You are lookin' for..?

Thursday, November 18, 2010

நமது பெண்கள் சமுதாயம் - ஆண் செய்தால் 'Pervert'

சொல் உபயோகம் Transvestism; நாம் வழக்கில் வைத்துள்ள சொல் Cross-dressin'.




பெண்கள் Cross-dressin' செய்து எல்லோரும் பார்த்ததுண்டு. அது ஒரு சாதாரண நிகழ்வு. Formal, casuals மற்றும் வீட்டில் இருக்கும் போதும் cross-dressin' மிக சாதாரண நிகழ்வாக பெண்கள் விசயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது நமது சமுதாயத்தில். ஆனால், ஒரு ஆண் cross-dressin' செய்தால் இந்த சமுதாயம் ஏன் கிண்டல் செய்கிறது ? அப்படி செய்தால் அந்த ஆண்மகனை நமது பெண்கள் சமுதாயம் & ஒட்டுமொத்த சமுதாயமும் சேர்ந்து 'Pervert' என்று அழைக்கும்.

I don't understand why women can wear male clothes - but men can't wear female clothes.


Many women probably assume that most transvestites are either homosexual or candidates for sex change surgery.
What inspires this level of anger among so many women ? Fear, I suppose. But fear of what ? Fear of the competition for the underwear drawer ? Fear that he might be gay ? Fear that he'll stretch everything and ruin her tights ? Fear that the neighbours will find out ?
But, on the whole, there is a huge difference between transvestites and transsexuals. Transsexuals lose their balls. Transvestites are keen to keep theirs.

It, perhaps, (crossdressin') produces so much confusion, bewilderment and resentment and so many pejorative remarks.
Most crossdressers live in constant fear of bein' found out. Around a quarter of male transvestites have never dared share their secret with their wives. That means that around the world millions of women are married to transvestites - and don't know it. In every million women there will be around 25,000 who are unknowingly married to (or livin' with) transvestites.

Transvestism crosses all social and professional barriers. Your best friend, your college mate, your cousin, your boss or your husband could be a secret transvestite. The chances are high that someone you know well is a crossdresser.

I believe that transvestism is one of the least harmful of all hobbies and one that no man should feel ashamed of. It is, I believe, a perfectly acceptable way for any man to escape from the day to day stresses of bein' a man in a stressful world. It's fun and clearly gives a lot of men a great deal of pleasure and it is difficult to think of any activity which is less likely to do harm to anyone.

Men who dress in womens' clothes brin' out a normal, healthy part of their own femininity, broaden their outlook on life and enjoy a temporary respite from the responsibilities and demands of bein' male.

I'm always sad to know that of the number of women who do not accept their lover/husband's crossdressing. Please, stop treatin' them horrendously badly.


Here are some facts - - -

* Well over three quarters of all transvestites regularly wear the sort of underwear worn by women under their male clothin'. Many of the rest would do so if they weren't frightened of bein' found out by wives.

* Less than half of all transvestites go out of their homes fully dressed as women and most of these are honest enough to admit that they don't fool anyone. But for most this isn't important. They want to dress in the sort of clothes worn by women - not become women.

* Transvestism must be one of the most harmless hobbies. And yet nearly three quarters of male transvestites admit that they live in constant fear of bein' found out by prejudiced relatives, neighbours or employers. Many say they don't understand why women can wear male clothin' - but men can't wear female clothes.

* Some wives are scornful and dismissive. Others are patronisin' and refuse to try and understand. Some wives `allow' their men to dress for one hour a week - as long as they do it in secret.

* Three quarters of all transvestites' partners know that the man in their lives dress in women's clothin'. But a quarter of partners do not know.

* There is good reason for the secrecy since most wives or girlfriends who know about their partner's crossdressin' disapprove. They miss a lot of fun by bein' so selfish, narrow minded and disapprovin'.

* Happily, just over a third of wives and girlfriends actively help their men dress as women by helpin' with make up and clothes. Many women admit they get a sexual turn on from seein' their male partner in silky, feminine clothes. It is common for transvestites whose partners do approve to have sex while dressed as a woman.


* The vast majority of transvestites are heterosexual.

* The average transvestite spends 12 hours a week dressed as a woman - but would like to spend 70 hours a week (rather more than half the `waking' week) dressed in feminine clothes.

எனது தனிப்பட்ட கருத்து: ஆண் 'ஆணாக இருப்பதில்தான் அழகு' என்று நான் நம்புகிறேன். பிறகு உங்கள் அறிவு.

Sunday, October 31, 2010

English - just a language

Friends, if you would like to know the GLM - you gotta visit a couple of links that I am gonna serve you. Before you visit those links, I wanna share some interestin' facts with you.



~ GLM stands for Global Language Monitor which operates from Austin, Texas-based company that collectively documents, analyzes and tracks trends in language usage worldwide, with a particular emphasis upon the English language.

~ In April 2008, GLM moved its headquarters from San Diego to Austin.

~ GLM gets a hand from Predictive Quantities Indicator (PQI), is a kind of formula, to accomplish this task. To know more about, you have to go to the link.

~ Counter View
- the target date had been changed a number of times from late in 2006 to early in 2009.
- a count is impossible because there is no possible objective definition of "word."

So as to defend its stand, GLM does follow the footprints of Samuel Johnson and Noah Webster. And to know more about, please play the link.

~ GLM has declared the millionth English word to be Web 2.0.
~ Jai Ho, Slumdog, Cloud Computing, Sexting, Defriend are now treated as "words."

This was widely criticized by a number of prominent members of the linguistic community, includin' Geoffrey Nunberg and Jesse Sheidlower and Benjamin Zimmer.




~ Nice (Latin nescius ‘not knowing') is recorded from the 13th century in the sense of ‘foolish’, then it shifted to ‘coy, shy’ and by the 16th century had the meaning ‘fastidious, dainty, subtle’ from which by the 18th century the sense ‘agreeable, delightful’ developed. (Friends - from now on, handle this word with care).

~ Decimate originally meant to reduce something by one tenth but now simply means to reduce drastically.

~ Culture is a collective term referring to the arts and human intellectual achievement in general. However it has come to be used in the sense of ‘general set of attitudes and behavioural types.'

Here you go,

http://en.wikipedia.org/wiki/Global_Language_Monitor#cite_note-6

http://news.bbc.co.uk/2/hi/programmes/world_news_america/8094381.stm

I hope the above mentioned links will serve you the purpose.

Sunday, October 24, 2010

Despise

Do you simply despise your friend's girlfriend/boyfriend? Here are some ways to not let her/him come in the way of your friendship.

This is a classic situation that has happened to almost all of us. Your best friend, the one you have literally grown up with, who you have shared your deepest darkest secrets with, has a new man/girl in her/his life and you simply hate her/him. But like most friends you are not sure how to tell him/her and deal with the repercussions. So should you open your mouth and risk being blacklisted by your friend or should you simply grin and bear it up?

- Before telling your friend how you feel, try to think about what exactly you don't like in her/his love-interest. It could be the way s/he talks, her/his attitude or simply the way s/he treats your friend. Ensure that you have some valid points to make or you will end up looking like a jealous friend. Remember, no matter how much you hate her/his guts, you need to use a tactful approach when telling your friend what you dislike about her/him.



- If your best friend's new relationship is annoying you because you aren't getting enough alone time with her/him, fear not. Try to understand that s/he will be busy in the start of the relationship and may not have much time to spare. But at the same time, tell her/him how you feel and you both can still do girly/boys stuff together. Going shopping together, pampering yourselves at the spa or salon or even watching Sex & the City re-runs — these are some things s/he wouldn't want to do with her/him man and you can always be there.

- Figure out what issue you have with your friend's man/girl and see if you can resolve it. Maybe you just need to spend some time alone with her/him and talk it out. If you feel s/he bad mouths you to your friend, ask her/him about it. Find out what is the bone of contention. You could also tell her/him if you don't like the way s/he behaves around your friend and to improve.

- It's perfectly all right to have an opinion on your mate's love interest. But, if you feel that s/he is doing her more harm than good, it might make sense to tell another friend about it. If her/his boy/girlfriend is a drug user or has been cheating on your friend or has a history of bad behaviour than you owe it to your friend to tell her/him and let her/him decide what to do. This can be risky, as if your friend still keeps the relationship you may feel betrayed. No matter what your friend decides to do, once you tell her/him, your duty ends. You need to let go which may also mean being there for your friend if s/he decides to marry the guy/girl.

- At times, no matter how much you hate it, it's best to cut ties with your friend until s/he realises herself that her/his boy/girlfriend isn't right for her/him. This might seem a bit drastic initially but can work out in the long run. Especially if your friend is in a very depressing or abusive relationship and refuses to get out, it can affect your mental state too. Make sure s/he knows that you love her/him and will be there for her/him if s/he decides to leave him/her.

Courtesy: a couple of websites.

Saturday, October 23, 2010

கோரைப் பற்களைக் காட்டிய முகமூடிகள்

June 1st, 2010 அன்று சாரு நிவேதிதாவிடம் பகை தீர்த்துக் கொண்ட இரு 'நடிகர்களின்' முகமூடியை கிழிக்கும் நோக்கில் சாரு நிவேதிதா எழுதிய விளக்கம் உங்களுக்காக...

மன்னிப்புக் கேள்!

மே 30-ஆம் தேதி நடந்த விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கும் புரிகிறாற்போல் இதை எழுதி விடுகிறேன்.

இன்றைய நவீன காலகட்டத்தில் குருமார்கள் தேவையா இல்லையா என்பது விவாதத் தலைப்பு. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் தெரியாது. இத்தலைப்பின் உள்குத்து என்னவென்றால், நித்யானந்தாவைப் பற்றி ஒரு டாக் ஷோ செய்ய வேண்டும் என்பதுதான். அதோடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சித் தயாரிப்பாளரான ஆண்டனி. இதை அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு ஆகிக் கொண்டிருந்த சமயத்தில்தான் என்னால் உணர முடிந்தது. இரண்டாவது மாங்காய், ஆண்டனிக்கு என் மீது இருந்த பகையை இந்த நிகழ்ச்சி மூலம் தீர்த்துக் கொள்வது.

கொஞ்சம் ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும். சென்ற ஆண்டு நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை.

என்னுடைய பலவீனம் அது. உடனடியாக எதற்கும் எதிர்வினை செய்ய முடியாது. அதைப் பற்றி நின்று நிதானமாக யோசிக்க வேண்டும். அதனாலேயே நண்பர்கள் என்னை ட்யூப் லைட் என்பார்கள்.

நீயா நானா பற்றி இன்னொரு ரகசியம், நிகழ்ச்சியில் கேள்வி கேட்கும் கோபிநாத் தானே யோசித்து கேள்விகளைக் கேட்பதில்லை. நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். கோபிநாத்தின் காதுகளில் ஒரு சிறிய ஒலிவாங்கி செருகப்பட்டிருக்கும். அதில்தான் நிகழ்ச்சிக்கு வெளியே அமர்ந்திருக்கும் ஆண்டனியின் கேள்விக் கணைகள் சாரை சாரையாக வந்து விழும். அதைத்தான் கோபிநாத் கேட்பார்; பார்வையாளர்களிடம் பேசுவார். ஆகவே, கோபிநாத் ஒரு பொம்மைதான். அதை இயக்குபவர் ஆண்டனி.

அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நான் சற்றும் எதிர்பாராத விதமாக கெரில்லாத் தாக்குதலைப் போல் கோபிநாத்திடமிருந்து அந்தக் கேள்வி வந்து விழுந்தது. “சாரு, நீங்கள் நித்யானந்தாவை ஆதரித்தீர்கள்; அவரைக் கடவுள் என்றீர்கள். அதனால் உங்களுடைய வாசகர்கள் எல்லோரும் நித்யானந்தாவின் பின்னால் போனார்கள்; இப்படி உங்கள் வாசகர்களைத் திசை திருப்பியதற்காக வருத்தப்படுகிறீர்களா?” கொஞ்சம் திகைத்துப் போன நான் ”ஆமாம்” என்றேன். விடாமல் தொடர்ந்து ”அதற்காக உங்கள் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வீர்களா?” என்றார் கோபிநாத்; அதாவது, ஆண்டனி. எனக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

ஒரே குழப்பமாக இருந்தது. நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? நானா நடிகையுடன் படுக்கையில் புரண்டேன்? அப்படியே புரண்டிருந்தாலும் அதற்காக நான் என் மனைவியிடம் அல்லவா மன்னிப்புக் கேட்க வேண்டும்? வாசகர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? மேலும், நான் என்றைக்குமே பிரம்மச்சரியத்தை போதித்தவன் அல்லவே? நித்யானந்தாவைக் கூட விமர்சிப்பது ஏன் என்றால், மற்றவர்களுக்கெல்லாம் பிரம்மச்சரியத்தை போதித்த அவர், தான் மட்டும் அதற்கு எதிராக நடந்து கொண்டார் என்ற காரணத்தினால்தானே? மேலும், நான் என்ன நித்தியின் பார்ட்னரா? எனக்கும் அவருக்கும் ஆறு மாதத் தொடர்புதானே இருந்தது?

ஒரு நொடியில் இப்படியெல்லாம் யோசித்த நான் ”நித்யானந்தாவை நம்பி ஏமாந்த கதையைத்தானே குமுதம் ரிப்போர்ட்டரில் விளக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?” என்று கோபிநாத்திடம் சொன்னேன். ஆனால் கோபிநாத் மூலம், கேட்ட கேள்வியையே விடாமல் திரும்பத் திரும்பக் கேட்டு என்னை முட்டுச் சந்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டிருந்தார் ஆண்டனி. கிட்டத்தட்ட ஒரு கொலைவெறியுடன் அவர்கள் அன்றைய தினம் என்னைத் தாக்கினார்கள். சேடிஸ்ட்டுகளைப் போல் நடந்து கொண்டார்கள். இது சம்பந்தமாக என் வாசகர்களிடமிருந்து எனக்கு நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்துள்ளன.

பல் பிடுங்குவதைப் போல் என் வாயிலிருந்து மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிடுங்கினார்கள் ஆண்டனியும் கோபிநாத்தும். பிறகு நிகழ்ச்சியின் மற்றொரு விருந்தினரான பவா செல்லத்துரையை விட்டும் என்னை அடித்தார்கள். பவா ஒரு கம்யூனிஸ்ட். அவரும் நீயா நானா கோஷ்டியோடு சேர்ந்து கொண்டு நான் வாசகர்களை ஏமாற்றியது (!) தவறு என்றார்.

ஏன் ஐயா, ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடுமா? ஒரு பெண் ஒருவனை நம்பிக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறாள். பிறகுதான் தெரிகிறது, அவன் ஏற்கனவே ஏழு கல்யாணம் செய்து கொண்டவன் என்று. தாலியை அறுத்துப் போட்டு விட்டு வந்து விடுகிறாள். என்னுடைய நிலைமையும் அதுதான். நித்தி தன்னை சாமி என்றார். எனக்கு ஆசாமியையும் பிடிக்கும்; சாமியையும் பிடிக்கும். மேலும், மிக வெகுளியான ஒரு ஆள் நான். நீங்கள் எதைச் சொன்னாலும் நம்பி விடுவேன். ஏனென்றால், நீங்கள் ஏன் என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். ஒருவர் சொல்வதை நான் ஏன் பொய் என்று நினைக்க வேண்டும்? அப்படி நினைப்பது என்னைப் பொறுத்தவரை அராஜகமாகத் தோன்றும். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் அதை உண்மை என்றுதான் நம்புவேன். அதுவும் ஒருவர் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது எப்படிப் பொய்யாக இருக்க முடியும்? ஒருவர் கடவுளிடம் போய் ஜேப்படித் திருட்டு செய்ய முடியுமா? அதனால்தான் நித்தியை நம்பினேன்.

இதில் நான் என் வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? எங்கள் எல்லோரையும் ஏமாற்றிய நித்தி அல்லவா எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்?

உதாரணமாக, நான் நித்தியை நம்புவதற்கு முன்னதாக மார்க்சீயத்தை நம்பினேன். ஸ்டாலினையும் மாவோவையும் நம்பினேன். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்தை உருவாக்கிய சாரு மஜூம்தாரின் முதல் பாதியைத்தான் என் பெயராக ஆக்கிக் கொண்டேன். நான் மட்டும் அல்ல; 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் எத்தனையோ பேர் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அதில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகம்.

பிறகு நடந்த கதை நம் எல்லோருக்கும் தெரியும். கம்யூனிஸ்ட் ரஷ்யா வீழ்ந்த பிறகு உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் பெயரால் நடந்த கொலைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. ஹிட்லர் கொன்றது 90 லட்சம் பேர் என்கிறது புள்ளிவிபரம். ஆனால், மக்கள் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கம்யூனிசத்தால் ஸ்டாலினின் ரஷ்யாவில் கொல்லப்பட்டது 60 லட்சம் பேர்; மாவோவின் சீனாவிலும் 60 லட்சம். கம்ப்யூச்சியாவில் இரண்டே ஆண்டுகளில் இரண்டு லட்சம் பேர் படுகொலை. இதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் பெயரால் பல லட்சம் பேர் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிலையில், தான் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தோம் என்பதற்காக யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? பவா செல்லத்துரை கேட்டாரா? போலிச் சாமியார்கள் ஒன்றும் இந்த அளவுக்குச் செய்யவில்லையே? தங்கள் சுயநலத்துக்காக மக்களை ஏமாற்றினார்களே தவிர ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்று சக மனிதர்களைக் கொல்லவில்லையே?

தான் ஒரு தத்துவத்தை நம்பியதற்காக யாரும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு தத்துவத்தை அல்லது நபரை நாம் நம்புகிறோம். பிறகு அந்த நம்பிக்கை வீழ்ச்சி அடையும்போது அதை நாம் ஒரு அனுபவமாகக் கொள்கிறோம். அப்படி நம்பியதற்காக யாரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், நித்யானந்தாவை பிரபலப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்த ஊடகங்கள் குமுதமும் விஜய் டி.வி.யும்தானே தவிர நான் அல்ல; குமுதத்தில் நித்தியின் தொடர் ஐந்தாறு ஆண்டுகளாக வந்து கொண்டிருந்தது. நித்தியை குமுதம் சாமியார் என்றே பொதுமக்கள் அழைத்து வந்தனர். மேலும், நித்தியின் பிரசங்கம் விஜய் டி.வி.யில் வாரம் இரண்டு முறை வந்து கொண்டிருந்தது. ஆக, நித்தியை பிரபலப்படுத்திய குமுதமும், விஜய் டி.வி.யும் இப்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆண்டனியும், கோபிநாத்தும் சொல்வார்களா? சொன்னால் அவர்களின் சீட்டே கிழிந்து போகும். சீட்டு கிழிந்தால் இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மிகப் பெரிய தொகை கிடைக்காமல் போகும். அதனால் அது பற்றி நம் நீயா நானா நாயகர்கள் வாய் திறக்க மாட்டார்கள். எவனாவது ஒரு எழுத்தாளன் மாட்டினால்தான் தமது கோரைப் பற்களைக் காட்டுவார்கள்.

மேலும், நித்யானந்தாவை நம்பி அவருடைய எழுத்தையும், பேச்சையும் பிரபலப்படுத்திய குமுதமும் விஜய் டி.வி.யும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் மூடன் அல்ல. வாழ்க்கையே நம்பிக்கையில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு தத்துவத்தையோ ஒரு நபரையோ நாம் நம்புகிறோம். பிறகு அந்தத் தத்துவம் அல்லது நபர் நமக்கு அளித்த தோற்றம் பொய் என்று தெரிந்து அதை விட்டு விலகி விடுகிறோம். அதைத்தான் குமுதமும், விஜய் டி.வி.யும், நானும் செய்தோம். இதில் மன்னிப்புக் கேட்பதற்கெல்லாம் ஒன்றுமே இல்லை.

ஆனால் எனக்கும் இதன் மூலம் ஒரு படிப்பினை கிடைத்தது. டி.வி.யில் முகம் தெரிய வேண்டும் என்ற அற்பத்தனத்துக்கு எனக்குக் கிடைத்த அடியே இது என்று இந்தக் கசப்பான நிகழ்ச்சியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டேன்.

(இந்தக் கட்டுரையை லக்கிலுக், நர்சிம், தண்டோரா மணி, அதிஷா, கேபிள் ஷங்கர் போன்ற நண்பர்கள் தத்தம் வலைத்தளங்களிலும் வெளியிட்டு இதைப் பரவலாக வாசிக்கச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விஜய் டி.வி.யின் பார்வையாளர் தளம் மிக விரிந்தது. கோடிக்கணக்கான பேர் பார்க்கக் கூடியது. அதனால் என்னுடைய எதிர்ப்பு சில ஆயிரம் பேரையாவது எட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்).

1.6.2010.

10.07 a.m.

தமிழ் சினிமா கீழான நிலையில் இருக்கிறது

பீப்லி (லைவ்) பற்றி சாரு நிவேதிதாவின் அனுபவம்.

பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் அனுஷா ரிஸ்வியின் இயக்கத்தில் வெளிவந்து ஒரே வாரத்தில் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் படம் பீப்லி (லைவ்). விமர்சகர்கள் இந்தப் படத்தை பதேர் பாஞ்சாலியுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் பதேர் பாஞ்சாலியில் இருந்த gloominess இதில் இல்லை என்பது இந்தப் படத்தின் விசேஷம். இந்திய கிராமங்களின் வறுமையைப் பற்றிய படமாக இருந்தாலும் படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், பகடியும் இதை ஒரு சுவாரசியமான கலை அனுபவமாக மாற்றுகிறது. அமிதாப் பச்சன் உட்பட இந்திப் பார்வையாளர்கள் அனைவரும் ’இப்படி ஒரு படத்தைப் பார்த்ததே இல்லை’ என்று வியக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து இப்படி ஒரு முழுமையான ’ப்ளாக் காமெடி’யை இந்தி சினிமாவில் இதுவரை பார்த்ததில்லை. கேதான் மேத்தாவின் பாவ்னி பவாய் (1980), மிர்ச் மசாலா (1985) என்ற இரண்டு படங்களை மட்டுமே ஓரளவுக்கு ’பீப்லி (லைவ்)’ -இன் பக்கத்தில் வரக் கூடியவையாகச் சொல்லலாம். இரண்டுமே நஸ்ருத்தீன் ஷா நடித்தவை.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகங்கள் (குறிப்பாக, தொலைக்காட்சி சேனல்கள்) என்ற மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாகவும், கிண்டலுடனும் விமர்சித்திருக்கிறார் இயக்குனர் அனுஷா ரிஸ்வி. பொதுவாக ஊடகங்களின் ஊழலைப் பற்றி விமர்சித்தால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்படுவோம் என்ற அச்சத்திலேயே யாரும் விமர்சிப்பதில்லை. பீப்லி (லைவ்) இந்த மூன்று மட்டத்திலும் நிலவும் ஊழலை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது.


