You are lookin' for..?

Tuesday, August 17, 2010

எங்களை பைத்தியம் என்பார்கள்

'Inception படம் பாக்க போயிருந்தேன். படம் புரியாமல் எல்லோரும் போய் விட்டார்கள்.' வேற யாரு, நம்ம தமிழ் சினிமா 'கதா நாயகன்' சிம்பு சொன்னது. நண்பர்கள் நாங்கள் சென்ற வாரம் ஞாயிறு இதே Inception படத்திற்கு Ticket கிடைக்காமல் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். இவர் 'இவரை' போலவே உள்ள மக்களுடன் படம் பார்த்திருப்பார் போலிருக்கு.




/* Inception படத்தின் தெளிவான விமர்சனம் படிக்க, இந்த உரலியை சொடுக்கவும் (என்ன தமிழ் விளையாட்டு..!) -
http://worldmoviesintamil.blogspot.com/2010/07/inception-2010.html
இந்த Blog எழுதும் நபர் எனக்கு அறிமுகமும் இல்லை. நண்பரும் இல்லை. அந்த முகம் அறியா தோழருக்கு எனது நன்றிகள். விமர்சனம் நன்றாக இருப்பதால் எடுத்து கையாண்டுள்ளேன். அந்த தோழர் மன்னிப்பாராக. */

மொக்கை - 'சினிமாவில் Sex இருந்தால் என்ன தப்பு?' என சிம்பு அவர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அதுல எந்த தப்பும் இல்லைங்க. ஆனால், Censor Board-ல Certificate வாங்கும் போது நேர்மையா 'A'-னு வாங்க 'உங்களை போல' உள்ள Semi-Creators!?! தயாரா? அது என்னங்க (என் மரமண்டைக்கு புரியாத விஷயம்) U/A-னு  ஒரு பித்தலாட்டம்?

இன்னொரு மொக்கை - 'பேருக்கு முன்னால அடை மொழி இருந்தா என்ன தப்பு? நண்பர்கள் ஆசையா உங்களை செல்ல பேர் சொல்லி அழைப்பது போலதான் இதுவும்.' இதுவும் சிம்பு அவர்கள்தான். உங்களை போல ஒரு நடிகர், ஆனால் அவர் ஒரு சகாப்தம் - அவர் 'கவுண்டமணி' - சொன்னது 'உலக நடிகன் Marlon Brando-வுக்கே அடை மொழி கிடையாது. நாம என்ன அந்த அளவுக்கா நடிச்சி கிழிசிபுட்டோம் அடை மொழி போடுறதுக்கு?' என சொன்னதாக நான் கேள்விப்பட்டதுண்டு. நீங்கள் கேள்விபட்டதில்லையா, சிம்பு?


in Streetcar named Desire

* * * * *

கருணாநிதி அவர்களது சமீபத்திய (சுமாராக கடந்த ஐந்து வருடங்களாக) எழுதும் மற்றும் பேசும் வசனங்கள் பற்றி என்ன என்று சொல்ல முடியாத அளவிற்கு இருக்கின்றன. இவர் எப்பொழுதும் இப்படிதானா, நாங்கள்தான் பள்ளி பருவத்தில் தவறாக இவரை கொண்டாடிவிட்டோமோ என்று நண்பர்கள் வருந்தினோம்.




கோவை செம்மொழி மாநாட்டில் ஒரு 'சமைஞ்சது எப்படி' கவி எழுதிய மடக்கு வரி கதை இதோ, உங்களுக்காக - - -

உலகிற்கு ஒரு ஐ.நா
உலக தமிழ் மக்களுக்கு நீ ஒரு நைனா

இந்த கவி போற்றிய 'பாட்டு தலைவன்' யார் என்று உங்களுக்கு புரிந்து இருக்க வேண்டும்.

* * * * *




சென்ற சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் புதிதாக படிக்க புத்தகம் இல்லாமல் மந்த நிலையிலேயே இருந்தேன். சாரு, சுஜாதா, கி.ரா அவர்களின் நூல்களிற்கும், மற்றும் எழில் வரதனின் சிறு கதைகள்,  பாமரனின் சமீபத்திய கட்டுரைகளும், ஞாநி அவர்களது புதிய கட்டுரைகளும் கிடைக்காதா என சுற்றி சுற்றி வந்தேன். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதனால் தலைவலியும் வந்துவிட்டது. ஞாயிறு அன்று என் தம்பி என்னிடம் 'எப்படியாவது இன்று Inception படம் பார்க்கிறோம்' என எனது மந்த நிலையை ஓரளவு சரி செய்தார்.


