'தளபதி' என்ற சொல்லின் அர்த்தம் தெரியுமா.??

இந்திய நடிகர்களையே  உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். Mr Aamir Khan மிக சிறந்த நடிகன். தனது பெயரின் முன்னால் 'Super Actor அல்லது Padma Shree அல்லது உலக நாயகன் அல்லது அது-இது-எது' என்று போட்டுக்கொள்வதில்லை. 3-Idiots படத்தில் அவரது Body Language பாருங்கள். Ghajini (Hindi) படத்தில் அவரது உடல் மொழியை கவனியுங்கள். ஒரு சின்ன மொக்கை இருக்காது. 3-Idiots படத்திற்கு என்ன உடல் மொழி வேண்டுமோ, அது இருக்கும். Ghajini படத்திற்கு என்ன உடல் மொழி வேண்டுமோ, அதை மீறி நடிக்காமல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.




ஒரு பாடல் முழுவதும் தன்னை பற்றி பாடுவது - மற்ற நடிகர்களும் Hero நடிகனை புகழ்வது - உலகிலுள்ள பெண்கள் எல்லாம் இந்த தமிழ் நடிகனை காதல் செய்ய ஏங்குவது - 'இயற்கையே' இவுனுங்க முன்னால் மண்டியிடுவது - பல் விளக்குவதற்கும் Punch Dialogue பேசுவது - நடிகையை பூமிக்கு வந்த 'அரிய ஜந்து' என நினைத்து தலை முதல் உள்ளங்கால் வரை மோப்பம் பிடிப்பது - பக்கம் பக்கமா இவர்களே இவர்களை பற்றி பேசும் போது மற்ற நடிகர்கள் பொறுமையாக கேட்பது - நாலு பேர் முன்னால் நிக்கவே முடியாதவர்கள், ஒரு ஊரையே அடித்து வெளுப்பது - உண்மையில் 'ஜால்ரா' போடுபவர்கள், திரையில் யாரையும் எதிர்ப்பது - இன்னும் நிறைய உள்ளது இந்த 'ஐயோ..! நடிகர்களை' பற்றி சொல்ல.

கடவுள் இல்லை என்பவரது பாடல் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவா.' நான் ரசிக்கும் நடிகர்தான். இருந்தாலும் இதுபோல் நிறைய உள்ளது இவரிடம் சொல்லவேண்டிய குறைகள். Mr Rajini இல்லாமலா. ஒரு விழா. வழக்கம் போல் தமிழக முதல்வர் மற்றும் பலர். இவர் பேசியபோது கூறுகிறார் '.... நான்தான் ரொம்ப அடக்கமானவன் என்று நினைத்திருந்தேன். இவர் என்னை விட அடக்கமானவராக இருக்கிறார்' என்று ஒருவரை பற்றி. இன்னொருவரை புகழும் போதும் தன்னை நுழைத்துக்கொள்கிறார்.

Mr Vijay நம் தமிழின் சிறந்த இயக்குனர்கள் விரும்பும் நடிகன் இல்லை. 3-Idiots படத்தில் இவர் நடித்தால் - தயவுசெய்து, மொக்கை Dialogue இல்லாமல், தன்னை பற்றி பாடி மற்றும் பேசி மக்களை கொல்லாமல், மற்ற நடிகர்களும் இவரை புகழாமல், அது-இது-எதுவும் இல்லாமல் 'நடிக்க' மட்டும் செய்வாரா.?? இவருக்க 'நடிக்க' தெரியுமா.?? கவலை வேண்டாம் மக்களே. இவருக்கு நடிக்க தெரியும். தனது படம் Release ஆகும் போதெல்லாம் சரியாக 'அரசியலுக்கு வருவேன்' என்று அறிக்கை விடுகிறாரே. அது போதாதா.!! ஏற்கனவே ஒரு 'குழப்ப குத்த' நம் தமிழக மக்கள் கண்டுகளித்தோம். மீண்டும் 'இன்னொரு வடையா.!!' தமிழகம் தாங்காது.

மக்கள் இப்படி சொல்லலாம், அவர் 3-Idiots படத்தில் நடித்தால் - 'Hindi-ல  இந்த படம் எத்தனை அழகு. Hmmm.... எல்லாம் நேரக் கொடுமை.' எதற்கு/வேண்டாமே இந்த விபரீதம். To our surprise, இவர் நன்றாக 3-Idiots படத்தில் நடித்துவிட்டால் - இவர் படம் Release ஆகும் போதெல்லாம் கிண்டல் செய்து அனுப்பப்படும் பல்லாயிரம் SMS-களும் E-mail-களையும் நம் மக்கள் நிறுத்த முயற்சி செய்வார்கள்.