’முக்கியப் பிரதேசம்’ என்ற மாநிலத்தில் பீப்லி ஒரு சிறிய கிராமம். நத்தா, புதியா என்ற இரண்டு சகோதரர்கள். நத்தாவுக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும், படுத்த படுக்கையான அம்மாவும் இருக்கிறார்கள். மூத்தவன் புதியா கொஞ்சம் புத்திசாலி. ஆனால் கஞ்சா கேஸ் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. விவசாயத்திற்காக வாங்கிய வங்கிக் கடனைத் திருப்ப முடியாததால் அவர்களின் நிலம் பறி போக இருக்கிறது. அந்த நிலையில் ஆளுங்கட்சி அரசியல்வாதியாக இருக்கும் உள்ளூர் தாதாவிடம் சென்று இருவரும் உதவி கேட்கிறார்கள். அதற்கு அவன் ”விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகை தருகிறது; அது பற்றி யோசியுங்கள்; உங்கள் குடும்பமாவது பிழைத்துப் போகும்” என்று கிண்டல் செய்து அவர்களை விரட்டி விடுகிறான்.

யார் தற்கொலை செய்து கொள்ளலாம் என்பது பற்றி இருவரும் கலந்து ஆலோசிக்கிறார்கள். இந்த உரையாடல் படத்தின் மிக முக்கியமான பகடிகளில் ஒன்று.

புதியா: நானே தற்கொலை பண்ணிக் கொள்கிறேன்.
நத்தா: வேண்டாம், வேண்டாம். நானே பண்ணிக்கிறேன்.
புதியா: அட வேணாம்ப்பா. நீ புள்ளக்குட்டிக்காரன். உன்னால் எப்படித் தற்கொலை செய்து கொள்ள முடியும்? நானே பண்ணிக்கிறேன்.
நத்தா: ஆங், ஏன் என்னால் முடியாது. நான்தான் பண்ணிக்குவேன்.
புதியா: அப்படியா, பக்கா?

பிறகு சாராயக் கடையில் அமர்ந்து இருவரும் இது பற்றி மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைத் தற்செயலாகக் கேட்கிறான் இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ். மறுதினமே ’ஏற்கனவே சொல்லப்பட்ட மரணம்’ என்ற தலைப்பில் நத்தாவின் கதை புகைப்படத்துடன் வெளியாகிறது. எப்போதுமே செய்திப் பஞ்சத்தில் இருக்கும் ஊடகங்களுக்கு இந்த விஷயம் பெரும் தீனியாக அமைகிறது. தில்லி ஊடகங்களில் இச்செய்தி பிரதான இடத்தைப் பிடிக்கிறது.

அத்தனை தொலைக்காட்சி சேனல்களும் தங்கள் குழுவை பீப்லி கிராமத்துக்கு அனுப்புகின்றன. ஒரு பெரிய சேனல் படையே பீப்லி கிராமத்துக்குத் திரண்டு வருகிறது. பீப்லி கிராமமே ஒரு பெரிய மேளா நடப்பது போல் ஆகி விடுகிறது. பாப் கார்ன், பலூன், கோக் விற்பனை, குடை ராட்டினம் என்று அமர்க்களப்படுகிறது.

நத்தாவின் தற்கொலையை எந்த சேனல் மக்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கிறதோ அந்த சேனலே டி.ஆர்.பி. தர வரிசையில் முன்னணி இடத்தைப் பிடிக்கும். அதை வைத்துத்தான் விளம்பரங்கள் கொடுக்கப் படுகின்றன. ’நத்தா தற்கொலை செய்து கொள்வாரா, மாட்டாரா?’ என்பது பற்றி சேனல்களில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெறுகின்றன. நிருபர்கள் ‘லைவ்’ ஆக பீப்லியின் நிகழ்வுகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் நத்தாவின் தற்கொலையையே ’லைவ்’ ஆகக் காட்டினால் அவரே சிறந்த நிருபர்; அப்படிக் காட்டும் சேனலே முன்னணி சேனல். ஒவ்வொரு நிருபரிடமும் அந்தத் தீவிரம் தெரிகிறது. எனவே, நத்தா மலம் கழிக்கப் போகும்போது கூட அவர்கள் அவனைத் துரத்துகிறார்கள்.. செய்திகளைத் திரட்டுவதில் தீவிர ஆர்வம் கொண்ட குமார் தீபக் என்ற இந்தி சேனல்காரன் ஒரு தற்காலிகமான டவரை அமைத்து அதன் மேல் ஏறி நத்தா மலம் கழிக்கும் இடத்தைத் தேடுகிறான்.

ஒருநாள் நத்தா மலம் கழிக்கச் செல்லும் போது போலீஸ் மற்றும் சேனல் நிருபர்களின் துரத்தலையும் மீறித் தப்பி விடுகிறான் நத்தா. அப்போது நத்தா மலம் கழித்திருக்கும் இடத்தை வைத்து அவனுடைய ‘உளவியலை’ டி.வி. பார்வையாளர்களுக்கு விளக்க முயற்சிக்கிறான் குமார் தீபக். அதுவும் ஒரு ’வித்தியாசமான’ அணுகுமுறை அல்லவா? அதனால் கூட டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகரிப்பதற்கு வழி இருக்கிறது அல்லவா?

அதைத் தொடர்ந்து, ’பீப்லி மாதா என்ன சொல்கிறாள்?’ என்று ஒரு ’லைவ்’ நிகழ்ச்சியைக் காண்பிக்கிறான் குமார். இரண்டு கிராமத்துப் பெண்கள் சிவப்புப் புடவை அணிந்து தலையை அவிழ்த்துப் போட்டுக் கொண்டு சாமியாடுகிறார்கள். ’நத்தா தற்கொலை செய்து கொள்வானா இல்லையா?’ ’செய்து கொள்வான், செய்து கொள்வான்’ என்று சொல்கிறது சாமி.

நத்தாவின் பால்ய கால சிநேகிதனிடம் பேட்டி எடுக்கிறார்கள். நத்தா காணாமல் போனதற்கான காரணங்கள் சேனல்களில் ஆராயப்படுகின்றன. ’நத்தா காணாமல் போனதற்கு யார் காரணமாக இருக்க முடியும்?’ என்று பார்வையாளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

ஒரு கருத்துக் கணிப்பு “முஸ்லீம் தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம்” என்று சொல்கிறது.

ஊடகங்களுக்கும் ஆட்சியாளர்களுக்குமான கள்ள உறவையும் முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறார் இயக்குனர். ஆங்கில சேனலை சேர்ந்த நந்திதா விவசாயத் துறை மந்திரியான நஸ்ருத்தீன் ஷாவை நத்தாவின் தற்கொலை விஷயமாகப் பேட்டி காண்கிறாள். பேட்டிக்கு முன் வெகுநாள் பழகிய நண்பர்களைப் போல் பேசிக் கொள்ளும் அவர்கள் பேட்டியின் போது வேறு தொனியில் ஏதோ முதல்முதலாக சந்தித்துக் கொள்வது போல் பேசுகிறார்கள்; அதைப் போலவே குமார் தீபக் ’முக்கியப் பிரதேச’த்தின் முதல் மந்திரியிடம் அவருடைய கட்சித் தொண்டனைப் போல் பேசிக் கொண்டிருந்து விட்டு, கேமராவுக்கு முன்னால் முதல் மந்திரியை முதல்முதலாகப் பார்ப்பவனைப் போல் பேசுகிறான். இதுவரை இந்திய சினிமாவில் ஊடகங்களைப் பற்றிய இவ்வளவு காட்டமான விமர்சனம் வந்ததில்லை. இந்தியாவைக் கொள்ளையடிப்பதிலும், விதேசி கம்பெனிகளுக்கு தரகு வேலை பார்ப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களோடு ஊடகங்களும் ஆதரவாக இருந்து கூட்டுச்சதி செய்கின்றன என்பதுதான் ’பீப்லி (லைவ்)’ -இன் உபகதை.

இந்திப் பத்திரிகையாளனான ராகேஷ் நந்திதாவின் சேனலில் சேர்வதற்கு விருப்பப்படுகிறான். நத்தாவைப் பற்றி முதலில் செய்தி தந்தவன் என்ற முறையில் அவன் மீது ஆர்வம் காட்டுகிறாள் நந்திதா. ஆனால் பீப்லி கிராமத்தில் வேறொரு விவசாயி தண்ணீருக்காக ஒற்றை ஆளாக கிணறு தோண்டித் தோண்டி செத்துப் போகிறான். ”இந்த விவசாயியின் மரணம் செய்தி இல்லையா?” என்று நந்திதாவிடம் ஆக்ரோஷமாகக் கேட்கிறான் ராகேஷ். “இல்லை. நத்தாதான் நமக்கான செய்தி. அந்த ஊர் பெயர் தெரியாத இன்னொரு விவசாயியைப் பற்றி செய்தி சேகரிக்க நாம் இங்கே வரவில்லை. இப்படியெல்லாம் முக்கியமில்லாத செய்திகளில் கவனம் செலுத்துவதாக இருந்தால் நீ தவறான உத்தியோகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று அர்த்தம்” என்கிறாள் நந்திதா.

கதை பீப்லி கிராமத்தில் மட்டும் நடக்கவில்லை. நகரமும் கிராமுமாக மாறி மாறிச் செல்கிறது. விவசாயத் துறை மந்திரியின் செயலாளர் சென் குப்தாவிடம் நத்தாவின் பிரச்சினை பற்றிக் கேட்கப் படுகிறது. இது தற்கொலை குறித்த விஷயமாக இருப்பதால் இதை உயர்நீதி மன்ற நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் அவர். நிருபர்கள் சென் குப்தாவிடம் இது பற்றிக் கேட்கும் போதெல்லாம் ”உயர்நீதி மன்ற உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். படம் முழுவதும் இந்த பதில் சொல்லப்படும் போதெல்லாம் ஒரு மிகப் பெரிய அபத்த நாடகத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் பார்வையாளர்களின் சிரிப்பில் அரங்கம் அதிர்கிறது.