Click on this to get to know 'bout Dr A P J Abdul Kalam and Mr Sujatha


* * * * *

Common Wealth Games-க்கு நமது இந்திய அரசு செலவு செய்த தொகை 70,000 கோடி ரூபாய். இந்த அளவு செலவு செய்ததற்கு நமது நாட்டிற்கு உலக அளவில் பெரிய மரியாதையும், விளையாட்டு துறையில் ஒரு மிக பெரிய கௌரவமும் உலக அளவில் கிடைத்திருக்க வேண்டும். என்ன சொல்ல, ஊழல் நரிகள் உள்ள கூடாரத்தில் நல்லது நடக்குமா.? உலக அளவில் 'ஊழல் நாடு' என்ற 'புகழ்' கிடைத்த நிம்மதி நமக்கு. எனக்கு தெரிந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக, 'மைதானங்கள் தயாராகவில்லை, குறித்த நேரத்தில் பணிகள் முடியாது, சில உலக புகழ் வீரர்கள் பங்குகொள்ள மாட்டார்கள், நிறைய ஊழல் நடக்கிறது' என சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்தன. இப்பொழுது எல்லாம் உண்மையாகி விட்டது.


Pollution and Corruption in CWG 2010, Delhi

Sonia Gandhi உண்மை பேசமாட்டார். Manmohan Singh உண்மையும் பேசமாட்டார், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கமாட்டார். Suresh Kalmadi ஒரு ரூபாய் கடலை மிட்டாய்க்கு ஒரு லட்சம் தந்ததாக கணக்கு காட்டுவார், அதனை Sonia Gandhi மற்றும் Manmohan Singh இருவரும் ரசிப்பார்கள். நம் நாட்டு மக்களும் 'நம்புவார்கள். அமைதியாய் இருப்பார்கள்.' என்ன நாடு இது, என்ன மாதிரியான அரசியல்வாதிகள் இவர்கள்.

* * * * *

நகைசுவை துணுக்கு - - -
'Warren Anderson, Chairman of Union Carbide, தப்பித்தது எப்படி என்றும், தப்பிக்க வைத்தது யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.'




சொன்னவர் ப.சிதம்பரம் அவர்கள். சபாஷ் ப.சி. அவர்களே. உங்களிடம் இந்த தேசத்தின் பாதுகாப்பை தந்துள்ளான் இந்த இளித்தவாய் இந்தியன். நேர கொடுமை, நீங்கள்தான் தீவிரவாதிகளிடம் இருந்து எங்களையும், எங்கள் நாட்டையும் அரண் செய்வீர்களாம்... எவ்வளவு பெரிய கிறுக்குத்தனம் இது..! பழங்குடி மக்களை கொல்வதும், அவர்களை நிர்கதியாய் அலையவிடுவதும், அவர்களது கிராமத்தை தீயில் கருக வைப்பதும், அவர்களை முள் வேலிக்குள் 'அடக்கி-அடைத்து' வைக்கவும் தெரிந்த உமக்கு சில 'உண்மைகள்' தெரிய வாய்ப்பில்லைதான். என்ன கண்றாவியோ..!

* * * * *

ஒரு அப்பட்டமான உண்மை - - -
'Boys படத்தில் நடித்த பிறகு நடிப்பதை நிறுத்தி விடலாம் என நினைத்தேன். இந்த படத்தில் நடித்ததிற்கு வருந்தினேன்; வருந்துகிறேன். Telugu மொழியில் நடித்த (தமிழில் வந்த ச.) படம் என் சினிமா வாழ்வில் நடந்த ஒரு நல்ல விஷயம். இதுவே என் முதல் படம் என கூறுகிறேன்.'




