You are lookin' for..?

Saturday, September 18, 2010

யார் எங்கள் ரட்சகன்?

இம் மாதம் ஐந்தாம் தேதி நண்பன் ஜவஹர்-க்கு தஞ்சாவூரில் நிச்சயதார்த்தம். நண்பன் செந்திலுக்கு அதே தினம் அரியலூரில் கல்யாணம். அதே தினம் நண்பன் கார்த்திக்கிற்கு ஈரோடில் திருமணம். எங்கு போவது, யாரை நேரில் வாழ்த்துவது என குழப்பம். அரியலூரில் எம் மக்களும், நண்பர்களும் நண்பன் செந்திலின் திருமணம் முடிந்து அவரவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எங்கள் நண்பன் குட்டி தாதாவின் தந்தை அகால மரணம் எய்துள்ளார்கள். நண்பர்கள் மதியம் 1 மணியளவில் அலைபேசியில் செய்தி தந்தனர். நெஞ்சம் மீளா துயரில் ஆழ்ந்தது. இனி அந்த Unique வசனங்களை யாரிடம் கேட்க போகிறோம்..? அப்பா, உங்கள் நினைவு எங்களுடன்.

* * * * *

அடுத்த அடி 'நடிகர்' முரளி அவர்களின் 'திடீர்' மரணம் மூலம். 1997-இல் 'இளவரசி' Diana அவர்கள் Car விபத்தில் மறைந்த போது, முரளி அவர்கள் 'தன்னை மிகவும் பாதித்த மரணம்' என பேட்டி தந்தார்கள். தற்போது இவரது மரணமும் அனைவரையும் மீளா துயரிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.


இன்னுமொரு அதிர்ச்சி 'பாடகி' ஸ்வர்ணலதா அவர்களது மரணம். தனது குடும்பத்திற்காக திருமணம் செய்யாமல் வாழ்ந்த அந்த நல்ல உள்ளம் அமைதியில் உறங்கட்டும்.

* * * * *


'எந்திரன்' திரைப்படம் தயாரிக்க நிறைய 'கல்லா' செலவாகியுள்ளது, நமது இந்திய திரைப்பட வரலாற்றில். அதனை விட அதிகம் 'லாபம்' பார்க்க 'ரஜினி' என்ற பேர் போதும். ஆனாலும், இந்த தயாரிப்பு நிறுவனம் செய்யும் Cheap Promo-Events மிக அயர்ச்சியாக உள்ளது. நம் மக்கள் யாரிடமும் சக மனிதனை வழி நடத்தும் ஆளுமை இல்லை. நம்மை பிரம்மிக்க வைத்த சில உதாரணங்கள்: நம் 'முண்டாசு கவி' பாரதியார் அவர்கள், நம்மை விட்டு பிரிந்த தமிழக அமைச்சர் 'கக்கன்', Nobel Prize-winning physicist Richard Feynman, பெரியார் அவர்கள், Alexander Petrovics aka Sándor Petőfi, the author of the "Nemzeti dal".



அரசியல் வசனங்களை தனது படங்களில் பேசி, பிறகு 'அது நடிப்பு. நான் அரசியலுக்கு வருவேன்னு நீங்க நினைச்சா, நானா பொறுப்பு..?' (இதையும் திரைப்படம் மூலமாகவே சொன்னதுதான் அவரது சாமர்த்தியம்) என தனது ரசிகர்களை நோக்கி கேள்வி கேட்டவரை மன்னித்து நம் மக்கள் அடுத்த 'கொண்டாட்டத்திற்கு' தயார்.


* * * * *

தமிழக முதல்வர் கருணாநிதியின் முட்டாள் தனமான புள்ளி விவரங்கள், எந்த விதத்திலும் உதவாத ஒப்பீடுகள்; அதிலும் முந்தைய ஆட்சியுடன்/Mr Barack Obama-வின் ஆட்சியுடன் (அட கொடுமையிலும் கொடுமையே!?!); இது போதாது என்று இன துரோகம், எப்பொழுதும் 'பாராட்டு' விழா, 'இப்படி செய்தால் மக்களுக்கு நல்லது' என்று சொல்பவர்கள் மீது 'நடவடிக்கை', தமிழ் உணர்வாளர்களை 'அழித்தல்', 'ஆட்சியை' காப்பாற்றும் நோக்கம், தனது 'மிக பெரிய குடும்பம்' தழைக்க தமிழக மக்களை 'காவு' கொடுத்தல், இன்னும் இன்னும் பல இலவசம் என்று தமிழக 'கஜானாவை' போண்டி ஆக்கும் வேகம், தொலைநோக்கு பார்வை இல்லாமல், ஏதோ ஐந்து வருடம் 'ஓட்டினால்' போதும் என்று இருந்தால் நம் மக்களின் 'வாழ்வு' எப்பிடி/என்று ஒளிரும்..?



யார் எங்கள் 'ரட்சகன்'? எங்கே அவன்? எப்போது வருவான்?