இந்தப் பிரச்சினை விவசாயத் துறை மந்திரியிடம் (நஸ்ருத்தீன் ஷா) வரும் போது அவர் ஒரு யோசனை சொல்கிறார். ’நத்தா கார்டு’ என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்வோம். அதன்படி ஏழை விவசாயிகளுக்கு இலவசக் கடன் வழங்கப்படும். ஆனால் அதற்கெல்லாம் மத்திய அரசிடம் நிதி இருக்காதே? ”நிதியைப் பற்றி மாநில அரசல்லவா கவலைப்பட வேண்டும்? திட்டத்தை மட்டும் நாம் போடுவோம். அதை நிறைவேற்றுவது மாநில அரசின் பொறுப்பு. நிறைவேற்றினாலும் மாநில அரசுக்குப் பிரச்சினை. (அரசே திவாலாகி விடும்). நிறைவேற்றா விட்டாலும் பிரச்சினை. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டத்தை நிறைவேற்றாத மாநிலக் கட்சி தேர்தலில் தோற்று விடும்” என்கிறார் மாநிலக் கட்சிக்கு எதிரான தேசியக் கட்சியைச் சேர்ந்த மத்திய விவசாயத் துறை மந்திரி.

இதற்கிடையில் அந்தத் தொகுதியில் தேர்தலும் வர இருப்பதால் நத்தாவின் தற்கொலைச் செய்தி மிகுந்த சூடு பிடிக்கிறது. இந்தப் பிரச்சினையின் காரணமாகவே ஆளும் மாநிலக் கட்சி தோற்று விடுமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சிக்கும் மாநிலக் கட்சிக்கும் நத்தாவை முன்வைத்து பெரும் போட்டி ஏற்படுகிறது. நத்தா தற்கொலை செய்து கொண்டால் மாநிலக் கட்சி தோற்று விடும். அதனால் நத்தாவின் குடும்பத்துக்கு லால்பகதூர் திட்டத்தின் கீழ் ஒரு தண்ணீர் பம்ப் கொடுக்கிறார் முதலமைச்சர். ஆனால் அந்த பம்ப் கிராமத்துச் சிறுவர்களுக்கு விளையாட்டுப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. உள்ளூர் அரசியல்வாதி ஒருவன் நத்தா குடும்பத்துக்கு ஒரு கலர் டிவியை வாங்கிக் கொடுத்து தன் கட்சிக்கு ஓட்டு சேகரிக்கலாம் என்று திட்டமிடுகிறான். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் அரசுத் திட்டங்களைப் பற்றிய கிண்டல் எக்காளமிடுகிறது. இந்த நேரத்தில் முதல் மந்திரிக்கும் லோக்கல் தாதாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் தாதா புதியாவை மிரட்டுகிறான்: ”இன்னும் இரண்டு நாளில் நத்தா சாகவில்லையானால் நீ செத்து விடுவாய்.”

கடைசியில் நத்தாவைத் தனியாக விட்டால் தற்கொலை செய்து கொள்வான்; அதனால் தன் கட்சி தோற்று விடும் என்று அஞ்சும் முதல்மந்திரி போலீஸை விட்டு நத்தாவைக் கடத்திக் கொண்டு வந்து ஒரு கிடங்கில் போட்டு அடைத்து விடுகிறார். ஆனால் இதைக் கண்டு பிடித்து விடும் ராகேஷ் அங்கே வரும்போது கிடங்கு தீப்பற்றி விடுகிறது. தீயில் ஒரு பிணம் கிடைக்கிறது. அதுதான் நத்தா என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் தீயில் இறந்தது ராகேஷ் என்பது பார்வையாளர்களுக்கு சூசகமாக உணர்த்தப்படுகிறது. நத்தா பிரச்சினை முடிந்து சேனல்காரர்கள் பீப்லியை விட்டுக் கிளம்பும்போது ”எங்கே ராகேஷ், கொஞ்ச நாட்களாக ஆளையே காணோம்?” என்கிறாள் நந்திதா.

நத்தா தற்கொலை செய்து கொள்ளாமல் தீ விபத்தில் இறந்ததால் நஷ்ட ஈடு ஒரு லட்ச ரூபாய் நத்தா குடும்பத்துக்குக் கிடைப்பதில்லை. இறுதிக் காட்சியில் ஒரு நகரத்தில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. கட்டிடத் தொழிலாளிகளின் இடையே மிகுந்த சோர்வுடன் அமர்ந்திருக்கிறான் நத்தா.

பீப்லி (லைவ்)-இன் மற்றொரு சிறப்பு அம்சம், இதில் பங்கேற்றிருக்கும் அத்தனை நடிகர்களின் அசாதாரணமான நடிப்பு. அதிலும் குறிப்பாக ஓம்கார் தாஸ் மணிக்புரி (நத்தா), ரகுபீர் யாதவ் (புதியா), படுக்கையிலேயே கிடக்கும் அம்மா (ஃபரூக் ஜாஃபர்), ஷாலினி வத்ஸா (நத்தாவின் மனைவி) ஆகியோரின் நடிப்பு இந்தி சினிமாவுக்குப் புதிது. நத்தாவை சேனல்காரர்கள் ஒரு சர்க்கஸ் விலங்கைப் போல் பாவித்து படமெடுக்கிறார்கள். அதற்குத் தோதாக நத்தாவின் ஒவ்வொரு அசைவும் சர்க்கஸ் பிராணியைப் போலவே இருக்கிறது. படத்தின் முக்கியமான பாத்திரங்கள் அனைவரும் இந்தி நாடகாசிரியர் ஹபீப் தன்வீரின் ’நயா தியேட்டர்’ என்ற நாடகக் குழுவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் இந்தப் படம் எடுக்கப்பட்ட பத்வாய் (மத்தியப் பிரதேசம்) என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். தமிழ் சினிமாவில் நாடக நடிகர்களின் பங்கேற்பை நினைத்தால் அது கண்ணீரை வரவழைக்கும் சோகக் கதை. நிஜ நாடக இயக்கத்தைச் சேர்ந்த மு. ராமசாமி ’களவாணி’யில் பெரியப்பா வேடத்தில் வருகிறார். பரிதாபமாக இருந்தது. இதை கோடம்பாக்கத்தில் உள்ள எந்தத் துணை நடிகரும் செய்து விட முடியும். அதேபோல் கூத்துப் பட்டறை நடிகர்களை தமிழ் சினிமா எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றித் தனியாக எழுத வேண்டியதில்லை. பாவம், பசுபதி படும் பாடே போதும்.

ஷங்கர் ராமனின் ஒளிப்பதிவும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாக உள்ளது. அநேகமாக பீப்லி (லைவ்) ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டுப் படமாகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.

இதன் தயாரிப்பாளர் ஆமிர் கான். லகானிலிருந்து தாரே ஸமீன் பர், மூன்று முட்டாள்கள், பீப்லி (லைவ்) வரையிலான ஆமிரின் பயணம் இதுவரை வேறு எந்த இந்திய சினிமா நடிகரும் செய்திராத சாதனை. இந்திய அரசுக்கு எதிரான இவ்வளவு கடுமையான அரசியல் சினிமாவை எடுக்க தமிழில் ஒரு நடிகருக்காவது தைரியமும் துணிச்சலும் வருமா என்று யோசித்துப் பார்க்கிறேன். அது மட்டுமல்ல; படத்தின் எந்த இடத்திலும் ஆமிர் கான் என்ற தயாரிப்பாளரும், நடிகரும் எட்டிப் பார்க்கவே இல்லை. முதலில் ஓம்கார் தாஸ் மணிக்புரி நடித்திருக்கும் நத்தா பாத்திரத்தில் ஆமிர் கான் தான் நடிப்பதாக இருந்திருக்கிறது. ஆனால் ’ஆடிஷன்’ தேர்வின் போது ஆமிரை விட ஓம்கார் தாஸ் சிறப்பாகச் செய்ததாக ஆமிர் கான் நினத்ததால் ஓம்கார் தாஸையே அந்தப் பாத்திரத்தைச் செய்யும்படி சொல்லியிருக்கிறார். ’சினிமா முக்கியமல்ல; நாம்தான் முக்கியம்’ என்று நினைக்கும் தன்முனைப்பு நடிகர்களால் நிரம்பியுள்ள தமிழ் சினிமா ஏன் இவ்வளவு கீழான நிலையில் இருக்கிறது என்பதை இந்த ஒரே சம்பவத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஆபாசமான 150 கோடி பட்ஜெட் சினிமாக்காரர்கள் யோசிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது. வெறும் 10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள ‘பீப்லி (லைவ்)’, அது வெளிவந்த முதல் வாரத்திலேயே 21 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாபி தியோலின் ’ஹெல்ப்’புக்கு வசூலே இல்லை. இதனால் மசாலா படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாக வெற்றி அடையும் என்ற மிகப் பெரிய கட்டுக்கதை பொய்யாகி இருக்கிறது. மேலும், மசாலா படங்கள்தான் சுவாரசியமாக இருக்கும்; சீரியஸான கதைக் களனைக் கொண்ட படங்கள் சுவாரசியமாக இருக்காது என்ற கட்டுக்கதையும் இந்தப் படத்தினால் உடைந்திருக்கிறது. மூன்றாவது கட்டுக்கதை, பெரிய நடிகர்கள் பற்றியது. பீப்லி (லைவ்)-இல் நஸ்ருத்தீன் ஷா மற்றும் ரகுபீர் யாதவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சினிமாவுக்குப் புதிய முகங்கள்.

செயற்கைக் கோள், ராக்கெட் போன்ற சாதனங்களைத் தயாரிக்கும் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாசாமி போன்றவர்களும், மன்மோகன் சிங்குகளும் இந்தியா வல்லரசாகி விட்டது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இந்திய கிராமங்கள் அவை இருந்த தடமே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் வாழவே முடியவில்லை. சாலைகள் இல்லை; பள்ளிக்கூடம் இல்லை; மருத்துவமனைகள் இல்லை. தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்கள் இல்லை. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் உயிர் தரித்திருக்கும் விவசாயிகளுக்கும் போலீஸுக்கும் மோதல். சட்டீஸ்கர் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஆதிவாசிகளின் நிலங்களை பன்னாட்டு வியாபார நிறுவனங்களுக்கு விற்று விட்டார்கள் தில்லி அரசியல்வாதிகள்.

சுதந்திர தினம் என்பது வெறும் கொடியேற்றும் சடங்காகி விட்டது. சட்டைப் பாக்கெட்டில் கொடிச் சின்னத்தை குண்டூசியால் குத்திக் கொள்வதும் அரசியல்வாதிகளின் சுதந்திர தின உரைகளும்தான் சுதந்திர தினத்தின் அடையாளங்களாக மிஞ்சியிருக்கின்றன. காஷ்மீர் முதல்வர் அப்துல்லா கொடியேற்றும் போது பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஒருவர் சப்பாத்தை எடுத்து வீசியிருக்கிறார். சட்டீஸ்கரில் போலீஸ்காரர்கள் கொத்துக் கொத்தாக மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுகிறார்கள். ஒரு பக்கம், அரசாங்கத்தின் சேமிப்புக் கிடங்குகளில் கோதுமையும் அரிசியும் விநியோகிக்கப்படாமல் கெட்டுப் போய்க் கிடக்கின்றன. இதெல்லாம்தான் இந்தியாவின் சமகால வரலாற்றின் மறுபக்கம். இந்த மறுபக்கத்தின் மீது ஆமிர் கான் கவனம் செலுத்தியிருக்கிறார். இந்த வகையில் இந்த ஆண்டின் சுதந்திர தினத்தில் வெளியாகியிருக்கும் ’பீப்லி (லைவ்)’ அரசியல்வாதி, அதிகார வர்க்கம், ஊடகம் என்ற மூன்றின் மீதும் வைக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான விமர்சனம்.