சொன்னவர் நடிகர் 'சித்தார்த்.' இந்த மக்களுக்கு Boys படத்தின் இயக்குனர் (ஷங்கர்) பற்றி சொல்ல உங்களை போன்ற 'அறிவுள்ள' ஒரு ஆள் போதாது. சொன்னால், நம்மளை பைத்தியம் என்பார்கள். தமிழன் குப்பை திரைப்படங்களையே பார்த்து அழியட்டும். தமிழனுக்கு யாராவது எடுத்து சொன்னாலும் புரியாது.

Monday, August 2, 2010

நொ(ள்ளி)ல்லி நரி

நண்பர்கள் சிலர் அந்த 'குட்டியின் பாட்டி' என்பவர் 'நொ(ள்ளி)ல்லி' என சொல்லும் பாட்டிதானே என்று கேட்டிருந்தனர். பதில் 'ஆம்.' இன்னொரு சிறந்த கதை இதோ:

பலாப்பழம் பருவத்தில் எங்கள் கிராமத்திற்கு இரும்புலிகுறிச்சி என்ற ஊரில் இருந்து வியாபாரிகள் வந்து பலாப்பழம் விற்பது வழக்கம். இரும்புலிகுறிச்சி பலாப்பழத்திற்கு பேர் போனது. இந்த வியாபாரிகள் குறைந்தது ஐம்பது வயதிற்கு குறையமாட்டார்கள். இந்த பழக்கம் இவர்களுக்கு சிறு வயதில் இருந்தே உள்ளது. எனவே, இந்த வயதிலும் இதனை விட முடியாமல் அவர்கள் ஊரிலிருந்து எங்கள் கிராமத்திற்கு வருவது வாடிக்கை. இதன் காரணமாக, எல்லோரும் ஒரு குடும்பம் போல் பழகுவார்கள். இதில் உள்ள அழகு, இவர்கள் சந்தித்து அளவளாவது இந்த பலாப்பழம் பருவத்தில்தான். 'இவர்களுக்கு பிறகு இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது யார்?' என்ற கவலை எனக்கு. இந்த உறவுப்பாலம் காலம் காலமாக தொடராதா என்று எங்கள் மனம் வலிக்கிறது. இது 'பலாப்பழத்தையும்' தாண்டியது. வாழ்க்கை புதிர் நிரம்பியது. நம் தலைமுறை (என்னையும் சேர்த்துதான்) நிறைய அழகியலை உணரவில்லை; அவர்கள் தவறான தேடல்களில் தங்களது வாழ்வை தொலைக்கின்றனர்.

அங்கிருந்து வரும் வியாபாரிகளில் எங்களுக்கு பிடித்த ஒரு தாத்தா (எல்லோரும் ஐம்பது வயதிற்கு மேல்) மிக அழகாக 'பலாச்சுளை'யை உச்சரிப்பார்கள். நாங்கள் எல்லாம் அவ்வாறு சொல்லி பார்ப்பதும், விளையாடுவதும் வழக்கம்; சிறு வயது முதல். இந்த தாத்தாவும், குட்டியின் தாத்தாவும் (கண்ணாடி) நெருங்கிய தோழர்கள். ஆகவே, வியாபாரத்திற்கு வரும் போதெல்லாம் குட்டியின் வீட்டில் இரு தாத்தாக்களும் தங்களது நட்பின் பகிர்தலை அனுபவிப்பதும், அதில் மூழ்குவதும் கொள்ளை அழகு.

I captured this picture usin' my mobile n the moment when I captured this one will stay in my heart till I die. In this picture: Navarasu aka Nari with our friend Bharathi.


இதிலிருந்து நண்பன் தாதா சொன்ன கதை - - - சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன் நடந்தது:

