முதல் மதுவும் கடைசிப் பெண்ணும் - மனுஷ்ய புத்திரன்.
எப்போதும்
சாம்பல் கிண்ணங்கள் போல்தான்
உயயோகிக்க வேண்டுமா
நமதிந்த உடலகளை?
இன்று நாம் பயன்படுத்துவோம்
அதை
மதுக்கிண்ணங்களாக
இச்சையின்
அதிரும் மின் தந்திகளில்
உனது உடல்
எங்கெங்கும் நகர்ந்துகொண்டிருகிறது
ஒரு உடலை எப்போதும்
ஏதோ ஒரு மலிவான திரவத்தில்
ஐஸ் துண்டுகளைப் போலத்தான்
நாம் போடவேண்டுமா?
கிறிஸ்துவைப்போலவே
இன்று
நாமும் நிகழ்த்தலாம்
கொடுத்துத் தீராத மதுவின்
அற்புத தினத்தை
உனது வெற்றுடலின் மேல்
காலம் ஒரு புகையாக படிகிறது
இந்தக் காட்சியை ஒருபோதும்
நாம் முழுமையாக
திரும்ப நினைத்துவிடக் கூடாது
என்பதற்காக
அதன் மேல் மறதின் திரை ஒன்று
அக்கணமே வீழ்கிறது
அன்பே
உன் அந்தரங்கத்தின் இதழ்களில்
இந்த மதுவை
ஒரு கணமே தேக்கி வைக்க முடியும்
மறுகணம்
அதை உறிஞ்சிக் குடிப்பதற்குள்
உன் உடலின்
பல்லாயிரம் ஆண்டு பழமையில்
அது அப்படிப் புளிப்பேறிவிடுகிறது.
இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
முதல் மதுவை அருந்தினேன்.
இவ்வாறுதான்
அன்று நான்
இந்த உலகின்
கடைசிப் பெண்ணை
அருந்தினேன்.
இந்த கொண்டாட்டத்தின் உச்சம் உங்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது என்னால் கணிக்க முடியவில்லை. நான் இந்த தமிழ் கவிஞனின் 'கொண்டாட்டத்தை' அருந்தினேன். வாழ்க அந்த கவி, திரு. மனுஷ்ய புத்திரன்.
நன்றி: உயிர்மை.
No comments:
Post a Comment