மிக மோசமான ஒரு வறுமைச் சூழலை இத்தனை பகடியுடன் எடுக்க முடியுமா என்று யோசித்தால் சார்லி சாப்ளினின் மௌனப் படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ஆனாலும் இந்தப் படத்தை வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாதபடி இருப்பதே இதை ஒரு மறக்க முடியாத கலாஅனுபவமாக ஆக்கி விடுகிறது. ஓம்கார் நாத்துக்கு வசனம் மிகவும் குறைவு. ஒரு இடத்தில் நத்தாவின் ஆடு கூட அவனைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது. அவனுடைய மகனும் “நீ எப்போது தற்கொலை செய்து கொள்வாய்?” என்று கேட்கிறான். அப்பா தற்கொலை செய்து கொண்டால் கிடைக்கும் பணத்தில் படித்து போலீஸ்காரன் ஆகலாம் என்று நினைக்கிறான் சிறுவன்.

மத்தியப் பிரதேசத்துக்கும், உத்தரப் பிரதேசத்துக்கும் நடுவில் உள்ள Bundelkhand மாவட்டத்தின் வட்டார மொழி மிகுந்த கெட்ட வார்த்தைகளைக் கொண்டது. அந்த வட்டார மொழியில் எடுக்கப்பட்டிருப்பதால் பீப்லி (லைவ்)-க்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது. (உ-ம்) நத்தாவும் புதியாவும் லோக்கல் தாதாவிடம் கடன் கேட்கப் போகிறார்கள். வழிநடையாகச் செல்லும் போது நத்தா ஜாலியாகப் பாடிக் கொண்டே போகிறான். அப்போது புதியா அவனிடம் “இங்கே குண்டி கிழியுது; உனக்கு பாட்டு கேக்குதா?” என்று அதட்டும் காட்சி.

இந்தப் படத்தின் இசை பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம். நகீன் தன்வீர், ராம் சம்பத் என்ற இருவரும், இண்டியன் ஓஷன் என்ற ராக் குழுவும் சேர்ந்து பீப்லி (லைவ்)-க்கு இசை அமைத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நாட்டுப்புற இசை பற்றி ஏராளமாக பேசப்பட்டது. ஆனால் உண்மையான தமிழ் நாட்டுப்புற இசை தமிழ் சினிமாவில் பிரதிபலிக்கவில்லை என்பது என் கருத்து. நாட்டுப்புற இசையிலிருந்து சிறிது சிறிதாகப் பிய்த்து எடுத்து அதை பாரதிராஜாவின் ’ரொமாண்டிக்’ கிராமத்துக்கு ஏற்றாற்போல் ஜிகினா வேலை செய்து கிளுகிளுப்பாக்கினார்கள். பீப்லி (லைவ்)-இல் இப்படி நடக்கவில்லை. இந்தியாவின் உண்மையான நாட்டுப்புற இசையை இதில் கேட்க முடிகிறது. இந்தி புரியாவிட்டாலும் பரவாயில்லை, பீப்லி (லைவ்)-இல் ரகுபீர் யாதவ் (புதியா) பாடியுள்ள ’மஹங்காய் தயான்’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். இப்படி ஒரு குரலையும், பாடலையும் நம்முடைய கிராமங்களில் கேட்டிருக்கிறோம்; ஆனால் தமிழ் சினிமாவில் கேட்டதில்லை. பருத்தி வீரன் மட்டுமே விதி விலக்கு. அதேபோல் தேஷ் மேரா, ஜிந்தகி ஸே டர்த்தே ஹோ என்ற இண்டியன் ஓஷனின் இரண்டு பாடல்கள், நகீன் தன்வீர் பாடிய ’சோலா மாட்டி கே ராம்’, போன்ற பாடல்களும் குறிப்பிடத் தக்கவை. இந்தக் குரல்களையும், இந்த இசையையும் இதுவரை இந்தி சினிமா பார்த்ததில்லை. அந்த வகையில் ’பீப்லி (லைவ்)’-இன் இசை இந்தி சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம்.

நன்றி: சாரு நிவேதிதா.

உலகம் சுற்றிய ஏ.கே. செட்டியாரின் பயணக் கட்டுரை

சாரு நிவேதிதாவின் இலக்கிய-கட்டுரை. படித்து மகிழுங்கள்.

தமிழில் ஏன் பயண இலக்கியம் இல்லை என்று நீண்ட காலமாக யோசித்து வருகிறேன். பயணம் செய்பவர்களுக்கு எழுதத் தெரியவில்லை. எழுதத் தெரிந்தவர்களுக்கு பயணம் செய்வதற்கான பொருள் வசதி இல்லை. எனக்குப் பிடித்தமான தமிழ் எழுத்தாளர் ஒருவர் அமெரிக்கா சென்றார். மூன்று மாதம் தங்கினார் என்றதும் ஆர்வத்துடன் அவரது அனுபவங்களைக் கேட்கத் தயாரானேன். ஆனால் அவர் சொன்னது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. எழுத்தாளர் ஒரு நண்பர் வீட்டில் தங்குவார். அந்த நண்பரும் அவர் மனைவியும் திங்கட்கிழமையிலிருந்து வெள்ளி வரை அலுவலகம் சென்று விடுவார்கள். அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும். எழுத்தாளருக்கு அந்த ஒரு வாரமும் வீட்டுச் சிறை. அதிக பட்சம், அந்த வீதியில் நடக்கலாம். நமக்கு வரைபடத்தை வைத்துக் கொண்டு ஒரு இடத்தைக் கண்டுபிடித்துப் பழக்கமில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு செல்வதே நமக்குத் தெரிந்த வழி. நியூயார்க் போன்ற ஒரு நகரத்தில் அது முடியுமா? அல்லது, ஒரு டாக்ஸி பிடித்து வெளியில் சென்று ஊரைச் சுற்றிப் பார்க்கலாம்; அல்லது ரயிலிலோ பஸ்ஸிலோ இன்னொரு ஊருக்குப் போய் வரலாம். ஆனால் அதற்கெல்லாம் கை நிறைய காசு வேண்டும். நம்மூர் பணத்தில் லட்ச ரூபாய் எடுத்துக் கொண்டு போனாலும் டாலராக மாற்றினால் சில தினங்களே வரும். ஒரு தமிழ் எழுத்தாளனால் வேறு என்ன செய்ய முடியும்? மூன்று மாதங்கள் வீட்டுச் சிறையில் இருந்த அனுபவத்தை எப்படி அவர் பயணக் கட்டுரையாக எழுதுவார்?

வேறு சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் போகாத தேசமே இருக்காது. ஆனால் எந்த தேசத்தைப் பற்றியும் எதுவும் தெரியாது. காரணம், விமானப் பயணம்; தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல். இப்படிச் செய்தால் எப்படி ஒரு தேசத்தை அறிந்து கொள்ள முடியும்?

சமீபத்தில் Thor Heyerdahl  (1914-2002) எழுதிய Kon-Tiki என்ற பயண நூலைப் படிக்க நேர்ந்தது. நார்வே நாட்டைச் சேர்ந்த இவர் சில காலம் உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாலினேஷிய தீவுகளில் (ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகள்) ஒன்றான தஹித்தியில் இருந்திருக்கிறார். அப்போது அந்த மக்களின் கலாச்சாரத்தை மானுடவியல் ரீதியாக ஆராய்ந்தார்.  அந்த ஆராய்ச்சியில், அமெரிக்காவை கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே தென்னமெரிக்க ஆதிகுடிகள் பசிஃபிக் பெருங்கடலைத் தாண்டி வந்திருக்கிறார்கள் என்றும், தஹித்தி போன்ற பாலினேஷிய தீவுகளில் வாழும் மக்கள் பெரூவிலிருந்து வந்து குடியேறியவர்களே என்றும் கண்டுபிடித்து இருக்கிறார்.  அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை.  உடனே பெரூவிலிருந்து தஹித்திக்கு வந்த காலகட்டத்தில் அவர்கள் எப்படி வந்திருப்பார்கள் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்ட விரும்பினார் தோர் ஹயர்தால்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தஹிதிக்கு வந்த பெரூவிய மாலுமிகள் கட்டியது போலவே ஒரு சிறிய கட்டுமரத்தைக் கட்டினார்.  ஒன்பது பெரிய மரக்கட்டைகள். கட்டையின் நீளம் 45 அடி; அகலம் 2 அடி.  ஆக, 45 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்ட அந்தக் கட்டுமரத்தை ஒரு ஆணி கூடப் பயன்படுத்தாமல் கயிற்றாலேயே கட்டினார்.  தளத்தில் மூங்கில் கம்புகளைக் கட்டி அதில் பாயை விரித்தார். கட்டுமரத்தின் மத்தியில் மூங்கிலாலேயே ஒரு சிறிய அறை ஒன்றை அமைத்து வாழை இலைகளால் கூரை செய்து கொண்டார்.  அறையின் அகலம் 8 அடி; உயரம் 14 அடி. அந்தக் கட்டுமரத்துக்கு ’கோன்–டிகி’ என்று பெயரிட்டு பெரூவிலிருந்து தஹித்திக்கு தன்னுடன் ஐந்து சகாக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.  திமிங்களால் ’கோன்-டிகி’ உருத் தெரியாமல் போய் விடும் என்றும் இன்னும் பலவாறாகவும் அவரை ஏளனம் செய்தார்கள் பலர்.  ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் பயணத்தைத் தொடங்கினார் தோர் ஹயர்தால்.

மொத்தம் 102 நாட்கள். 102-ஆவது நாளில் ஒரு புயலால் கட்டுமரம் சேதமடைகிறது; ஆனால் அதிர்ஷ்டவசமாக அது ஒரு ஆளில்லாத தீவின் கடற்கரை. அந்தத் தீவில் அவர்கள் சமைப்பதற்காகத் தீ மூட்டிய போது அங்கே மீன் பிடிக்க வந்தவர்கள் அவர்களைக் கண்டுபிடித்து தஹித்திக்கு அழைத்துச் சென்றனர். உடனடியாக அவர்களது பயணம் உலக அளவில் கவனிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஹயர்தாலை கௌரவித்தார். இது நடந்தது 1947-ஆம் ஆண்டு. அத்தனை அனுபவங்களையும் ஹயர்தால் தன்னுடைய கோன்–டிகி என்ற நூலில் எழுதியிருக்கிறார். கோன்-டிகி என்று தன்னுடைய பயணத்தை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார். இந்த நூலைப் பற்றியும் தோர் ஹயர்தாலைப் பற்றியும் எனக்கு ஏ.கே. செட்டியாரின் ’ஐரோப்பா வழியாக’ என்ற நூலைப் படித்த போது தெரிய வந்தது.