நண்பர்கள் எல்லோரும் அந்த தாத்தா சொல்வது போல 'பலாச்சுளை' என்று சொல்வதை கவனித்த குட்டியின் பாட்டி 'நாங்கள் எல்லோரும் அந்த தாத்தாவையும் இந்த பாட்டியையும் தவறாக சித்தரித்து கிண்டல் செய்வதாக' தவறாக நினைத்துவிட்டார்கள். இதன் காரணமாக நண்பர்கள் எல்லோருக்கும் அவர் முழிக்கும் அந்த அதிகாலை பொழுதில் அவரிடம் இருந்து அர்ச்சனை கிடைக்கும். அந்த அளவிற்கு எங்கள் நண்பர்கள் மீது கோவம். இதில் குட்டி தாதா சொன்னதுதான் Highlight 'இந்த வயசுல எங்க கிழவிக்கு ரவுச பார்த்தியா. இத அடக்க நாம ஏதாவது செய்யணும்' என்று நண்பன் தாதாவிடம் கூறியுள்ளார். இந்த அர்ச்சனை பொறுக்க முடியாமல், நண்பர்களும் ஒரு முடிவில்தான் இருந்தனர். பழி வாங்க நண்பர்கள் செய்த (குட்டியும் இந்த பழி வாங்கும் படலத்தில் அடக்கம்) குறும்பு விளையாட்டை பிறகு ஒரு கிளை கதையாக உங்களுக்கு நான் சொல்கிறேன்.

ஒரு ஞாயிற்று கிழமை. நண்பன் தாதா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். அப்பாவும் அம்மாவும் ஒரு உறவினரின் திருமண விசயமாக முதல் நாள் சென்னை சென்றுள்ளனர். தாதா, மற்றும் தாதாவின் அக்காள் பையன் நரியும் வீட்டில். தாதாவின் இரண்டாவது அண்ணன் காலை முதல் இரவு வரை அரியலூரில்தான் இருப்பார். எனவே தாதாவும், நரியும் காலை திருப்தியாக தோசை வார்த்து சாப்பிட்டு உள்ளனர். மதியம் ஏதோ ஒரு சாதம் செய்த தாதா, அதற்கு குழம்பு செய்ய தெரியாமல், குட்டியின் பாட்டியிடம் கேட்டிருக்கிறார். அவரும் 'வந்து வங்கிக்கோ, பேரான்டி' என எப்பொழுதும் போல அன்பாக கூறியுள்ளார்கள்.

நண்பன் தாதா, நரியிடம் ஒரு கிண்ணத்தை தந்து, குழம்பு வாங்கி வர வழி அனுப்பி வைத்துள்ளார். அந்த சமயம் நரிக்கு ஏழு வயதுதான் இருக்கும். நரி ஒரு ரெண்டு நிமிடத்தில் 'வெறும்' கிண்ணத்துடன் திரும்பி வந்துள்ளார். தாதாக்கு ஒரே குழப்பம். 'டே, பாட்டிகிட்ட நான்தான் முன்னமே சொல்லி வச்சியிருந்தேனே. நீ போய் கிண்ணத்த தந்தாலே போதுமே, அவங்க குழம்பு தந்துருவாங்களே. பின்ன ஏன்டா தரல?' என நரியிடம் விசாரணை.

நடந்தது என்னன்னா - - -

'இல்ல மாமா, பாட்டியும் ஒன்னும் சொல்லல. நான் போய் கிண்ணத்த பாட்டிகிட்ட தந்தனா, குட்டி பாட்டி என்கிட்ட 'பாட்டியும், தாத்தாவும் சென்னைலயிருந்து எப்ப வருவாங்கன்னு' கேட்டாங்களா, நானும் 'நாளைக்கு வந்துருவாங்கனு' சொன்னேனா, அப்ப அவங்க குழம்ப கரண்டியில எடுத்து கிண்ணத்துல ஊத்த போறப்ப....
'ஊத்த போறப்ப...', என்று தாதா விடை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க,
'ஊத்த போறப்ப...', என நரி தயங்கி தயங்கி அங்கனவே நிற்க,
'சொல்லுடா'னு தாதா அதட்ட,
 'இல்ல மாமா, ஊத்த போறப்ப என்னையும் அறியாமல் 'பலாச்சுளை'னு நாம எல்லாம் சொல்லி விளையாடுவது போல சொல்லிட்டேன். அதனால, உனக்கு 'குழம்பு' இல்லைன்னு சொல்லிட்டாங்க' என்று பரிதாபமாக சொல்ல: தாதா ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்து, பிறகு நரிய பார்த்து விழுந்து, விழுந்து சிரிக்க: நரியும் சேர்ந்து சிரிக்க: பிறகு இருவரும் தயிர் சாதம் சாப்பிட்டு 'சிரித்து' கொண்டாடியுள்ளனர்.