ஆனால் தோர் ஹயர்தாலை விட எனக்கு ஏ.கே. செட்டியார் சிறந்த பயணியாகத் தெரிகிறார். ஏனென்றால், உலகெங்கும் இனவாதம் மிகக் கடுமையாக நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் பயணம் செய்திருக்கிறார் செட்டியார். அவர் செல்லாத நாடே இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு உலக நாடுகள் பலவற்றுக்கும் கப்பலிலும், ரயிலிலும், பஸ்ஸிலும், காரிலுமாகச் சென்றிருக்கிறார். அந்த அனுபவங்களை 18 புத்தகங்களில் விரிவாக எழுதியிருக்கிறார். எங்குமே அவர் விமானத்தில் செல்லவில்லை. கடல் தாண்டிச் செல்வதாக இருந்தால் கப்பல்; நிலவழி என்றால் ரயில். இப்போதைய விமானப் பயணத்தில் அடுத்த மனிதர்களோடு உறவாட முடியவில்லை. ஆனால் கப்பல் பயணத்தில் ஒரே இடத்தில் பல தினங்கள் ஒன்றாக இருக்க வேண்டியிருப்பதால் பல தேசங்களைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களோடும் உறவாட முடிகிறது. 1930 இலிருந்து 1955 வரை 25 ஆண்டுகள் கப்பலிலேயே உலகம் முழுவதும் சுற்றியிருக்கும் ஒருவருக்கு எத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.

சென்னையிலிருந்து நேபாளம் வரை ரயிலில் சென்ற அனுபவத்தை ஒரு புத்தகத்தில் விவரித்திருக்கிறார். கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன் ரயில் பயணம் எப்படி இருந்திருக்கும்? பல இடங்களில் இரண்டு மூன்று தினங்கள் கூட ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறார். சமயங்களில் சரக்குப் பெட்டியில் சரக்குகளோடு சரக்காகக் கிடந்து பயணம் செய்திருக்கிறார். இவ்வளவையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும். ஆனால் தமிழில் எழுதி விட்டதால் அவருடைய 18 பயண நூல்களும் 70 ஆண்டுகளாக மறு பதிப்பு இல்லாமல் கிடக்கின்றன. தமிழர்களின் சுரணையுணர்வை என்னவென்று சொல்வது?

இந்தப் புத்தகங்களைப் படிக்கும் போது ஏதோ ஒரு தங்கப் புதையலைப் பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நூல்களில் காணக் கிடைக்கும் தகவல்களை வைத்துக் கொண்டு ஒரு பத்து பேர் உலகப் பயணம் மேற்கொண்டால் பல நூறு அற்புதங்களைக் கண்டு பதிவு செய்ய முடியும். மிக முக்கியமாக, உலகிலுள்ள பல்வேறு தேசங்களின் ஊர்களும் வெவ்வேறுபட்ட மக்களும் 60/70 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனர்; அவர்கள் வாழ்ந்த ஊர் எப்படி இருந்தது என்பதையெல்லாம் இந்த நூல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. செட்டியார் ஒரு தேர்ந்த புகைப்பட நிபுணராகவும் இருந்ததால் எல்லாவற்றையும் புகைப்படமாகவும் எடுத்து தன் புத்தகங்களில் இணைத்திருக்கிறார்.

செட்டியாரின் ஐரோப்பியப் பயண நூலில் ஒரு இடம்: 1953-ஆம் ஆண்டு. இங்கிலாந்தின் New Castle on Tyne என்ற துறைமுக நகரத்திலிருந்து நார்வேயில் உள்ள பெர்கன் என்ற துறைமுகத்துக்கு கப்பல் ஏறுகிறார் செட்டியார். (டைன் நதிக்கரையில் இருப்பதால் முன்பு அப்படி அழைக்கப்பட்ட அந்த நகரம் இப்போது வெறும் நியூகேஸில்). பெர்கனை அடைய கப்பலில் 22 மணி நேரப் பயணம். ஐரோப்பா முழுவதுமே சுங்க அதிகாரிகள் அவருடைய பெட்டியைத் திறந்து பார்க்கவில்லை என்று எழுதும் செட்டியார், இந்திய சுங்க அதிகாரிகளிடமும், இந்தியத் தூதராலய அதிகாரிகளிடமும் தான் மாட்டிக் கொண்ட கதைகளை கண்ணீர் விட்டு எழுதியிருக்கிறார். அந்த நிலை இன்னும் மோசமாகி இருக்கிறது என்பதே என்னுடைய சொந்த அனுபவம்.

பெர்கன் துறைமுகத்தில் ஜான் ஹோயம், அவர் மனைவி எல்ஸி இருவரும் செட்டியாரை சந்தித்துத் தம் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த ஜானும் எல்ஸியும் யார்? 1937-ஆம் ஆண்டு – அதாவது, 16 ஆண்டுகளுக்கு முன்பு – செட்டியார் அமெரிக்கா சென்றிருந்த போது நான்கு மாணவர்களோடு சேர்ந்து 15,000 மைல்கள் (கிலோ மீட்டர் அல்ல) அமெரிக்கா முழுவதும் காரில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். அப்போது அவருடன் வந்த நான்கு மாணவர்களில் ஒருவர்தான் ஜான் ஹோயம். சுற்றுப்பயணம் செய்த காரும் ஜானுடையதுதான். அதற்குப் பிறகு 1939-ஆம் ஆண்டில் ஒருமுறை நார்வே வந்த போதும் அவர் ஜானையும் எல்ஸியையும் சந்தித்திருக்கிறார். அந்தத் தம்பதியைத்தான் இப்போது 14 ஆண்டுகள் கழித்து பெர்கனில் மீண்டும் சந்திக்கிறார் செட்டியார். அன்று இரவு ஜானின் வீட்டில் 14 ஆண்டு கதையை இரவு முழுவதும் இருவரும் பேசுகிறார்கள். அப்போது ஜான் தங்களுடைய ஊரில் நாஜிகள் பல யூதர்களைக் குடும்பம் குடும்பமாக விஷவாயுக் கிடங்கில் உயிரோடு போட்டு எரித்தது பற்றிய கொடுங்கதைகளைச் சொல்கிறார். இப்போது அதெல்லாம் நமக்கு வரலாறு. ஆனால் செட்டியார் ஜானை சந்தித்த அந்த இரவில் அது அவர்களின் சமீபத்திய கொடுந்துயரம்.

பிறகு மறுநாள் காலை ரயில் பிடித்து அன்று மாலையே ஓஸ்லோ வந்து சேர்கிறார். பழைய நண்பர்களின் முகவரியை தொலைபேசி அட்டவணையைக் கொண்டு கண்டு பிடிக்கிறார். நண்பர்கள் என்றால் தமிழர்கள் இல்லை. எல்லொரும் அவருடைய தேசாந்திரப் பயணத்தின் போது சினேகிதமான நார்வேகாரர்கள்.

இப்போது தூரதேசங்களுக்குப் பயணம் செய்யும் எழுத்தாளர்கள் அந்தந்த ஊர்களில் வசிக்கும் தமிழர்களையே சந்தித்து விட்டு வந்து பயணக் கட்டுரை எழுதுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த தமிழ் நண்பர்கள், வாசகர்கள், தமிழ்ச் சங்கங்கள் என்பதைத் தவிர அந்த எழுத்தாளர்களின் கால்கள் எங்கேயும் நகர்வதில்லை. தமிழ்ச் சங்கத்தைப் பார்ப்பதற்கா 14,000 கி.மீ. தாண்டி நியூயார்க் வரை செல்ல வேண்டும்? இங்கேயே மும்பை அல்லது தில்லியில் இருக்கும் தமிழ்ச் சங்கத்துக்கு செல்லலாமே? கடல் கடந்து சென்று அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் மாட்டியிருக்கும் திருவள்ளுவர் பட்த்தைப் பார்த்து விட்டு வருவது தமிழர்களுக்கே உள்ள பிரத்தியேக குணம் என்று நினைக்கிறேன். உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தமிழர்கள் தாங்கள் வாழ்கின்ற நாட்டு மக்களோடும், அங்குள்ள கலாச்சாரத்தோடும் தங்களைத் தொடர்பு படுத்திக் கொண்டு வினையாற்றுவதில்லை. எங்கே இருந்தாலும் தமிழ்த் தொலைக்காட்சி சேனல்கள், தமிழ் ஜனரஞ்சகப் பத்திரிகைகள், எந்திரன் சினிமா என்றே அவர்களின் வாழ்க்கை முடிந்து போகிறது. இதற்குத் தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்காக இல்லாமல் நியூயார்க் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று வந்ததையெல்லாம் பயணக் கட்டுரையாக எழுதுகிறார்கள்.

இந்தத் தமிழ்ச் சங்கக் கதையெல்லாம் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்களில் இல்லை. அவர் எழுதியிருக்கும் நூற்றுக் கணக்கான பயண அனுபவங்களில் அவர் ஒரே ஒரு இந்தியரைத்தான் சந்திக்கிறார். அவர் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ்.

ஒவ்வொரு நாட்டிலும் தங்கி, அந்த மக்களோடு உறவாடி, பேசிப் பழகி எழுதியதால் ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள் விசேஷமான கவனத்துக்குரியவை ஆகின்றன. நார்வேஜியர்கள் அடிப்படையில் மிகவும் நல்லவர்கள்; அங்கே ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு; பெரும்பாலான மக்கள் நடுத்தர வர்க்கம்; உழைப்பாளிகள்; உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என்று கூறும் செட்டியார், அவர் சென்றிருந்த சமயத்தில் நார்வேஜிய மக்கள் இந்தியாவுக்கு செய்த ஒரு பெரிய உதவி பற்றியும் குறிப்பிடுகிறார். நார்வேஜிய மக்கள் தங்களுக்குள் பத்து லட்சம் ரூபாய் வசூலித்து மீன் பிடிக்கும் தொழிலில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆழ்கடலில் மீன் பிடிப்பதில் மிகுந்த திறமை கொண்டவர்கள் நார்வேஜியர்கள். ”32 லட்சம் ஜனத்தொகை உள்ள நார்வே 36 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவுக்கு எந்தப் பிரதிபலனும் கருதாமல் செய்த உதவிக்கு இந்தியா என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளது” என்கிறார் செட்டியார்.

செட்டியார் கூறும் வேறு சில தகவல்களும் சுவாரசியம் மிகுந்தவை. ஒன்றேகால் லட்சம் சதுரமைல் கொண்ட நார்வேயில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 2 லட்சம். உலகிலேயே அதிகமாகப் புத்தகம் படிப்பவர்கள் நார்வேஜியர்கள். உலகின் அற்புதங்களில் ஒன்றான த்ரோந்தியம் (Trondheim) என்ற நார்வேஜிய நகரத்துக்கு சென்ற போது நள்ளிரவில் சூரியனைப் பார்த்தது பற்றி எழுதுகிறார். குளிர்காலத்தில் மைனஸ் பத்து செல்ஷியஸ் கொண்ட அந்த ஊரில்தான் சர்வதேசப் புகழ்பெற்ற நடிகை லிவ் வுல்மன் வாழ்ந்தார். மற்றொரு நார்வே நகரமான போடோ பற்றி ஒரு விபரம் சொல்கிறார் செட்டியார். அந்த நகரில் ஜூன் 2 முதல் ஜூலை 10 வரை நள்ளிரவில் சூரியனைப் பார்க்கலாம். அதே போல் டிசம்பர், ஜனவரியில் சூரியனை அறவே பார்க்க முடியாது. இவ்வளவையும் 1939-இல் நேரில் பார்த்து எழுதுகிறார் செட்டியார்.

உலகப் போர்களைப் பற்றியும், அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு செட்டியாரின் நூல்கள் மிக முக்கியமான ஆவணமாக இருக்கும். ஐம்பதுகளின் ஐரோப்பா பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார் செட்டியார். 1953-இல் ட்ரினிடாடிலிருந்து கப்பலில் புறப்படுகிறார். எட்டாவது நாள் இங்கிலாந்தின் ப்ளிமத் (Plymouth) என்ற துறைமுக நகருக்கு வந்து சேர்கிறார். அக்டோபர் மாதக் குளிர். எங்கே தங்குவது என்று புரியவில்லை. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அப்போது நிறப்பாகுபாடு கடுமையாக இருந்திருக்கிறது. கறுப்பு நிறத்தவரான செட்டியாருக்கு எளிதில் தங்க இடம் கிடைப்பதில்லை. ஒவ்வொரு முறை இங்கிலாந்து வரும் போதும் இதுதான் பெரிய பிரச்சினை என்று எழுதுகிறார். அப்படியானால் 1953-க்குள் எத்தனை முறை இங்கிலாந்து வந்திருப்பார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். ப்ளிமத்திலிருந்து ரயிலில் லண்டன் வந்து எங்கே தங்குவது என்ற கவலையுடன் சாலையைக் கடப்பதற்காக பிக்காடில்லி சதுக்கத்தில் நின்று கொண்டிருக்கும் போது இந்தியரைப் போல் தோற்றமளித்த ஒருவர் செட்டியாரிடம் வந்து பேசுகிறார். செட்டியாரின் கையில் வைத்திருந்த பையிலிருந்த கப்பலின் அடையாளச் சீட்டில் ட்ரினிடாடின் பெயர் இருக்கிறது. அந்த இளைஞர் அது பற்றிக் கேட்கிறார். பிறகு அவர் செட்டியாரோடு சிநேகமாகிறார். காமரான் கார்டிஸ் என்ற அவர் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த செயிண்ட் வின்சென்ட் தீவைச் சேர்ந்தவர். அவர் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்து அந்தத் தீவில் குடியேறியவர்கள்.

காமரான் அவரை நிறவேற்றுமை அதிகமில்லாத கில்போர்டு வீதியிலுள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். தான் கொஞ்சம் பழுப்பு நிறம் என்பதால் தப்பியதாகவும், நீக்ரோவாக இருந்தால் (அப்போது நீக்ரோ என்ற வார்த்தைதான் பழக்கத்தில் இருந்த்து) தங்கும் அறை கிடைப்பது சாத்தியமே இல்லை என்றும் எழுதுகிறார் செட்டியார். தினம் ஒன்றுக்கு பதினான்கரை ஷில்லிங்கில் அங்கே ஒரு அறை கிடைக்கிறது. அறைக்குள் கனப்பு அடுப்பு இல்லை. ஒரே குளிர். குளிப்பதற்கும் வெந்நீர் இல்லை. உடைந்த நாற்காலிகள். ஆடுகின்ற மேஜை. எல்லாம் விக்டோரியா மகாராணி காலத்தில் வாங்கியவை போலும் என்று கிண்டலடிக்கிறார். மேலும் எழுதுகிறார்:

“கீழ் வீட்டில் சமையலறை. அங்கிருந்துதான் பலகாரம் மேல் வீட்டுக்கு வர வேண்டும். அதற்கு கிணற்றில் தண்ணீர் இறைப்பது போல் ஒரு ஏற்பாடு செய்திருந்தார்கள். கீழ் வீட்டில் ஒரு பெரிய மரப்பலகையில் பலகாரத்தை வைத்து உரக்கக் கத்தினார்கள். மேல் வீட்டில் சாப்பிடும் இடத்திலுள்ள வேலைக்காரப் பெண் தண்ணீர் இறைப்பது போல் கயிற்றை இழுத்தாள். மேலே வந்த பலகாரங்களை எடுத்துப் பரிமாறினாள். எச்சில் தட்டுகளை அதே பலகையில் வைத்துக் கீழ் வீட்டுக்கு அனுப்பினாள்.

மேலே இருந்தபடியே யார் யாருக்கு என்னென்ன பலகாரம் வேண்டும் என்று கீழே இருந்தவர்களிடம் அப்பெண் உரக்கக் கத்தினாள். அதுவும் தவிர அவள் கொண்டு வந்த தட்டு, கத்தி, கரண்டி, முள் கரண்டி எல்லாவற்றிலும் எண்ணெய்ப் பசை இருந்த்து. சுவையற்ற உணவுக்குப் பேர் பெற்றது இங்கிலாந்து.”

இங்கிலாந்து பற்றிய இப்படி ஒரு சித்திரத்தை நாம் வேறு எங்காவது படித்திருக்க முடியுமா? தாமஸ் ஹார்டியின் நாவல்கள் தவிர வேறு எதுவும் எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் ஹார்டியின் இங்கிலாந்து செட்டியார் சித்தரிக்கும் இங்கிலாந்துக்கு 50 ஆண்டுகள் முற்பட்டவை.

செட்டியாரின் இங்கிலாந்து இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது. 1953-இல்தான் இங்கிலாந்தில் உணவுப் பங்கீட்டு முறையை நீக்கியிருந்தார்கள். அதுவரை எல்லாம் ரேஷன்தான். ஆங்கிலேயர்கள் சாப்பிட்ட பின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கமுடையவர்கள் என்பதால் செட்டியார் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுத்ததும் அதை வாங்கிய பெண் மிகவும் அதிசயித்துப் போய் பலமுறை அவருக்கு நன்றி சொன்னதைப் பதிவு செய்கிறார். கில்போர்டு தெரு ஓட்டலில் செட்டியாருக்குப் பக்கத்து அறையைச் சேர்ந்த ஒரு ஆங்கிலேயர் அன்றைய இங்கிலாந்து வாழ்க்கையைப் பற்றிக் கூறிய ஒரு பதிவு இது:

”பஞ்சாப் மாகாணத்தில் பல ஆண்டுகள் உத்தியோகத்தில் சௌகரியமாக இருந்தேன். பங்களா, மூன்று வேலைக்கார்ர்கள். இப்போது லண்டனில் ரயில் இலாகாவில் வேலை செய்கிறேன். வாரம் ஐந்தரை பவுன் சம்பளம். அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியவில்லை. தினந்தோறும் இரண்டு வேளைதான் சாப்பாடு. பகலில் சிறு ரொட்டியும் தேத்தண்ணீரும்தான் ஆகாரம். மாத்த்துக்கு ஒருமுறைதான் படக்காட்சிக்கு செல்ல முடியும். நல்ல உடை வாங்குவதற்கு ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வருகிறேன். ஆங்கிலேயர் தவறு செய்து விட்டனர். இந்தியாவை விட்டு வந்திருக்க்க் கூடாது. இந்தியாவை விட்டு வந்ததால் என்னைப் போல் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.”

இதைப் படிக்கும் போது எனக்குத் தோன்றியது இதுதான்: அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இருந்த இங்கிலாந்து இன்று எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதும், இந்தியா இந்த 60 ஆண்டுகளில் எந்த அளவுக்கு சமூக, அரசியல், பொருளாதார வாழ்வில் சீரழிந்து விட்டது என்பதும்தான்.

இதேபோல் ஒருமுறை செட்டியார் டென்மார்க்கிலிருந்து ரயிலில் ஜெர்மனி வழியாக ஹாலந்திலுள்ள ரோட்டர்டாம் நகருக்குச் செல்கிறார். எட்டு பேர் அமரக் கூடிய மிக வசதியான அந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில் செட்டியாரின் சக பயணிகள் ஐந்து பேர். அதில் ஒரு டேனிஷ்கார இளம்பெண்ணும் இருக்கிறாள். கிராமத்தில் பிறந்து, உயர்நிலைப் பள்ளி வரை படித்தவள். அவளுக்குப் பல மொழிகள் தெரிந்திருக்கிறது. செட்டியாரிடம் சரளமான ஆங்கிலத்தில் அவள் தன் கதையைச் சொல்கிறாள். அவளுக்கு ஊர் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசை. உத்தியோகத்துக்குச் சென்றால் போதுமான வருமானம் கிடைக்காது. அதனால் ஸ்விட்ஸர்லாந்தில் சூரிச் நகரில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் சமையல் வேலை செய்கிறாள். உணவும் தங்குமிடமும் இலவசம் என்பதால் சம்பளப் பணத்தை சேமித்து வைத்து இத்தாலி, ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறாள்.

இப்படி ஒரு வாழ்க்கை முறை இந்தியாவில் அந்த வேலையைச் செய்யும் ஒருவருக்கு – ஏன், அரசாங்க வேலையில் இருப்பவருக்குக் கூட – சாத்தியமாகுமா என்று யோசித்தேன்.

இப்படி சிறு சிறு உரையாடல்களின் வழியாக ஒரு தேசத்தைப் பற்றிய மனச் சித்திரத்தை உருவாக்குகிறார் செட்டியார். நான் ஜெர்மனி சென்றிந்த போது அந்த நாட்டை ஒரு ஆசாரமான அக்கிரகாரம் போல் இருக்கிறது என்றும், அந்தக் காற்றிலேயே ஒருவித இறுக்கம் தெரிகிறது என்றும், திரும்பி ஃப்ரான்ஸ் வந்ததும்தான் சுதந்திரமாக சுவாசிக்க முடிந்தது என்றும் எழுதினேன். புரட்சி என்றால் கூட அதற்கும் டிக்கட் வாங்கிக் கொண்டுதான் அதில் கலந்து கொள்வார்கள் ஜெர்மன்காரர்கள் என்பது லெனினின் புகழ் பெற்ற ஒரு வாக்கியம். அந்த ரயில் பயணம் பற்றிய குறிப்புகளில் மற்றொன்று இது:

”ரயில் ஹாம்பர்கை அடைந்தது. எங்களுடன் இருந்த ஆடவர் இறங்கி விட்டார். ரயில் நிலையத்தில் தேர்த் திருவிழா மாதிரி ஏராளமான கூட்டம். பிரயாணிகள் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினர். மிகக் கனமான சாமான் பெட்டிகளை பின்னால் உள்ள சாமான் வண்டியில் போடாமல் எங்கள் பெட்டியிலேயே வைக்க முயன்றனர்.

அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கண்டதும் பெண்கள் மிகவும் பயந்தவர்களாய் “தயவு செய்து எங்கள் இட்த்துக்குப் பக்கத்தில் உட்காருங்கள். ஜெர்மானியர் வருகிறார்கள்” என்றனர்.

“ஏனம்மா, ஜெர்மானியர் உங்கள் அண்டை நாட்டார்தானே? ஏன் பயப்படுகிறீர்கள்?” என்றேன்.

“உங்களுக்குத் தெரியாது. அவர்கள் மிகவும் மிருகத்தனமாய் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கண்டாலே பயமும் வெறுப்பும் உண்டாகிறது” என்றாள் ஒரு பெண்.

”அவள் கூறியதில் எந்தத் தவறும் இல்லை” என்று சொல்லும் செட்டியார் அதற்கடுத்து அந்தப் பெட்டியில் நடந்த சம்பவங்களை சுவையாக விவரிக்கிறார். பாஸ்போர்ட்டை சோதிக்க வந்த ஜெர்மன் அதிகாரிகள் ’தேங்க் யூ’ சொல்வதே ஏதோ சண்டைக்கு அறைகூவுவது போல் இருந்தது என்றும், ஜெர்மானியர்கள் ஏதோ எந்திரங்களைப் போல் இருந்தனர் என்றும் கூறும் செட்டியார், பிறகு தன் பெட்டியில் இருந்த ஜெர்மானியர்களை ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கூறி சிரிக்க வைத்ததாக எழுதுகிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய ஜெர்மானிய அனுபவமும் செட்டியாரின் அனுபவத்திலிருந்து சற்றும் மாறுபடாமல் இருந்தது. மிக மோசமான நிறவெறி, நியோ நாஜிகளின் வன்முறை ஆகியவற்றை நான் ஜெர்மனியில் நேரடியாகப் பார்த்தேன்.

நாற்பதுகளில் செட்டியார் மேற்கொண்ட இலங்கைப் பயணம் அவருடைய உலகப் பயணங்களிலேயே பொக்கிஷமாகக் கருதப்பட வேண்டியதாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணமும், மற்ற தமிழ்ப் பகுதிகளும், தமிழ் வாழ்க்கையும் எப்படி இருந்தன என்பது பற்றி இன்றைய ஈழத் தமிழர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. அவர்களுக்கு செட்டியாரின் இலங்கைப் பயண நூல் மிக முக்கியமான ஆவணமாகப் பயன்படும். பின்னாளில் சிங்கள இனத்துக்கும் தமிழ் இனத்துக்கும் ஏற்பட்ட பகைமைக்கும் முரண்பாடுகளுக்குமான காரணங்களையும் செட்டியாரின் இந்த நூலில் நம்மால் கண்டு கொள்ள முடியும்.

தமிழின் அரிய பொக்கிஷங்களுள் ஒன்றான ஏ.கே. செட்டியாரின் அத்தனை பயண நூல்களும் உடனடியாகப் பிரசுரம் செய்யப்பட வேண்டும்.

நன்றி: உயிர்மை, சாரு நிவேதிதா.

Friday, October 22, 2010

Too many sisters 'make a man less sexy'

Too many sisters can make a man a lot less sexier, at least in case of rats, according to a new study from the University of Texas at Austin.

"Life is a continuous process: you're a fetus, then you're born into a family. Each one of these periods can be important" he says—"and they don't necessarily have the same effects" said David Crews, a psychobiologist.

When males who were raised with a lot of sisters were presented with receptive female rats, they spent less time mounting them than did male rats that were raised in male-biased litters or in balanced families.

But they penetrated the female rats and ejaculated just as much as did the other males.

This means, "the males are more efficient at mating" Crews said.

The males may be compensating for the fact that they're less attractive to females. You can tell this by watching the females—if they want to mate with a male, they'll do a move called a dart-hop, says Crews, and they wiggle their ears. It drives males nuts."

The females did this less when they were with a male rat that had grown up in a female-biased litter.

"It tells you that families are important—how many brothers and sisters you have, and the interaction among those individuals," Crews said.

The environment where you were raised "doesn't determine personality, but it helps to shape it."

The new study is published in Psychological Science.

* * * * *

Tell your man what makes you feel loved

Guys, here's your chance to know the Seven-Sex-Secrets women wish their partner knew.

A good talk is a great aphrodisiac
Many women find sweet-nothing-talk is a great turn-on. For them, talking and feeling loved are very important. Good conversation during walks or while the couple is relaxing can be a great aphrodisiac. A man could tell his woman how much he loves her, which acts as a reassurance that he is with her mentally during those intimate moments.

Many women are anxious about their looks
For a couple that has been together for long, sometimes it is natural that women may feel that their partner may find them less alluring. Because of this some women undress only under the cover of darkness. Caring men can sense such anxieties. There is no need to lie and say she's gorgeous if she isn't, nor is there a need to say that she is not attractive anymore. One can always appreciate and praise what you do find attractive.

For a woman sex isn't separate from rest of her life
On the other hand, men tend to compartmentalise, feeling that stressful aspects of life can be parked mentally and separated from sexual activity. Women need good feelings and experiences during the day to have satisfying sex. How her lover treats her out of bed, greatly influences her response in bed. Inattentiveness, harsh language, rude tones, hurtful words, and criticism can make it difficult for a woman to get involved, feel enthusiastic and be passionate during sex.

An orgasm is not a necessity
Many men feel that a good lover is one who can bring his woman to climactic sexual culmination. It is great to have such moments, but aren't always essential. Many women feel pressure from partners and even from themselves to reach an orgasm. Sometimes instead of having orgasms, women prefer to engage in just foreplay.

Sex need not be a serious act
Playfulness is a great quality. Many men are far too serious about sex. They forget to laugh, be romantically mischievous, have fun. Playfulness and light-heartedness can make intimate moments enjoyable and relaxing. This takes performance pressure off from both partners.

Women cherish non-sexual touching and tenderness
Women love romance, cuddling, hand-holding and kissing. But many women complain that their men never do this except during foreplay. A woman should make her man realise the joy of touching. As you give him a relaxing massage and stroke his face and hair tenderly, he starts experiencing the joy of this kind of non-sexual touching. Tell your man what makes you feel loved.

Warm attention after sex is important
A woman's need for tender moments goes beyond the actual lovemaking. Some women complain that men fall asleep immediately after the act. It is true that when a man is having sex, his endorphin level is very high. Almost immediately after ejaculation, he goes through a refractory phase where he loses his erection and all his systems gear down. In females this phase happens gradually. However, if you don't like him falling asleep immediately, tell him without putting him down. Alternatively, let him sleep in your arms for a few minutes and gently wake him up afterwards.




Courtesy: Dr Rajan B Bhonsle, consultant in sexual medicine and counselor

Saturday, September 18, 2010

யார் எங்கள் ரட்சகன்?

இம் மாதம் ஐந்தாம் தேதி நண்பன் ஜவஹர்-க்கு தஞ்சாவூரில் நிச்சயதார்த்தம். நண்பன் செந்திலுக்கு அதே தினம் அரியலூரில் கல்யாணம். அதே தினம் நண்பன் கார்த்திக்கிற்கு ஈரோடில் திருமணம். எங்கு போவது, யாரை நேரில் வாழ்த்துவது என குழப்பம். அரியலூரில் எம் மக்களும், நண்பர்களும் நண்பன் செந்திலின் திருமணம் முடிந்து அவரவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எங்கள் நண்பன் குட்டி தாதாவின் தந்தை அகால மரணம் எய்துள்ளார்கள். நண்பர்கள் மதியம் 1 மணியளவில் அலைபேசியில் செய்தி தந்தனர். நெஞ்சம் மீளா துயரில் ஆழ்ந்தது. இனி அந்த Unique வசனங்களை யாரிடம் கேட்க போகிறோம்..? அப்பா, உங்கள் நினைவு எங்களுடன்.

* * * * *

அடுத்த அடி 'நடிகர்' முரளி அவர்களின் 'திடீர்' மரணம் மூலம். 1997-இல் 'இளவரசி' Diana அவர்கள் Car விபத்தில் மறைந்த போது, முரளி அவர்கள் 'தன்னை மிகவும் பாதித்த மரணம்' என பேட்டி தந்தார்கள். தற்போது இவரது மரணமும் அனைவரையும் மீளா துயரிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


இன்னுமொரு அதிர்ச்சி 'பாடகி' ஸ்வர்ணலதா அவர்களது மரணம். தனது குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்த அந்த நல்ல உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.

* * * * *


'எந்திரன்' திரைப்படம் தயாரிக்க நிறைய 'கல்லா' செலவாகியுள்ளது, நமது இந்திய திரைப்பட வரலாற்றில். அதனை விட அதிகம் 'லாபம்' பார்க்க 'ரஜினி' என்ற பேர் போதும். ஆனாலும், இந்த தயாரிப்பு நிறுவனம் செய்யும் Cheap Promo-Events மிக அயர்ச்சியாக உள்ளது. நம் மக்கள் யாரிடமும் சக மனிதனை வழி நடத்தும் ஆளுமை இல்லை. நம்மை பிரம்மிக்க வைத்த சில உதாரணங்கள்: நம் 'முண்டாசு கவி' பாரதியார் அவர்கள், நம்மை விட்டு பிரிந்த தமிழக அமைச்சர் 'கக்கன்', Nobel Prize-winning physicist Richard Feynman, பெரியார் அவர்கள், Alexander Petrovics aka Sándor Petőfi, the author of the "Nemzeti dal".



அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி, பிறகு 'அது நடிப்பு. நான் அரசியலுக்கு வருவேன்னு நீங்க நினைச்சா, நானா பொறுப்பு..?' (இதையும் திரைப்படம் மூலமாகவே சொன்னதுதான் அவரது சாமர்த்தியம்) என தனது ரசிகர்களை நோக்கி கேள்வி கேட்டவரை மன்னித்து நம் மக்கள் அடுத்த 'கொண்டாட்டத்திற்கு' தயார்.


* * * * *

தமிழக முதல்வர் கருணாநிதியின் முட்டாள் தனமான புள்ளி விவரங்கள், எந்த விதத்திலும் உதவாத ஒப்பீடுகள்; அதிலும் முந்தைய ஆட்சியுடன்/Mr Barack Obama-வின் ஆட்சியுடன் (அட கொடுமையிலும் கொடுமையே!?!); இது போதாது என்று இன துரோகம், எப்பொழுதும் 'பாராட்டு' விழா, 'இப்படி செய்தால் மக்களுக்கு நல்லது' என்று சொல்பவர்கள் மீது 'நடவடிக்கை', தமிழ் உணர்வாளர்களை 'அழித்தல்', 'ஆட்சியை' காப்பாற்றும் நோக்கம், தனது 'மிக பெரிய குடும்பம்' தழைக்க தமிழக மக்களை 'காவு' கொடுத்தல், இன்னும் இன்னும் பல இலவசம் என்று தமிழக 'கஜானாவை' போண்டி ஆக்கும் வேகம், தொலைநோக்கு பார்வை இல்லாமல், ஏதோ ஐந்து வருடம் 'ஓட்டினால்' போதும் என்று இருந்தால் நம் மக்களின் 'வாழ்வு' எப்பிடி/என்று ஒளிரும்..?



யார் எங்கள் 'ரட்சகன்'? எங்கே அவன்? எப்போது வருவான்?

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.